Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:13:52 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7470
#KOTW7470
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், நவம்பர் 1, 2011
நகர்மன்ற புதிய அங்கத்தினருக்கு மலபார் கா.ந.மன்ற பொதுக்குழு வாழ்த்து! புகையிலைப் பழக்கத்தைக் கைவிடப் போவதாக இரண்டு உறுப்பினர்கள் உறுதிமொழி!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4554 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு புதிததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர், உறுப்பினர்களுக்கு மலபார் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்பழக்கத்தைக் கைவிடப் போவதாக அம்மன்றத்தின் இரண்டு உறுப்பினர்கள் கூட்டத்தில் உறுதிமொழி எடுத்துள்ளனர்.

கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால் எமது மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) 6ஆவது பொதுக்குழுக் கூட்டம்,30.10.2011 அன்று மாலை 05.30 மணிக்கு, சகோதரர் நெய்னா அவர்களின் வீட்டு மொட்டை மாடியில் வைத்து நடைபெற்றது..



மழை காரணமாக உறுப்பினர்கள் குறைவாகவே கூட்டத்தில் கலந்துகொண்டனர். மன்ற தலைவர் சகோதரர் மஸ்வூத் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். MKWAவின் கவுரவ ஆலோசகர்களான ஜனாப் ஷாகுல் ஹமீது (Ameen Tools) இக்கூட்டத்தில் முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் சகோதர்ர் சேட் மஹ்மூத் அவர்களின் அருமை மகன் முஹம்மது இப்ராஹிம் இறைமறை வசனங்களுடன் கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.

மன்ற செயலாளரின் வரவேற்புரை:
செயலாளர் ஹைதுரூஸ் ஆதில் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.



அழைப்பையேற்று பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும் தனது வரவேற்புரையில் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

மேலும் மன்றத்தின் நிகழ்வுகள் பற்றி விளக்கமாக உரையாற்றினார். அவரது உரையில் நம் மன்றம் மலபார் வாழ் காயலர்கள் அனைவர்களையும் ஒருகிணைத்து ஒற்றுமையுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் ஒரு சிறப்பான அமைப்பாக இருப்பதாகவும் கூறினார். இது போன்ற ஒற்றுமை நம்மிடம் காண்பது மிகவும் அறிது! மேலும் இதுபோன்ற மன்றங்கள் மூலமாகத்தான் அது சாத்தியமாகின்றது. எனவே இதை உறுப்பினகள் அனைவரும் கருத்தில் கொண்டு செயல்பட வேன்டும்.

மேலும் நம் MKWAவின் அனைத்து நிகழ்சிகளிலும் கோழிக்கோட்டில் இருக்கும் நம் மன்றத்தை சார்ந்த காயளர்கள் மட்டுமல்லாமல் மலபாரில் வாழும் மன்றத்தின் உறுப்பினர்களாக இருக்கும் அனைத்து காயலர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கூட்டத்தை கேட்டுகொண்டார்.

மேலும் ஊரில் இருந்து பல்வேறு உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்ட மனுக்கள் செயற்குழு உறுப்பினர்கள் முன் பரிசீலிக்கப்பட்டதையும், விசாரணைக்கு பின் ஏற்கப்பட்ட மனுக்களுக்கான கோரிக்கைகளுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டதையும் கூட்டத்திற்கு தெரிவித்தார். மேலும் மன்றத்தின் கடந்த 5வது பொதுக்குழுவுக்குப் பின்பு நடைபெற்ற செயற்குழு கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பட்டியலிட்டு விவரித்தார்.

மன்றத் தலைவர் மஸ்வூத் அவர்களின் சிறப்புரை:
பின்னர், மன்றத் தலைவர் மஸ்வூத் உரையாற்றினார்.



நடந்து முடிந்த நம் நகராட்சி தேர்தலில் அனைத்து பகுதி மக்களின் அமோக ஆதரவைப் பெற்று நகர்மன்ற தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரி ஆபிதா சேக் அவர்களுக்கும், நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் நம் மன்றம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக கூறினார்.

மேலும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் அரவணைத்து, கொள்கை, சமயம், அரசியல் என்ற எல்லா விருப்பு வெறுப்புக்கும் அப்பாற்பட்டு பணியாற்றவும், பசுமையான, வளமான, சுகாதரமான நகரை உருவாக்கிடவும், ஊழலற்ற ஒரு உன்னதமான முன்மாதிரி நகராட்சியை அமைத்திடவும் எம் மன்றம் தாங்களை அன்போடு வேண்டுகிறது.

மேலும் தாங்கள் நமதூர் முன்னேற்றத்திற்காக எடுக்கும் எல்லா நல்ல முயற்சிக்கும் திட்டங்களுக்கும் எம் மன்றத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் என்றும் இருக்கும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டு சொன்னார்.

மேலும் நம் சகோதரர்களில் புகை மற்றும் பொடி போன்ற பழக்கத்திற்கு அடிமையானவர்களை அதில் இருந்து முழுமையாக அவர்களை மீட்பது போன்ற காரியங்களைக்கு MKWA செயல்திட்டம் வகுத்துள்ளதாகவும் கூறினார். எனவே நம் உறுப்பினர்கள் யாராவது இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்களாக இருப்பின் தயவுசெய்து நான் அதில் இருந்து மீள்கிறேன் என இங்கு உறுதிமொழி எடுக்க முன்வருமாறு கூட்டத்திற்கு உருக்கமாகக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஜனாப் சாமு ஷிஹாபுத்தீன் அவர்கள் எழுந்து நின்று, சிறு வயதிலிருந்து துவங்கி, 50 ஆண்டு காலமாக என்னிடம் இருக்கும் புகை பழக்கத்தை முழுமையாக விட்டுவிடுவதாக இறைவன் மீது ஆணை இட்டு கூட்டத்தில் உறுதிமொழி கூறுகிறேன் என்று உறுதிமொழி எடுத்துகொண்டார்.

பின்னர் அவர் கருத்து தெரிவிக்கையில், “யார் யார் எல்லாமோ சொல்லியும் இப்பழக்கத்தைக் கைவிடாத நான் MKWA வின் இந்த முயற்சிக்கு நாம் முதலில் அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை இறைவன் எனக்கு தந்து உதவி புரிந்திருக்கின்றான் அல்ஹம்துலில்லாஹ். (கூட்டத்தினரைப் பார்த்து,) உங்களில் யாராவது இது போன்ற பழக்கத்திற்கு உட்பட்டவராக இருப்பின் படிப்படியாக நிறுத்திவிடுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்...” என்று தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து மன்றத்தின் மற்றொரு உர்ப்பினரான ஜனாப் UL செய்து அஹமது அவர்கள் எழுந்து நின்று, “என்னிடம் இருக்கும் தூள் போடும் பழக்கத்தை நானும் விடப்போகிறேன் என்று இறைவன் மீது ஆணை இட்டு இக்கூட்டத்தில் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன்” என்றார்.

உறுப்பினர்களின் உறுதிமொழிக்கு பின் தலைவர் அவரது உரையை தொடர்ந்தார் இந்த இரு உறுப்பினர்களுக்கும் இறைவன் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கவேன்டும் என அனைவரும் துஆ செய்யும்படி கேட்டுகொண்டார்.

மேலும் இது போன்ற பழக்கத்திற்கு அடிமையான அனைத்து காயலர்களும் அந்த பழக்கத்தை நிறுத்துவதற்கும் நம் உறுப்பினர்கள் போல் அனைத்து மக்களுக்கும் நம் சகோதரர்கள் முன்மாதிரியாக இருப்பதற்கு இறைவனிடம் துஆ செய்யுமாறு கூட்டத்தை கேட்டுகொண்டு தனதுரையை நிறைவுசெய்தார்.

நிதிநிலை அறிக்கை:
மன்றத் தலைவரின் உரையைத் தொடர்ந்து, மன்றப் பொருளாளர் ஜனாப் உதுமான் அப்துர் ராஜிக் 30.10.2011 தேதி வரையிலான மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை அவர் அவருக்கே உண்டான நகைச்சுவை கலந்த பாணியில் சமர்ப்பித்தார்.



பொருளாளர் அறிவித்த அக்கணக்கறிக்கையை ஒருமனதாக பொதுக்குழு அப்படியே அங்கீகரித்தது.

பின்னர் மக்ரிப் ஜமாஅத்திற்காக கூட்டம் இடைநிறுத்தம் செய்யபட்டது.



தேனீர் விருந்து:
மக்ரிப் தொழுகைக்கு பின் அனைவருக்கும் தேநீருடன் ருசியான காயல் மிட்ச்சரும் தம்மடையும் விநியோகிக்கப்பட்டது. அதை கூட்டாக அமர்ந்து ஒருவருக்கொருவர் உடல் ஆரோக்கியத்தையும் வியாபார நடப்புகளையும் விசாரித்தவண்ணம் தேனீர் அருந்தினர்.



கேள்வி நேரம்:
பின்னர், இரண்டாம் அமர்வு துவங்கியது. இவ்வமர்வில், மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி கேட்பதற்கென 30 நிமிடங்கள் கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டது. அந்நேரத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு மன்றத் தலைவரும், அவரைத் தொடர்ந்து செயலாளரும் நிதானமாக பதில் அளித்தனர்.



வாழ்த்துரை:
பின்னர், பொதுக்குழு உறுப்பினர் ஜனாப் சிராஜுதீன் அவர்கள் உரையாற்றினார்.



அவர் தனதுரையில் நம் அமைப்பின் செயல்பாடுகள் அனைவரையும் வியக்க வைதுள்ளதாக கூறினார். மேலும் நம் நகரை பசுமை வாய்ந்த நகராக மாற்ற நாம் அனைவரும் ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிபிடித்து பாடுபட வேண்டும். அதற்கு நம் யாவருக்கும் அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன் என்று கூறி நிறைவு செய்தார். அவரைத் தொடர்ந்து ஜனாப் சேட் மஹ்மூத் அவர்கள் தனதுரையில் பொருளாதாரம் நம் அமைப்புக்கு மிக முக்கியம் என கூறினார். எனவே அதை உணர்ந்து உறுப்பினர்கள் செயல்படவேண்டும் என சொன்னார். மேலும் அவர் தனதுரையில் நம் பொருளாளர் மிக சிரமப்பட்டு நம்மிடம் வசூலிக்க வரும்போது அவருக்கு எந்த வகையிலும் சிரமம் இல்லாமல் பார்துகொல்லுமாறு கூட்டத்தை கேட்டுகொண்டார்.

பின்னர், கீழ்க்காணும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-

தீர்மானம்:
அண்மையில் நடைபெற்று முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரி ஆபிதா ஷேக் அவர்களுக்கும், 18 வார்டுகளின் நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் எம் மன்றம் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

இவர்களின் ஐந்தாண்டு பதவிக்காலத்தில், நம் நகர்மன்றம் ஊழலற்ற, வெளிப்படையான, நேர்மையான, அனைவருக்கும் பாரபட்சமின்றி பயன்தரத்தக்க நிர்வாகமாக அமைந்திட இக்கூட்டம் வாழ்த்துவதோடு, புதிய நகர்மன்ற அங்கத்திருக்கு இதனை ஓர் அறிவுரையாகவும் முன்வைக்கிறது.


இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நன்றியுரை:
நிறைவாக, மன்றத்தின் துணைச் தலைவர் முஹம்மத் ரஃபீக் KRS நன்றி கூற, அனைவரின் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. மழை நேரமாக இருந்தபோதிலும், இக்கூட்டத்தில் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.








இவ்வாறு மலபார் காயல் நல மன்றத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தகவல்:
S.E.செய்யித் ஐதுரூஸ் (SEENA),
செய்தித் தொடர்பாளர்,
மலபார் காயல் நல மன்றம் (MKWA),
கோழிக்கோடு, கேரள மாநிலம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நகர்மன்ற புதிய அங்கத்தினர...
posted by Refai (Dar Es Salaam) [01 November 2011]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 12711

அஸ்ஸலாமு அழைக்கும்

அல்ஹம்துலில்லாஹ்...

இரண்டு பேருக்கும் நல் வாழ்துக்கள் அதற்கு உறுதுணை புரிந்த மலபார் க.நல மன்றம் பாராட்ட தக்கது.

இது போலே எல்லா காயல் நல மன்றமும் செயல்பட்டால் நன்றாக இருக்கும்.

உங்கள் சேவை தொடர வாழ்துக்கள். கருணையான அல்லாஹ் அதற்கு துணை இருப்பானாக ஆமீன் ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நகர்மன்ற புதிய அங்கத்தினர...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [01 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12713

மலபார் கா.ந.மன்ற பொதுக்குழு சிறப்பாக நடந்து முடிந்ததற்கு வாழ்த்துக்கள்.

புகையிலைப் பழக்கத்தைக் கைவிடப் போவதாக அறிவித்த சகோதரர்களுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

அப்பாடா.. இந்த கூட்டத்தில் தான் டீ, மிச்சர், தம்மடையுடன் நிறுத்தி இருக்கின்றீர்கள். இல்லை என்றால் கறி சட்டிக்குள் காமெராவை விட்டு படம் எடுத்து, எங்களை உசுப்பு ஏத்திருப்பீர்கள்.

குட்டீஸ்களின் போட்டோக்கள் கண்களுக்கு குளிர்ச்சி, சொந்தங்களின் போட்டோக்கள் மனதிற்கு மகிழ்ச்சி.

நன்கு தொடரட்டும் உங்களின் சேவைகள், இதே ஒற்றுமையுடன்.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நகர்மன்ற புதிய அங்கத்தினர...
posted by Mohamed Noohu (Chennai) [01 November 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 12714

புகைஇலை பழக்கத்தை நமது ஊரில் இருந்து முற்றிலும் ஒழிக்க முதலில் அனைத்து காயல் நல மன்றங்களும் நமதூரில் உள்ள கடைகளில் புகைலை சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்துவதற்கு முயற்சி எடுக்க வேண்டும். மேலும் இது விசயத்தில் ஒத்துழைக்காத வியாபார நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும். இதனை ஊரில் உள்ள ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து காயல் நல மன்றங்களும் முயலவேண்டும்.

எனக்கு தெரிந்து நைனா தெருவில் உள்ள ஒரு (அப்பா) கடையில் புகைலை சார்ந்த பொருட்களை விற்பனை செய்வது கிடையாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நானும் இந்த தீய புகை பழக்கத்திற்கு அடிமை பட்டு கிடக்கிறேன்...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [01 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12716

அஸ்ஸலாமு அழைக்கும்...

கூட்டத்தில் இரு சகோதரர்களில் ஒருவர் புகை பழக்கத்தையும் மற்றொருவர் பொடி போடும் பழக்கத்தையும் விட போவதாக சபதம் எடுத்துள்ளார்கள்..! அவர்களின் சபதம் நிறைவேற நாம் அனைவர்களும் துவா செய்வோமாக..

(அவர்களின் சபதம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்)

சிறிய வயதில் சும்மா விளையாட்டாக ஆரம்பிக்கும் இந்த புகை பழக்கம் நாளடைவில் அந்த தீய பழக்கம் நம்மோடு நிரந்தரமாக நம்மை அடிமை படுத்தி விடுகிறது இதை விடுவது என்பது ரெம்ப கடினம் தான்..! நானும் இந்த தீய புகை பழக்கத்திற்கு அடிமை பட்டு கிடக்கிறேன்...!

நானும் இந்த இரு சகோதரரை போல் கூடிய விரைவில் படி படியாக புகை பழக்கத்தில் இருந்து மீள முயற்சி செய்கிறேன்..! இன்ஷா அல்லாஹ்...

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நகர்மன்ற புதிய அங்கத்தினர...
posted by OMER K.M.S. (BANGALORE / KAYALPATNAM) [01 November 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 12724

இரு சகோதரர்களுக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன், நான் ஒரு வார இதழில் படித்த செய்தி, "சிகரட் பழக்கத்தை விட நினைப்பவர்கள் ஒரே நாளில் விடுவது அவர்களின் உடம்புக்கும், ஆரோக்கியத்துக்கும் நல்லதல்ல அதை சிறிது சிறிதாக விட வேண்டும், ஒரு நபர் ஒரு நாளைக்கு ஐந்து சிகரட் பிடிக்கறார் என்றால் ஒரு நாளைக்கு அந்த ஐந்து நான்காகவும், மூன்றாகவும் படி படியாக குறைத்து தான் விட வேண்டும்,

நமது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சஹாபாக்களை எப்படி மது பழக்கத்தில் இருந்து மீட்டார்கள் இரவு நேரங்களில் மது அருந்தாதீர்கள் அது சுபுஹு தொழுகையை பாதிக்கும் என்றார்கள் அடுத்து அதை முழுவதுமாக ஹராமாக ஆக்கினார்கள்.

நமது மலபார் காயல் மன்றம் டாக்டரை அணுகி கேட்டு அதன்படி நமது காயல் நகரை புகையிலை என்கின்ற கொடிய விஷத்தில் இருந்து மீட்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். உங்களது இந்த நல்ல முயற்சி கண்டிப்பாக நல்ல பலனை கொடுக்கும். அல்லாஹ் நீண்ட ஆயுளை அந்த இரு சகோதரர்களுக்கும் வழங்குவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நகர்மன்ற புதிய அங்கத்தினர...
posted by arabi abdulsakkur (trichy) [01 November 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 12725

நிதிநிலை அறிக்கை:
மன்றத் தலைவரின் உரையைத் தொடர்ந்து, மன்றப் பொருளாளர் ஜனாப் உதுமான் அப்துர் ராஜிக் 30.10.2011 தேதி வரையிலான மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை அவர் அவருக்கே உண்டான நகைச்சுவை கலந்த பாணியில் சமர்ப்பித்தார்.

அந்த நகைச்சுவை கலந்த பாணியை நீங்க பிரசுரித்தால் நாங்களும் ரசிக்கிறோமே! ப்ளீஸ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நகர்மன்ற புதிய அங்கத்தினர...
posted by Habeeb Rahman (DUBAI) [01 November 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12730

உங்கள் அனைவரையும் , இந்த நிகழ்ச்சியையும் பார்த்தவுடன், கிட்ட தட்ட 14 வருடங்களுக்கு முன்னர் எனது கல்லூரி படிப்பை முடித்த கையுடன் நான் அங்கு வாழ்ந்த ஞாபகங்கள் என் முன்னே தோன்றுகின்றது.

உங்கள் அனைவரையும் நான் அதிகமாக நினைகின்றேன். உங்களது பணிகள் தொடரட்டும்.

செய்தஹம்மத் காக்கா பொடி விட்டதில் அதிக சந்தோசம். எனது வாப்பவையும் கவனித்து கொள்ளுங்கள்.

என்ன செய்ய! நான் இந்த பாலைவனத்தில் காய வேண்டி இருக்கின்றது. நம் ஊரில் தேங்காய் என்னை கிடைப்பதற்கு பதில் டீசல் என்னை கிடைத்திருக்குமானால், நானும இதுவரை உங்களோடு இருப்பேன். இன்ஷா அல்லாஹ், விரைவில் காணலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:நகர்மன்ற புதிய அங்கத்தினர...
posted by Sulthan Yanbu (KSA) [01 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12735

மலபார் காயல் நற்பனி மன்ற்றதிற்கு வாழ்த்துக்கள்

சாமு மச்சான் தம்மை உட்டதில் சந்தோசம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:நகர்மன்ற புதிய அங்கத்தினர...
posted by Ibrahim Ibn Nowshda (Chennai) [02 November 2011]
IP: 58.*.*.* India | Comment Reference Number: 12750

May Allah grant success to those two who ready to quit Smoking and blah blah.

I read in an article about Mubarak Obama that White House is Non Smoking Zone. Hence, He is using Nicotin ChewingGum.

-----------------------------------------------------
To Smokers: Why don't you try my dear bro those who want to quit smoking?

Dr. Kizhar, Dr. Idrees and Dr. Noordeen 's comment highly appreciated if I could find it here.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:நகர்மன்ற புதிய அங்கத்தினர...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [02 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12778

வாழ்த்துக்கள்.

மலபார் காயல் நல மன்றம் இன்னும் பல முன்மாதிரி திட்டங்களை செயல் படுத்த வல்ல நாயன் அருள் புரிவானாக- ஆமீன்.

இந்த கூட்டத்தில் வாக்குறுதி எடுத்துக்கொண்ட இரு சகோதரர் களையும் மற்றவர்கள் முன்னுதாரணமாக கொள்வார்கள் என்ற நம்பிக்கை நம்மவர்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

யார் சொல்லியும் இரயில் விடுவதை விடாத சாமு காக்கா விற்கு இனி மாத பட்ஜெட்டில் 10% மிச்சம்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:நகர்மன்ற புதிய அங்கத்தினர...
posted by K S M UHAMED SHUAIB (KAYALPATINAM) [02 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12798

காயல் மலபார் நலமன்றத்திற்கு நல்வாழ்த்துக்கள். புகை பிடிக்கும வழக்கத்தை விட்டொழிப்பதாக சபதமேற்றிக்கும் அந்த இரண்டு சகோதரர்களுக்கும் நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
மீண்டும் ‘செங்கடல்‘ !  (1/11/2011) [Views - 5063; Comments - 14]
மும்தாஜ்தான் மிஸ்ஸிங்! (?!)  (30/10/2011) [Views - 5194; Comments - 16]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved