Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:53:48 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8130
#KOTW8130
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மார்ச் 11, 2012
எல்.கே.லெப்பைத்தம்பி சாலையில் இரண்டாவது முறையாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5289 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் எல்.கே.லெப்பைத்தம்பி சாலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் இரண்டாம் கட்டப் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. காயல்பட்டினத்தில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு, ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்த, கடந்த ஜனவரி மாதம் 06ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 03ஆம் தேதியன்று, திருச்செந்தூர் சாலையிலிருந்து பெரிய நெசவுத் தெரு, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, கூலக்கடை பஜார் வழியாக பேருந்து நிலையம் வரையிலும் ஒரு வழியாகவும், பேருந்து நிலையத்திலிருந்து ஹாஜியப்பா தைக்கா தெரு, பிரதான வீதி, கே.டி.எம். தெரு ஒரு வழியாகவும் என நகரில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டது.

பேருந்து போக்குவரத்திற்காக வரையறுக்கப்பட்ட இவ்வீதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை விரைந்தகற்றுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன் பேரில், பிப்ரவரி 26 அன்று, காயல்பட்டினம் தாயிம்பள்ளி திருப்பம் வழியாக பெரிய நெசவுத் தெருவிற்குள் திரும்பும் வளைவில், தென்புறமிருந்த வீடு, எல்.கே.லெப்பைத்தம்பி சாலையிலிருந்த ஒரு வீடு உள்ளிட்டவை, ஆக்கிரமிப்புகள் என பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டது.

இரண்டாம் கட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று காலையில் துவங்கியது. காலை 10.30 மணிக்கு, அகற்றப்பட வேண்டிய கட்டிடப் பகுதிகளை அதிகாரிகள் அளந்து குறிகளிட்டனர். இணைப்பிலிருந்த மின் கம்பி வடங்கள் துண்டிக்கப்பட்டன. கட்டிடங்களின் பூட்டுகள் உடைத்து திறக்கப்பட்டன. உட்புறமிருந்த - அகற்றவியலும் பொருட்கள் பாதுகாப்பாக வெளியில் எடுத்து வைக்கப்பட்டது.











11.00 மணிக்கு, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் பகுதிக்குள் பொதுமக்கள் செல்லாதிருக்கும் பொருட்டு, பெரிய நெசவுத் தெருவிலிருந்து எல்.கே.லெப்பைத்தம்பி சாலைக்குள் செல்லும் நுழைவுப்பகுதி, பிரதான வீதியிலிருந்து பெரிய தெருவிற்குள் செல்லும் நுழைவுப்பகுதி, கூலக்கடை பஜார் ஆகிய இடங்களில் சிவப்புக் கொடியுடன் தடுப்புக் கயிறு கட்டப்பட்டிருந்தது.







எல்.கே.லெப்பைத்தம்பி சாலையிலுள்ள எஸ்.எம்.காம்ப்ளக்ஸ் கட்டிடம், இரண்டு பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு தற்போது அகற்றப்பட்டு வருகிறது.



















எஸ்.எம்.காம்ப்ளக்ஸ் கட்டிடத்திற்கு மேற்புறத்தில் அதே அளவில் அமைந்துள்ள எல்.கே.துவக்கப்பள்ளியின் சுற்றுச்சுவரும் ஆக்கிரமிப்புப் பகுதிக்குள் வருவதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சுற்றுச்சுவருக்குள் இருந்த மிதிவண்டி நிறுத்துமிடம், பிரதான வாயிற்கதவுகள் உள்ளிட்டவை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அகற்றப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் சுற்றுச்சுவரும் அகற்றப்பட்டது.







ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்புலக்ஷ்மி, பணி மேற்பார்வையாளர் செல்வலிங்கம், தொழில்நுட்ப உதவியாளர் செந்தில் குமார், சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ், சுகாதார துணை ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் வட்டாட்சியர் வீராசாமி, வருவாய் ஆய்வாளர்களான சுரேஷ், சங்கர நாராயணன், கிராம நிர்வாக அதிகாரிகளான செல்வலிங்கம், பால்பாண்டி, வெங்கட சுப்பிரமணியம், நில அளவையர் கந்தப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையிட்டு வருகின்றனர். மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஞானசேகரன், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் உள்ளிட்ட காவல்துறையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.



ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை நகர பொதுமக்கள் திரண்டு நின்றவாறு பார்வையிட்டனர்.





ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிக்காக, இன்று காலை 10.00 மணி முதல் தற்காலிகமாக ஒருவழிப்பாதை நடைமுறை நீக்கப்பட்டு, கே.டி.எம். தெரு - பிரதான வீதி - ஹாஜியப்பா தைக்கா தெரு வழியே இருவழிப்பாதையாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:எல்.கே.லெப்பைத்தம்பி சாலை...
posted by Jahir (Chennai) [11 March 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 17602

அள்ஹம்துலில்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:எல்.கே.லெப்பைத்தம்பி சாலை...
posted by sulaiman (manama) [11 March 2012]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 17603

எல் கே பள்ளி யுமா ? ஆக்கிரமிப்பு?

THAT S TOTALLY WRONG!!! DEMOLISHING SOME PART OF SCHOOL OR EDUCATIONAL ORGANISATION,, EVERY KAYALITE SHOULD OPPOSE IT, WE KNOW THE HISTORY OF LK SCHOOLS, WHO MADE THAT DESICION OF DEMOLISHING SCOOL'S PART? AND DID THEY INFORMED IN ADVANCE ABOUT THE DEMOLITION?

I STILL REMEMBER THE CYCLE STAND, WHEN WE WAS CHILD,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:எல்.கே.லெப்பைத்தம்பி சாலை...
posted by P.S.ABDUL KADER (jeddah) [11 March 2012]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17605

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி, காயல்பட்டினம் நகராட்சியில் அணைத்து பகுதிகளுக்கும் பொருந்தும்மா? அல்லது ஒருவழி பாதைக்காக வேண்டி, ஒரே பக்கம்மாக இந்த பகுதிக்கு மட்டும் தானா !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:எல்.கே.லெப்பைத்தம்பி சாலை...
posted by M.S.ABDULAZEEZ (G Z) [11 March 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 17606

மக்களுக்கு நல்லது நடந்தால் சரி .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:எல்.கே.லெப்பைத்தம்பி சாலை...
posted by omar abdullatheef --- maraikar palli streeet (riyadh) [11 March 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17607

such activity is obivious to develp/expand city or village to go ahead ,

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:எல்.கே.லெப்பைத்தம்பி சாலை...
posted by Deen (HKG) [11 March 2012]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 17608

இதைபோல் மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படுமா? ஏதேனும் அது குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை இல்லையே ஏன்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Good job by Authorities
posted by Aarif O.L.M (colombo) [11 March 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 17609

ஏதோ அமேரிக்காவில் பார்க்கிற இங்கிலீஷ் பட ஷூட்டிங் மாதிரி இருக்கு. இது போன்ற அகற்றும் பனி எல்லா தெருக்களிலும் கண்டிப்பாக நடக்கணும். இன்னும் நம் மக்களிடம் அல்லாஹ்வின் பயம் இல்லாமல் தெருக்களை ஆக்கிரமித்து அவரவர் வீட்டு படிகள், கக்குஸ் தொட்டிகள், வாகனம் நிறுத்தும் கராஜ் ஸ்லோப் இன்னும் பலவற்றை செய்து கோடிக் கணக்கில் சிலவு பண்ணி வரும் நமதூர் புதிய கோடீஸ்வரர்களுக்கு பாடமாக இந்த நேரடி நிகழ்ச்சி அமையட்டும்

Excellent work by the relevant authorities.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:எல்.கே.லெப்பைத்தம்பி சாலை...
posted by amzedmoosa (dammam) [11 March 2012]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17610

அஸ்ஸலாமுஅலைக்கும்

இதே பணியை மெயின் ரோட்டில் நடத்திட (1991 or 1992 வருடம் சரியாக நியாபகம் இல்லை ) ஒரு மாவட்டஆட்சியாளர் வந்தார்கள் அப்போது நமது postoffice தான் எல்கை என குறிப்பிட்டு சென்றார்கள் மற்றவைகளை அகற்ற முற்பட்ட பின் என்ன மாயமோ தெரியவில்லை திரும்பிவிட்டார்கள் தற்போது இங்கு (நெசவு தெரு)நடக்கும் பனி மெயின் ரோட்டில் நடக்க நமதூர் அரசியல் கட்சிகள் மற்றும் நகராட்சி மெம்பர்கள் துரித நடவடிக்கை எடுப்பார்களா? வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Its just a begining...
posted by Riyath (HongKong) [12 March 2012]
IP: 171.*.*.* United States | Comment Reference Number: 17611

In my view, its just a begining after kayal promoted to city grade.

All people are now looking for the same action has to be done in all over the city.

Kayal will be the remarkable wonder land in our jilla if this legal activities continues. Insha allah.. *Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. இப்படியும் துணிச்சல் உள்ளவர்கள் உண்டா?
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா.) [12 March 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 17613

இந்த கட்டிடம் கிட்ட தட்ட பதினைந்து ஆண்டு காலமாக இங்கு இருக்குமென நினைக்கிறேன். இது ஆக்கிரமிப்பு என்று இப்போது சொல்லும் அதிகாரிகள்

1) இந்த கட்டிடம் கட்ட பிளான் கொடுத்த அதிகாரி யார் என்று கண்டு பிடிக்கவும்.

2) அப்படி அவர் லஞ்சம் பெற்று கொண்டுதான் இந்த கட்டிடத்துக்கு பிளான் கொடுத்தாரெனில் அவரிடமும்,

3) இந்த கட்டிடம் மூலம் இத்தனை ஆண்டு காலமாக கிடைக்க பட்ட வருமானத்தை கட்டிட உரிமையாளரிடமும் அரசாங்கம் வசூல் செய்யவும்.

இப்படி செய்ய துணிச்சல் உள்ள அதிகாரிகள் நிச்சயம் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்....

ஹைதுரூஸ் ஆதில், கோழிக்கோடு-கேரளா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:எல்.கே.லெப்பைத்தம்பி சாலை...
posted by PROF.DR.MOHAMED YASIN (UNIVERSITY OF DAMMAM) [12 March 2012]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17616

It is healthy and would seem justice if also the same effort takes palce at Main road. It seems more congested . Any unofficially occupied things will go to be amputated by government personnels.It is inevitable. Making kayalpatnam be convenient for the transport also impresses the visitors and it would make them to feel a place of people living with public concerned. lets all put hands together to support for the justice.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:எல்.கே.லெப்பைத்தம்பி சாலை...
posted by Husain Noorudeen (Abu Dhabi) [12 March 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17619

இப்போதுதான் எல் கே லெப்பைத் தம்பி சாலை பளிச்சென்று தெரிகிறது. இதையே மெயின் ரோட்டிலும் செய்தால் மிக நன்றாக இருக்கும். எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved