Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:22:22 AM
புதன் | 1 மே 2024 | துல்ஹஜ் 1735, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:19
மறைவு18:27மறைவு12:14
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4905:1405:40
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7793
#KOTW7793
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஐனவரி 1, 2012
தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 61ஆவது பொதுக்குழு மற்றும் துணைத்தலைவருக்கு வழியனுப்பு விழா நிகழ்வுகள்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3821 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 61ஆவது பொதுக்குழு மற்றும் துணைத்தலைவருக்கு வழியனுப்பு விழா நிகழ்வுகள் கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 30) அன்று நடைபெற்றன. இது குறித்து அம்மன்றம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-



எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் எமது தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 61ஆவது பொதுக்குழு மற்றும் துணைத்தலைவர் ஜனாப் மெஹர் அலி அவர்களுக்கு வழியனுப்பு விழா 30-12-2011 வெள்ளியன்று சகோதரர் பாலப்பா அஹ்மதுவின் இல்லத்து நீண்ட உள்ளரங்கில் இஷா தொழுகைக்குப்பின் நடந்தேறியது.



சகோதரர் சாதுலி அவர்கள் இறைமறை ஓதி துவங்கி வைக்க - இளைய தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரம் பாலப்பா அவர்களின் பாலகன் யூசுப் சாஹிப் அழகான முறையில் வரவேற்புரை நிகழ்த்தி வந்தோர் அனைவரையும் வியக்க வைத்தார்.

தலைவர் முன்னுரை:





அடுத்து தலைவர் முன்னுரையில் டாக்டர் இத்ரீஸ் அவர்கள் இந்நாள் வரையில் நற்பணி மன்றம் செவ்வனே நடந்தேற ஒன்றுபட்ட கருத்துகளுடன் உறுதுணையாய் நின்ற அனைத்து சகோதர்களையும் நெஞ்சார்ந்த நன்றியுடன் நினைவு கூர்ந்தார். மேலும் சவூதியில் தன்னுடைய பணி முடித்து தாயகம் திரும்பி நம் மன்ற பணிகளை தொடரவிருக்கும் துணைத்தலைவர் ஜனாப் மெஹர் அலி அவர்களின் 18 ஆண்டு காலம் நம் மன்றத்திற்கு ஆற்றிய சேவைகள் குறித்து பாராட்டி பேசியதோடு, நம் மன்றத்து பணிகளை அவர்கள் தாயகம் திரும்பியும் தொடர வேண்டும் என்ற அன்புக் கட்டளையோடு அவர்களை வாழ்த்தி உரையை நிறைவுற்றார்கள்.





அதனை தொடர்ந்து செயற்குழு உறுப்பினர்கள்



சகோதரர் இஸ்மாயில், சகோதரர் இம்தியாஸ், சகோதரர் சதகத்துல்லாஹ், சகோதரர் ஹசன் ஜாபர், சகோதரர் செய்யது இப்ராகிம், சகோதரர் புஹாரி ஆகியோர்கள் துணைத்தலைவர் ஜனாப் மெஹர் அலி காக்கா அவர்களின் 18 ஆண்டு காலம் நம் தோளோடு தோளாக நின்று நம் மன்றத்திற்கு ஆற்றிய சேவைகள் குறித்தும் மேலும் அவர்கள் சவூதி பணியில் இருந்து மட்டும் தான் ஓய்வு பெற்றுள்ளார்களே தவிர நம் மன்றத்து உறுப்பினர்களின் இதயத்திலிருந்து அல்ல என்று பெருமையாக கூறினார்கள்.



மேலும் அன்னாரின் ஓய்வு காலம் சீராகவும், நோய் நொடி இல்லாமலும், நிம்மதியாகவும் நம் ஊருக்கும் நம் சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ கேட்டு கண்ணீர் மல்க உரையாற்றினார்கள் .

பொதுச்செயலாளர் உரை:



அடுத்து உரையாற்றிய பொதுச்செயலாளர் அஹமது ரபீக் அவர்கள் நம் மன்றத்திற்கு உதவி கேட்டு வந்த மனுக்களின் பரிசீலனை குறித்தும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் குறித்தும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும் நம் மன்றத்து நிதி நிலையை அதிகரிப்பது குறித்து உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியதோடு அவர்களது கருத்தையும் கேட்டறிந்தார்கள்.



அதனை தொடர்ந்து 18 ஆண்டு காலம் நம் மன்றத்திற்காக தன்னுடைய உடலாலும், பொருளாலும் இறைவனின் திரு பொருத்தத்தை மட்டுமே நாடி பல சேவைகள் புரிந்து தாயகம் திரும்ப இருக்கும் ஜனாப் மெஹர் அலி காக்கா அவர்களை கவுரவிற்கும் பொருட்டு தலைவர் டாக்டர் இத்ரீஸ், செயற்குழு உறுப்பினர்கள் கிங் செய்யது இப்ராஹீம் காக்கா மற்றும் சகோதரர் அப்துல் அஜீஸ் ஆகியோர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்கள் .



புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:





அதனைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் சகோதர் இம்ரான், சகோதரர் முஹம்மது லெப்பை, சகோதரர் சதக் இப்ராஹீம், சகோதரர் அப்துல் காதர், சகோதரர் பைரோஸ் ஆகியோர்கள் அணைத்து உறுப்பினர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டனர். அதன் பின்னர் பெட்ரோலியம் இஞ்சினியரிங் மேற்படிப்பிற்காக சவூதி வந்திருக்கும் சகோதரர் மதார் சாஹிப் அணைத்து உறுப்பினர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டார் .

உதவித்தலைவர் மெஹர் அலி அவர்களின் ஏற்புரை:





அடுத்து பணி ஓய்வு பெற்று தாயகம் திரும்பும் ஜனாப் மெஹர் அலி காக்கா அவர்கள் ஏற்புரையில் , அழகான திருமறை வசனங்களுடன் துவங்கி - அன்று முதல் இன்று வரை நம் மன்றம் ஆற்றிய பணிகளையும் அதற்காக அவ்வப்போது சந்திக்க நேர்ந்த சிரமங்களையும் பட்டியலிட்டார். அறிவுரைகளைத் தன் அனுபவம் கலந்த வார்த்தைகளால் அற்புதமாக எடுத்துரைத்து - பொருளாதார பலம் ஒரு மன்றத்துக்கு எத்தனை அவசியம் என்பதை வலியுறுத்தினார். நம் தாயகம் காயல் நகரில் இறைவன் அருளால் தான் துவங்க எண்ணியுள்ள மருந்தகம் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்ச்சி உண்டாக்கும் கலந்துரையாடல் நிகழ்வுகள் குறித்து எடுத்துரைத்து - தம் மீது அன்பு கொண்டு மன நெகிழ்வுடன் உணர்ச்சிப் பெருக்குடன் வாழ்த்திய சகோதரர்களுக்கும், மன்ற அங்கத்தினர் அனைவருக்கும் தம் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்து, அனைவரும் தனக்காக இறைவனிடம் துஆ கேட்கும் படி கூறி அமர்ந்தார்.





அடுத்து நடைபெற்ற உறுப்பினர்களின் கருத்து பரிமாற்றத்திற்கு பின் தேநீர் சிற்றுண்டிகள் சுவையான கறிக்கஞ்சி மற்றும் அனைவருக்கும் சிக்கன் ப்ரோஸ்டட் வழங்கப்பட்டது. இறுதியாக தலைவரின் நன்றியுரையுடனும் இனிய துஆவோடும் கூட்டம் இனிதே நிறைவுற்றது.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி தொகுப்பு மற்றும் புகைப்படங்கள்:
B.A.முத்துவாப்பா,
தகவல் தொடர்பாளர்,
காயல் நற்பணி மன்றம் - தம்மாம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. எனக்கு மெஹர் அலி காக்காவை பிடிக்கவே பிடிக்காது..
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [01 January 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15339

அல்ஹம்து லில்லாஹ்..

இந்த பொதுக்குழு மிகவும் அருமையாகவும், மனதுக்கும், வயிற்றுக்கும் நிறைவாகவும் அமைந்து இருந்தது... டாக்டர், சகோதரர் பலப்பா, அவர்களின் ஹோம் மினிஸ்டர் உட்பட்ட அனைவர்களும் மிகவும் சிறப்பாக செய்து இருந்தார்கள்.

ஆனால் கூட்டம் முடிந்து திரும்பும் போது நிறைந்து இருந்த மனதில் ஒரு சிறு கவலை குடி இருக்கத்தான் செய்தது, காரணம் அருமை மெஹர் அலி காக்கா (கண்ணப்பா) அவர்கள் ஊருக்கு செல்வதை நினைத்து.

மெஹர் அலி காக்காவை பற்றி என்னையும் கொஞ்சம் பேச சொல்வார்கள் என்று நினைத்தேன், ஆனால் சான்ஸ் கிடைக்க வில்லை. ஒருவேலை எனக்கு வலை தளத்தில் கமெண்ட்ஸ் பகுதியில் சான்ஸ் கிடைக்கும் என்று விட்டு விட்டார்களோ ..!!

எனக்கு மெஹர் அலி காக்காவை பிடிக்கவே பிடிக்காது..எல்லோரின் மீதும் சண்டை போடுவார்கள், சப்தம் அதிகமாக இருக்கும், பழகுவதற்கு தன்மையான ஆள் கிடையாது, சுடு தண்ணீர் பார்ட்டி என்று.

இது எல்லாம் அவர்களை தூரத்தில் இருந்து நான் பார்த்ததும், மற்றவர்கள் சொல்லியும், நான் என் மனதில் பதிவு செய்தது.

சில வருடங்களாக அவர்களிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பின்பு தான் அவர்களின் உண்மையான மனது புரிந்தது. மிகவும் மென்மையானவர்கள், என்ன கிண்டல் அடித்து கேலி செய்தாலும் அதற்கும் ஈடு கொடுத்து பதில் கிண்டல் வரும்.

யார் தவறு செய்தாலும் முழுப்பி,பாலிஷ் போடாமல், முகத்துக்கு நேராக, கடுமை மாறாமல் சுட்டிக்காட்டுவார்கள் (எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்).

மார்க்கத்திற்கு மாற்றமாக இருந்தால், உண்மையில் டென்ஷன் பார்ட்டியாக மாறி அதை திருத்துவார்கள்.

எந்த நல்ல காரியம், வசூல் என்றால் முதலில் நோட்டு போவது மெஹர் அலி காக்காவிடம் தான்.. (மாஷாஹ் அல்லாஹ்.. நல்ல பரக்கத்தாக எழுதுவார்கள்...)

நான் வலை தளத்தில் ஏதும் சர்ச்சையாக எழுதினால், உடனே அவர்களிடம் இருந்து ஒரு கொட்டு கண்டிப்பாக கிடைக்கும்.

ஆக மொத்தம், straight forward ஆனா ஆள் தான் இவர்கள்.

இப்படி அவர்களைப் பற்றிய நல்ல விஷயங்கள் என் மனக்கிடங்கில் நிறைந்துள்ளன..

இன்ஷாஹ் அல்லாஹ், அவர்களுடைய மீதம் உள்ள வாழ்வை வல்ல ரஹ்மான் அதிகரித்து, நோய்கள் இல்லாத, மன நிம்மதியான, மக்களுக்கு உதவக்கூடிய, மார்க்க நெறியுடன் வாழ வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்...

அன்பு துஆ உடன்,

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:தம்மாம் காயல் நற்பணி மன்ற...
posted by Abdul Cader S.H. (Jeddah) [01 January 2012]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15342

காயல் நற்பணி மன்றங்கள் ஆற்றிவரும் சேவைகள் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவை அதில் எவ்வித ஐயமும் இல்லை அல்ஹம்துலில்லாஹ்! ஆனால் 18 வருடங்கள் சேவை செய்த நல்லுள்ளம் கொண்ட நண்பரை நாம் வழியனுப்பும் பொது நம் கண்ணில் நீர் துளி கசிய மறுபதில்லை. என்ன செய்வது என்றாவது ஒரு நாள் நாம் நம் தாயகம் திரும்பிதானே ஆகவேண்டும். இருப்பினும் காயலிலும் அவர் பணி தொடரும் என்ற வார்த்தை மனதிற்கு சற்று இதம் தருகிறது. அதற்கு நானும் முன்னாள் மன்றத்தின் உறுப்பினர் என்ற முறையில் அவர்களை வாழ்த்தி துஆ செய்து அனுப்புகின்றேன். தோய்வின்றி தொடரட்டும் தம்மாம் நற்பணி மன்றத்தின் சேவைகள்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:தம்மாம் காயல் நற்பணி மன்ற...
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [01 January 2012]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15350

மாஷா அல்லாஹ்....!!!

பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதை பார்க்கும் பொழுது மிகவும் சந்தோசமாக இருந்தது . ஆனால் மெஹர் அலி காக்கா அவர்களின் ஓய்வு செய்தி அனைவரின் மனதையும் கவலையில் ஆழ்த்தியது.

நான் இதுவரை மெஹர் அலி காக்காவையும் ,சதக்கத்துல்லாஹ் காக்காவையும் டோம் அண்ட் ஜெர்ரியாக தான் கண்டுள்ளேன். ஆனால் மெஹர் அலி காக்காவை பற்றி சதகத்துல்லாஹ் காக்கா அவர்கள் பேசும் பொழுது உணர்ச்சி வசப்பட்டு அழுதே விட்டார்கள் இதை கண்டு என் கண்களிலும் நீர் கசிந்தது நல்ல வேலை கேமரா கையில் இருந்ததால் அதை கொண்டு மறைத்து விட்டேன்.

நமக்கே இவ்வளவு கவலை என்றால் மெஹர் அலி காக்கவிற்கு எப்படி இருக்கும் ஆனால் அவர்கள் கவலையை எல்லாம் உள்ளே மறைத்து வைத்துவிட்டு புது மாப்பிள்ளை மாதிரி கோர்ட் சூட்டுடன் ஜம்முன்னு இருந்தார்கள் .

மெஹர் அலி காக்கா அவர்களே ...!!

இனி தான் உங்கள் வாழ்வின் தொடக்க நாள்
இனி அலார ஒலி கேட்டு அலறி விளிக்காமல்
மஞ்சள் வாடவின் மணம் நுகர்ந்து
மகிழ்ச்சியாய் எழலாம்....

பேரன் ,பேத்திகளின் மழலை
ஜமாத்தினருடன் தொழுகை
கல்யாண களரி சாப்பாடு
கடற்கரை காற்று - ஆகியவற்றை
கம்மாவுடன் பொறுமையாக ரசிக்கலாம்.

இன்று போல் என்றென்றும் நிம்மதியான,
நோய் நொடி இல்லாத வாழ்வை எல்லாம் வல்ல
அல்லாஹ் உங்களுக்கு தந்தருள்வானாக -- ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:தம்மாம் காயல் நற்பணி மன்ற...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [01 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15353

தம்மாம் காயல் நற்பணிமன்றம் குறித்த செய்தி படித்தேன். இன்றைக்கு நமதூர்வாசிகள் புவிக்கோளம் எங்கும் பறந்து விரிந்துள்ளார்கள். அவர்கள் இருக்கும் இடங்களில் ஒரு சமூக சேவை மன்றத்தையும் ஸ்தாபித்து கொண்டுள்ளார்கள்.

காயல்ர்கள் இல்லாத ஒரு இடம் உண்டா.. என்றுதான் கேட்கத்தோன்றுகிறது.

அனால் தம்மாமில்தான் ஒரு காலத்தில் நமதூர்வாசிகள் நிறைய பேர் இருந்தார்கள் எனபது இன்று மறந்து போன ஒரு உண்மை, இன்றும் கூட நிறைய பேர் இருப்பது போல்தான் புகைப்படம் பார்க்கும் போது தோன்றுகிறது.

நான் தம்மாமில் இருந்த (1985-87) அந்த காலகட்டத்தில் உள்ளவர்களும் இந்த படத்தில் பலர் இருக்கிறார்கள். அப்போதெல்லாம் சின்ன எஸ்.கே இடத்தில்தான் (வாட்டர் டேன்க் சமீபம்) ஊர் கூட்டம் அதிகமும் நடக்கும் அதன் கீழே ஒரு தமிழ் நாட்டவர் நடத்திய ஹோட்டலும் உண்டு. அதன் பெயர் மறந்துவிட்டது.

சீக்கோ பிள்டின்க்தான் பிராதான சந்திப்பு ஸ்தலம். (இப்போது அது இருக்கிறதா...?)சிஹாத் அனேக் ரஹீமா போன்ற இடங்களிலும் அநேகர் பணிபுரிந்தார்கள். அப்போது தம்மாம் ஒரு சின்ன ஊர்தான். கால சுழற்சியில் இப்போது அது பெரிய நகராக வளர்ந்திருக்கலாம்.

அனால் மிக நல்ல ஊர். நீண்ட காலம் சவூதியில் பணிபுரிந்த எவரும் ஒரோ ஆறு மாதம் அல்லது ஒருவருடமேனும் தம்மாமில் பணிபுரிந்தவர்களாக இருப்பார்கள். சவூதி அரேபிய கலாச்சாரத்தின் மையம் தம்மாம் என்றால் அது மிகையாகாது.

பழைய நினைவுகளை மீட்டெடுப்பதற்கு ஒரு வாய்ப்பு தந்த தம்மாம் காயல் நற்பணி மன்றத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்....!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Welcome to Kayalpatnam!
posted by S.K.Salih (Kayalpatnam) [01 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15354

அன்பின் மெஹர் அலீ மாமாவுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்...

தம்மாம் காயலர்களிடமிருந்து தாங்கள் பிரியும் இந்த நேரத்தில் அவர்களுக்காக நாங்கள் வருந்தும் அதே நேரத்தில், காயல்பட்டினத்தில் நபெறும் நகர்நலப் பணிகளில், நல்லதொரு மாணிக்கம் தன்னையும் இணைத்துக்கொள்ள வந்துகொண்டிருக்கிறது என்பதை நினைக்கையில் என் போன்ற இளசுகளின் உள்ளமெல்லாம் பூரிக்கிறது...

பொதுநலன் என்று வரும்போது, கருத்து வேறுபாடுகள் அனைத்தையும் மறந்து இன்முகத்துடன் ஈடுபடும் உங்கள் ஈடிணையற்ற செய்கையை நேரில் கண்டு வியந்தவன் நான்!

உங்களுக்கு தம்மாமிலிருந்து பணி ஓய்வு தரப்பட்டுவிட்டது. ஆனால், எங்களைப் பொருத்த வரை இனிதான் உங்களுக்கு பணியே முறைப்படி துவங்குகிறது (நகரில்...).

தங்களது தம்மாம் அனுபவ காலம் என் வயதின் பாதி... (18 ஆண்டுகள்).

நம் நகரில்,
கடும் நோயகற்ற,
கல்லாமை பேயகற்ற,
இல்லாமை இருளகற்ற
இறையோன் துணையுடன்
எந்நாளும் இணைந்து செயல்படுவோம்...

வாருங்கள் வழிகாட்டுங்கள் என
வாஞ்சையுடன் வரவேற்கிறோம் விரிந்த கைகளோடு!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:தம்மாம் காயல் நற்பணி மன்ற...
posted by Javed Nazeem (Chennai) [01 January 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 15355

I think KSA's loss is our gain. With the amount of knowledge and experience grasped over years, he certainly has a lot to offer. I would be happy to see his second innings as a successful entrepreneur. When he visited us last time, I asked him to settle in Chennai. Chennai offers a much broader platform with respect to social and personal prospects and we need more such people here.

சென்னையில இருந்தா ஊருக்கு இன்னும் நல்லது செய்ய முடியும், அதனால ஊருல உக்கார வச்சிராதிங்கப்பா.

SaaLai Zia: One "Like" for your post :)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:தம்மாம் காயல் நற்பணி மன்ற...
posted by mackie noohuthambi (kayalpatnam) [02 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15363

சகோதரர் மெஹர் அலி அவர்கள் இந்தியாவின் தூதுவராக அமெரிக்கா.செல்வது போலவும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து அனுப்பும் மருத்துவர் போல இத்ரீஸ் டாக்டர் அவர்கள் பக்கத்தில் அமர்ந்திருப்பதும் ஒரு அற்புதமான கற்பனை.

துணைத்தலைவர் அவர்களே வாருங்கள். 18 ஆண்டு காலங்கள் தம்மாமில் துணைதலைவராக பணியாற்றுவது ஒரு பெரிய காரியமல்ல. ஏனெனில் அங்கு இருக்கும்போது நாம் எல்லோரும் காயல்பட்டினத்தில் பிறந்தவர்கள், அந்த ஊருக்காக அந்த மக்களுக்காக நம்மால் ஆன உதவிகளை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் மேலோங்கி நிற்கும்.

ஆனால் காயல்பட்டினம் மண்ணில் கால் வைத்தபிறகு அந்த எண்ணங்கள் நீங்கள் பயணித்த விமானத்தில் உங்கள் பொதிகளை மறந்து விட்டு வந்ததுபோல் ஆகிவிடும். இங்கே நீங்கள் உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும். தெரு, முஹல்லாஹ், கொள்கை, கட்சி, இப்படி பல விஷயங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி இருக்கும்.

நான் இதே தம்மாம் காயல்நல மன்றத்தின் செயலாளராக இருந்தேன், ரியாத் காயல் அலையன்ஸ் கமிட்டி துணைதலைவராக இருந்தேன். ஆனால் இங்கு வந்து ஒரு கமிட்டியிலும் உறுப்பினராக மனம் இடம் தரவில்லை. எதில் சேர்ந்தாலும் ஒரு முத்திரை குத்தி விடுவார்கள். நியாய அநியாயங்கள் பேச முடியாது, ஒருவகையான இறுக்கம் மனதில் சூழ்ந்து கொள்கிறது. வாருங்கள், இந்த அசாதாரண நிலையை மாற்ற முயற்சிப்போம். அதற்காக நீங்கள் புதிதாக ஒரு இயக்கத்தை ஆரம்பிக்க தேவை இல்லை. விட்டுக்கொடுத்தல், மன்னித்தல், மறந்து விடுதல், பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுதல், நான் தான் எல்லாம் என்ற ஈகோவை புறந்தள்ளுதல், கனிவாக பேசுதல், மற்றவர்களின் உள்ளங்களை உணர்வுகளை காயப்படுத்தாமல் காய்களை நகர்த்துதல் இதுபோன்ற எத்தனையோ நல்ல பண்புகள் இங்கு அரிதாக இருக்கிறது. உங்கள் 18 வருட அனுபவம் எங்களை எல்லாம் வழி நடத்தும் என்ற எதிர்பார்ப்புடன் உங்களை இருகரம் நீட்டி வரவேற்கிறேன்.உங்கள் நற்பணிகளை அல்லாஹ் கபூல் செய்வானாக. உங்கள் பயணங்கள் பாதுகாப்பானதாகவும் சுகமானதாகவும் அமைய அருள்புரிவானாக.

அமீன். உங்கள் இதயம் நிறைந்த மக்கி நூஹுதம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved