Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:13:52 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6746
#KOTW6746
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுலை 18, 2011
ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘சேவைச் செம்மல்‘ விருது வழங்கியமைக்காக மாநாட்டுக் குழுவினருக்கு மத்ரஸா நிர்வாகம் நன்றி தெரிவிப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5408 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (44) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் சார்பில் இம்மாதம் 08, 09, 10 தேதிகளில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாடு காயல்பட்டினத்தில் நடத்தப்பட்டது.

10.07.2011 அன்று நடைபெற்ற இம்மாநாட்டின் நிறைவுவிழாவின்போது, காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ அவர்களுக்கும், இன்னும் பலருக்கும் அவர்களின் சமுதயாச் சேவையைப் பாராட்டி ‘சேவைச் செம்மல்‘ விருது வழங்கப்பட்டது.



தங்கள் மத்ரஸா முதல்வருக்கு இந்த விருதை வழங்கியமைக்காக, மத்ரஸா நிர்வாகம் சார்பில் மாநாட்டுக் குழுவினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த ஜும்ஆவின்போது பொதுமக்கள் பார்வைக்காக பிரசுரமும் பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது:-



இந்நகரில் சன்மார்க்கப் புரட்சிக்கு வித்திட்டவர்களுள் ஒருவரும், எமது மதிப்பிற்குரிய வழிகாட்டியுமான காயல்பட்டினம் அல்மத்ரஸதுல் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் அல்ஹாஜ் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ அவர்களுக்கு, சரித்திரப் புகழ்மிக்க இக்காயல்பதியில் 10.07.2011 அன்று நடத்தப்பட்ட இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாட்டில், சேவைச் செம்மல் விருது வழங்கி கவுரவித்த மாநாட்டுக் குழுவினர் அனைவருக்கும் எமது அகங்கனிந்த நன்றிகள உளப்பூர்வமாக தெரிவித்து மகிழ்கிறோம். இம்மாநாட்டின் விளவாக, இஸ்லாமிய தமிழ் இலக்கியம் மேலும் தழைத்தோங்கவும், அதன்மூலம் இஸ்லாம் உலகத் தமிழ் சமுதாயத்திற்கு முழுமையாகச் சென்று சேரவும் எல்லாம்வல்ல அல்லாஹ்வை இருகரமேந்திப் பிரார்த்திக்கிறோம். மாநாட்டில் வழங்கப்பட்ட பாராட்டுக் குறிப்புரை வருமாறு:-

இந்நகரின் தலைசிறந்த மார்க்க மாமேதையாய்த் திகழ்ந்த மர்ஹூம் அல்லாமா நஹ்வீ முஹம்மது இஸ்மாயீல் ஆலிம் முஃப்தீ அவர்களின் சகோதரர், காயல்பட்டினம் தீவுத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் நஹ்வீ இஸ்ஹாக் லெப்பை ஆலிம் – அல்ஹாஜ்ஜா ஃபாத்திமா பீவி தம்பதியின் இரண்டாவது மகனாக 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 06ஆம் தேதி பிறந்தவர் அல்ஹாஜ் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ அவர்கள்.

இவர், மார்க்க அறிஞர் மவ்லவீ அல்ஹாஜ் நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஆலிம் ஃபாஸீ அவர்களின் இளைய சகோதரர்.

பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கு அவர்களின் பள்ளி விடுமுறை காலங்களில் மார்க்க அடிப்படைக் கல்வியைப் புகட்டும் நோக்குடன் 1971ஆம் ஆண்டு, காயல்பட்டினத்தில் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் துவக்கப்படவும், அதன்மூலம் இந்நகரின் அனைத்துப் பகுதிகளையும் சார்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மார்க்கப் பற்றுடன் திகழவும் துவக்கக் காரணியாகத் திகழ்பவர்...

அதே மத்ரஸாவின் ஒரு பிரிவாக 1985ஆம் ஆண்டு திருக்குர்ஆன் மனனப் பிரிவு – ஹிஃப்ழு மத்ரஸா துவக்கப்படவும், அதன்மூலம் இன்றளவும் 211 மாணவர்கள் ஹாஃபிழ்களாக உருவாகவும் காரணமானவர்...

மருத்துவர், பொறியாளர், இன்னபிற பட்டப்படிப்புகளைக் கற்றவர்களாக ஹாஃபிழ் மாணவர்களை மத்ரஸா துவக்கம் தொட்டு இன்றளவும் திகழச் செய்து வருபவர்... இனியும் செய்யவிருப்பவர்...

பொருளீட்ட வெளிநாடுகளிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் வளமான வாய்ப்புகள் பல வந்தபோதிலும், தன்னலம் மறந்து பொதுநலம் ஒன்றையே குறிக்கோளாய்க் கொண்டு, அல்லாஹ்வின் – அவனது திருத்தூதரின் திருப்பொருத்தத்தை மட்டுமே எதிர்பார்த்தவராய், தனது 20ஆம் வயது முதல் தியாகம் செய்து வருபவர்...

40 ஆண்டுகால இவரது மார்க்கச் சேவைக்கு ஊதியமாக சிறு தொகையைக் கூட இன்றளவும் தனக்குக் கொள்ளாதவர்...

இஸ்லாமிய மார்க்கக் கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டு மேளதாளங்களுடன் திருமணம் உள்ளிட்ட விசேஷச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட அக்கால நடைமுறையை மாற்றி, ஆர்வமூட்டும் அரபி பைத்துகள் முழங்க அந்நிகழ்ச்சிகள் இன்றளவும் நடத்தப்படவும், இந்நடைமுறை இன்று தமிழகமெங்கும் பரவிடவும் முதல் காரணி இவர்...

1989ஆம் ஆண்டு புனித மக்காவில் சஊதி அரசாங்கம் நடத்திய சர்வதேச திருக்குர்ஆன் ஹிஃப்ழு (மனனப்) போட்டிக்கு, ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவின் இரு மாணவர்களுடன் இந்திய பிரதிநிதியாகச் சென்று, புனித கஃபாவின் உட்பகுதியை தரிசிக்கும் அரிய வாய்ப்பையும் பெற்றவர் இவர்...

உலகின் பல நாடுகளிலுள்ள தலைசிறந்த நிறுவனங்களில் உயர் பொறுப்புகளை அலங்கரிக்கும் எண்ணிலடங்கா ஹாஃபிழ் பட்டதாரிகளும், சிறந்த தமிழ் நடையில் உரைகளாற்றி தமிழ் முஸ்லிம்களிடையே நீங்கா இடம் பெற்ற மார்க்க அறிஞர்களும், இவரது மகத்தான மார்க்க சேவைக்கு நடமாடும் சாட்சிகள்!


இவ்வாறு அந்த பாராட்டுக் குறிப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சேவைச் செம்மல்‘ விருது பெற்ற ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வரைப் பாராட்டி, அந்த மத்ரஸாவின் முன்னாள் மாணவர்கள் சார்பில் விரைவில் பாராட்டு விழா நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக, ஹாமிதிய்யா பொறுப்பாளர் ஹாஜி எம்.ஐ.தமீமுல் அன்ஸாரீ மற்றும் பாராட்டு விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by Salai Sheikh Saleem (Dubai) [18 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6102

மாஷா அல்லாஹ் சேவை செம்மல் விருதிற்கு மிகவும் தகுதியானவர்கள்தான் ஜனாப் நூருல் ஹக் காக்கா அவர்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்கள் பணி மென் மேலும் சிறக்கவும் நம் மக்கள் அவர்கள் மூலம் பயன் பெறவும் நல்லருள் பாலிப்பானாகவும் ஆமீன். காக்கா உங்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by Eassa Zakkariya (Jeddah) [18 July 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6103

May Almighty Shower His Endless Bless & Grace Upon Our Mudalvar;Give Longlife with barakath - Ameen

May Almighty be With Us

Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சமூக (சேவை) சிந்தனை வாதி
posted by STAR TEXTILES - MAIN ROAD (KAYALPATNAM) [18 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6105

ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘சேவைச் செம்மல்‘ விருது வழங்கிய செய்தி ரெம்ப சந்தோசம் - ஹாமிதிய்யா மத்ரஸா வளர அரும் பாடுபடுபவர் தன் நலன் எதிர்பாராதவர் சமூக (சேவை) சிந்தனை வாதி ‘சேவைச் செம்மல்‘ விருதுக்கு பொருத்தமானவர் வல்ல அல்லாஹ் இவருக்கு இவுலக வாழ்விலும் மறு உலக வாழ்விலும் அனைத்தையும் வெற்றி ஆக்கி வைப்பானாக ஆமின்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. விருதுக்கே... கிடைத்த
posted by s.s.md meerasahib (riyadh) [18 July 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6107

அஸ்ஸலாமு அலைக்கும். ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வரும், எனது உஸ்தாதும், அன்பு மாமா... ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ அவர்களுக்கு ‘சேவைச் செம்மல்‘ விருது வழங்கியது அறிந்து மிக, மிக சந்தோசம்.

இவர்களை தேர்ந்து எடுத்ததில் உண்மையிலேயே.... மாநாட்டுக் குழுவினரை பாராட்டுகிறேன். ஏனெனில்.... நீங்கள் கொடுத்தது ஹாமிதிய்யா முதல்வருக்கு கொடுத்த விருது அல்ல..... அவர்கள் உருவாக்கிய எங்களுக்கும் கிடைத்தது போலேயே என்னுகிறோம். மேலும் ஒரு விருதுக்கே.... விருது கொடுத்து இருக்கிறீர்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by MOHAMED ABDUL KADER K.M. (DUBAI - UAE.) [18 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6108

Applause............ Applause............... Applause...............

It is really pleasant to see you getting this recognition (SEVAI SEMMAL VIRUDHU) from the society for your marvelous achievement. My heartfelt wishes and congratulation to you in receipt of this credit from the society.

May the future bring even more. In this happiest moment, I'm so proud to share the joy of your achievement. There is no periphery / boundary for talent but the sky. In fact you deserve it.

Profoundly wish you to attain more and more success and triumph in your future and do what you can with whatever aptitude you have.

MAY ALMIGHT ALLAH BESTOW YOU A HAPPY, PROSPEROUS AND LONG LIFE, WELL-HEART AND WELL-BEINGS. AAMEEN!

Best Wisher,
Mohamed Abdul Kader K.M.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by M.E.L.NUSKI (Riyadh -KSA) [18 July 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6109

பொருத்தமான விளம்பரம் இல்லா முதலவர் நஹ்வி நூருல் ஹக் அவர்களுக்கு சேவை செம்மல் விருது கிடைத்தமைக்கு மனபூர்வமான வாழ்த்துக்கள். எம் போன்றோர் நல்வழியில் நடக்க கண்டிப்புடன் பயிற்றுவித்த முதல்வர். ஒழுக்கநெறிக்கு முக்கியத்துவம் தந்து எங்களை ஆளாக்கிய முதல்வர்.

விளம்பரம் விரும்பா எங்கள் ஹாமிதிய்யவின் முதல்வருக்கு பொருத்தமான நேரத்தில் பொருத்தமான விருது வழங்கி சிறப்பித்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நிருவாகிகளுக்கு மனபூர்வமான நன்றி.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் வாழ்வை நீளமாக்கி, நோயற்ற வாழ்வை தந்து மென் மேலும் மாணவ சமுதயத்திற்கு சேவையற்றிட அருள் புரிவனாக. ஆமீன் .

அன்பு மாணவன்
MEL .நுஸ்கி
ரியாத், சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by Mannar Seyed Abdur Rahman (bangalore) [18 July 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 6111

இந்தே பாராட்டுக்கு முற்றிலும் பெருத்தமான நபர் நமது முதல்வர் அவர்கள். அல்லாஹ் அவர்களுக்கு நீண்டே ஆயுளையும் குறைவ்றே செல்வதேயும் கொடுதருல்வனாக. நமது மதரசா ஹமிதிய்யவை கியாமத் நாள் வரையிலும் நடக்கே அருள்புவனகே ஆமீன். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by sulaiman lebbai (RIYADH - S.ARABIA) [18 July 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6112

"சேவை செம்மல்" விருது பெற்ற மரியாதைக்குரிய நூருல் ஹக் மாமா விற்கு எனது வாழ்த்துக்கள். மேலும் அந்த விருதினை வழங்கிய மாநாடு குழுவினர்களுக்கும் எனது நன்றிகள். சிலர் விருது பெருவது மூலம் பெருமை அடைவார்கள். ஆனால் இவர் விருது பெற்றதால் அந்த விருதே பெருமை அடைகிறது . அல்ஹம்து லில்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. சிறார்களுக்கு சீரிய மார்க்க கல்வி புகட்டும் ஆசானே....
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [18 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6113

அஸ்ஸலாமு அழைக்கும்.

சிறார்களுக்கு சீரிய மார்க்க கல்வி புகட்டும் ஆசானே....
இந்த அரிய விருதிற்கு வித்திட்ட விளம்பரத்தை விரும்பாத வீரிய குரல் வளத்தை கொண்ட எனது ஆசானே..

உங்களின் போதனையில் நம் மதரசாவின் இலக்கிய சொர்பெயற்சி மன்றத்தின் பலனாக பள்ளியில், கல்லூரியில், கடல்தாண்டி துபாய் அய்மானின் மீலாது பேச்சு போட்டியில் பெற்ற பரிசுகளை நினைய்வூ கூர்ந்தவனாக தாங்கள் பெற்ற இந்த விருது தங்களுடன் முன்னால் மாணவர்களாகிய எங்களையும் நம் மதரசாவையும் கௌரவிக்கிறது என்றால் அது மிகை ஆகாது..

விருது கொடுத்த வள்ளல்களை பாராட்டுவதுடன் தங்களுடன் துணைநிற்கும் அணைத்து அன்பர்களுக்கும் இந்த அடியேனின் அன்பான வாழ்த்துக்கள். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [18 July 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6114

Immense pleasure to see this glad news through kayal web. They selected suitable person to provide this award. His politeness and way of teaching preaching is very nice.

Approximately last four decades he dedicated his life for religious purposes. I heartly greeted him. Allah will give more strength to him serve this field.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by jamal (colombo) [18 July 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 6116

சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் உறுதியான பிடிப்பும், சேவையில் தீராத உழைப்பும் உடைய இவருக்கு விருது கிடைத்தது விருக்கே பெருமை!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by SHAIK SALAHUDEEN. F (dubai) [18 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6117

அல்ஹம்து லில்லஃஹ்

யா அல்லாஹ எங்கள் முதல்வரின் ஹயாத்தை நீளமாக்கி வைத்து சீரும் சிறப்பாஹா வாழ்வதற்கு அருள் புரிவானாஹா.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. விருதுக்கே பெருமை!
posted by kavimagan (dubaikader) [18 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6118

எனது தந்தையின் நண்பர் அவர்களே!

பெற்ற விருதினால் பலருக்குப் பெருமை!

சிலநேரங்களில்.......
பெறும் கரங்களால் விருதுக்கே பெருமை!

உங்கள் கரங்களில் தவழும் பாக்கியம் பெற்ற சேவை செம்மல் விருதுக்கு வாழ்த்துக்கள்!

எம்.எஸ்.அப்துல் காதர்,
S / O மர்ஹூம் எஸ்.கே.சதக்கத்துல்லாஹ் ஆலிம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. அல்ஹம்துலில்லாஹ்
posted by ibnu nahvi (abudhabi) [18 July 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6120

யா அல்லாஹ் எங்களுக்கு நல் வழி காட்டியா எங்கள் ஆசிரிய தந்தை அவர்களுடைய ஹையாதை நீலமக்கு எங்களை அவர்களுக்கு நன்றி உள்ள மாணவர்களாக ஆக்குவயாஹ் ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. எங்களின் ஆணிவேருக்கு கிடைத்த ஊட்ட சத்து.....
posted by zubair (riyadh) [18 July 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6123

அஸ்ஸலாமு அலைக்கும். ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘சேவைச் செம்மல்‘ விருது வழங்கியமைக்காக மாநாட்டுக் குழுவினருக்கு எனது பாராட்டுக்கள்.

நல் குணம், நல் ஒழுக்கம், உயர்வு - தாழ்மை பாராமை, நேர்மை, நீதியில் சமநிலை, கொள்கை பிடிப்பு. இதற்க்கெல்லாம் சொந்தக்காரரான எங்களின் உஸ்தாது, ஹாமிதிய்யா மார்க்க கல்வி நிறுவனர் & முதல்வருக்கு ‘சேவைச் செம்மல்' விருது கிடைத்து இருப்பது ரெம்ப சந்தோசம் என்றாலும்...... கால தாமதமாக கொடுக்க பட்டுள்ளது என்பதே என் கருத்து எல்லாம்.... ஹைராக இருக்கும். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by Najeeb nana (Kayalpatnam) [18 July 2011]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 6131

வல்ல நாயண் தங்களுக்கு ஈருலகிலும் அவனுடைய்ய கிருபைகளை அளவிலா அருளிக்கொண்டே இருப்பானாக, அமீன்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by T.M.RAHMATHULLAH (72) (KAYALPATNAM 04639 280852) [18 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6134

அஸ்ஸலாமு.அலைக்கும்.

!நஹ்மதுஹு.வநு.ஸல்லிஅலா.. றஸூலிஹில்கறீம்.!

எப்போதே கொடுக்கவேண்டிய நம் சமுதாயம் இப்பவாவது நம் தபஈ நூருல் ஹக் அவர்களுக்கு இந்த சிறப்பைககொடுத்தமைக்கு அநேக நன்றியும் இருவருக்குமே அல்லாஹ் நற்கூலி கொடுப்பானாக.என துஆ செய்கிறோம் .இப்படி ஒரு நூருல் ஹக்கு அல்ல ஒவ்வொரு மகல்லாவிலும ஒவ்வொரு நூருல் ஹக்கு வரவேண்டும்,

யாஅல்லாஹ் இதற்கு தவ்பீக் செய்வாயாக். ஆமீன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by SUPER IBRAHIM S.H. (RIYADH - K.S.A.) [18 July 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6135

மாஷா அல்லாஹ் சேவை செம்மல் விருதிற்கு மிகவும் தகுதியானவர்கள்தான் ஜனாப் நூருல் ஹக் காக்கா அவர்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்கள் பணி மென் மேலும் சிறக்கவும் நம் மக்கள் அவர்கள் மூலம் பயன் பெறவும் நல்லருள் பாலிப்பானாகவும் ஆமீன். காக்கா உங்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

இதுபோல் நிறைய ஹாபில்ஹல் ஒருவாஹா எல்லோர்ஹளும் துஆ செய்யுங்கள்.

சந்தோசத்துடன் வாழ்த்தும் உள்ளங்கள்,

சூப்பர் இப்ராகிம் ச.ஹ. + மக்கள்
ச.ஹ. ஷேய்க் அப்துல் காதிர் (கவிஞர்)
நஹ்வி செய்து சடகதுல்லாஹ். (ஒலி அப்பா)
கே. இப்ராகிம் ஜமீல்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by Hameed (Dubai) [18 July 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6136

வாழ்நாள் சாதனையாளரை வளமார வாழ்த்துகிறேன்.இறைவா இவர்கள் வாழ்வில் எல்லா நலன்களையும் நிறைவாய் வழங்குவாயாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by Solukku Seyed Mohamed Sahib SMI (Jeddah.) [18 July 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6142

சிலருக்கு வாங்கும் விருதால் பெருமை வரும், சிலரால்தான் விருதுகளுக்கு பெருமை சேரும். அப்படி விருதுக்கு பெருமை சேர்க்க வேண்டிதான் இந்த விருது அல்ஹாஜ் நூருல் ஹக் நுஸ்கி அவர்களுக்கு வளங்கபட்டிருப்பதாக நான் கருதுகிறேன். இறைவன் அவர்களின் வாழ்நாளை நீட்டி கொடுத்து சமுதாயதிற்கு பயனுள்ள நல்ல பல சேவைகளை கொடுக்கும் நல்லுள்ளத்தை இறுதிவரை அல்லா கொடுத்தருள்வானாக ஆமீன்.

இப்படிக்கு
- நூர் முஹம்மது ஜகரிய்யா, மக்கா
- சொளுக்கு செய்யத் முஹம்மத் சாஹிப்- ஜெட்டாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. பேரியக்கம் ஹாமிதிய்யா
posted by K.A.FAIZAL (KAYAL) [19 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6157

அஸ்ஸலாமு அலைக்கும்.மறை ஒளி வீசும் மத்ரஸா ஹாமிதிய்யாவின் 'மாண்புயர் முதல்வர்'அவர்களுக்கு 'சேவை செம்மல்'விருது வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றிகள்.சுயநலமே தன் வாழ்வாக கருதும் இக்கால சூழலில் பொது நலத்திற்காகவே தன்னை அர்பணித்த மத்ரஸா ஹாமிதிய்யாவின் முதல்வர் அவர்களுக்கு ஒரு விருதல்ல!ஓராயிரம் விருதுகள் கொடுத்தாலும் மிகையாகாது.யாஅல்லாஹ்!எங்கள் முதல்வர் அவர்களின் வாழ்வை நீடித்து வைத்து இன்னும் பல ஆயிரம் 'ஹாபிழ்கள்'இம்மண்ணில் உருவாக நீ அருள்புரிவாயாக!எங்களை இவ்வுயர் நிலைக்கு உருவாக்கிய "மத்ரஸா ஹாமிதிய்யாவிற்கும்' அதன் முதல்வர் அவர்களுக்கும் எங்கள் உடலில் உயிர் உள்ளவரை 'நன்றியை கொண்டவர்களாக'ஆக்கிவைப்பாயாக!என இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன்!ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. அழகுக்கு அழகு சேர்த்தது
posted by Abuthahir mik (HOLY MAKKAH) [19 July 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6174

எனக்கு ரொம்போ மகிழ்ச்சி நான் ‘சேவைச் செம்மல்‘ விருதாக ஆகியதற்கு மட்டும் அல்ல. சேவைக்காகவே வாழ்ந்திட்ட அந்த மனிதரின் கரத்தில் தவழ்வதால்தான்.........

இப்படிக்கு,
விருது (முதல்வரின் கரத்தில் இருந்தவாறு)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. முதல்வரே நீங்கள் எல்லாத்திலேயும் முதல்வரே
posted by S.A.Muhammadh Ismail (Dubai) [19 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6175

"முதல்வரே, நீங்கள் எல்லாத்திலேயும் முதல்வரே"

மாஷாஅல்லாஹு, மாஷாஅல்லாஹ்,

எங்களின் உள்ளங்களில் தீன் மணம் கமழச செய்த எங்கள் உஸ்தாத் ஜனாப் நூருல் ஹக் நுஸ்கி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஹாமிதிய்யாவில் நான் பயின்ற காலங்களை கனிவோடு நினைவுகூறுகிறேன். நான் நிறைய சேட்டைகள் பண்ணி முதல்வரின் திருக்கரத்தால் அதிகமான அடி வாங்கியவன் என்ற பெருமை அடியேனுக்கு உண்டு.

அன்று வாங்கிய ஒவ்வொரு அடியும் இன்று என் வாழ்நாளை அலங்கரிக்கும் மலர் மாலையாக உணர்கிறேன். என்னுடைய தீன் என்னும் வாழக்கை பயணத்தில் நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அல்லாஹ்வின் பால் நெருங்க வைக்கும் ஆதாரமாக திகழ்கிறது என்றால் அது மிகையாகாது.

எல்லாம் வல்ல அல்லாஹு சேவை செம்மலாக நம் முன் காட்சி தரும் முதல்வருக்கு ஈருல பேற்றினையும் கொடுத்து, அன்னாரின் அனைத்து காரியங்களும் வெற்றியடைய அருள்புரிவானாக, ஆமீன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by Cnash (Makkah ) [19 July 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6176

Well deserved honor and to a right person. He is a self-effacing and modest personality and may Allah grant him good health. Also our prayers to whom they have dedicated themselves for our society and yet not been recognized and surely their deeds shall be rewarded by Almighty.

Just a small note to the administrator in this moment that some posts or comments are removed after publishing in the comments page!! Here too, some unnecessary and abusive comment of TM Rahamathullah Hajiar was posted and then vanished with a note of moderator.

It is meaningless to remove after it reaches in the minds of the viewer and I feel that the commentator intention of criticism has gained its purpose. So better edit or remove prior to circulate if the moderator feels it is against the terms of its guidelines.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. முதன்மையானவருக்கு
posted by musthak ahamed (mumbai) [19 July 2011]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 6185

காயல் மாநகரின் எண்ணற்ற இளைஞர்களை நேர்வழிப்படுத்தியவர் முதல்வர் என்று சொல்லுக்கு இலக்கணம்......... 43 வயதாகிறது ......இன்று பார்த்தாலும் ஒரு மரியாதை கலந்த பயம் தொழப்போ ..........இல்லேனா நூருல் ஹக் காக்காட்ட சொல்லிடுவேன்.....ஒழுங்கா ஓது இல்லேனா நூருல் ஹக் காக்காட்ட சொல்லிடுவேன்........இப்படி 80 களில் ஒவ்வொரு வீட்டிலும் கேட்டிருக்கும்........இன்றும் வேறு கொள்கைகளில் உள்ளவர்கள் கூட முதல்வரின் தலைமை பண்பு அன்பு குறித்து இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது............ இதையல்லாம் விட மனிதம் பொங்கி நிற்கும் மனசு.......

முதல்வர் அவர்களே உங்களுக்குதான் எத்தனை குழந்தைகள்......

உங்களுக்காக பிரார்த்திக்கவும்..... உங்கள் பெயரை சொல்லவும்......உங்கள் மறுமையின் சாட்சிகளாய் நாங்கள் இருக்கிறோம்.....

விருதுக்கு பெருமை சேர்த்த முதல்வரே.......... மறுமையில் சுவனத்தில் உங்களோடு உங்கள் மாணவர்களாகிய நாங்களும் இணைந்திருக்க துஆ செய்யுங்கள்......

உண்மையில் உங்கள் மாணவர் என்று சொல்லி கொள்வதில் எங்களுக்குத்தான் பெருமை.............

கண்கள் மறைக்கும் ஆனந்த கண்ணீரோடும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளோடும்..........

முஸ்தாக் அஹ்மத்
என்றன்றும் உங்கள் மாணவர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. இதயபூர்வமான வாழ்த்து
posted by M.N.T.JAMAL MOHAMED (BURAIDAH QASSIM SAUDI ARABIA) [20 July 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6204

காலம் கடந்து வழங்க பட்டிருக்கும் இந்த விருதுக்கு முழு பொருத்தமான முதல்வர் நஹ்வி நூருல் ஹக் நுஸ்கி அவர்கள். மாணவர்களின் நலனில, ஒழுக்க மேம்பாட்டில் அககறை கொண்டவர்கள் மறைந்த ஹாஜி L .K . அப்பா என்ற லெப்பை தம்பி ஹாஜி அவர்கள். இன்னமவர் அன்பு மாமா முதல்வர் நஹ்வி நூருல் ஹக் நுஸ்கி அவர்கள்.எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னவர்களின் ஹயாத்தை நீளமாக்கி சரீர நலமாகவும், மென் மேலும் மாணவ சமுதாயத்திற்கு சேவை ஆற்றிட அருள் புரிவனாக.ஆமீன்

MNT .ஜமால் முகமது
புரைடாஹ் -கசீம்
சவுதி ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. யா அல்லாஹ் ! எங்கள்
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari. (Singapore. ) [20 July 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 6210

என்றோ கிடைத்து இருக்க வேண்டிய விருது இன்றே கிடைத்து இருக்கின்றது. அல்ஹம்து லில்லாஹ். பொதுநலத்தையே தன்னலமாக்கிய செம்மல் என்றும் விளம்பரம் தேடியதில்லை. எல்லோரும் முதல்வர் என்று அழைத்தாலும், அவர்களோ நான் இந்த சபையின் ஒரு சன்மார்க்க கடைநிலை வூழியன் என்றே சபைநிகழ்ச்சிகள் அனைத்திலும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார்கள்.

இந்த "சேவை செம்மல்" விருதைக் கூட சபை நிர்வாகிகள், அபிமானிகள், பொறுப்பாளர்கள்,ஆசிரியர்கள் மிகவும் வற்புறுத்திக் கூப்பிட்டது நாள்தான் அதற்கு இசைந்தார்கள் என அறிகிறேன்.

1971 முதல் 2011 வரை தனது நாற்பது ஆண்டு காலத்தை இந்த சன்மார்க்கப் பணிக்கே அர்ப்பணம் செய்தவர்கள். காயல் நகரில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என எத்திசை நோக்கினாலும் அங்கு ஒரு ஹாமிதியாவின் மாணவர் இருப்பார். அல்லது ஹாமிதியாவின் ஒரு ஹாபிள் இருப்பார் என்பது அதனை நிரூபிக்கும். இன்று நகரில் பல்வேறு மார்க்க மதரசா கூடங்கள் இருந்தாலும் அதற்கெல்லாம் முதலும், முன்னோடியான மதரசா ஹாமிதியா என்றால் அதற்கு வித்திட்டவர்கள் அவர்களே!
ஹாமிதியா பைதுஸ் சபா, ஹாமிதியா மார்க்கல்வி நிறுவனம், ஹாமிதியா குர்'ஆன் ஹிப்ளு மதரஸா என அதன் பரிணாம வளர்ச்சியை பரிமளக்க செய்தவர்கள் அவர்கள்.

அன்று நானும், இன்று எனது மகனும், இன்ஷா அல்லாஹ் நாளை எங்கள் பேரப் பிள்ளைகள் என மூன்று தலைமுறைகளைகளுக்கு சண்மார்க்க ஞானத்தை வூட்டிடும் கல்வித்தந்தை எனது ஆசானும், மாமாவுமாகிய அல்ஹாஜ் நஹ்வி நூருல் ஹக் நுஸ்கி "சேவை செம்மல்" என அறியும்போது மற்றில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.

எங்களை ஹாபிலீன்களாக, ஆலிம்களாக, பேச்சாற்றல் மிக்கவர்களாக ஆக்கியது அவர்களின் தூண்டுதலும், வலிகாட்டுதல்கலுமே காரணம். ஏன் உங்கள் மக்கள் ஒரு ஹாபிலாக ஆகக் கூடாது? ஒரு ஹாபிள் டாக்டர், ஒரு இஞ்சினீர் ஹாபிள் என ஏன் ஆகக் கூடாது என அவர்கள் கேட்பது இன்னும் எங்களில் காதுகளில் ரீங்காரம் பண்ணிக் கொண்டே இருக்கிறது.

இப்படி எத்தனையோ சிறப்புக்களை வரிசைப் படுத்திக் கொண்டே போகலாம். விருது கிடைக்காதா என ஏங்கும் இந்த காலத்தில் அந்த விருதே அவர்களை தேடி வந்து இருக்கிறது. இந்த விருது அவர்களின் சேவைக்கு இறைவனால் மக்கள் மூலம் கிடைத்த ஒரு சிறு துளியே! இதைவித எண்ணிலடங்கா, கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத மாபெரும் விருது இன்ஷா அல்லாஹ் மறுமையில் அல்லாஹ்விடம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் சேவைகளை அங்கீகரித்து, அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், நோயற்ற வாழ்வையையும், குறைவற்ற செல்வத்தையும், ஈருலக சகல சௌபாக்கியங்களையும் வழங்குவானாக! ஆமீன்!

அன்புடன்
அவர்களின் மாணவன், மருமகன்
எம். எஸ். காஜா மஹ்லரி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. வாழ்த்துக்கள்
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [20 July 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 6211

தன்னலமற்ற ஹாமிதிய்யாவின் முதல்வர், என் தோழப்பாவிர்க்கு எனது, அகம் கனிந்த வாழ்த்துக்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by shuaibu noohu mahlari (hongkong) [20 July 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 6212

குடத்திற்கு கீழால் இருந்தவர்களை குன்றின் மேல் இட்ட விளக்காக உயர்த்தியவர்,
கல்வியையும் ஒழுக்கத்தையும் ஒரு சேர கற்பித்தவர்,
சினிமாவிற்கு இனிமா கொடுத்தவர்,
இரு தலைமுறைகளுக்கு முகவரி கொடுத்தவர்,
ஓசை இல்லாமல் வரலாறு படைக்கும் சரித்திர நாயகர்,
ஆடைக்கும், கோடைக்கும் அசையாது வழிகாட்டும் கலங்கரை விளக்கு,

இன்ஷாஅல்லாஹ், மறுமையில், வல்ல அல்லாஹ்விடம், மிக உயரிய விருதை பெற இருப்பவர்,
கண்ணியம் நிறைந்தவர்.

வாழ்த்துக்கள் பல கோடி.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by drnoorden (muscat) [20 July 2011]
IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 6214

எனக்கு முதல் முதலில் மார்க்க கல்வி சொல்லித்தந்த நூருல் ஹாக் காக்கஅ விற்கு வாழ்த்துக்கள் உங்களுடைய சேவை தொடர வல்ல அல்லாஹுவை வேண்டுகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. விருது கொடுத்தது ஒரு சந்தோசமான நிகழ்வாக தெரியவில்லை
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [20 July 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6215

எனக்கு கண்ணியத்துக்குரிய "ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ " அவர்களிடம் அதிக அறிமுகம் கிடைக்காதது ஒரு மனக்குறைவாக உள்ளது.

இவர்களுக்கு "சேவைச் செம்மல்" விருது கொடுத்தது ஒரு சந்தோசமான நிகழ்வாக தெரியவில்லை. அவர்களுக்கு விருது கொடுத்த உடன் இத்தனை நல் உள்ளங்கள், நன் மக்கள்கள் எல்லோரும் பாராட்டி, வாழ்த்தி, துஆ செய்கிறார்களே..அது தான் சேவைச் செம்மல்க்கு எல்லாம் பெரிய சேவைச் செம்மல் விருது. இந்த மக்களின் விருதுக்கு தான் வல்ல இறைவனிடம் அதிக வெயிட் உண்டு.

தாங்கள் பல்லாண்டு நலமுடனும், மன நிம்மதியுடனும் வாழ்ந்து, பல நன்மக்கள்களை உருவாக்க வாழ்த்து...இல்லை..இல்லை.. துஆ செய்கிறேன்..

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [20 July 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6216

மரியாதைக்குரிய எங்கள் ஆசானுக்கு விருது கொடுத்து விழா குழுவினர் விருதை உரிய இடத்தில் சேர்த்துள்ளார்கள். வல்ல நாயன் அவர்களின் ஹயாத்தை நீளமாக்கி சுகமான வாழ்வை கொடுத்து நீடூழி காலம் அவர்களின் சேவையை தொடர வல்ல நாயனை வேண்டுகிறேன் -S .S .J .SADIK JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by Shameemul Islam SKS (Chennai) [20 July 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 6217

விருது பெற்ற ஹாமிதிய்யா முதல்வர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

எமது அகவை அவரது சேவையின் வயது.

தீனை துன்யாவுக்காக என்றும் விற்காதவர்.
அறிமுகங்களை சுயநலத்திற்கு விலை பேசாதவர்.
பலரை நெறிப்படுத்தியவர்.
தம் உடையிலும் உள்ளத்திலும் தூய்மை மாறாதவர்.
பாரபட்சம் இவரது அகராதியில் இல்லை.

அவரது குடும்பத்து பிள்ளைகள் தவறிழைத்தால் அனைவர் முன்பும் அவர்களுக்கே செம அடி கிடைக்கும்.
இவர் கொடுத்த பிரம்படிகள் பலரது உயர்வுக்கு வித்திட்ட முதல் படிகள்.

அடித்த வலி மாறும் முன்பே அடிபட்டவர் முகத்தில் சிரிப்பையும் வரவழைப்பார்.

வகுப்புகளில் இவர் ஏதோ சுவாரஸ்யமான கதை சொல்வது போல் இருக்கும். ஆனால் பெல் அடிக்கையில் அன்றைய பாடம் முடிந்திருக்கும்.

ஒவ்வொரு அசெம்ப்ளியிலும் fundamental education என்ற அடிப்படைக் கல்வி என மார்க்கக்கல்வி பற்றி சளைக்காமல் சொல்லிக்கொண்டே இருப்பார். அஃது இல்லாமல் கொடுக்கப்படும் துன்யாவின் கல்வியினால்தானே இன்று எத்தனை எத்தனை பிரச்னைகள்.

இவரை நான் புகழவில்லை. அது என் வேலையுமில்லை. ஒரு பயம், ஒரு கவலை, இந்த மார்க்கம் இப்படியே துன்யாவின் மோகத்தில் கரைந்து போய் விடுமோ என மனம் புழுங்கிய வேளையில் சேவைக்கான விருது என்று மார்க்கத்தை முன்னிறுத்தி ஒரு பரிசளிப்பு.

بدالإسلام غريبا وسيعود كما بدافطوبى للغرباء இது ஒரு நபி மொழி.

இஸ்லாம் விநோதமாகவே தோன்றியது, மேலும் அது தோன்றியது போன்றே (வினோதமாக) திரும்பி விடும், அக்காலத்தில் (உண்மை முஸ்லிம்களாக) வாழ்பவர்களுக்கு சோபனமே.

இந்த GURABAA வைப்பற்றி அவர் விருது வாங்கும் வேளையில் என்னால் சில விஷயங்களை நினைவு கூறாமல் இருக்க முடியவில்லை. தவறிருந்தால் அல்லாஹ் என்னைப் பொருத்தருளட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by ரஹமத்துன் -லில் ஆலமீன் மீலாது பேரியம் (காயல்பட்டினம்) [20 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6218

அஸ்ஸலாமு அலைக்கும்.மறை ஒளி வீசும் மத்ரஸா ஹாமிதிய்யாவின் 'மாண்புயர் முதல்வர்'அவர்களுக்கு 'சேவை செம்மல்'விருது வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றிகள்.சுயநலமே தன் வாழ்வாக கருதும் இக்கால சூழலில் பொது நலத்திற்காகவே தன்னை அர்பணித்த மத்ரஸா ஹாமிதிய்யாவின் முதல்வர் அவர்களுக்கு ஒரு விருதல்ல!ஓராயிரம் விருதுகள் கொடுத்தாலும் மிகையாகாது.

ஹாமிதிய்யா மத்ரஸா வளர அரும் பாடுபடுபவர் தன் நலன் எதிர்பாராதவர் சமூக (சேவை) சிந்தனை வாதி ‘சேவைச் செம்மல்‘ விருதுக்கு பொருத்தமானவர் வல்ல அல்லாஹ் இவருக்கு இவுலக வாழ்விலும் மறு உலக வாழ்விலும் அனைத்தையும் வெற்றி ஆக்கி வைப்பானாக ஆமின்...

அன்புடன் வாழ்த்தும் நெஞ்சங்கள்

உறுப்பினர்கள் ,நிர்வாகிகள்
ரஹமத்துன் -லில் ஆலமீன் மீலாது பேரியம்
சமுகநலப்பேரவை .குத்துக்கல் தெரு .காயல்பட்டினம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by s.e.m. abdul cader, b/o late misbahi aalim (bahrain) [20 July 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 6221

மாஷா அல்லாஹ் சேவை செம்மல் விருதிற்கு மிகவும் தகுதியானவர்கள்தான் ஜனாப் நூருல் ஹக் காக்கா அவர்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்கள் பணி மென் மேலும் சிறக்கவும் நம் மக்கள் அவர்கள் மூலம் பயன் பெறவும் நல்லருள் பாலிப்பானாகவும் ஆமீன். காக்கா உங்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by yahya mohiadeen (Dubai) [21 July 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6224

'உண்மையின் வெளிச்சம்' - இது இவர் பெயரின் அர்த்தம் மட்டுமல்ல, இவரின் நிலைபாடும் அதுதான். உடலும் சரி, மனதும் சரி, வயோதிகத்திற்கு வால்பிடிப்பவை, ஆனால், இவரிடம் மட்டும் இவை இரண்டும் சரண். ஒரு தலை முறையையே பன்படுத்தியவர். இன்னமும் இளமையோடு இருப்பவர்.

யா அல்லாஹ், இவர்களின் சேவையை நீ கபூல் செய்து, ஹயாத்தை நீளமாக்கி சரீர சுகமுடன் வாழச் செய்வாயாக ஆமீன்.

இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by Mahmood Seyed (Kingdom Of Saudi Arabia) [22 July 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6244

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.

அல்ஹம்து லில்லாஹ் ! மாஷா அல்லாஹ் !! தபாரகல்லாஹ்!!! லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லாபில்லாஹ் !!!!



யா அல்லாஹ் !

எங்கள் முதல்வர் அவர்களுக்கு எல்லா செல்வங்களையும் தங்கு தடையின்றி இவ்வுலகிலும் , மறு உலகிலும் வழங்கி அருள்வாயாக ஆமீன். ஆமீன். ஆமீன். யா ரப்பல் ஆலமீன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by NOOHU SAHIB (DUBAI) [23 July 2011]
IP: 80.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6305

எல்லா புகழும் புகழ்ச்சியும் அல்லா ஒருவனுக்கே.கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் உரிய அருமை சாச்சப்பா மற்றும் முதல்வர் நஹ்வி நூருல் ஹக் அவர்களுக்கு அஸ்ஸாமு அழைக்கும். நாற்பது ஆண்டு தன்னலமில்ல சேவைக்கு காயல் பதி அளித்த சேவை செம்மல் விருதினால் இம்மனுக்கு பெருமை. இமானுக்கு வலிமை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by CHOLUKKU S/O PETHAPPA (Chennai) [24 July 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 6327

காயல் மாநகரின் எண்ணற்ற இளைஞர்களை நேர்வழிப்படுத்தியவர் முதல்வர் என்று சொல்லுக்கு இலக்கணம்......

43 வயதாகிறது...... இன்று பார்த்தாலும் ஒரு மரியாதை கலந்த பயம் தொழப்போ.......... இல்லேனா நூருல் ஹக் காக்காட்ட சொல்லிடுவேன்.....
ஒழுங்கா ஓது இல்லேனா நூருல் ஹக் காக்காட்ட சொல்லிடுவேன்........
இப்படி 80களில் ஒவ்வொரு வீட்டிலும் கேட்டிருக்கும்........ இன்றும் வேறு கொள்கைகளில் உள்ளவர்கள் கூட முதல்வரின் தலைமை பண்பு அன்பு குறித்து இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

உங்களுக்காக பிரார்த்திக்கவும்..... உங்கள் பெயரை சொல்லவும்...... உங்கள் மறுமையின் சாட்சிகளாய் நாங்கள் இருக்கிறோம்.....

விருதுக்கு பெருமை சேர்த்த முதல்வரே.......... மறுமையில் சுவனத்தில் உங்களோடு உங்கள் மாணவர்களாகிய நாங்களும் இணைந்திருக்க துஆ செய்யுங்கள்......

உண்மையில் உங்கள் மாணவர் என்று சொல்லி கொள்வதில் எங்களுக்குத்தான் பெருமை.............

கண்கள் மறைக்கும் ஆனந்த கண்ணீரோடும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளோடும்

cholukku


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by சட்னி முஹம்மது உமர் ஒலி (ஜித்தா) [25 July 2011]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6387

அஸ்ஸலாமு அலைக்கும். மாஷா அல்லாஹ் சேவை செம்மல் விருதிற்கு மிகவும் தகுதியானவர்கள்தான் ஜனாப் நூருல் ஹக் காக்கா அவர்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்கள் பணி மென்மேலும் சிறக்கவும் நம் மக்கள் அவர்கள் மூலம் பயன் பெறவும் நல்லருள் பாலிப்பானாகவும் ஆமீன். காக்கா உங்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by Thaika Ubaidullah (Macau) [25 July 2011]
IP: 202.*.*.* Macau | Comment Reference Number: 6390

Assalamu Alaikum,

Maasha Allah, Seeing so many brothers showing their gratitude and respect to the outstanding acheivement of Noorul Haq Kaaka and the impact his services had made on the life of countless number of youngsters in shaping up moral side of thier life is simply great and priceless.

Just because, i was born in that mohalla, i was lucky to have studied at Hamidiya in the first batch when it was started at Kuruvithurai Palli. Any time the word Hamidiya is mentioned anywhere two people will come to my mind are NOORUL HAQ KAAKA AND AHAMED KAAKA, who then were youngsters spearheaded this organisation. I meet Noorul Haq Kaaka when visiting kayal but Ahamed kaaka i have not met for so long. I hope he is good and please some one pass my salam to him.

But for Hamidiya, i am honest, i would have been deprived of the minimal relegioius knowledge i posses now and it is still guiding my life. Alhamdu Lillah

I hope Hamidiya can start a distance learning courses for many of our children scattered around the golobe at this age of fast life for basic relegious learning.

My prayers are with all and seeking all your duas also. May Allah help us. Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by mahmood sulthan (chennai) [25 July 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 6404

SALAM masha allah the function was superb and belated wishes for receiving THIYAAGACHEMMAL MAMA. May Allah ll help you to live a long happy , prosperous,healthy and wealthy life. excellent speech by our principal and perfect organisation by our old students. May Allah ll acep all our duas. wishes from
Alhaj M.S.B. Mohamed Ismail B.Sc.,
Alhaj Professor M.I. Bukhari M.E., P.hD.,
and family members.

by your beloved student mahmood sulthan wasslam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by DOOTY SEYED MOHAMED (KAYALPATNAM) [26 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6415

மாச ALLAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by saha (Chennai) [26 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6416

அஸ்ஸலாமு அலைக்கும்.

முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ அவர்களுக்கு சேவைச் செம்மல் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாட்டை அல்லாஹ் காயல்பட்டினத்தில் நடத்தினானோ! 1989ஆம் ஆண்டு புனித மக்காவில் சஊதி அரசாங்கம் நடத்திய சர்வதேச திருக்குர்ஆன் ஹிஃப்ழு (மனனப்) போட்டி நடத்தி அல்லாஹ் அவர்களுக்கு புனித கஃபாவின் உட்பகுதியை தரிசிக்கும் அரிய வாய்ப்பை கொடுத்தானெ எல்லா புகழும் புகழ்ச்சியும் அல்லா ஒருவனுக்கே இவர் சேவை செம்மல் விருதிற்கு மிக..மிக.. மிகவும் தகுதியானவர்கள்தான்.

எங்கள் ஆசானுக்கு விருது கொடுத்து விழா குழுவினர் நன்று... எல்லாம் வல்ல அல்லாஹு சேவை செம்மலாக நம் முன் காட்சி தரும் முதல்வருக்கு ஈருல பேற்றினையும் கொடுத்து, அன்னாரின் அனைத்து காரியங்களும் வெற்றியடைய அருள்புரிவானாக, ஆமீன்... வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved