Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:20:40 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9006
#KOTW9006
Increase Font Size Decrease Font Size
புதன், ஆகஸ்ட் 22, 2012
நோன்புப் பெருநாள் 1433: பெருநாள் மாலை கடற்கரை காட்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5583 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழ்நாட்டில் 20.08.2012 அன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அன்று காலையில் காயல்பட்டினத்தின் அனைத்து பள்ளிவாசல்கள் - பெண்கள் தைக்காக்களில் பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பேருரைகள் நடைபெற்றன.

பின்னர், அனைவரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் வாழ்த்துக்களைத் தெரிவித்தவர்களாக மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

பின்னர், தமதில்லங்களுக்குச் சென்று, குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் இணைந்தமர்ந்து பெருநாள் சிறப்பு உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.

பின்னர், அவர்கள் தம் நெருங்கிய - தூரத்து உறவினர்களின் இல்லங்களுக்குச் சென்று, அங்கிருந்தோருக்கு பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து, சிறுவர் - சிறுமியருக்கு அன்பளிப்புப் பொருட்களை வழங்கி மகிழ்வித்தனர்.

அன்று மாலையில், தம் நண்பர்கள் புடைசூழ காயல்பட்டினம் கடற்கரைக்கு வந்த அவர்கள், அங்குள்ள மணற்பரப்பில் அமர்ந்தவாறு, ஊர்க்கதைகள் பேசி, உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, கிடைக்கும் தின்பண்டங்களை வாங்கி, இணைந்தமர்ந்து கொறித்தனர்.

பெருநாளன்று மாலையில் கடற்கரையில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-





































































































































































பெருநாள் மாலையில் கடற்கரையில், மட்டன் கபாப், பஞ்சு மிட்டாய், வடை - கறி கஞ்சி, மஞ்சள் மிட்டாய் (ஜாங்கிரி) உள்ளிட்ட கடைகளும், பெண்கள் அழகு பொருட்கள் விற்பனைக் கடைகளும் நிறைய அமைக்கப்பட்டிருந்தன. குழந்தைகள் விளையாடத்தக்க ராட்சத பலூன்களும் கடற்கரையில் நிறுவப்பட்டிருந்தது.

காயலர் ஒருவரால் தயாரித்து சந்தைப்படுத்தப்படும் வாசனைத் திரவிய வகைகள் கடற்கரைக்கு வந்தோரை வெகுவாகக் கவர்ந்தது.

நோன்புப் பெருநாள் மாலை கடற்கரை காட்சிகள் குறித்த குறித்த அனைத்து படங்களையும் தொகுப்பாகக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by mackie noohuthambi (kayalpatnam) [22 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21416

அருமையான காட்சி தொகுப்புகள். புன்னகை முகங்கள். விலை கொடுத்து வாங்கவா முடியும் நிம்மதி, அன்பு பாசம் சந்தோஷம் இவைகளை? எல்லோரது முகங்களிலும்இவற்றை காண முடிகிறது

இளந்தளிர்கள் முதல் முதியவர்கள் வரை. கவலைகள் மறந்து தாங்களும் சிறுபிள்ளைகளாகவே மாறியுள்ள அற்புத காட்சிகளின் அணிவகுப்பு. அல்ஹம்து லில்லாஹ். இவ்வளவு குதூகலங்களை எங்கே காண முடியும்.

நமதூரில் ஒரு கடற்கரையை தந்து இங்கே இப்படியான காயலர் சங்கமத்தையும் காண உதவி செய்த அல்லாஹ் ஒருவனுக்கே எல்லா புகழும். ஒரே நாளிலே எல்லோரும் பெருநாள் கொண்டாடியிருந்தால் கடற்கரையே தாங்காது போல் தெரிகிறது

. பூமியில் நடப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே. எண்ணம் போல் வாழ்வு. தொடரட்டும் இந்த சங்கமம். சந்தோஷம் என்றென்றும்.

இணையதள நாயகர் மருமகன் ஸாலிஹ் கண கச்சிதமாக சிரமம் எடுத்து பல கோணங்களில் கூட்டத்தின் பல்வேறு ரசனைகளை படம்பிடித்து காட்டியிருக்கிறார். வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [22 August 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21417

அன்பு சொந்தங்கள் அனைவர்களுக்கும் புனித பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

பெருநாளில் ஊரில் நாம் இல்லையே என்ற ஏக்கம் அடிமனதில் இருந்துக்கொண்டே இருந்தது. இந்த புகைப்பட தொகுப்புக்களை திரும்ப.. திரும்ப.. பார்த்து..பார்த்து.. ஒரு ஆறுதல் அடைந்து, அந்த ஏக்கம் நடு மனதிற்கு வந்து விட்டது. என்னத்தான் இருந்தாலும் ஊரில் இருந்தது போல வருமா.!!

அருமையான தெளிவான புகைப்பட தொகுப்பு. தேங்க்ஸ் அட்மின்.

எத்தனை சந்தோசங்கள். என் தம்பி, தங்கைகளின் குழந்தைகள், மச்சான் இப்ராகிம்(48), துணிப்பையுடன் இருக்கும் துணி ஒமர் பெரியப்பா, ஜெஸ்மின் சலீம் மாமா, சாளை சலீம் காக்கா (இதுவரை நேரில் சந்தித்தது இல்லை), சாளை அப்துல் ரஜ்ஜாக் காக்கா, அப்பாப்பா.. லிஸ்ட் நீண்டுக்கொண்டே வருதே.. எம்புட்டு திருப்தி...அனைவர்களையும் கண்டதில்.

அப்புறம்.. அவரவர்கள் முன்பு கிடக்கும் குப்பைகளை அவர்களே அப்புறப்படுத்தினால் பாதி கடற்கரை சுத்தமாக ஆகிவிடுமே..! கொஞ்சம் அக்கறை எடுங்கள்...

என்னது... துப்புரவு படுத்திய குப்பைகளை எங்கு போடுவது என்று கேட்கின்றீர்களா? அதுவும் சரிதான்.. விடை தான் இல்லை. நகராட்சி என்று தான் குப்பை கூடைகளை அங்கு வைப்பார்களோ...?

என்னது.. வைத்த குப்பை தொட்டிகளை ஆட்டையை போட்டுட்டு போறாங்களா...!! என்னத்தை சொல்லுறது....என்னவோ.. ஏதோ..!!

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [22 August 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 21418

மாஷா அல்லாஹ் ..... யம் காயல் மக்களை பார்ப்பது ஒரு மகிழ்ச்சி அதிலும காயலின் பெருநாள் மாலை கடற்கரை காட்சி இன்னும் ஒரு இனிமை. போட்டோகள் அனைத்தும் பார்க்க பார்க்க நானும் நம் காயலின் கடற் மணலில் கால் பதித்தது போன்று ஓர் உணர்வு

யா அல்லாஹ் நாங்கள் யாவர்களும் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க நல்லருள் புரிவாயாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Vilack SMA (kayalpatnam) [22 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21423

ஊரில் இருந்தும் நேரில் பார்க்க முடியாத நண்பர்களை இந்த புகைப்படத்தின் மூலம் கண்டத்தில் மட்டற்ற மகிழ்ச்சி .

மூன்று நாட்களாக தனித்தனியாக பெருநாள் கொண்டாடியவர்கள் கூட இன்று ஒன்றாக அமர்ந்து பாசத்தை வெளிப்படுத்தியது வரவேற்கத்தக்கது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. SK SUPER WORK
posted by IZZADEEN (CHENNAI) [22 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21426

SALAAM,EID MUBARAK TO ALL KAYAL PEOPLES AROUNT THE WORLD, THANKS TO SK REALY SUPER HARD WORK,I AM A FAN OF COMMENTS STAR SALAI ZIYAUDEEN.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [22 August 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21428

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>>> எங்கள் அன்பு நம் காயல் மாநகர மக்கள் யாவர்களுக்கும் என் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்கள் என்றென்றும் உரித்தாகுக <<<<<<<,

நாம் யாவர்களும் இந்த சிறப்பான நோன்பு பெருநாளில்.ஒன்றுமையுடனும் & நாம் நோன்பு வைத்து வல்ல இறைவனிடம் மனம் உருகி கேட்ட துவாவையும் ....வல்ல இறைவன் கபுள்லாக்கி தந்து அருள்வானாகவும் ஆமீன்...................

மாஷா அல்லாஹ்.......இந்த அருமையான போட்டோவை நம் மனம் குளிர எடுத்த அருமை சகோதரரை நாம் நம் மனம் குளிர பாராட்டியே தீர வேணும் ......THANK'S.......

வெளிநாடு வாழ் நாங்கள் நோன்பு பெருநாளில் நம் ஊரில்... அதுவும் நம் ஊர் கடற்கரையில் இருப்பது போன்றே தோன்றியது. நாங்கள் லீவில் ஊர் வரும்போது நம் சொந்தங்களை பார்க்க முடியாத... எங்கள் சொந்த காரர்களை இந்த போட்டோ மூலம் பார்த்த மன திருப்தியானது.

ஆமா... நம் ஊர் கடற்கரை என்ன ஒரே வசூல் கடற்கரையாக மாறியது போன்று தெரிகிறது. சும்மா தமாஸ்.... ரொம்ப முக்கியமான ஒரு நபரை காணோமே ? அது யார் என்றா நீங்கள் கேட்கிறீர்கள். நம் ஊர் ''''' துளீர் ''''அமைப்பைத்தான்.... நாம் எப்போதும் அள்ளி ....அள்ளி ... நம் மனது முழுமையான திருப்தி வரும்வரை கொடுக்க கூடிய ஒரே அமைப்பு இந்த நம் ஊர் ''''' துளீர் ''''அமைப்பைத்தான். இந்த சிறப்பான நோன்பு மாததில் நாம் உன்னதமாக செய்ய கூடிய ஒரே நல்ல காரியம்... இந்த ''' துளீர் ''' மக்களுக்குத்தான்.தயவு செய்து நம் ஊர் வெளிநாடு & உள் நாட்டில் வெளி ஊரில் வாழ்கின்ற மக்கள் அனைவர்களும் இந்த ''' துளீர் ''' மக்களுக்கு தாங்கள் அனைவர்களும் மனதார அள்ளி ,, அள்ளி ,, கொடுக்கும் படி கேட்டு கொள்கிறேன்.

இந்த ''''' துளீர் ''''அமைப்பை பெருநாள் அன்று நம் ஊர் கடற்கரையில் தங்கள் போட்டோவில் காணாதது .... மனதுக்கு முழு வர்தமே ....

அது சரி நம் ஊர் கடற்கரை எப்போது பாரின் கடற்கரையாக மாறியது . இவ்வளவு சிறப்புடன் விளங்க காரணம் இந்த குழந்தைகள் விளையாடத்தக்க ராட்சத பலூன்களும் கடற்கரையில் நிறுவப்பட்டிருந்தது தானோ......நம் சிறு வாண்டுகளின் சந்தோசம் தானே நமக்கும் முக்கியம். நம் குழந்தைகளை பார்க்கும் போது நமக்கு பலமடங்கு மகிழ்சி......

நம் ஊர் நபர் ஒருவரால் தயாரித்து சந்தைப்படுத்தப்படும் வாசனைத் திரவிய வகைகள் கடற்கரைக்கு வந்தோரை வெகுவாகக் கவர்ந்தது. அறிந்து ரொம்ப சந்தோசம்.... காரணம் நம் சகோதரர் அல்லவா.... இந்த நம் ஊர் நபரை மேலும் ஊக்க படுத்துவது தான் நம் ஊர் மக்களுக்கு சிறப்பு.......

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. நன்றி சொல்ல வார்த்தைகளில்லை....!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [22 August 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21429

யார் சொன்னது நான் பெருநாள் ஒன்று கூடலுக்கு ஊரில் இல்லையென்று? மாலை 4:30 முதல் இஷா வரை கடற்கரையைச் சுற்றி வந்தேன் காயல்பட்டனம் டாட் காம் மூலம். அப்படியொரு திருப்தி! புகைப்படங்களில் உள்ள அனைவரும் நன்கு பழக்கமான முகங்களே! எஸ்.கே சாலிஹ் சும்மா சுழன்று படம் பிடித்துள்ளார். யாரையும் விட்டு வைக்கவில்லை.

எட்டுக்கடை முதல் நாற்பத்தியெட்டு ஒருபுறம், எழுத்தாளர்கள் குழு மறுபுறம். மழலையர்கள், முதியவர்கள், ஊர் பிரமுகர்கள், அமைப்புக்கள், இயக்கங்கள், வசூல், மற்றும் விளையாட்டு உபகரணங்கள் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அருமையான பதிவு! அருகில் இருந்தால் கூட இவ்வளவு கூர்ந்ந்து கவனித்திருக்க வாய்ப்பில்லை!

அக்கரைச் சீமையிலே அந்நிய தேசத்தில் அணாதை போல வாழும் எம் போன்றோர்க்கு ஓர் ஆறுதல் கிடைத்தது உண்மை! வாழ்க! காயல்பட்டணம் டாட் காம்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. மக்கள் வெள்ளம்
posted by sheit (kayalpatnam) [23 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21430

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்!

கடல் கரையில் மக்கள் வெள்ளம், உலக காயலர்கள் நேரில் தம் சொந்தங்களை பார்த்தது போல் ஓர் உணர்வு சபாஷ்

sk ஸாலிஹ்
சேட்
காயல் பட்டணம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. பூத்துகுலுங்கும் புன்னகை பூக்களாகவே படர்ந்துள்ளது!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (Yanbu) [23 August 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21433

மாஷா அல்லாஹ் இது புகைப்படங்களா? இல்லை, இல்லை பூத்துகுலுங்கும் புன்னகை பூக்களாகவே படர்ந்து பரவிக்கிடக்கின்றன. பிரமிக்கவைக்கும் (சிறிய பொறாமை கலந்த) பெருநாள் கூடல்!

அன்புள்ளங்கள் ஆங்காங்கே அணியணியாய் தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ளும் அற்புத காட்சிகள் புகைப்படங்களாக பவனிவருகிறது!

யார் சொன்னது எங்களுக்குள் பிரிவினை பாதிப்பு என்று?

ஒற்றுமை எனும் அரவணைப்பு ஆலமர ஆணிவேரிலிருந்து பரவும் ஆயிரமாயர விழுதுகளின் வனப்பான ஒருமித்த இந்த ஈத் திருநாளின் ஒன்றுகூடலை பார்த்தபின்னரும், எவருக்குத்தான் இப்படி ஒரு செந்தேகம் எழும்?

இது பெருநாள் ஒன்று கூடல் என்பதைவிட,ஒற்றுமை எனும் உன்னத கால்கோள்விழா குழுமம் வியாபித்துள்ளதாக என் மனம் மானசீகமாக சொல்கிறது.

இதயம் ஏங்கும் என் எண்ணத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் ஈடேற்றி தந்தருள்வானாக ஆமீன்!

அனைத்து புகைப்படங்களையும் அழகாக ஒன்றுசேர்த்து கோர்வையாக்கிய அன்பு தம்பி S.K சாலிஹின் தனித்திறமைக்கு மற்றுமோர் மைல்கல் சாதனை!

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Lot of pictures
posted by Riyath (HongKong) [24 August 2012]
IP: 171.*.*.* United States | Comment Reference Number: 21447

Jazakallah Khair

All beautiful pitcures taken from great occasion in kayal beach are making overseas people happy and appriciate photographers for their hard work.

Hand pain to scroll down the screen to see all pictures.. Imagine how painful for photographers snap the bright and clear pictures in right angle.

**Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by mohideen (jeddah) [24 August 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21470

dear Admin

இதில் உள்ள புகைப்படத்தை மற்ற website இலும் பார்த்தேன்.இதில் இருந்து அன்கே சுட்டதா இல்லை அங்கு இருந்து இங்கே சுட்டதா. இல்லை இரண்டும் வேறயா. அறிய தரவும்

Administrator: நீங்கள் மேற்கோள்காட்டும் இணையதளத்தின் உரிமையாளர் அன்று கடற்கரையில் வேறு வேலையில் இருந்ததால் - காயல்பட்டணம்.காம் இணையதள நிருபர் எஸ்.கே.சாலிஹிடம் தனது கேமராவை கொடுத்து புகைப்படம் எடுத்து தர கூறியிருந்தார். அதனால் தான் தங்களுக்கு இரு இணையதளங்களிலும் வெளிவந்த புகைப்படங்கள் ஒன்றுப்போல் தெரிகிறது. இரண்டும் வெவ்வேறு கேமராவால் எடுக்கப்பட்டது. எடுத்தவர் ஒரே ஆள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by mohideen (jeddah) [24 August 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21472

thanks


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Solukku.M.E.Syed Md Sahib. (Qatar) [26 August 2012]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 21505

அஸ்ஸலாமு அலைக்கும். பார்க்க பார்க்க பரவசம். நண்பர்களையும், உறவினர்களையும் பார்த்ததில் மகிழ்ச்சி. சிரமம் பாராது போட்டோ எடுத்தமைக்கு மருமகனுக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved