| 
 மேற்கு வங்க மாநிலம் கல்கத்தாவிலுள்ள இடிஏ மெல்கோ நிறுவனத்தின் சார்பில் 16.08.2012 அன்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 
  
 
  
காயலர்கள் உட்பட திரளானோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், அந்நிறுவனததின் கல்கத்தா பிராந்திய மேலாளர் அணிந்த்யா போஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். 
  
 
  
 
  
இந்நிகழ்வில், அனைவருக்கும் பேரீத்தம்பழம், பழ வகைகள், குளிர்பானம் உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது. 
  
 
  
இஃப்தார் நிறைவில் மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக - கூட்டாக நடத்தப்பட்டது. தொழுகை நிறைவுற்றதும் அனைவருக்கும் இரவுணவாக இறைச்சி பிரியாணி பரிமாறப்பட்டது. 
  
 
  
 
  
 
  
தகவல் & படங்கள்:  
K.Z.முஹ்யித்தீன் அப்துல் காதிர்,  |