Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:05:05 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7941
#KOTW7941
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஐனவரி 31, 2012
சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்க மும்பை செல்லும் மாணவர்களுக்கு உணவு, தங்குமிட வசதிகள் செய்ய மும்பைவாழ் காயல்பட்டினம் மாணவர்கள் இசைவு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3247 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மும்பையில் வரும் பிப்ரவரி 04, 05 தேதிகளில் சர்வதேச கராத்தே போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர்,நேபால், பூடான் ஆகிய நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். காயல்பட்டினத்திலிருந்து 7 மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இம்மாணவர்களுக்கு திறமையிருந்தும், பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களாக இருப்பதால், போட்டியில் கலந்துகொள்ள எதிர்கொள்ள வேண்டிய செலவினங்களுக்கு உதவிகளை எதிர்பார்ப்பதாகவும், மும்பை செல்ல ரயில் பயணச்சீட்டு மட்டும் முன்பதிவு செய்துள்ள நிலையில், போட்டி நுழைவுக் கட்டணமான - ஒரு போட்டியாளருக்கு ரூ.1,600 தொகை, மும்பையில் 4 நாட்கள் தங்க ஏற்பாடு, உணவு மற்றும் இதர செலவினங்களுக்கு அனுசரணை எதிர்பார்ப்பதாக இம்மாணவர்களின் பயிற்சியாளரான சென்செய் ஏ.இர்ஃபான் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இம்மாணவர்கள் தங்குவதற்கும், அவர்களுக்கான உணவுக்கும் பொறுப்பேற்பதாக மும்பைவாழ் காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வம் தெரிவித்துள்ளனர். தாங்கள் வசிக்கும் பகுதிக்கு வரும் தாயக மாணவர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய ஆவலோடு காத்திருப்பதாக, மும்பைவாழ் காயல் மாணவர்கள் குழுமத்தின் சார்பாக, மவ்லவீ ஹாஃபிழ் ஏ.டபிள்யு.அப்துல் காதிர் புகாரீ தெரிவித்துள்ளார்.

கராத்தே போட்டியில் கலந்துகொள்வதற்காக இதுவரை இரண்டு மாணவர்களுக்கு மட்டுமே அனுசரணை கிடைக்கப்பெற்றிருப்பதாக, அவர்களின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. காயல் மாநகருக்கு பெருமை சேர்த்து தரவுள்ள இந்த இள இரத்தங்களை அனுசரைனை ...
posted by A.W.Abdul Cader Aalim bukhari (Mumbai) [31 January 2012]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 16388

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாப் புகழும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே! சாந்தியும் சமாதானமும் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ஆமின்.

நமதூர் மாணவச் செல்வங்கள் சர்வதேச அளவில் நடைபெறும் கராத்தே போட்டியில் கலந்துக்கொள்கிறார்கள் அதுவும் மும்பை மாநகரில் என்ற நற்செய்தியை நமதூரின் வலைத்தளங்கள் மூலம் பார்த்து மிகவும் சந்தோஷம் அடைந்தோம்.

மேலும் சகோதரர் மாஸ்டர் இர்ஃபான் அவர்களின் கோரிக்கையும் படித்தோம் எனவே காயல் மாநகருக்கு பெருமை சேர்த்து தரவுள்ள இந்த இள இரத்தங்களை அனுசரைனை செய்யும் பொறுப்பை அதாவது தங்குவதற்கும்,உணவுக்கும் எங்களால் முடிந்த அளவு அல்லாஹ்விற்காக எங்கள் விருந்தாளிகளை கவணிக்கலாம் என்று எண்ணியுள்ளோம் அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களுக்கு அதற்குண்டான எல்லா உதவிகளையும் எங்களுக்கு அவன் தருவதற்கு நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் எங்களுக்காக துஆ செய்ய வேண்டுகின்றோம்.

மேலும் இதை பார்க்கும் மும்பை காயல் மாநகர சகோதரர்களும், பெரியோர்களும் தாங்கள் ஏதேனும் இந்த காயல் செல்வங்களுக்கு தங்களால் முடிந்தளவு ஏதேனும் உதவிகளை செய்ய நாடினால் தயவு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்ணை அனுகலாம்.

இப்படிக்கு
மும்பை வாழ் காயல் இளைஞர்கள் சார்பாக
அப்துல் காதர்
9967383811
மிஸ்கீன் ஸாதிக்
8828248633


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Setting an example By Sponsoring Students
posted by Mohamed Hussain (Chennai) [31 January 2012]
IP: 125.*.*.* India | Comment Reference Number: 16389

Assalamu Alaikum,

Mumbai Kayal Association and its members especially Miskeen Sathick and A.W.Buhari setting up a role model in sponsoring those students who are all going to participate in the Karate competition in mumbai.

Hope this will give the students a moral boost to win in the competition and this sets a good example for other Kayal Welfare Associations(KWA) all around to take this kind of steps in sponsoring the students from our kayal who are all are coming for attending any competition.

One More Suggestion It will be helpful to provide the contact number of all KWAs so that it will be useful for those who are all coming to their respective cities for the first time.

One more Doubt, Our Friend A.W Bukhari is still a Student???????. Expecting reply from A.W. Bukhari.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:சர்வதேச கராத்தே போட்டியில...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [31 January 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16393

இப்படி உதவுவதற்க்கு எல்லாம் நல்ல மனது வேண்டும். இது நம்ம இளைஞர்களிடம் இருக்கின்றது. பாராட்டுக்கள்.

அங்கு வரும் நம் பிள்ளைகளை நன்கு கவனித்து அனுப்புங்கப்பா. அதற்க்காக வயிறு புல்லாக கலரி கறி சாப்பாடு போட்டு விடாதீர்கள், அவர்கள் வந்து இருப்பது கராத்தே போட்டிக்கு.

இன்ஷா அல்லாஹ், அவர்கள் சாதனை படைப்பார்கள், அதன் பின்பு சாப்பாடு கச்சேரியை வைத்துக்கொள்ளுங்கள். இவர்களின் சாதனையை பாராட்ட நாங்கள் ரெடி ஆக இருக்கின்றோம், உங்களுடன்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:சர்வதேச கராத்தே போட்டியில...
posted by M.S.Kaja Mahlari. (Singapore.) [31 January 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 16394

இப்போட்டியில் பங்கேற்க செல்லும் காயல் நகர மாணவர்களுக்கான ஆகும் செலவினங்கள் அனைத்தையும் உலக காயல் நகர சேவை மன்றங்கள் அனைத்தும், தனியாகவோ, கூட்டாகவோ அனுசரணை வழங்கலாம். இம்மாணவர்கள் போட்டியில் பங்கேற்ப்பதும், வெற்றிபெறுவதும், பரிசுகள், பாராட்டுக்களை பெறுவதும் காயல் நகர மக்களாகிய நம் அனைவருக்கும் பெருமைதானே!

தயவுசெய்து இந்த முயற்சியில் ஈடுபட அணைத்து காயல் ஊர் நல மன்றங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:சர்வதேச கராத்தே போட்டியில...
posted by Mohamed Salih (Kayalpatnam) [31 January 2012]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 16395

மாஷா அல்லாஹ்..

சரியான உதவி செய்திருக்கும் உங்கள் அமைப்புக்கு என் மனமார்ந்த நன்றிகள் ..

எல்லாம் வல்ல இறைவன் நம்மக்கு இந்த போட்டியில் வெற்றியை தருவானாக அமீன் ..

என்றும் அன்புடன்,
பெங்களூர் ரில் இருந்து,
முஹம்மத் ஸாலிஹ்,
மற்றும் காயல் நல மன்றம் - பெங்களூர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:கொஞ்சம் கவனம் தேவை!.
posted by OMER ANAS (DOHA QATAR.) [31 January 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 16399

இப்போட்டியில் பங்கேற்க செல்லும் காயல் நகர மாணவர்களுக்கான ஆகும் செலவினங்கள் அனைத்தையும் உலக காயல் நகர சேவை மன்றங்கள் அனைத்தும், தனியாகவோ, கூட்டாகவோ அனுசரணை வழங்கலாம். இம்மாணவர்கள் போட்டியில் பங்கேற்ப்பதும், வெற்றிபெறுவதும், பரிசுகள், பாராட்டுக்களை பெறுவதும் காயல் நகர மக்களாகிய நம் அனைவருக்கும் பெருமைதானே!

தயவுசெய்து இந்த முயற்சியில் ஈடுபட அணைத்து காயல் ஊர் நல மன்றங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். M S Kaja மஹ்லரி அவர்களின் கருத்தை வரவேற்கின்றேன்!

வருகின்ற பசங்கள் கராத்தே போட்டிக்கு வர்றத மனசுல வைத்து கொண்டு நல்லபடி கவனித்து அனுப்புங்கலப்பா! இல்லன்னா, பசங்கள் இத மனசுல வைத்து கொண்டு உங்கள நல்லா கவனித்து அனுப்பிற போர்ரானுங்கோ! ஏனா வாண்டுகள் பழகி வைத்து இருப்பது கராத்தே! எதற்கும் முன்ஜாக்கிரதையா தடுப்பது எப்படி என்று,மாஸ்ட்டர் இர்பானிடம் கற்று வையுங்கள்!

தப்பா நினைக்காதீர்கள்! தமாசுக்கு சொன்னேன்! பிள்ளைகளை தைரியம் ஊட்டி வழி அனுப்புங்கள்! தோற்றாலும்,போட்டியில் கலந்து கொண்டதே வெற்றிதான்! அல்லாஹ் இந்தப்போட்டியிலேயே நமது செல்வங்களுக்கு வெற்றியைத்தர இருகரம் ஏந்தி பிறாத்திப்போம்! இளந்தளிர்களின் வெற்றிக்காக பிறாத்திக்கும், உங்களில் ஒருவனாக!

என்றும் அன்புடன்,
சகோதரன்,
உமர் அனஸ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:சர்வதேச கராத்தே போட்டியில...
posted by p.A.K.Muhyiadhdheen Abdhul Kaathar (Chennai) [02 February 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16448

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹித் த ஆல வ பரகாத்தஹு. நமதூர் மாணவர்கள் சர்வ தேச க் கராத்தே போட்டியில் இமாலய சாதனை புரிவதற்கு வல்ல இறைவனிடம் இறைஞ்சுவதோடு எனது மனமார்ந்த நல வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.இவர்களுக்கு உதவிடும் உள்ளங்களுக்கு வல்ல இறைவன் எல்லா வளங்களையும் கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved