| 
 காயல்பட்டினத்தை உள்ளடக்கி கிழக்கு கடற்கரை சாலை அமைப்பதற்கான கோரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, இ.சி.ஆர். பயனாளிகள் சங்கம் என்ற பெயரில் அமைப்பு துவக்கப்பட்டு, நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 
  
இதுகுறித்து, இதற்கான கலந்தாலோசனைக் கூட்டத்தை நடத்திய காயல்பட்டினம் காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:- 
  
காயல்பட்டினத்தை உள்ளடக்கி கிழக்கு கடற்கரை சாலை அமைப்பதற்கான கோரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, காயல்பட்டினம் காக்கும் கரங்கள் நற்பணி மன்றம், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் ஆகிய அமைப்புகளின் சார்பில், 16.05.2012 அன்று நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில், 6 பேர் கொண்ட தற்காலிக குழு தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் தேர்வில் நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. 
  
அதனடிப்படையில், 19.05.2012 அன்று காலை 10.00 மணியளவில், காக்கும் கரங்கள் நற்பணி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில், “இ.சி.ஆர். பயனாளிகள் சங்கம் (திருச்செந்தூர் வட்டம்)” என்ற பெயரில் அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டு, பின்வருமாறு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:- 
  
தலைவர்:  
லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹசன்
  
துணைத் தலைவர்கள்:  
ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத் 
ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக்
  
செயலாளர்:  
ஹாஜி வி.ஐ.புஹாரி 
துணைச் செயலாளர்கள்:  
ஹாஜி எல்.எஸ்.அன்வர் 
ஹாஜி துளிர் எம்.எல்.சேக்னா
  
ரெங்கநாதன் (எ) சுகு
  
தகவல் தொடர்பு:  
ஹாஜி.எல்.எம்.இ.கைலானி
  
மக்கள் தொடர்பு:  
ஹாஜி.ஜே.ஏ.லரீப் 
ஹாஜி.எஸ்.ஏ.சாமு சிஹாபுதீன்
  
ஒருங்கிணைப்பாளர்:  
காக்கும்கரங்கள்.எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன்
  
உயர்மட்ட செயல்பாட்டுக் குழு:  
எம்.ராமச்சந்திரன் 
எம்.ஜே.செய்யத் இப்ராஹீம் 
ஹாஜி எஸ்.ஐ.காதர் 
காயல்.எஸ்.இ.அமானுல்லாஹ் 
ஹாஜி கே.எம்.ஏ.அபூபக்கர்
  
ஜனாப்.காயல் மகபூப் 
ஹாஜி வாவு முஃதஸிம் 
எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹசன் 
எம்.எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ்
  
ஆலோசனைக் குழு:  
ஹாஜி.என்.எஸ்.இ.மஹ்மூது 
ஹாஜி.ஏ.லுக்மான் 
ஹாஜி.குதுபுதீன் 
எஸ்.எம்.செய்யது காசிம் 
மாவட்டம் அப்துல் காதர்
  
திருத்துவராஜ் 
மும்பை.எஸ்.எம்.மெய்தீன் 
அந்தோணி
  
இவ்வாறு, நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த அமைப்பின் பணிகளை மேற்கொள்வதற்காக, காக்கும் கரங்கள் நற்பணி மன்ற அலுவலகத்தை தற்காலிகமாகப் பயன்படுத்திக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. 
  
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  |