Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:07:35 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8493
#KOTW8493
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மே 22, 2012
ப்ளஸ் 2 முடிவுகள் 2012: “இ.சி.ஜி. வல்லுநராக விரும்புகிறேன்...!” -மாநில சாதனை மாணவி செய்யித் அலீ ஃபாத்திமா ஆர்வம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4716 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (19) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இ.சி.ஜி. டெக்னீஷியன் படித்து, அதற்கேற்ற வேலையில் அமர விரும்புவதாக, மனையியல் பாடத்தில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ள, காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி எஃப்.செய்யித் அலீ ஃபாத்திமா தெரிவித்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 08ஆம் தேதி துவங்கி, 30ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் இன்று காலை 11.00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வில், காயல்பட்டினம் கீழ நெய்னார் தெருவைச் சார்ந்த ஃபாரூக் அலீ என்பவரின் மகள் எஃப்.செய்யித் அலீ ஃபாத்திமா, மனையியல் (Home Science) பாடத்தில், 200க்கு 195 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.

பாடவாரியாக இவர் பெற்ற மதிப்பெண்கள் பின்வருமாறு:-

தமிழ் - 182
ஆங்கிலம் - 144
இயற்பியல் - 154
வேதியல் - 148
உயிரியல் - 128
மனையியல் - 195

மொத்த மதிப்பெண்கள் - 1200க்கு 0951.

தனது சாதனை குறித்து, மாணவி எஃப்.செய்யித் அலீ ஃபாத்திமா கருத்து தெரிவிக்கையில்,

எனது தந்தை ஃபாரூக் அலீ சமையல் தொழில் செய்து வருகிறார்... தாயார் ஃபவுஸியா இல்லத்தரசியாக உள்ளார்... எனது மூத்த சகோதரி ஷமீமா 10ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்...

நான் மனையியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடத்தை எதிர்பார்த்து மிகுந்த ஆவலுடன் படித்தேன்... இப்பாடத்தில் மாநிலத்தின் முதன்மதிப்பெண்ணும் 195தான் என்றாலும், மொத்த மதிப்பெண்களில் என்னை விட 51 மதிப்பெண்கள் அதிகம் பெற்றதால், கோவையைச் சார்ந்த மாணவி சூரிய ப்ரியா முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

மாநிலத்தில் இரண்டாமிடம் என்ற இந்த சாதனை எனக்கு பெருமகிழ்ச்சியைத் தந்துள்ளது... இதற்காக முதலில் என்னைப் படைத்து பராமரிக்கும் இறைவனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...

அடுத்து என் பெற்றோருக்கு நான் பெரிதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்... பொருளாதாரத்தில் தாழ்நிலையிலிருக்கின்ற நிலையிலும், பெண் பிள்ளையான எனது படிப்பிற்கு என் பெற்றோர் தடங்கல் எதுவும் தராதது மட்டுமின்றி, நன்கு படிக்க என்னை ஊக்கப்படுத்தவும் தவறவில்லை... அவர்கள் தந்த ஒத்துழைப்புதான் எனது இந்த சாதனைக்கு வாய்ப்பை ஏற்படுத்தியது...

அடுத்து, எனது மதிப்பிற்குரிய ஆசிரியை வாணி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படிக்க வேண்டிய நேரத்தில்தான் படிக்க வேண்டும்... விளையாட வேண்டிய நேரத்தில் விளையாட வேண்டும்... உண்ண வேண்டிய நேரத்தில் உணவுண்ண வேண்டும்... என அடிக்கடி அவர் சொல்லிக்கொண்டே இருப்பார்...

எந்த நேரத்தில் எந்த உணவை உண்டால் நலமாக வாழலாம், நன்றாகப் படிக்கலாம் என்பன போன்ற அரிய அறிவுரைகளையெல்லாம் அவர் எங்களுக்கு நிறைவாகத் தருவார்...

வகுப்பில் அடிக்கடி சிறப்புத் தேர்வுகள் நடத்தி எங்களுக்கு நல்ல பயிற்சியளிப்பார்... சில நேரங்களில் மதிப்பெண் குறைவாக எடுத்துவிட்டாலும், கடிந்துகொள்ளாமல் - அடுத்த முறை நன்றாக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தி, குறைந்த மதிப்பெண் பெற்றதையே மறக்கச் செய்வார்... இந்த நேரத்தில் அவர்களுக்கு எனது மனங்குளிர்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...

அடுத்து, எங்கள் பள்ளி தலைமையாசிரியை முஹம்மத் ஆயிஷா அவர்களை இந்த நேரத்தில் நினைவுகூர கடமைப்பட்டிருக்கிறேன்... எங்களது படிப்பு, ஒழுக்கம், முன்னேற்றம் உள்ளிட்ட விஷயங்களில் தனிக்கவனம் செலுத்தி, மாணவியர் அனைவரோடும் பாரபட்சம் பாராமல் பழகி ஊக்கம் தந்துகொண்டே இருப்பார்... இந்நேரத்தில் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...

தொலைக்காட்சி பார்ப்பதில் எனக்கு அவ்வளவாக விருப்பமில்லை... 12ஆம் வகுப்பு மாறியதும் முற்றிலுமாக தொலைக்காட்சி பார்ப்பதையே விட்டுவிட்டேன்...

மாணவ-மாணவியருக்கு நான் தெரிவிக்க விரும்புவதெல்லாம், இரவில் நீண்ட நேரம் படிப்பதை விட, அதிகாலையில் முன்னரே எழுந்து படித்தால், படித்த பாடம் அப்படியே மனதில் நிற்கும்.. அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை அறிவுரையாகத் தெரிவித்துக்கொள்கிறேன்...


இவ்வாறு, மனையியல் பாடத்தில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை புரிந்துள்ள மாணவி எஃப்.செய்யித் அலீ ஃபாத்திமா தெரிவித்துள்ளார்.

இம்மாணவியை, பள்ளி தலைமையாசிரியை முஹம்மத் ஆயிஷா, பாட ஆசிரியை வாணி மற்றும் ஆசிரியையர் பாராட்டினர்.



இம்மாணவி, ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் 100 சதவிகித வருகைப் பதிவைக் கொண்டமைக்காக, பள்ளியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய, “அக்னி சிறகுகள்” நூல் பரிசாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: “...
posted by Salai S Nawas (singpaore) [22 May 2012]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 18983

வாழ்த்துக்கள் சகோதரி. உன்னை ஈன்றதில் காயல்பட்டினம் பெருமை கொள்கிறது.

உன் எண்ணம் நிறைவேற அல்லாஹ் அருள்புரிவானாக!! அமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: “...
posted by Mohamed Salih (Bangalore) [22 May 2012]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 18984

எல்லா புகழும் வல்ல இறைவனுக்க ..

என் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் ..

உன் பேட்டி மிக அருமை .. உன் கனவுகள் மெய்ப்பட வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன் .

என்றும் அன்புடன் ,
பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் ஸாலிஹ் கே.கே.எஸ் ,
துணை செயலர் - காயல் நல மன்றம் - பெங்களூர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: “...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [22 May 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18985

வாழ்த்துக்கள் அன்பு மாணவியே,

உன் விருப்பம் போல் தான் விரும்பியதை படித்து அதிலும் முத்திரை பதிக்க வல்ல நாயன் அருள் புரிவானாக - ஆமீன்

உன்னை முன்மாதிரியாக கொண்டு வருங்கால மாணவ மாணவிகளும் வெற்றி பெற வேண்டும் , இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: “...
posted by ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [22 May 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18986

முதலில் மாணவிக்கு வாழ்த்துக்கள்!!! நான் பல முறை கருத்துப் பதிவில் எழுதியுள்ளதைப் போல் இன்னும் சற்று முயற்சி செய்வோமேயானால் மாநிலத்தின் முதல் அந்தஸ்து நிச்சயமாக நமதூருக்கு கிடைக்கும்.

இன்ஷா அல்லாஹ் நமதூர் கல்வித் தொண்டு நிறுவங்கள் தொடர்ந்து சிரத்தை மேற்கொண்டு மாணவ-மாணவியரை ஊக்கப்படுத்தி வருவார்களேயானால் வெற்றிக்கனி கைக்கு எட்டும் தூரத்தில் தான் உள்ளது. இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் அதை தட்டிச் செல்ல முயற்சி செய்வோமாக! அல்லாஹ் அதற்கு வழி வகுப்பானாக! மீண்டும் ஒரு முறை இந்த மாணவிக்குப் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: “...
posted by RAFEEKBUHARY (COLOMBO) [22 May 2012]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 18990

CONGRATULATIONS. KEEP IT UP


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re: வாழ்த்துக்கள் சகோதரியே !! வெற்றி மேல் வெற்றி வந்து உன்னை சேரட்டும் !!
posted by Arabi Haja (Hong Kong) [22 May 2012]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 18991

அன்பு சகோதரியே !! கொடிது கொடிது வறுமை கொடிது !! அதனினும் கொடிது இளமையில் வறுமை, என்பார் ஆன்றோர் !! வறுமையை வென்று, உன் வாழ்வில் - அல்லாஹ்வின் நாட்டப்படி- வெற்றி மேல் வெற்றி வந்து உன்னை சேரட்டும் !! அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம், உன்னை ஈன்றெடுத்த தாய்க்கும், தந்தைக்கும் மற்றும்
நீவிர் பெருமை பாடும் உம் பாட சாலையின் ஆசிரிய தாய்மாற்கும், சேரட்டும்!!

உம்மை உளமார வாழ்த்தும் ஹாஜா அரபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: “...
posted by Salai Sheikh Saleem (Dubai) [22 May 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18993

அன்பு மாணவி செய்யத் அலி பாத்திமாவின் இமாலய சாதனைக்கு பல கோடி வாழ்த்துக்கள்.

இந்த மாணவியை / இவரின் ஆற்றலை ஏற்கனவே கண்டறிந்து அவரை அவர் வழியிலேயே ஊக்கப்படுத்தி இருந்தால் இவரே மாநில முதல் மாணவியாக திகழ வாய்ப்புகள் அதிகமாகி இருக்கலாம்.

இதற்குத்தான் நமதூரில் நிரந்தர வழிகாட்டுதல் மையம் ஒன்றை நிறுவவேண்டும் என்று நான் பல வருடங்களாக என் கருத்துக்களை பதிவு செய்து கொண்டே இருக்கிறேன். வழிகாட்டுதல் மையம் என்று ஒரு தனி கட்டிடமே கட்டி செயல்படவேண்டும்.

இதையே இக்ராவின் புதிய தலைவர் எனதன்பு காக்கா வாவு ஷம்ஷுத்தீன் அவர்களுக்கும் இதையே ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்.

வழிகாட்டுதல் எனபது ஏதோ ஓரிரு கூட்டங்களோடோ, பயிர்ச்சிகளோடோ முடிந்துபோவது இல்லை. மாணாக்கர்களை ஒன்பதாவது வகுப்பிலிருந்தே கண்காணித்து அவர்களில் நன்றாக படிக்கும் மாணாக்கர்களை தத்துஎடுத்து அவர்களின் திறமை அறிந்து பயிற்சி கொடுக்க வேண்டும், எல்லா மாணாக்கர்களுக்கும் பல துறைகளிலும் பயிர்ச்சி கொடுத்து அவர்கள் எதிர்காலத்தை இலகுவில் எதிர்கொள்ளும் வல்லமையை உருவாக்க வேண்டும்.

என்னிடம் இதற்குண்டான ACTION PLAN உள்ளது. யார் முன்வருகிறார்கள் பார்ப்போமே ?????

தேர்வில் வெற்றி பெற்ற அணைத்து மாணவ மாணவியருக்கும் காயலர்கள் அனைவரின் சார்பிலும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வெற்றி பெற முனைந்த அனைத்து மாணவர்களும் சீக்கிரமே அடுத்த தேர்வில் நல்லபடி வெற்றி பெற்று உங்களின் எதிர்காலம் சிறக்க வல்ல அல்லாஹ்வை வேண்டியவனாய்,,,நிறைவு செய்கிறேன்.

இந்த மாணவி மேற்கொண்டு மருத்துவ துறையில் ஈ சி ஜி சம்பந்தப்பட்ட படிப்பை தொடர உதவி தேவைப்பட்டால் அதில் என்னையும் இணைத்துக்கொல்லுங்களேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. உனது லட்சியம் நிறைவேற வல்ல இறைவன் துணை இருப்பான்.. ஆமின்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல் - 97152 25227) [22 May 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18996

“இ.சி.ஜி. வல்லுநராக விரும்பும் மாநில சாதனை மாணவி செய்யித் அலீ ஃபாத்திமா அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.. இந்த வெற்றி மாணவியின் அறிவுரை அடுத்து வரும் +2 மாணவ - மாணவிகளுக்கு உரமாக அமைய வேண்டும்..!

உங்கள் லட்சியம் நிறைவேற வல்ல இறைவன் துணை இருப்பான்.. ஆமின்...

நட்புடன் - இவ்வருட தேர்வு எழுதிய +2 மாணவி M.A.K.J. ஆமினா உம்மாள். - சுபைதா மேல்நிலைப்பள்ளி. (எனது மதிப்பெண் - 995)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Congratulations!!
posted by Salai.Mohamed Mohideen (USA) [22 May 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 18997

மனையியல் பாடத்தில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ள நமதூர் மாணவிக்கு வாழ்த்துக்கள். மனையியல் பாடத்தில் மாநில அளவில் 'முதலிடத்தை' எதிர்பார்த்து மிகுந்த ஆவலுடன் படித்த நீங்கள் இ.சி.ஜி. வல்லுநராக விரும்புவது தனிநபர் விருப்பம் / உரிமை என்றாலும் மனையியலிலேயே பட்டபடிப்பு / மேற்படிப்புகள் மற்றும் அத்துறையிலேயே அழகான வேலை வாய்ப்புகளும் உள்ளன.

பொதுவாக மனையியல் என்பது வெறும் வீட்டை பராமரித்தல், ஹோம் மேக்கர் சமையல் என்பதனையும் தாண்டி உணவு, விருந்தோம்பல் (ஹோட்டல்ஸ்) துறைகள், பேஷன் technology, NGOs and கல்வித்துறை என பலதுறைகளில் வேலை வாய்ப்புகளை கண்டுள்ளது. சத்துணவு ஆலோசகர், குடும்ப ஆலோசகர் டயடீஷியன், மனையியல் ஆசிரியர்,வீட்டு பொருளாதார நிபுணர் என பலதுறைகளில் இப்படிப்பை பயின்றவர்கள் பணியாற்றலாம்

மனையியல் படிப்பில்... உணவு மற்றும் சத்துணவு, குழந்தை மேம்பாடு, வீட்டு நிர்வாகம், ஆடை வகைகள், விரிவாக்குதல் மற்றும் தகவல் தொடர்பு என மொத்தம் 5 பெரிய பிரிவுகள் உள்ளன. பி.எஸ்சி - யில் ஹோம் சயின்ஸ் அல்லது நியூட்ரிஷன் மற்றும் உணவு தொழில்நுட்பம் படிக்கலாம். பி.ஏ. - வில் வீட்டு நிர்வாகம்/வீட்டு பொருளாதாரம் அல்லது நியூட்ரிஷன் என இத்துறைக்கான பல பட்டப் படிப்புகள், நாடு முழுவதும் 100 கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: “...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [22 May 2012]
IP: 37.*.*.* | Comment Reference Number: 18998

அஸ்ஸலாமு அலைக்கும்.

எங்கள் அன்பு சகோதரி செய்யித் அலீ ஃபாத்திமாவுக்கு. >>>>>> நல் வாழ்த்துகள். <<<<<<<<

வல்ல நாயன் உன்னுடைய விருப்பதை இன்ஷா அல்லாஹ் நிறைவேற்றி அருள்வானக ஆமீன். அன்பு சகோதரியே உன்னால் இந்த காயல் மண்ணுக்கு பெருமை என்பதை நினைக்கும் போது மகிழ்சியாக இருக்கிறது.

உன்னை பெற்று எடுத்த தாய் / தந்தைகும் பெருமை + நீ படித்த ஸ்கூளுக்கும் மற்றும் நம் ஊருக்கும் பெருமை.நீ வாழ்க்கையில் எல்லா நலமும் பெற்று சிறப்புடனும்/ உடல் ஆரோகியதுடன். வாழ கிருபை செய்வானகவும் ஆமீன்.

உன்னுடைய பேட்டி அருமையானது நம் ஊர் மற்ற பிள்ளைகளும் உன் அறிவுரைகளை போல் செயல் பட்டு வருகின்ற வருஷம் மாநில சாதனை மாணவ / மாணவிகளாக வந்து நமது ஊருக்கு பெருமை சேர்க்க நாம் துவா செய்வோமாக. வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: “...
posted by S.I. SIRAJUDEEN (HOLY MAKKAH) [22 May 2012]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18999

BEST OF LUCK CONGRATULATIONS .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: “...
posted by SUPER IBRAHIM S.H. (RIYADH - K.S.A.) [22 May 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19000

அஸ்ஸலாமு அலைக்கும்.

எங்கள் அன்பு சகோதரி செய்யித் அலீ ஃபாத்திமாவுக்கு. >>>>>> நல் வாழ்த்துகள். <<<<<<<< உங்களது சாதனையை எத்தனை காயல் வெளிநாடு மன்றங்கள் எதிர்பார்த்தது போல், வெற்றி பெட்டு உள்ளீர்ஹள். அல்ஹம்டுலில்லாஹ்.

வல்ல நாயன் உன்னுடைய விருப்பதை இன்ஷா அல்லாஹ் நிறைவேற்றி அருள்வானக ஆமீன். அன்பு சகோதரியே உன்னால் இந்த காயல் மண்ணுக்கு பெருமை என்பதை நினைக்கும் போது மகிழ்சியாக இருக்கிறது.

உன்னை பெற்று எடுத்த தாய் / தந்தைகும் பெருமை + நீ படித்த ஸ்கூளுக்கும் மற்றும் நம் ஊருக்கும் பெருமை.நீ வாழ்க்கையில் எல்லா நலமும் பெற்று சிறப்புடனும்/ உடல் ஆரோகியதுடன். வாழ கிருபை செய்வானகவும் ஆமீன். யாராபல் ஆலமீன்!!!

நிச்சயம் தாய் நீங்கள் ஒரு நல்ல பெரிய பதவியில் இருபீர்ஹ்ல். இன்ஷாஅல்லாஹ். மருத்துவ துறையில் சேர்த்தால், நமதூர் கே.எம்.டி. மறந்து விட வேண்டாம். கொஞ்ச நாட்கள் பணி புரியணும்.

மில்லியன் வாழ்த்துக்களுடன்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பதினர்ஹல்.
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: “...
posted by A..H.Mohamed Sirajudeen (Singapore ) [22 May 2012]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 19001

பாராட்டுகள் ....கடின படிப்பும் ,ஆர்வம் ....இதற்கு எடுத்து காட்டு மாநில சாதனை ....

மேலும் சாதனை படைக்க ...

வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள் .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: “...
posted by Vilack SMA (Hong Shen , Siacun) [22 May 2012]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 19006

குறிப்பிட்ட அந்த பாடத்தில் மாநிலத்தில் முதல் மாணவியாக வரவேண்டும் என்று லட்சியத்துடன் படித்த அந்த சகோதரியின் உழைப்பு , ஆர்வம் பாராட்டிற்குரியது .

comment 18997 இல் சொன்னதுபோல , இந்த துறையில் பலவகையான நல்ல படிப்புகள் இருப்பினும் , இந்த மாணவியின் பொருளாதார பின்னணி இதுபோன்ற படிப்புகளுக்கு வாய்ப்பளிக்காது என்பது , அவரது பேட்டியின் வாயிலாக அறிய முடிகிறது . இதுபோன்ற சாதனையாளர்களுக்கு விழா எடுத்து 500 , 1000 என்று பரிசுகள் கொடுப்பதைவிட , ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழி சொன்னால் நன்றாக இருக்கும் .

SSS அவர்கள் Action Plan என்னவென்பதை சொன்னால்தானே மற்றவர்களுக்கு புரியும் .

(மாநில அளவில் rank பெறுவது இதற்கு முன்புகூட நமதூரில் நடந்துள்ளது . Central School மாணவர் V ,S .M , Aboobacker , 1981 ம் ஆண்டு SSLC இல் வரலாறு பாடத்தில் State first . அதன் பிறகு நமதூர் மாணவர் யாராவது state rank எடுத்தார்களா என்று தெரியவில்லை)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: “...
posted by H.I.RUGNUDEEN BUHARY (KERALA) [23 May 2012]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 19013

எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே..

என் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் ..

அன்புடன்,
ஹ.இ.ருக்னுதீன் புஹாரி - கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: “...
posted by Sithan Niyaz - Pfizer Inc (Riyadh) [23 May 2012]
IP: 155.*.*.* United States | Comment Reference Number: 19016

ALL THE VERY BEST FOR THIS GREAT ACHIEVEMENT!

(THERE IS NO SUBSTITUTE FOR HARD WORK, EVERY STUDENT HAS TO REALISE THIS)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: “...
posted by SUPER IBRAHIM.S.H. (RIYADH - K.S.A.) [23 May 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19017

"அஸ்ஸலாமு அலைக்கும்."

வீ.எஸ். எம். அபூபக்கர் காக்கஉக்கு முன்பு, எட்டாவது (ஈ.எஸ்.எல்.சீ.) அரசுத் தேர்வில், எஸ்.எம்.எ. அபூ காக்க + அவரது செட்டில் உள்ள கருப்பசாமி சாதனை படைதர்ஹள் என்பது குறிப்பிட தக்கது. வருடம். 1979 தினத்தந்தி மாநில பரிசு வங்கினர்ஹல்.

எஸ்.எம். எ. அபூ இன்று பிரபல மருத்துவர் + சாதிக்க பிறந்தவர். எப்பொழுதும் அறிவுரை குறிவருவர் மிஹா சிறிய வயதிலும் கூட!

அதன் பின்பு நிறைய காயல் மானவிஹல் சென்டம் வங்கி உள்ளார்ஹல் என்பதை விளக்கு. எஸ்.எம்.எ. காக்க அவர்ஹள்ளுகு அறிய தருஹிறேன்.

நன்றி காயல்.கொம்.

அன்புடன்,
சூப்பர் இப்ராகிம். ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: “...
posted by Vilack SMA (Yi Li , Hetang) [23 May 2012]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 19021

சலாம் super bhai .

பழைய சாதனைகளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி . பலர் centum எடுத்தைப்பற்றி கூறினீர்கள் . ஒட்டுமொத்த தமிழகத்திலும் ஒருவர் மட்டும் Centum எடுத்தால்தான் அது state rank என்று கணக்கிடப்படும் . அறிந்து கொள்ளவும் .

Vilack SMA
(1982 SSLC நகரளவில் சாதனை படைத்த மாணவர்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: “...
posted by SUPER IBRAHIM.S.H. (RIYADH - K.S.A.) [24 May 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19028

அஸ்ஸலாமு அலைக்கும்."

விளக்கு காக்க நன்றிஹல் பல! ஸ்டேட் ரேங்க் முஹியடீன் பள்ளி மாணவர் அரபிக் பாடத்தில் சுமார் பன்னிரண்டு ஆண்டுக்கு வாங்கி காயலின் பெருமையை உயர்த்தி விட்டார். அத்துடன், வெளி ஊரில் படித்த காயல் மாணவர் இருவர்ஹல் ஸ்டேட் ரேங்க் ஹோல்டர் வாங்கி உள்ளர்ஹல் அறியவும்.

இன்ஷா அல்லாஹ் நம் எல்லோர்களின் கணவு தமிழ் நாட்டில் முதல் மாணவர் அல்லது மாணவி காயலில் வரவேண்டும். அது வெஹு தூரத்தில் இல்லை. விரைவில் தான்! படைத்த நாயன் அருள் புரிவனஹவும் ஆமீன்!

அன்புடன்,
சூப்பர் இப்ராகிம். ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved