Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:21:55 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8299
#KOTW8299
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஏப்ரல் 12, 2012
துபை கா.ந.மன்ற ஏற்பாட்டில் காயலர் தினம் 2012 உற்சாகக் கொண்டாட்டம்! அமீரகம்வாழ் காயலர்கள் பெருந்திரளாகப் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 6867 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஐக்கிய அரபு அமீரகம், துபை காயல் நல மன்றத்தின் சார்பில் விமரிசையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது “காயலர் தினம் 2012”. இதில், அமீரகம்வாழ் காயலர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சி குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

காயலர் தினம்:

சுவைமிக்க "காயல் களரி"யுடன் துபையில் "காயலர் தினம் 2012" உற்சாகக் கொண்டாட்டம்!

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால், துபை காயல் நல மன்றத்தினரின் "காயலர் தினம் 2012" மிகவும் கோலாகலமாக இம்மாதம் 6 ஆம் தேதி ஏற்கனவே அறிவித்திருந்தபடி துபை சத்வாவில் அமைந்துள்ள அல் சஃபா பூங்காவில் நுழைவாயில் 2 டின் அருகாமையில் ஒரு பெருநாள் நிகழ்வு போல் கொண்டாடப்பட்டது.

முன்னேற்பாடுகள்:
வெள்ளிக்கிழமை அன்று வழமை போல் காலை முதலே அமீரக வாழ் காயலர்கள் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் சகிதம் பூங்காவில் கூடத்தொடங்கி விட்டனர். வருகை தந்தவர்களுக்கு சிற்றுண்டியுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மன்றத்தின் உறுப்பினர்கள், வரவேற்பு, உறுப்பினர் முகவரிகள் சேகரிப்பு, சந்தா வசூல், சாப்பாடு ஏற்பாடுகள், கூட்ட ஏற்பாடுகள் மற்றும் கேளிக்கை விளையாட்டுகள் என்று தனித்தனி குழுவாக செயல்பட்டு தத்தம் பணிகளை செவ்வனே செய்திருந்தது கூட்ட நுழைவாயிலேயே தெரிந்துகொள்ள முடிந்தது.

உணவேற்பாடு:
உறுப்பினர்களுக்கும், விருந்தினர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் இவ்வருடம் ஒரு மறக்க முடியாத நிகழ்வாக 'ஆக்கிக்காட்ட' வேண்டும் என்ற மும்முரத்தில் சாப்பாடு ஏற்பாட்டுக்குழுவினர் கூட்ட நிகழ்விற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே செயல்பட தொடங்கி, வருகை தந்தோருக்கு "காயல் களரி" விருந்து அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

உறுப்பினர் சங்கமம்:
காலையிலேயே இந்த சிறப்பான நிகழ்விற்கு வருகை தந்த காயலர்கள் ஒருவருக்கொருவர் முகமன்கள் கூறி க்ஷேமங்களை விசாரித்தவண்ணம் இருக்க, ஒவ்வரு குழுவும் அவரவர் பணிகளை செய்துகொண்டிருந்தது. ஆண்கள் பெண்களுக்கென தனிதித்தனியே பாய்கள் விரிக்கப்பட்டு இட நெருக்கடி இல்லாத வண்ணம் கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. வருகை தந்த காயலர்கள் அனைவரும் பெயர் பதிவு செய்யப்பட்டனர்.



விளையாட்டு மாமா...
மன்றத்தின் துணை தலைவர் ஜனாப் சாளை சலீம் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்ததும் சிறார்கள் எல்லோரும் புடை சூழ்ந்து "கேம் அங்கிள், எங்களுக்கு எத்தனை கேம் இருக்கு? எப்போ நடக்கும்? " என்று ஒவ்வொருவராக பேராவலுடன் விசாரித்துக்கொண்டிருந்தார்கள்.

பொதுக்குழுக் கூட்டம்:
ஜூம்மா தொழுகைக்குப் பின்னர் வருகை தந்திருந்தோர் அனைவரும் ஓரிடம் கூட, அல்லாஹ் அருளால் கூட்ட நிகழ்வுகள் மன்றத்தின் தலைவர் J S A புஹாரி அவர்கள் தலைமையில் ஆரம்பித்தது. ஹாஃபிழ் ஹஸ்புல்லாஹ் மக்கி அவர்கள் இறை மறையை ஓதி கூட்டம் ஆரம்பமானது.

மன்றத்தின் தலைவர் புஹாரி அவர்கள் வந்திருந்த அனைவரையும் மனதார வரவேற்று "நமது மன்றத்தின் வெற்றி நமது ஒற்றுமையின் வெளிப்பாடுதான் என்றும், உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நமது மன்றம் நமதூருக்கும் நமது சமூகத்தினர்க்கும் மென்மேலும் உதவிகள் செய்து சிறக்க வேணடும் என்று பிரார்த்தித்தவராக தனது தலைமை உரையை முடித்தார்.

வாழ்த்துரை:
காயல் நல மன்றம் அபூதாபி யின் தலைவர் அல்ஹாபிழ் ஹபீப் ரஹ்மான் ஆலிம் அவர்களும், கௌரவத்தலைவர் இம்தியாஸ் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். அவர்களது உரைகளுக்குப் பின் புதிய உறுப்பினர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.







சிறப்புக் காயலர்கள்:
அதேபோல், அமீரகத்திற்கு தத்தம் மக்களை காண வருகைத் தந்திருந்த M. S. முஹம்மத் மரைக்கார், எல்கே பள்ளியின் முதன்மை ஆசிரியர் புஹாரி (ஓய்வு) ஆகியோர், மற்றும் தாய்லாந்து காயல் நல மன்றத்தின் இணை செயலாளர் விளக்கு நூர் முஹம்மது ஆகியோர் மன்றத்தின் செயல்பாடுகளை பாராட்டி ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்கள். அவர்களனைவருககும் மன்றத்தின் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.







சிறப்பு விருந்தினர்களுக்கு மன்றத்தின் தலைவல் JSA புஹாரி அவர்கள் நினைவு பரிசுகளை வழங்கினார்கள். இந்தக் கூட்டத்தை மன்றத்தின் துணைத் தலைவர் சாளை ஷேக் ஸலீம் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.







விளையாட்டுப் போட்டிகள்:
இந்த ஒன்றுகூடலின் இரண்டாம் பகுதியான கேளிக்கை விளையாட்டுக்களை சாளை ஸலீம் அவர்கள் நெறிப்படுத்தி தந்தார். தமிழ் பேச்சு எங்கள் மூச்சு (இரண்டு நிமிடம் தமிழில் கொடுக்கப்பட்ட தலைப்பில் உரையாடுவது), விஜய் டிவி புகழ் "மாத்தி யோசி" , மற்றும் வினாடி வினா போன்ற வேடிக்கை விளையாட்டுகள் நடைபெற்று, வந்திருந்தோரின் மனங்களை வென்றது.



பரிசளிப்பு:
வெற்றி பெற்றவர்களுக்கு குலுக்கல் முறையில் Fuji Digital Camera, LG dual Sim Mobile with Etisalat Sim Card, melomine dinner set, Prestige non stick cookware, Aftron Rice cooker, Nikai DVD Player, Electric kettle, Mr. Light Emergency Light, Iron Box, Philips hair dryer and Glass water set பரிசுகளாக வழங்கப்பட்டது.



பரிசுகளுக்கு அனுசரணை:
இப்பரிசுகளுக்கு, காயல்பட்டினத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களான
- விளக் ஷேக் தாவூத் - Al Banna Workshop, Dubai
- பால் முஹம்மது - Al Rasafa Building Materials , Dubai
- MKT அபூபக்கர் - Toshiba Elevators LLC, Dubai
- அய்யூப் ஜமீல் – Jameel Jewellers
- A. L. பாக்கர் சாஹிப் - Al Zahra Cargo Services, dubai

- முஹம்மது முஹைதீன் - Best Choice Cafeteria, AbuDhabi
- அப்துல் சுக்கூர் - Pearl Shipping, Dubai
- சேப் காதர் - Golden Automobile & water Services, Kayalpatnam
- சேட் - Moon Trading Packing Materials
ஆகியோர் அனுசரணையளித்திருந்தனர்.

காயல் பாரம்பரிய களரி சாப்பாடு:
இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு, மணமணக்கும் "காயல் களரி" பரிமாறப்பட்டது. வந்திருந்தோர் அனைவரும் மனதார சாப்பிட்டு உளமார சாப்பாடு ஏற்பாடு குழுவினரை பாராட்டினார்கள். உணவு ஏற்ப்பாடுகளை மன்றத்தின் மூத்த உறுப்பினர்களான துணி உமர் மற்றும் விளக்கு தாவூத் ஹாஜி அவர்களும் இணைந்து மிகவும் சீராக செய்திருந்தனர்.











வெளிநாட்டுத் தம்பதி...
சாப்பாட்டின் போது அமீரகத்திற்கு சுற்றுலா வந்திருந்த ஒரு ஹாலந்து நாட்டு தம்பதியினர் நமது ஊர் கூட்டத்தை ரசித்து சாப்பிட்டும் மகிழ்ந்தனர்.





மகளிருக்கான போட்டிகள்:
பெண்கள் பிரிவில் அவர்களுக்கென பொது அறிவுப்போட்டிகள் மார்க்க சம்பந்தமான போட்டிகள் மிகவும் கலகலப்பாக நடைபெற்றன. இந்த விளையாட்டு ஏற்பாடுகளை இஜ்ஜத் கதீப் அவர்களின் தலைமையில் ஜுலைஹா செய்யத் இப்ராஹீம், ஹபீ தாரிக் மற்றும் விளக்கு ராபியா பஹ்மா தாவூத் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் கண்கவர் பரிசுகள் வழங்கப்பட்டன.

முதியோர் விளையாட்டுப் போட்டிகள்:
பின்னர் பெரியோர்களுக்கான விளையாட்டுக்கள் ஆரம்பமாயின. உரி அடித்தல், ஓட்டப்பந்தயம் மற்றும் சாக்கு ஓட்ட பந்தயம் நடைபெற்றது.







உரி அடித்தல் விளையாட்டில் ஒவ்வொரு போட்டியாளர்களும் திசை தெரியாமல் கம்பை கையில் வைத்து சுற்றியது வந்திருந்தோர் அனைவரின் வயிற்றையும் குலுங்க வைத்தது. அஸர் தொழுகைக்குப்பின் தேநீர் வழங்கப்பட்டது.

சிறுவர்-சிறுமியருக்கான போட்டிகள்:
அதற்குப் பிறகு, சிறார்களுக்கு பந்து கடத்தும் விளையாட்டு, பலூன் உடைக்கும் போட்டி, ஓட்டப் பந்தயம் போன்ற விளையாட்டுகள் நடைபெற்றன. பெற்றோர்களும் உற்றார்களும் இவ்விளையாட்டு நிகழ்சிகளை கவலைகளை மறந்து மனம் விட்டு சிரித்து ரசித்தனர்.







எல்லா விளையாட்டு எற்பாடுகளையும் மன்றத்தின் துணை தலைவர் சாளை ஸலீம் அவர்களும் பாஜுல் ஹமீத் அவர்களும் இணைந்து நடாத்தினர்.

குலுக்கலில் தங்கக் காசு:
மக்ரிப் பாங்கு சொல்வதற்கு முன்னால், பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவின் கிளைமாக்ஸ் ஆன தங்க காசுகள் குலுக்கல் நடைபெற்றது. வருகைதந்த உருப்பினகளின் பதிவுச்சீட்டுகள் அனைத்தையும் குலுக்கலில் இடம் பெறச்செய்து நடந்த குலுக்கலில் முறையே B. சுகரவர்த்தி (சொளுக்கார் தெரு) மற்றும் துணி அபூபக்கர் (குத்துக்கல் தெரு) அவர்களுக்கு முறையே ஒரு தங்க காசு பரிசாக கிடைத்தது. அதேபோல், மீதம் இருந்த எல்லா பரிசுகளுக்கும் குலுக்கல் நடைபெற்று, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் முறையே வழங்கப்பட்டது.







மக்ரிப் தொழுகைக்குப்பின் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது. மன்றத்தின் தலைவர் அவர்கள் இக்கூட்டம் இனிதே நடைபெற ஒத்துழைத்த அனைத்து நல்ல நெஞ்சங்களுக்கும் மன்றத்தின் சார்பிலும் அவர்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்கள். இக்கூட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்து மண்டலங்களிலும் வாழும் காயலர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். மகளிர், தமக்கொதுக்கப்பட்ட தனிப்பகுதியிலிருந்தவாறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.



பிரியாவிடை:
நிறைந்த மனதுடனும், மறக்கவியலா நினைவுகளுடனும் வந்திருந்தோர் அனைவரும், இந்நிகழ்ச்சியை மிகவும் அருமையாக செய்திருந்த அனைவருக்கும் பாராட்டுதல்களை அறிவித்து விட்டு பிரியாவிடை பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.




இவ்வாறு துபை காயல் நல மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
சாளை ஷேக் ஸலீம்
துணைத்தலைவர்,
துபை காயல் நல மன்றம்.

படங்கள்:
சாளை ஸலீம்
பாஜுல் ஹமீது
ஸேப் காதர்
பஃயாஸ் ஹுமாயூன்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Awesome !!
posted by Salai. Mohamed Mohideen (USA) [12 April 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 18200

துபாய் வாழ் காயலர்களின் ஒன்று கூடலை பார்க்க மனதிற்க்கு அளவிலா சந்தோசமும் நமக்கெல்லாம் இது போன்ற ஒரு வாய்ப்பு இல்லையே என்ற சிறு ஏக்கமும் இருக்கத்தான் செய்கின்றது. காயல் கலரி நெய்ச்சோறு படங்களை ‘க்ளோசப்பில்’ காண்பித்து எங்களையெல்லாம் ஒரு உசுப்பு உசுப்பி விட்டீர்கள். எது எப்படியோ… ஹாலந்து நாட்டு தம்பதிகளுக்கு நமதூர் சாப்பாடு புரிவு இருந்திருக்கிறது. உலகில், அவர்கள் எத்தனையோ நாட்டு உணவுகளை புசித்திருந்தாலும் நமதூர் கலரி சாப்பாடு அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமே!!

பேசாமே அடுத்த முறை ஊர் போகும்போது... இது மாதிரி ஒன்றுகூடல் நடக்குற நாளா பார்த்து, துபாய் - லே ஒரு ஹால்ட் அடிச்சுட்டு இவர்களோடும் நாமும் சேர்ந்து என்ஜாய் பண்ணிட்டு அப்படியே கலரி சாப்பாடே ஒரு பிடி பிடித்து விட்டு போகலாம்னு 'பிளான்' பண்ணி வச்சியிருக்கேன். JSA புஹாரி காக்கா சிரித்துக்கொண்டே பேசுவதை பார்த்தால் என்ன... ‘மாட்டேனா ‘ சொல்ல போறாங்க??

நண்பர்கள் முஜம்மில், சதகத்துல்லா (KMK st ) , ஹுபைபு (நம்மள விட பெரிய தாடி வச்சிருப்பான் போல தெரியுது?), முனவ்வர் (48 ), மெகா சாப்ட் நிஜாம் மற்றும் சொளுக்கர் தெரு சாகுல் ஹமீது (கலரி சாப்பாட்டுக்காக அபுதாபி யிலிருந்து நடந்தே வந்திருப்பான் போலே... சாப்பாட்டுக்கு முன் சற்று இளைத்தவனாகவும் சாப்பாட்டுக்கு பின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம் தாண்டவம் ஆடுகின்றது). இங்கே பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

ஒரு சகோதரர் சிரித்துக்கொண்டே (?) தன் கைகடிகாரத்தை பார்க்கிறார்... என்னப்பா இன்னும் சோத்தை காணோம் என்று. இன்னொருவர் சோற்றை கிண்டுவது போல் அழகாக ஃபோஸ் கொடுக்கிறார்.

இங்கே நடக்கும் சிறார்களின் போட்டியை பார்க்கும் போது பள்ளிப்பருவம் தான் ஞாபகம் வருகின்றது. கௌதியா சங்கம் சார்பில் ஒவ்வொரு வருடமும் இது போன்ற போட்டிகள் வருடா வருடம் நடக்கும். ஓட்டபந்தயம், சாக்கு போட்டி, உளி உடைத்தல் என்று. அதில் கலந்து கொண்டு பரிசுகள் வென்று வருவதில் ஒரு அலாதி சந்தோசம் கிடைத்தது. நாளடைவில் இவைகள் எல்லாம் மங்கி போய்... பள்ளிகளில் மட்டும் Annual day என்ற பெயரில் நடக்கின்றது.

நமது மக்களின் முகங்களில் என்ன ஒரு பிரகாசம், புன் சிரிப்பு... நிகழ்ச்சி முழுவதும் அப்படி ஒரு உற்சாகம். இது போன்ற சந்தோசத்தை வல்ல இறைவன் உங்கள் அனைவருக்கும் எப்பொழுதும் தந்தருவானாக ஆமீன்!! இது போன்ற ஒன்று கூடலை அனைத்து காயல் நல மன்றங்களும் குறைந்தது ஆறு மாதத் திற்க்கு ஒரு முறையாவது நடத்துங்கள்.

ஒவ்வொரு முறையும் ஏதாவது வித்தியாசமான போட்டிகளை / நிகழ்ச்சிகளை நடத்துங்கள். உதாரணத்துக்கு ஒரு 20 / 30 நிமிடம் ஏதாவது ஒரு தலைப்பில் (Stress mgmt அல்லது அவர்களுக்கு பிடித்த தலைப்பில்... அதே நேரத்தில் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் வண்ணம்) உங்களில் ஒருவரையே தயார் செய்ய சொல்லி பேச வைத்து அவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வாருங்கள். இது போன்ற முயற்சிகள் உங்கள் ஒன்று கூடலை மென் மேலும் மெருகூட்டவும் எல்லோருக்கும் மிக பயனுள்ளதாகவும் இருக்கும்!!

முடிந்தவரை ஒவ்வொருவரையும் (say 15 members in a மீட்டிங்) ஒன்றிரண்டு நிமிடமாவது பேச சொல்லி அவர்கள் என்ன அலைகளை / உணர்வுகளை பகிர்வதட்க்கும், மைக் பிடித்து பேசும் கூச்ச சுபாவமும் நீங்கி தன்னம்பிக்கையை தருவதட்க்கும் வழி வகுக்கும்

இது போன்று, உங்களுடைய எல்லா ஒன்று கூடல்களும் சீரும் சிறப்புடன் நடந்தேற வாழத்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:துபை கா.ந.மன்ற ஏற்பாட்டில...
posted by Firdous (Colombo) [12 April 2012]
IP: 203.*.*.* Sri Lanka | Comment Reference Number: 18202

எனது அன்பு நண்பர்களையும், சொந்தங்களையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. துபையில் இருந்த காலங்களில் தவறாமல் கலந்து கொள்வேன். ஏனென்றால் நண்பர்கள் மற்றும் சொந்தங்களை ஒரே இடத்தில் காணும் வாய்ப்பு தவறவிடக்கூடாது என்பதற்காக! இன்ஷாஹ் அல்லாஹ் வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வில் கலந்து கொள்ள அல்லாஹ் உதவி புரிவனாக!

I am missing the wonderful gathering and all of my friends! அடாப்பு போட்டு சொல்ல முடியாது, மிஸ் ஆயிட்ட குறை வந்துவிடும். ஆகவே ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:துபை கா.ந.மன்ற ஏற்பாட்டில...
posted by Mohamed Adam Sultan (kayalpatnam) [12 April 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 18205

காயலர்களின் ஒருமித்த ஒன்று கூடல் உள்ளத்தில் உவகையையும்,ஓராயிரம் மகிழ்ச்சியையும் கொடுத்து கொண்டிருக்கிறது என்பதை எல்லா புகைப்படமும் செல்லமாக சொல்ல துடிக்க்றது.

இந்த இனிய நிகழ்வு இரண்டாயிரம் மைல்கலுக்கப்பாலுள்ள ஒரு நாட்டில் நடக்கிறது. ஒரே மகிழ்ச்சி ஒரே எண்ணம், ஒரே குழுமம், எந்த ஏற்ற தாழ்வோ, எந்த கொள்கை குழப்பமோ, எந்த இருவேறு எண்ணமோ எள்ளளவும் இல்லாமல் இன்று பிறந்த புண்ணியர்கள்போல் பூத்துகுலுங்கும் பேரானந்தத்தை அவரவர்களின் முகத்தில் காண்கிறோம்.. அல்ஹம்துலில்லாஹ்!

இப்படிப்பட்ட மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் தாய் மண்ணாகிய நம் காயலில் நடைபெறாதா? என்ற ஏக்கத்தில் இருக்கிறோம். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.என்ற எதிர்பார்ப்பு எங்கள் இதயத்தில் இழையோடுகிறது

எல்லோரும் சமம், எங்களில் எந்த ஏற்ற தாழ்வும் இல்லை என்பதை எடுத்து காட்டும் அப்புண்ணிய நாளை பெறுவதற்கு,அமீரகத்தின் இந்த அருமையான நிகழ்வு ஒரு அச்சாணியாக அமைய அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:துபை கா.ந.மன்ற ஏற்பாட்டில...
posted by ALS mama (Kayalpatnam) [16 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18283

அஸ்ஸலாமு அலைக்கும்,

துபாயில் நடந்த நிகழ்ச்சி குறித்து செய்திகளும், புகைப்படங்களும் கண்டு ஆனந்தம் கொண்டேன்.நமது புஹாரி சார் அவர்களும் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் விபரங்களையும் அறிந்தேன். நானும் துபாய் வந்ததுபோல் உங்களுடன் கலந்ததுபோல் ஓர் ஆத்மதிருப்தி ஏற்ப்பட்டது. உங்களின் சில குழந்தைகள் மெலிந்தே காணப்பட்டார்கள், அது ஏன்? குடும்ப தலைவர்கள் அவர்களுக்குரிய உடல் எடை சரியாகவைக்கும் போது, எனது பேரப்பிள்ளைகளான உங்கள் குழந்தைகள் மெலிந்த உடலில் இருக்கிறார்கள். வைட்டமின் சத்து நிறைந்த உணவுகளை அவர்களுக்கு கொடுத்தால் என்ன? இது ALS மாமாவின் அன்பு வேண்டுகோள்.

இன்ஷால்லாஹ் வருகிற மே முதல்வாரம் எனது உருவமற்ற ஓவியப்பள்ளி - ரஹ்மானிய பள்ளி, அல் அமீன் பள்ளி மற்றும் சதுக்கைதெருவில் ஒரு பள்ளியில் நடைபெற உள்ளது. (இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை)அனைத்து பள்ளி மாணவ மானவியர்களையும் சேர்த்துக்கொள்ள இருப்பதால் உங்கள் சொந்தத்தில் இருக்கும் பிள்ளைகளை சேர அனுப்பலாம்

தொடர்புக்கு : சுலைமான் சார் டியூஷன் சென்டர் 04639-284020, artist ஐதுருஸ்மா - 9865826720 , artist ALS மாமா - 04639-280585, 280558, மே 1 முதல் தொலைபேசி மூலம் தெரிந்துகொள்ளவும்.

இவர்களிடம் ஓவிய பள்ளியில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் மே 3 ல் இருந்து இன்ஷா அல்லாஹ் பெறலாம்.

எழுத்தாளர், ஓவியர், சமூக ஆர்வலர்,
ALS மாமா,
ஆலோசகர் ரஹ்மானியா பள்ளி கல்வி வளர்ச்சிக்குழு,
காயல்பட்டினம்.

குறிப்பு: எனது ஓவியப்பயிற்சி கூடத்தின் 8 ஆம் ஆண்டு துவக்கம். இதுவரை 320 மாணவர்கள் ALS School Of Arts ல் சேர்ந்து ஓவியம் தெளிவாக கற்று இருக்கிறார்கள். அவர்களில் 120 பேர் நமதூர் பள்ளிகளில் நடக்கும் ஓவியப்போட்டிகளிலும், மாவட்ட ஓவிய போட்டிகளிலும் முதலாம், இரண்டாம் பரிசுகளை வென்றதாக அவர்களின் பெற்றோர்கள் என்னிடம் நேரில் கூறி இருக்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் எனது லட்சியம் நமதூரில் 10,000 மாணவ மாணவியர்கள் ஓவியத்தை நன்கு வரைய தெரிய வேண்டும், அவர்களின் கல்லூரி காலங்களில் அவர்களுக்கு அது உதவியாக அமையும். லாப நோக்கத்தில் அல்ல , இது ஒரு லட்சிய பாதை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved