Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:55:00 PM
வியாழன் | 7 டிசம்பர் 2023 | துல்ஹஜ் 1589, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0012:1315:3318:0419:17
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:19Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:25
மறைவு17:58மறைவு13:43
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0505:3105:57
உச்சி
12:09
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2018:4619:13
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8629
#KOTW8629
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுன் 17, 2012
40 தடவை ரத்த தானம் செய்துள்ள காயலருக்கு சென்னையில் பாராட்டு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 8128 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (21) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் ஏற்பாட்டில் - அப்பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள செனட் ஹாலில் - ஜூன் 14 அன்று உலக ரத்ததானம் செய்வோர் தினம் (WORLD BLOOD DONOR DAY) - கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மயில் வாஹணன் நடராஜன் முன்னிலை வகித்தார். TAMILNADU PUBLIC SERVICE COMMISSION தலைவர் ஆர்.நடராஜன் IPS சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.இந்நிகழ்ச்சியில் - அதிகமாக ரத்த தானம் செய்தோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. காயல்பட்டினத்தை சார்ந்த - சென்னையில் வசிக்கும் - எஸ்.எஸ்.எம். சதக்கதுல்லாஹ்விற்கும் - இந்நிகழ்ச்சியில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மிக அரிய A1B Negative வகை ரத்தத்திற்கு சொந்தக்காரரான இவர் இதுவரை 40 தடவை ரத்த தானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகை ரத்தம் - உலகில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இது வரை ரத்த தானம் செய்துள்ள விபரங்களை காண இங்கு அழுத்தவும்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:40 தடவை ரத்த தானம் செய்து...
posted by Thaika Ubaidullah (Macao) [17 June 2012]
IP: 202.*.*.* Macau | Comment Reference Number: 19382

MAY ALLAH BLESS HIM WITH ALL THE BESTS IN THIS WORLD AND AAKHIRA. GOOD TO SEE SOME ONE SERVING QUIETELY WHEN IT IS NEEDED THE MOST. LIKE FATHER LIKE SON. MAASHA ALLAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:40 தடவை ரத்த தானம் செய்து...
posted by Basheer Ali (Melbourne) [17 June 2012]
IP: 220.*.*.* Australia | Comment Reference Number: 19388

MashaAllah, May Allah accept this good deed and reward him the best in both the worlds.Amin


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:40 தடவை ரத்த தானம் செய்து...
posted by Ruknudeen Sahib (China) [17 June 2012]
IP: 116.*.*.* China | Comment Reference Number: 19392

அஸ்ஸலாமு அலைக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலா உங்கள் வாழ்கையில் நோய் நொடியின்றி இன்னும் பல உயிர்களை காக்க கூடிய சேவையே தொய்வின்றி செய்ய சக்தியும் உற்றாருக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்திடவும் சக்தியும் நீடிய ஆயுளையும் தந்து அருள துஆ செய்கிறேன் வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:40 தடவை ரத்த தானம் செய்து...
posted by OMER ANAS (DOHA QATAR.) [17 June 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 19398

மாஷா அல்லாஹ் ! எல்லாம் வல்ல ரஹ்மான் இது போன்றோரின் இரத்தத்தினை மேலும் சுத்தமாக்கி, அவசியப் படுவோர்க்கு உதவிகள் செய்திட நாமும் இரு கரமேந்தி துவா செய்வோம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:40 தடவை ரத்த தானம் செய்து...
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [17 June 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19399

He has donated his blood forty times for various operations.Actually his blood group is rare.I pray such a good things will appear in guinness record.He has a magnanimous person.Really appreciated his fabulous things.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. எங்கள் குடும்பத்தாரின் சார்பாக மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்.
posted by சட்னி,செய்யது மீரான், (ஜித்தா,,சவுதி அரேபியா ) [17 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19405

அஸ்ஸலாமு அலைக்கும்..

இனம்,மதம்,மொழி, எது?யார்? என பாராது ? மனித உயிர்கள் வாழ கொடை உள்ளத்தோடு தன் குருதியை நாற்பதாவது தடவையாக தானம் செய்தும் இது விசயத்தில் எங்களில் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ள என் அன்பு மருமகன் கண்டி,R.முஹம்மது அப்துல் காதரின் மரியாதை மிகு சின்ன மாமனாரும் மற்றும் எங்கள் பாசத்திற்கும்,அன்புக்கும் உரித்தான சகோதரர் ஹாஜி,எஸ்.எஸ்.எம்.சதக்கத்துல்லாஹ் அவர்களுக்கு எங்கள் குடும்பத்தாரின் சார்பாக மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்.

இது போன்று எத்தனையோ நற்சேவைகள் செய்து வருவதும் நாங்கள் அறிவோம் .மாஷா அல்லாஹ்.

வல்லோன் அல்லாஹ் தங்களுக்கும்,
தங்களை சார்ந்தவர்களுக்கும்
பரிபூரண சுகத்தையும் தந்து பறக்கத்துடன் வாழ
பேரருள் புரிவானாக ஆமீன்.

என்றும் அன்புடன் ..
சட்னி,செய்யது மீரான்,
ஜித்தா,,சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. சின்னத் திரையான எங்கள் மனதை வண்ணத் திரையாக்கியவரே...
posted by ராபியா மணாளன் (புனித மக்கா.) [18 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19409

நம்பினால் நம்புங்கள்!
நடந்தது என்ன?
ஆச்சரியம்! ஆனால் உண்மை!
இதுகதையல்ல...நிஜம்!
சொல்வதெல்லாம் உண்மை!

மக்கள் அரங்கத்தில் இது போன்ற மகத்தான சேவை வெறும் அத்திப்பூக்கள் தாம்! நீயாயா? நானா? எனப் போட்டி போட்டுக் கொண்டு ரத்த தானம் செய்யத் தூண்டிய கண்மணி!

உலகமெனும் மர்ம தேசத்தில் அது இது எது? எனத் தெரியாமல் அத்தனைக்கும் ஆசைபட்டு, ஆஹா என்ன ருசி என நலபாகத்தில் மூழ்கி நம் மக்கள் இனிப்பு, காரம், பன்னாட்டு சமையல், நம் நாட்டு சமையல், சத்தான சமையலில் ஆலோசனை நேரத்தை செலவழித்து வரும் போது, இவர் செய்த மகத்தான செயலால் இந்த நாள் இனிய நாளாக பலருக்கும் விடிந்துள்ளதே?

இப்ப சொல்லுங்கண்னே...சொல்லுங்க!
அசத்தப் போவது...யாரு?
உங்கள் ஒரு வார்த்தை ஒரு லட்சம் போன்றது.
வாங்க பேசலாம்.
சிந்திக்க சில நிமிடங்கள் இருக்கு!
உங்கள் கேள்விக்கான பதில் இருக்கு!
“நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” மக்கள் மனதை!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:40 தடவை ரத்த தானம் செய்து...
posted by SH KITHURU MOHIDEEN (CHENNAI) [18 June 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 19417

GREAT KAKA.....MashaAllah, May Allah accept this good deed and reward him the best in both the worlds. உங்களுடைய இந்த மௌனமான சேவை தொடரட்டும்.......insha allah

Anbudan
SH Kithuru Mohideen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:40 தடவை ரத்த தானம் செய்து...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (காயல்பட்டினம் ) [18 June 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 19420

ஐயோ... இந்த மெலிந்த தேகத்தில் இவ்வளவு மனிதநேய சாதனையா...!! ஆச்சரியம் கலந்த சந்தோசம்.

40 தடவைகள் குருதி கொடை செய்துள்ள சகோதரர் சதக்கதுல்லாஹ்விற்கு 400 மில்லியன் பாராட்டுக்கள்.

உங்களின் உடல்நலம் அதீத ஆரோக்கியத்துடனும், நோய் நொடிகள் இல்லாமலும், நீண்ட ஆயுளுடன் நிம்மதியான வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

பூரிப்புடன்,
சாளை S.I.ஜியாவுத்தீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:40 தடவை ரத்த தானம் செய்து...
posted by vilack sma (HCM Vietnam) [18 June 2012]
IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 19425

தன்னுடைய இரத்தம் யாருக்கு செல்கிறது என்பதுகூட அறியாமல் " குருதிக்கொடை " அளித்த இந்த தம்பியின் ஆயுளை நீடிக்க அல்லாஹ் போதுமானவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:40 தடவை ரத்த தானம் செய்து...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [18 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19427

தம்பி..சதகத்துல்லா...நீதாம்பா உண்மையில் "ரத்தத்தின் ரத்தம்" இவ்வளவு மெலிந்த தேகத்தில் இவ்வளவு ரத்தமா... என்பதல்ல... மெலிந்த தேகம்... எத்தனை உறுதி... எத்தனை இரக்கம்.... எவ்வளவு கருணை.... நீ வாழ்க...!வளர்க....!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:40 தடவை ரத்த தானம் செய்து...
posted by Salai.Mohamed Mohideen (USA) [18 June 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 19434

அன்பு சகோதரர் சதக்கத்துல்லாஹ் காக்கா அவர்கள் இது போன்று பல சேவைகளை மௌவுனமாக செய்து வருகின்றார்கள் என்பதனை நாங்கள் மிக நன்றாக அறிவோம். இத்தருணத்தில் அவரை பற்றி நானறிந்த ஒரு சில தகவல்களை அன்பு வாசக நண்பர்களிடம் பரிமாறி கொள்வதில் ஆனந்தம் அடைகின்றேன்.

Basically அவர் ஒரு HAM மெம்பெர். HAM Radio பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரிய வில்லை (அதனை அறிய அவருடைய இணைய தளத்தையே போய் பாருங்கள். http://sadaqathullah.com/ham.html ). ஆனால் எங்களுக்கு (around 30 students) அதனை நாங்கள் 10 ஆம் வகுப்பு படித்த போதே அதன் நன்மைகளை எங்களுக்கு எடுத்து கூறி அதற்காக சிறப்பு வகுப்புகளை (LK ஸ்கூல் drawing மாஸ்டர் உதவியுடன்) நடத்தி அதற்கான பரிச்சைகளை எழுத வைத்து இன்று நாங்களும் ஒரு ham மெம்பராக இருப்பதற்க்கு அவரே காரணம்.

அன்று முதல் அவருடன் எனக்கு நல்லதொரு தொடர்புண்டு. நமதூரில் HAM awareness - ஐ நம் மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து ஏற்படுத்தி தர காக்கா அவர்களை வேண்டுகின்றேன்.

HAM (அமெச்சூர் ரேடியோ) ஆர்வலராக... இயற்கை சீற்றங்களின் போது 'தொலை தொடர்புகள் துண்டிக்க பட்ட நிலையில்' பாதிக்க பட்ட இடத்திற்க்கு / மக்களுக்கு அவசர செய்திகளை பரிமாற்றம் செய்து... ஆபத்தான தருணத்தில் இவரை போன்ற 'அமெச்சூர் ரேடியோ ஆப்பரேட்டர்ஸ்' துணை கொண்டு மக்களுக்கு உதவியும் வருகின்றார்.

சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பு தோன்றுவதற்க்கு சில வருடங்களுக்கு முன்பாகவே , இதன் அவசியத்தை எடுத்து கூறி சென்னையில் வசிக்கும் படித்த நமதூர் நண்பர்களை ஈமெயில் மூலம் ஆர்வ மூட்டும் படி கூறினார்கள். ஒரு வழியாக அவ்வமைப்பும் உதயமாகி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்கள்.

இது போன்ற பல சேவைகளை என்றும் தொடர்ந்து செய்ய வல்ல இறைவன் நம் சகோதரருக்கு அருள் புரிவானாக !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:40 தடவை ரத்த தானம் செய்து...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [18 June 2012]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19436

அஸ்ஸலாமு அலைக்கும்.

எங்களின் அருமை தம்பியே... உன்னை எந்த விததில் நாங்கள் பாராட்டுவது என்றே என் மனதில் ஒன்றுமே புரிய வில்லை.உன்னை நான் என் மனம் குளிர பாராட்டுகிறேன். நம்மை படைத்த வல்ல கிருபையாளன்.உன்னுடைய ஆயுளை நீடித்து .... எந்த ஒரு நோய்' 'களும் உன்னை அணுகாது.நீ நிடித்த ஆயுளுடன்.சந்தோஷமான முறையில் வாழ்ந்து. உன்னை பெற்ற தாய்/ தந்தைக்கு உகந்த பிள்ளையாகவும் / இது போன்ற நல்ல காரியங்கள் செய்திடவும் அருள் புரிவானகவும் ஆமீன்.

தம்பி நீ மிக உயர்ந்தவன்.பல உயிர்களை காத்தவன் / இனம் / மதம் / மொழி /பேதம் இன்றி நீ ஆற்றிய செயலுக்கு கண்டிப்பாக ''' நேசனல் அவார்டு OR அன்னை தெரசா அவார்டு '''' கூட உனக்கு தரலாம்.

அதுவும் உன்னிடம் இருப்பது மிக அரிய A1B Negative வகை ரத்தம் என்பதால் + உன் மனசும் நல்ல மனசு என்பதால் எல்லோரும் உன்னை பாராட்டுவதோடு நானும் உன்னை பாராட்டுவதில் பெருமை படுகிறேன்.

எண்ணிக்கை பெரிதல்ல. உன் இளகிய மனசு தான் ... """"""" இமய மலையை விட மகா பெரியது. உன்னுடைய நல்ல பயணம் தொடர வாழ்த்துக்கள். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:40 தடவை ரத்த தானம் செய்து...
posted by Ahamed Mohideen (Chennai) [18 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19437

மாஷா அல்லாஹ்...பூரித்து பொய் விட்டேன் சதக் காக்கா...இரண்டு மூன்று தடவை கொடுத்து ஓய்ந்து விட்ட எனக்கு உங்களால் பயன் அடைந்தவர்களின் நன்றி மடல்களை பார்க்கும்போது மேலும் உற்சாகம் மூட்டுகிறது.அல்லாஹ் உங்களின் வாழ்வை இலேசாக்கி வைப்பானாக..ஆமீன்.

48 குடும்பத்தினர்களின் சார்பாக...
அஹ்மத் பின் பாரூக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:40 தடவை ரத்த தானம் செய்து...
posted by mackie noohuthambi (colombo) [19 June 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 19442

பாரகல்லாஹு லக.

இரத்த வெறிபிடித்து அலையும் மனிதர்கள் வாழும் இந்த யுகத்தில் உங்களுக்கு அல்லாஹ் ஒரு வித்தியாசமான இரத்த குரூப்பை தந்து அதை முஸ்லிமல்லாத மக்களுக்கு அதிகம் கொடுத்து உதவும் உயர்ந்த உள்ளத்தையும் தந்துள்ளான்.

" உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன, அவர் உருவம் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு" என்று ஒரு கவிஞன் பாடியது நினைவுக்கு வருகிறது. அப்படி வெறுமனே பாடி விட்டு போய்விடாமல் நுபுவ்வத்தின் வாசல் 40 அந்த வாசலின் வழியே வந்த நபிகள் நாயகத்தின் நற்பண்புகளை பின் பற்றி வாழும் உங்கள் குடும்பம் பாராட்டுக்கு உரியது,

அவர்கள் பணத்தை தானமாக கொடுத்து சுவர்க்கத்தை தனதாக்கி கொண்டவர்கள். நீங்கள் உங்கள் இரத்தத்தையே கொடுத்து அல்லாஹ்வின் அர்ஷின் கதவை தட்டி இருக்கிறீர்கள். மாஷா அல்லாஹ் பெருமைக்குரிய விஷயம் காயல்பட்டினதுக்கு பலரும் பல வகையில் சிறப்பு சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் முற்றிலும் வித்தியாசமான ஒரு சாதனை படைத்திருகிறீர்கள்.

.வாழ்த்துக்கள். அல்லாஹ் உங்கள் இரத்தத்தில் அபிவிருத்தியை தருவானாக. ஆமீன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:40 தடவை ரத்த தானம் செய்து...
posted by hylee (kayalpatnam) [19 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19449

தொண்டுள்ளம் கொண்ட துடிப்பான நண்பர்.வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. மத நல்லிணக்கத்தின் ..மனித நேயத்தின் ஒரு அத்தாட்சி இவர் !
posted by K.V.A.T.HABIB MOHAMED (DOHA - QATAR) [19 June 2012]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 19456

அன்பு சகோதரர் சதக்கத்துல்லாஹ் அவர்கள் எளிமையின் திரு உருவம்! பேச்சில் நளினம், நிதானம், அமைதி ... அவரை என் வாழ்வில் முதல் முறையாக மொஹுதூம் பள்ளி தெரு முனையில் வைத்து சந்தித்து உரை யாடிய சம்பவம் இன்னும் பசுமையாக நிற்கிறது. துளிரில் வைத்து மரம் நடுகிறபோது எங்களோடு ஒன்றாக நின்று மரம் நட்டு சென்றதை நினைக்கும் போது அவரது பசுமை எண்ணத்தை பிரதி பலித்தது. மொத்தத்தில் நம் மத்தியில் நடமாடும் ஒரு மனித நேயர். அவர் குருதி கொடுத்த நபர்களை பாருங்கள் புரியும்! மத நல்லிணக்கத்துக்கு ஒரு வித்து! இஸ்லாம் கூறும் இனிய பாதை ! அவருக்காக நாம் அனைவரும் து ஆ செய்வதோடு , அவரைப்போல் நாமும் செயல் பட முற்படுவோமாகில் , இஸ்லாமியனின் உண்மை தோற்றம் அனைவரின் மனதை தொடும். அல்லாஹ்வின் அருள் நிரம்ப பெறப்படும். முயற்சி செய்வோமாக!

K.V.A.T. ஹபீப்.
கத்தார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:40 தடவை ரத்த தானம் செய்து...
posted by T,M,RAHMATHHULLAH (74)yr phn 280852 (KAYALPATNAM 04639 280852) [19 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19458

அஸ்ஸலாமு அலைக்கும்!

மிகவும் பேணுதலாகவும் பத்திணித் தனமாக்வும் வாழ்ந்து காட்டிய எனது ஐம்பத்தைந்து வருடகால நண்பரும், ஒரு வகையில் கணக்குத்துறையில் ஆசானுமகிய எனது பாசத்திர்குரிய மற்ஹூம் எம் எஸ் ஷம்சுத்தீன் காக்கா (EX L K S STAFF JAFFNA) (அல்லாஹும்மங்ஃபிற் லஹூ வற்ஹம்ஹூ) அவர்களின் அருமை மகனார் தம்பி சதக்கத்துல்லாஹ் அவர்கள் செய்த இம்மா பெரும் இரத்த தான சேவையை அல்லாஹ்வால் நிச்சயமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஸுன்னத்தான அமல் என்றால் அது மிகையாகாது, இன்ஷா அல்லாஹ். JAZAAK KALLAAHU KHAIRA- WA KHAIRAN JAZEELAH.

ஸதக்கத்து என்ற பெயருக்குப் பாத்திரமாகவே வாழும் தம்பி தன்னையே ஸதக்கா செய்து வருகிறார். அப்பனுக்கு மகன் தப்பாமல் பிறந்து இருக்கிறார்..மேலும் புலி எட்டடி பாயும் என்றால் புலிக்குட்டி பதினாறடி பாயும் என்பது நம் தாய் நாட்டு பழ மொழியாகும்.

YAA ALLAAH ! THAWWALALLAAHU HAYATHTHAHU. VA GAFARA ZANBAHU VA AKHLAFA NAFAQQATHTHAHOO WA SADHAQQATHTHAHOO! AAMEEN.

மேலும், இந்த இரத்த தான விஷயத்திலே இதுவரை நமதூர் மக்களில் பதினைந்து தடவை இரத்த தானம் கொடுத்த நானும் ஒரு முன்னிலை ப்ளட் டோனர் என்று நிணைத்து கொண்டிருந்த எனக்கு இந்த செய்தி “ குடல் குளுந்த” மேலான செய்தியாகவே இருக்கிறது. இது எங்கள் தாயார் அடிக்கடி கூறும் நன்றீ வார்த்தையாகவே இருக்கிறது. ஹாங்காங்க் ரெட் கிராஸ் ஸொஸைட்டீ எனக்கு இண்டெர் நேஷனல் ப்ளட் டோனர் எனும் ஸெர்ட்டிஃபிகேட்டும் மெடலும் தந்து கவ்ரவித்தார்கள். இது எனக்கு பல துறைகளிலும் (கஸ்டம்ஸிலும்) அப்பப்ப உதவி அளிக்கிறது. என மெதுவாகச் சொல்லிக் கொள்கிறேன்.

அன்புமிக்க நண்பர்களே!

1. இரத்த தானம் செய்யுங்கள்,

2. முறைப்படி செய்யுங்கள்.

3. அல்லாஹ்வுக்காக செய்யுங்கள்.

4. இது ஒரு ஸுன்னத்தான அமல் எனும் நிய்யத்துடன் செய்யுங்கள்

5. தானம் செய்தபின் குளியுங்கள் இதும் ஒரு சுன்னத்தான குளி எனும் அமலில் சேர்ந்து, அத்துடன் அபரிமித தவாபை மட்டுமல்ல உடல் நலத்தையும் காக்கும்.

6.மன உற்சாகத்தை கொண்டு வரும். ஏனெனறால் எவ்வளவு ரெத்தம் நமது உடலில் இருந்து வெளியேறுகிறதோ அந்த அலவு புதிய புஷ்ட்டியுள்ள ரெத்தம் இயற்கையாகவே ஆறு தினத்தில் உடலிலூறுகிறது. அனுபவித்து உணர்ந்து சொல்கிறேன். ஒரு விதமான ரெஃப்ரெஷ்மெண்ட் தெரியும்.

(ஸுண்ணத்தான குளிப்பு களில் ரெத்தம் குத்தி எடுப்பதும் ,எடுத்ததும் குளிப்பது ஸுன்னத்து என்று மார்க்க தலை சிறந்த மார்க்க அறிஞர்கள் கூறுவார்கள். நான் ஹாங்காங், காயல்பட்டனம். கொல்கத்தா, இலங்கை, ஸவூதி போன்ற இடங்களிலும் கொடுத்து இருக்கிறேன். எனது குரூப் A 1 POSITIVE.

தகவல் தைக்கா றஹ்மத்துல்லாஹ்.
19-6-2012 செவ்வாய் 28-7-1433


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:40 தடவை ரத்த தானம் செய்து...
posted by Ln. M.S.M. Meera Sahib (Kayalpatnam) [20 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19466

அஸ்ஸலாமு அழைக்கும் பாரபட்சமற்ற தன்னலம் பாராத உயிர் காக்கும் உங்கள் சேவைக்கு பாராட்டுகள் ! இறைவன் எல்லா வளத்தையும் உங்களுக்கு தந்தருள்வானாக . தங்களை பின் பற்றி மற்றவர்களும் இந்த சேவைக்கு முன் வரவேண்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:40 தடவை ரத்த தானம் செய்து...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227) [20 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19475

மனித நேயர் அவர்களுக்கு பாராட்டுகள்... எல்லா வளமும் உடல் ஆரோக்கியமும் நீண்ட நாட்கள் பெற்று வாழ வாழ்த்துக்கள்...

மாஷா அல்லாஹ்... இப்படி ஒரு நல்ல (குருதி கொடை) மனித நேய சேவை மனப்பான்மை கொண்ட மனித நேய (குருதி கொடையாளிகள்) முன்னோடிகள் இக்காலத்தில் மிக சொற்பமே..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:40 தடவை ரத்த தானம் செய்து...
posted by S.S.M.Sadaqathullah (Chennai) [26 June 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 19626

அஸ்ஸலாமு அலைக்கும்,

எல்லாப்புகழும் இறைவனுக்கே,

விருது பெற்ற எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததற்காகவும், துவா செய்ததற்காகவும் ஜஸாக்கல்லாஹ் ஹைர். பார்வையாளர்கள் யாரேனும் AB நெகடிவ் பிரிவினை சார்ந்தவர்களாக இருந்தால் - நான் பராமரிக்கும் பட்டியலில் அவர்களின் பெயரையும் இணைத்திட என்னை தொடர்புக்கொள்ள கேட்டு கொள்கிறேன்.

எனது ஈமெயில் முகவரி - sadaqa@hotmail.com
தொலைப்பேசி எண் - 99400 27892


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நேற்றைய மழை காட்சிகள்!  (16/6/2012) [Views - 3575; Comments - 4]
இன்று மாலையில் கனமழை!  (15/6/2012) [Views - 3558; Comments - 5]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2023. The Kayal First Trust. All Rights Reserved