| 
 தூத்துக்குடி மாவட்டத்திற்கான திட்டக்குழுவுக்கான தேர்தல் செப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ளது. 12 இடங்களுக்கு நடைபெறவுள்ள இத்தேர்தலில் - மாவட்டத்தில் உள்ள மாவட்ட பஞ்சாயத், மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத் உறுப்பினர்கள்  வேட்பாளர்களாக நிற்கவும், வாக்களிக்கவும் தகுதியானவர்கள். 
  
12 இடங்களில் 7 இடங்கள் ஊரக பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுவை வாபஸ் பெற இறுதி நாளான நேற்று (செப்டம்பர் 10) வரை 7 இடங்களுக்கு, 7 பேர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததால், ஏழு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  
மீதி 5 இடங்கள் - நகர்ப்புறத்திற்கு ஒதுக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 10 பேரில் ஒருவர் வாபஸ் பெற்றுள்ளதால் - தற்போது, 5 இடங்களுக்கு, 9 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களை தேர்தெடுக்க மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் டவுன் பஞ்சாயத்துக்களின் 407 உறுப்பினர்கள்  தகுதியானவர்கள். ஒவ்வொரு வாக்காளரும் வாக்கு சீட்டில் உள்ள 9 வேட்பாளர்களில், கூடியதாக 5 வேட்பாளர் வரை தேர்வு செய்யவேண்டும்.
  
ஊரக பகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 இடங்களுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள 7 பேர் ...
  
(1) கதிரவ ஆதித்தன் 
(2) கவுரி 
(3) திருப்பார்கடல் 
(4) மதியழகன் 
(5) மனோஜ் 
(6) ராஜகோபால் 
(7) ரேவதி
  
இவர்கள் அனைவரும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள்.
  
நகர்புற பகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 இடங்களுக்கு போட்டியிடும் 9 வேட்பாளர்கள் ...
  
(1) ரவீந்திரன் - தூத்துக்குடி மாநகராட்சி 
(2) கலைவாணி - கோவில்பட்டி நகராட்சி 
(3) காளியப்பன் - விளாத்திகுளம் பேரூராட்சி 
(4) சாமுவேல் ஞானதுரை - தூத்துக்குடி மாநகராட்சி 
(5) தவமணி - கோவில்பட்டி நகராட்சி 
(6) பால்ராஜ் - விளாத்திகுளம் பேரூராட்சி 
(7) பொன்ராஜ் - தூத்துக்குடி மாநகராட்சி 
(8) மாரிமுத்து - ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி 
(9) வடிவேலு - திருச்செந்தூர் பேரூராட்சி
  
திட்டக்குழுவின் தலைவராக மாவட்ட பஞ்சாயத் தலைவர் இருப்பார். துணைத் தலைவராக மாவட்ட ஆட்சியர் இருப்பார். திட்டக்குழுவின் முக்கிய பணி - மாவட்ட வளர்ச்சி குறித்து பரிந்துரைகள் வழங்குவது.
  
மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள், டவுன் பஞ்சாயத் தலைவர்கள் ஆகியோர் - இத்திட்டக்குழு கூடும்போது, சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொள்வர்.
  
புதிதாக அமைக்கப்படும் இத்திட்டக்குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் 24 அன்று நடைபெறும்.  |