Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:48:26 PM
திங்கள் | 6 மே 2024 | துல்ஹஜ் 1740, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4612:2003:3606:3307:46
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:00Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்04:15
மறைவு18:28மறைவு16:50
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4705:1205:38
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5019:1519:41
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7846
#KOTW7846
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 13, 2012
வெளிப்படை நிர்வாகத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் நகர்மன்றம்! ஜன.15இல் நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - மக்கள் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு நகர்மன்றத் தலைவர் கலந்தாலோசனைக்கு அழைப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4118 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (21) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 7)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, தான் நகர்மன்றத் தலைவரானால் வெளிப்படையான நகர்மன்ற நிர்வாகத்தைத் தருவதாக தனது தேர்தல் அறிக்கையில் (Manifesto) துவக்க அறிக்கையாக தெரிவித்திருந்தார்.

வெளிப்படை நிர்வாகத்தை நோக்கிய தனது முதல் நகர்வாக, நகரின் முக்கிய பிரச்சினைகள் குறித்து நகரின் அனைத்துப்பகுதி மக்களுடனும் கலந்தாலோசிப்பதற்காக, இம்மாதம் 15ஆம் தேதியன்று நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள் மற்றும் மக்கள் கூட்டமைப்புகளுடன் கலந்தாலோசனை நடத்திடும் பொருட்டு, அவற்றின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் அனுப்பியுள்ள கடித வாசகங்கள் பின்வருமாறு:-

எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்....

அன்புடையீர், சாந்தியும் - சமாதானமும் தங்களின் மீது என்றென்றும் நிலவட்டுமாக!

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை தாங்கள் அறிவீர்கள். எல்லாப்புகழும் இறைவனுக்கே! எங்கள் ஐந்தாண்டு பதவிக் காலத்தில், வெளிப்படையான - நேர்மையான - தூய்மையான நிர்வாகத்தைத் தந்து, மக்களுக்குக் கிடைக்கவேண்டிய அத்தியாவசிய சேவைகளான குடிநீர், தெருவிளக்கு, குப்பைகளை அகற்றல், திடமான சாலைகள், சுகாதாரமான - பசுமையான நகரம் போன்றவற்றை துரிதமாக இறைவனின் அருளால் வழங்கிட நாங்கள் அனைவரும் உறுதி பூண்டுள்ளோம்.

மக்களின் குறைகளை - தேவைகளை முறையாக அறிந்திட, நகர்மன்ற தலைவியாகிய நான் சில திட்டங்களை வகுத்துள்ளேன். அதில் ஒன்றாக, மாதம் ஒருமுறை நமதூரின் ஜமாஅத்துகள் / பொதுநல அமைப்புகள் மற்றும் புறநகர் பகுதிகளைச் சார்ந்த சமூக ஆர்வாலர்களைச் சந்தித்து அவர்களுடன் மேற்கண்ட விஷயங்கள் குறித்து கலந்தாலோசனை செய்ய நாடியுள்ளேன்.

முதல் ஆலோசனை கூட்டம், எதிர்வரும் ஞாயிறு 15.01.2012 அன்று மாலை 04:30 மணியளவில் காயல்பட்டினம் மகுதூம் தெருவில் செயல்பட்டு வரும் ரஃப்யாஸ் ரோஸரி மழழையர் பள்ளி வளாகத்தில் வைத்து (இறைவன் நாடினால்) நடத்த நான் திட்டமிட்டுள்ளேன்.

ஆகவே தங்கள் ஜமாஅத் / பொதுநல அமைப்பு / புறநகர்களின் ஊர் தலைவர் / சார்பாக ஒரு பிரதிநிதியை, இவ்வாலோசனை கூட்டத்திற்கு தாங்கள் தவறாது அனுப்பித் தரும்படி தங்களை அன்புடன் கேட்டுகொள்கிறேன்.


இவ்வாறு, நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள் மற்றும் மக்கள் கூட்டமைப்புகளுக்கு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா அனுப்பியுள்ள கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. உங்கள் நடுநிலை கடைசி வரை தொடர மீண்டும் வாழ்த்துக்கள்...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [13 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15881

தாங்களின் வெளிப்படையான நிர்வாகம் வெற்றிகரமாக செயல்பட வாழ்த்துக்கள்...

இந்த மண்ணின் மைந்தர்களான புறநகர் மக்களை அரவணைத்து செல்லும் நீங்கள் புறநகர்களின் ஊர் தலைவர் / சார்பாக ஒரு பிரதிநிதியை, இவ்வாலோசனை கூட்டத்திற்கு அழைத்திருப்பது சமநீதியை தாங்கள் நிலைநாட்டி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

உங்கள் நடுநிலை கடைசி வரை தொடர மீண்டும் வாழ்த்துக்கள்...

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.
உறுப்பினர் - வி.சி.கட்சி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:வெளிப்படை நிர்வாகத்தை நோக...
posted by mackie noohuthambi (kayalpatnam) [13 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15883

HANDS THAT ROCK THE CRADLE RULE THE WORLD. தொட்டிலை ஆட்டும் கரங்கள் உலகை ஆளும் என்ற பழமொழிக்கு உயிர்கொடுக்கும் நகரமன்ற தலைவிக்கு வாழ்த்துக்கள்.

வெளிப்படையான நிர்வாகம் என்று மேடையில் முழங்கி கொண்டிருந்த அம்மையார் முடங்கி போய் இருக்கும் மர்மம் தெரியாமல் வருத்தப் பட்டுக்கொண்டிருந்த என் போன்றவர்களுக்கு நான் LATE ஆக வந்தாலும் LATEST ஆக வருவேன் என்று புறப்பட்டு வந்து காரியங்கள் ஆற்ற துணிந்திருக்கும் சகோதரிக்கு எல்லா உறுப்பினர்களும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். எல்லா ஜமாதினர்களும் அவர்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

ஒரு விஷயம் இங்கு கவனிக்க வேண்டும். நகரமன்ற தேர்தலிலும் இப்படி ஒரு ஆலோசனை கூட்டத்துக்கு அழைத்துவிட்டு அதே இடத்திலேயே வேட்பாளர் தேர்வையும் உறுதி செய்தது போல் செய்து விடாதீர்கள். கருத்துக்களை பேச, கேட்க மட்டுமே அழைக்கப்படுகிறவர்கள் ஏதாவது முக்கிய தீர்மானம் மேற்கொள்வதாக இருந்தால் அவரவர்கள் ஜமாஅத் கூட்டத்தில் அதை முன்மொழிந்து பேசி கருத்தறிந்து பின்னர் ஜமாத்தின் ஒத்த கருத்தாக அதை வெளிப்படுத்துங்கள்.

மஷூரவிலே வஹ்யின் பரகத் இருக்கிறது என்பதை உணர்ந்து அடுத்தவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்ளுங்கள். ஊருக்கு நல்லது செய்யவேண்டும் என்ற உங்கள் எண்ணங்களுக்கு அல்லாஹ் துணை நிற்பானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. தலைவரை ஒருவன் இயக்குகிறான்!
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [13 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15884

இப்படி திறந்த புத்தகமாக இருக்க நினைக்கும் உங்களை பார்த்து இப்பவும் காயல் மகபூப் சொல்கிறார்:-

"இன்று பதவியில் இருக்கும் நகர்மன்றத் தலைவரை ஒரு சிலர் இயக்கிக் கொண்டிருக்கின்றனர். அவரது செயல்பாடுகள் அனைத்தும் மூடகமாகவே உள்ளது. வெளிப்படையான நிர்வாகத்தைத் தருவேன் என்று சொன்னவர்கள் ஏன் அதைச் செய்யவில்லை? ஊரின் ஒற்றுமை இன்று சீர்குலைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணமானவர்கள் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும்"

அவருடைய ஆதங்கம் சரிதானே? ஆனால் சிலர் அல்ல எல்லாம் வல்ல அல்லாஹு அல்லவா உங்களை இயக்கி கொண்டிருக்கிறான்.

அதைப்போல இப்படி எல்லோரையும் கலந்தாலோசனை செய்வதும் ஆலோசனைகளை பெறுவதற்காக கூட்டம் போடுவதும் தான் அவருக்கு மூடகமாகவும் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலாகவும் நினைக்கிராரோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:வெளிப்படை நிர்வாகத்தை நோக...
posted by suaidiya buhari (chennai) [13 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15886

assalamualikum

இதை தான் நாங்கள் எதிர் பார்த்தோம், உங்கள் நல்ல வெளிபடையான நகராச்சி தொடர என் வாழ்த்துகள். இந்த மடலை அழைப்பாக எடுத்து அனைத்து ஜமாத்து முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ளவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:வெளிப்படை நிர்வாகத்தை நோக...
posted by PS ABDUL KADER (JEDDAH) [13 January 2012]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15887

வெளிப்படை நிர்வாகத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் நகர்மன்ற தலைவி ஆபிதா அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க முன் வரஇருக்கும் நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - மக்கள் கூட்டமைப்புகளின் பிரதிநிதி, மட்டும் வார்டு உறுபினர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:வெளிப்படை நிர்வாகத்தை நோக...
posted by mohammed adam sultan (kayal patnam) [13 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15888

அல் ஹம்தில்லிலாஹ்.
சிறிய தாமததினாலான சிதறிய சிந்தனைக்கு ஒர் முற்றுபுள்ளி

சகோதரரர் மக்கி நூஹு தம்பி காக்காவின் கருத்தோடு என் கருத்தையும் இனைக்கிறேன். அவர்கள் கூறியதுபோல் நடந்தால் சிறப்பான முன்னுதாரணமாகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:வெளிப்படை நிர்வாகத்தை நோக...
posted by S.A.Muhammad Ali (Dubai) [13 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15890

மழைக்கால மாலை பொழுதில் மன்றங்கள் எல்லாம் ஓர் குடையின் கீழ் ஒதுங்கும் நேரம் இது.

மனதில் இடைவெளி குறைய மற்றவர் மனதை அறிய நல்லதோர் வாய்ப்பு.

ஆலோசனை மண்டபத்தில் கலந்து கொள்ளும் முன்பு அனைவரும் தங்கள் பகுதி மக்களிடத்தில் கலந்தாலோசித்து கருத்துக்களை முன் வையுங்கள்.

பிறர் கூறும் கருத்துக்கள் உங்களுக்கு பிடிக்காத பட்சத்தில் கண்ணியமாக எடுத்து சொல்லுங்கள்.

யார் மனதையும் புண்படுத்தாமல் பண்போடு அனைவரும் நடந்து பிற மக்களுக்கு முன்னுதாரணமாக நம் நகர் திகழ, நம் துன்பங்கள் எல்லாம் உருண்டோட, இன்னும் பல சாதனைகள் புரிய இறைவன் துணை புரிவானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:வெளிப்படை நிர்வாகத்தை நோக...
posted by abbas saibudeen (mumbai) [13 January 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 15895

தங்களின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஒரு சாரார் உடைய கருத்தை மட்டும் செயலில் எடுக்காமல் பாதிப்புக்குரிய்வர் வாதங்களை மேலாக ஆராய்ந்து முடிவுகள் எடுக்க முனையுங்கள்.அதற்கு வல்ல ரஹ்மான் துணை நிற்பானாக .ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:வெளிப்படை நிர்வாகத்தை நோக...
posted by solukku.M.E.Sd Md Sahib. (qatar) [13 January 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 15906

நூஹுதம்பி மாமா சொன்னதை அப்படியே வரவேக்றேன்.துடரட்டும் உங்கள் சேவை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:வெளிப்படை நிர்வாகத்தை நோக...
posted by Vilack SMA (kayalpatnam) [14 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15907

இந்த தலைவியின் " நல்ல எண்ணங்கள் " நிறைவேற நாம் அனைவரும் உதவியாய் இருப்போமாக .

" நகரமன்ற தேர்தலிலும் இப்படி ஒரு ஆலோசனை கூட்டத்துக்கு அழைத்துவிட்டு அதே இடத்திலேயே வேட்பாளர் தேர்வையும் உறுதி செய்தது போல் செய்து விடாதீர்கள். " comment by Mr . Mackei Noohuthambi

இந்த செய்திக்கு பொருத்தமற்றது.

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:வெளிப்படை நிர்வாகத்தை நோக...
posted by MAK.JAINUL ABDEEN,president,kaakkum karangal narpani mandram (kayalpatnam) [14 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15916

அஸ்ஸலாமு அலைக்கும். மக்கி நூஹுதம்பி மாமா அவர்களே, நமதூரில் நடந்து முடிந்த ஒரு காரியம், அதனாலுள்ள பிரச்சனைகளே இதுவரை முடியவில்லை. இப்பம்தான் கொஞ்சம் அமங்கி இருக்கிறது. திரும்பவும் அதே பிரச்சனையை இங்கே கொண்டு வருவதன் நோக்கம் என்ன? ஊர் நிம்மதியாக இருக்கக் கூடாது என்பதா? எதற்கு கருத்து சொல்லணுமோ அதுக்கு மட்டும் சொல் லவேண்டியதுதானே? தேவையில்லாமல் ஏன் இந்த மாதிரி செய்கிறீர்கள்.

அட்மின் அவர்களே,இந்த மாதிரி மக்களிடத்தில் பிரச்சனையை உண்டுபண்ணும் கமேன்ட்சை தயவு செய்து ரிஜெக்ட் செய்யுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. 4 ஆவது மாதம் நல்லதொரு மாற்றத்தோடு ...
posted by N.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் ) [14 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15922

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

சகோதரி ஆபிதா அவர்களின் இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
--------------------------------------------
தெரிந்தும், புரிந்தும் நடந்தால் :

தங்கள் திட்டத்தின்படி , தொடராக இது போன்று கூட்டங்கள் நடத்தி ஊர் மக்களின் ஆலோசனைகள் பெற்று சிறப்புடன் நிர்வாகம் அமைய வேண்டும் - இது எல்லாத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும்.

வெளிப்படையான நிர்வாகம் என்பது சரிதான் அதே நேரத்தில் எல்லா விசயங்களையும் வெளிப்படையாக எடுத்துக்கொள்ள முடியாது / எடுத்துக்கொள்ளவும் கூடாது என்பதை நமது நகராட்சி நிர்வாகமும் தெரிந்துக்கொள்ள வேண்டும் நமது நகர மக்களும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

எதையும் தெரிந்தும், புரிந்தும் நடந்தால் நடப்பவைகள் எல்லாம் நல்லவைகளாகவே இருக்கும் - இறைவனின் அருளும் பெருகும்.
-------------------------------------------------
கோடி கணக்கில் பணம் :

ஒரு முக்கியமான வேண்டுகோள்! நம் நகராட்சியிலே கோடி கணக்கில் பணம் கையிருப்பு இருக்கிறது - அவைகளை குறிப்பிட்ட ஒருசில மாதத்திற்குள் செலவிடாவிட்டால் - அவைகள் நம் நகர் நலனுக்கு உபயோகமில்லாது போய்விடுமே!!!

ஆகையால் அதற்கு முதலிடம் கொடுத்து அதை மிகவும் பிரயோசனமான வழியில் செலவிட திட்டம் தீட்டி உடனே செயல் படுத்துங்கள்.
----------------------------------------------------
அனுபவசாலிகளின் ஆலோசனைகள் :

தாங்கள் எவ்வளவுதான் , எத்தனைதான் கூட்டங்கள் கூட்டி மக்களின் ஆலோசனைகளை பெற்றாலும் செயலாற்றுவதற்கு இலகுவானது ஊழலற்ற அனுபவசாலிகளின் ஆலோசனைகளே.

ஆகையால், நம் ஊரில் உள்ள வயது முதிர்ந்த அனுபவசாலிகளான ஊழலற்ற முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளை பெறுங்கள்.

அவர்களுடைய ஆலோசனைகளை பெற்றால் - நீங்கள் எந்த அதிகாரியை பற்றியும் கவலைப்பட தேவையில்லை - உண்மையான அதிகாரிகள் உங்களுடன் இருந்து நேர்மையாக பணியாற்றுவார்கள் - உண்மையற்றவர்கள் ஊரைவிட்டு போய்விடுவார்கள்.

எனவே ஊழலற்ற அனுபவசாலிகளான பெரியவர்களின் ஆலோசனைகளை பெற முயலுங்கள்.
-----------------------------------------------------
தங்களுக்கென்று ஓர் அலுவலகம் :

நகராட்சியிலே தங்களுக்கென்று ஓர் அலுவலகம் தனியாக இருக்க வேண்டும் / நிச்சயமாக இருக்கும். அதில் தாங்கள் இருந்து செயல்பட்டால்தான் எந்த ஒரு செயலும் முழுமையடையும்.

அதல்லாது நீங்கள் பொதுவான ஓர் அறையில் இருந்து கொண்டு செயலாற்ற விரும்பினால் அது சாத்தியமாகாது.

எனவே! ஆணையரிடம் உங்களுக்கென்று ஒரு தனியறையை தயார் பண்ணித் தர சொல்லுங்கள் - நீங்கள் பெண் என்பதால் அந்த அறையில் டாய்லட் வசதி ஒன்றும், செய்து தர சொல்லுங்கள் - நீங்கள் பொது கழிப்பறைக்கு போக வேண்டியதில்லை.

இதுவெல்லாம் உங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமை - நீங்கள் பொறுப்பேற்ற உடனே இதை கேட்டு பெற்றிருக்க வேண்டும்.

நீங்கள் உங்களுக்கென்று உள்ள சீட்டில் அமராதவரை எதுவும் உங்களைத் தேடி வராது - நகராட்சியின் அதிகாரமும், பொறுப்பும் உங்கள் கையில் இருக்க வேண்டும் என்றால் உரிமைகளை கேட்டுப் பெறவேண்டும்.

புரையோடி போன நகராட்சியை பொலிவு பெறச்செய்வது உங்கள் கையில்தான் உள்ளது.
--------------------------------------------------
எந்த ஒரு கோப்பும் :

ஏறத்தாழ மூன்று மாதமாக, வெளியே நடப்பவைகளை தங்கள் கண்ணால் நேரிடையாக பார்த்து தெரிந்து கொண்டீர்கள் - நடவடிக்கையும் எடுத்திருப்பீர்கள் - இது போதும் இப்போதைக்கு.

இனிமேல் தாங்கள் , தங்கள் சீட்டிலிருந்துதான் நகராட்சி நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும் - எந்த ஒரு கோப்பும் உங்கள் டேபிலுக்கு வர வேண்டும்.

எந்த இடத்திற்கும் நீங்கள் போய் பார்க்க வேண்டியதில்லை - நகராட்சி அலுவலர்களை அனுப்பி பார்த்து , தகவல்களை தர சொல்லுங்கள்.

மிக அவசியமானது அல்லது புதினமானது என்றால் தாங்கள் நேரில் போய் பார்த்து நடப்புகளை அறியலாம் - மற்றபடி எல்லா விசயங்களுக்கும் நீங்கள் நகராட்சியை விட்டு போக வேண்டியதில்லை.

என்னுடைய எழுத்துக்கள் எதுவும் சட்டத்திற்கு புறம்பானது அல்ல - சட்டத்திற்குட்பட்டுதான் எழுதியிருக்கிறேன்.

ஆகவே இன்ஷா அல்லாஹ்! 4 ஆவது மாதம் நல்லதொரு மாற்றத்தோடு தொடங்கும் என்று எதிர்பார்க்கின்றோம் - இறைவனும் அருள்வான் ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:வெளிப்படை நிர்வாகத்தை நோக...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [14 January 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15925

சகோதரர் MAK ஜைனுல் ஆப்தீன் அவர்களின் ஆதங்கம் நியாயமானதே. ஆனால் இந்த நியாயத்தை மற்ற இடங்களிலும் தாங்கள் வெளிப்படுத்தி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

இந்தியாவில் எந்த பிரச்சனை வந்தாலும் அதற்க்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று வழமையாக கூறுவது போல, ஊரில் என்ன பிரச்சனைகள், தவறுகள், தீர்க்காமல் இருக்கும் பிரச்சனைகள் அனைத்திற்கும் நகர் மன்ற தலைவியையும், தற்போது உள்ள நிர்வாகத்தையும் குறைகூறியே பதிவு செய்யும் நேரத்தில் தாங்கள் இந்த கருத்தை, கண்டனத்தை பதிவு செய்து இருந்தால் பலரும் பாராட்டி இருப்பார்கள்.

மக்கி மாமா கூறியதில் என்ன தவற்றை கண்டுபிடித்தீர்கள். இது மாதிரி இருக்கனும், இது மாதிரி இருக்கக்கூடாது என்று சொல்லுவது குற்றமா. அல்லது உண்மை சுடுகிறதா.

அனைத்தும் நன்மையாக அமைய வல்லவன் அருள் புரிவானாக.

உங்களின் பொது சேவையை பார்த்து பெருமைப்படும்,

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re: வெளிப்படை நிர்வாகத்தை நோக்கி...
posted by s.s.md meerasahib (zubair) (riyadh) [14 January 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15927

அஸ்ஸலாமு அலைக்கும். வெளிப்படை நிர்வாகத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் நம் நகரமன்ற நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள். ஓப்பன் நிர்வாகம் அமைப்பது முற்றிலும் தலைமை பொறுப்புக்கே..... தலைவலியை தரும். என்றாலும் நிர்வகித்து காட்டுவேன் என்பது தலைவரின் திறமையை பொறுத்தது. ஆனால் இப்படி செய்துவிட்டு மற்ற உறுப்பினர்கள் மீதும்,அதிகாரிகள் மீதும், மக்களின் மீதும் குற்றத்தை சுமர்த்தி கைநழுவ கூடாது.

Moderator: தனிநபர் விவாத வாசகங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:வெளிப்படை நிர்வாகத்தை நோக...
posted by MAK. JAINULABDEEN. president, kaakkum karangal narpani mandram (kayalpatnam) [14 January 2012]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 15930

முடிந்து போன விஷயங்களை பற்றி திரும்ப திரும்ப பேசி என்ன புரோயோஜனம்.சொல்லுங்கள்.எனக்கு தெரிந்த வரையில் எந்த தவறும் மக்கி மாமா சொன்ன விசயத்தில் நடக்கவில்லை.

அதே விசயத்தை மக்கி மாமாவும்,லண்டன் இஞ்சினியர் அபூபக்கர் ஹாஜி அவர்களும் பேரவைக்கு நேரடியாக வந்து கேட்டு தெளிவுபெற்று சென்றார்கள்.திரும்பவும் அந்த விசயத்தை இங்கே கொண்டு வந்தால் என்ன அர்த்தம் .நெருப்பு எரிந்து முடிந்து இப்பம் அணையக் கூடிய தருணத்தில் பெட்ரோலைக் கொண்டு வந்து ஊற்றுவதைப் போல் இருக்கு. அதற்கு உங்களைப் போன்ற படித்தவர்களும் ஆதரவாக எழுதுகிறீர்கள்.

நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும்.இனி நடப்பவை நல்லதாக நடப் பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைப்பத்தி பேசுவோம்.அதுதான் ஊர் ஒற்றுமைக்கு நல்லது.சூழ்ச்சியாளர்களில் மிகப் பெரிய சூழ்ச்சிக்காரன் அல்லாஹ் மட்டுமே.நல்லதை மட்டுமே நினைப்போம்.நல்லதே நடக்கும்.அஸ்ஸலாமு அழைக்கும்.

Adminsitrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?
posted by Ruknudeen Sahib (China) [14 January 2012]
IP: 116.*.*.* China | Comment Reference Number: 15931

அஸ்ஸலாமு அலைக்கும் புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா என்பதற்கேற்ப ஊர் தலைவி அவர்களின் ஆட்சியும் அணுகுமுறையும் எல்லா மக்களும் பாராட்டும்படி அமைந்து இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.

பொதுவாக ஒருவர் நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கும் போது நமக்கு சரியாக படாத விசயங்களை தேவையில்லாத இடங்களில் அதை போலே செய்யாதே என்று கூறுவது அவர் (தலைவி) மேல் நாம் நம்பிக்கை இழந்தது போல் காட்டி மற்ற விவாதங்களுக்கும் வழி வகுப்பது பெரியவர்களுக்கு அழகல்ல.

ஆக எல்லாம் வல்ல நாயன் நம் ஊர் ஒற்றுமை ஓங்கி வளமும் செழிப்பதற்கு துணை புரிவானாக ஆமீன் வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:வெளிப்படை நிர்வாகத்தை நோக...
posted by Mauroof (Dubai) [14 January 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15933

சகோ. N.S.E. மஹ்மூது அவர்களின் பதிந்திருக்கும் நல்ல ஆலோசனைகளை நகர்மன்ற தலைவி அவர்கள் பரிசீலனை செய்ய வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:வெளிப்படை நிர்வாகத்தை நோக...
posted by OMER ANAS (KAYAL PATNAM.) [15 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15936

சகோதரி ஆபிதா(தலைவி) அவர்களின் வெளிப்படையான அழைப்புக்கு நன்றி! அதேநேரம் ஒருசிலர்கள் எங்கு,எப்படி எழுதுவது என்று தெரியாமல், ஆறிய புண்களில் சலத்தினை தோண்டிப்பார்க்க நினைக்கின்றார்கள்! இதில் மக்கி நூஹூதம்பி காக்காவும் விதிவிலக்கல்ல! அருமையான கேள்விகளை விளக்கும்,ஜைனுதீனும் அழகாக கேட்டுள்ளார்கள்! இதே கருத்தாளர்,சில நாள் முன்பு தெருவிளக்கிர்க்கு மன்ற உறுப்பினர்களை குறை கூறினார்.இப்ப மன்றதிர்க்கே ஜால்ரா அடிக்கிறார்.

மரியாதையோடு அழைத்தது தலைவி. அதுபோல் மரியாதையுடனும்,கண்ணியமாகவும் நடப்பது ஜமாத்தார்களின் கடமை! என்னமோ இவர் அழைத்தது போலவும் நாங்கள் எப்படிகூட்டத்தில் பேச வேண்டும் என்று நடைமுறை படுத்துவதும், இவருக்கு அவசியம் அற்றதே! ஜமாத்தாளர்களின்,குறைகளை அறிந்து அதை வெளிப்படையாக பொதுமக்களுக்கு சேவை செய்திட பஞ்சாயத்து அழைக்கின்றது! அதன்படி செயல்பட்டால் நிச்சயம் வாழ்த்துவோம்! வரவேற்ப்போம்! நன்றி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:வெளிப்படை நிர்வாகத்தை நோக...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [15 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15946

நமது நகராட்சி தலைவியின் வெளிப்படையான நிர்வாகம் குறித்தான அடுத்தகட்ட நகர்வு பாராட்டத்தக்க ஓன்று. அவரது இந்த ஆத்மார்த்தமான முயற்சிக்கு நமது ஒத்துழைப்பு எப்போதும் உண்டு.

இங்கே வலைப்பக்கங்களில் தமது கருத்துக்களை முன்வைப்போர் தலைவியின் தொடர் செயல்பாடுகளை கண்டறிந்த பிறகு அது குறித்து பேசுவதுதான் சரியாக இருக்கும்

அவர் போகவேண்டிய பாதை நீண்டது. பக்கத்துணையாக நாம் இருப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:வெளிப்படை நிர்வாகத்தை நோக...
posted by OMER ANAS (KAYAL PATNAM.) [15 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15950

நமது நகராட்சி தலைவியின் வெளிப்படையான நிர்வாகம் குறித்தான அடுத்தகட்ட நகர்வு பாராட்டத்தக்க ஓன்று. அவரது இந்த ஆத்மார்த்தமான முயற்சிக்கு நமது ஒத்துழைப்பு எப்போதும் உண்டு.

இங்கே வலைப்பக்கங்களில் தமது கருத்துக்களை முன்வைப்போர் தலைவியின் தொடர் செயல்பாடுகளை கண்டறிந்த பிறகு அது குறித்து பேசுவதுதான் சரியாக இருக்கும் நான் உள்பட!!! என்று கருத்தாளர் சகோ சுஹைப் அவர்கள் பதிவு செய்தால் மிக்க நன்றாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:வெளிப்படை நிர்வாகத்தை நோக...
posted by Hamza (Riyadh) [15 January 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15952

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்!

அதே சமயம் இவ்வாறு நடத்தும் போது நிறைய நடை முறை சிக்கல்ஹலை சந்திக்க நேரிடும்.

ஒரு ஜமாஅத் வைக்கும் கோரிக்கையை மற்ற ஜமாஅத் எதிர்க்க அல்லது எங்கள் ஜாமத்துக்கு இல்லையா? என்ற கேள்விகள் வர வாய்ப்பு உள்ளது .

குறுக்கு தெரு குப்பை அகற்றும் விசயத்தில் ஒரு உறுப்பினர் எதிர்த்தார் மற்றொருவர் ஆதரித்தார் (நகர் மன்ற உருபினர்களுக்கு இடையேலேய இப்படி என்றால்)
http://kayalpatnam.com/shownews.asp?id=7621

எனவே வரும் காலங்களில், பொதுஅமைப்புகள் , ஜமாத்துக்கள் இவைகளிடம் மாதம் ஒரு முறை "மனுவாக" பெற்று பரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவு முதல் கனமழை!  (11/1/2012) [Views - 5269; Comments - 11]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved