Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:31:23 PM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5894
#KOTW5894
Increase Font Size Decrease Font Size
புதன், மார்ச் 30, 2011
காயல்பட்டினம்.காம் செய்தி குறித்து காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை கண்டன அறிக்கை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3840 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“சுனாமி குடியிருப்புகளும், தேர்தல் புறக்கணிப்பும்” என்ற தலைப்பின் கீழ் காயல்பட்டினம்.காம் வலைதளம் வெளியிட்டிருந்த தொகுப்புச் செய்திகளைக் கண்டித்து, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் வாசகங்கள் பின்வருமாறு:-

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அன்பார்ந்த காயல் மாநகர பெருமக்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சில தினங்களுக்கு முன் காயல்பட்டினம் டாட்காம் (kayalpatnam.com) என்ற இணையதளத்தில் சுனாமி குடியிருப்புகளும் தேர்தல் புறக்கணிப்பும் என்ற தலைப்பில் செய்திகள் வெளிவந்தது. இது சம்பந்தமாக கடந்த 27.03.2011 அன்று காலை 11 மணிக்கு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் அவசர ஆலோசனைக் கூட்டம் பேரவையின் வளாகத்தில் நடைபெற்றது. ஊரின் சில பிரமுகர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பல கருத்துக்களையும் பேசினார்கள். இறுதியாக கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்:

***சுனாமி குடியிருப்புகளும் தேர்தல் புறக்கணிப்பும் என்ற தலைப்பில் வெளியான செய்திகளுக்கும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

***பேரவைத் தலைவரிடம் எந்தக் கருத்தையும் கேட்காமல் கற்பனையாக கேள்வியும் கேட்டு, பதிலும் சொல்லி, வதந்திகளை பரப்பியதால் மக்கள் கவலையில் இருக்கின்றனர் என்பதை பேரவை உணர்கிறது.

***இதுபோன்ற பொய்ச் செய்திகளை முற்றிலுமாக மக்கள் புறக்கணிப்பதோடு, இச்செய்தியை வெளியிட்டவர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டுமென்றும் பேரவை கேட்டுக்கொள்கிறது.

***தவறான செய்திகளை வெளியிட்ட ஊடக நிர்வாகிகளை பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

***வதந்தியைப் பரப்பிய ஊடக நிர்வாகிகள் வருத்தம் தெரிவித்து மறுப்பு வெளியிடுமாறு பேரவை கேட்டுக்கொள்கிறது.

***பேரவைத் தலைவரின் ஒப்புதல் இல்லாமல் பேரவை சம்பந்தப்பட்ட எந்தச் செய்திகளையும் ஊடகங்களில் வெளியிடக்கூடாது. மீறி வெளியிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவை எச்சரிக்கிறது.

***நடைபெற இருக்கின்ற பொதுத்தேர்தலை யாரும் புறக்கணிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென்று மக்களை வற்புறுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

***பேரவை அரசியலிலும், ஆன்மீகத்திலும் தலையிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது.

***இந்தச் செய்தியை கூடுதல், குறைவின்றி அப்படியே எல்லா ஊடகங்களிலும் வெளியிடுமாறு பேரவை பணிவோடு வேண்டுகிறது.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக ஹாஃபிழ் எஸ்.கே.சாலிஹ் அவர்களின் துஆவுடன் கூட்டம் நிறைவடைந்தது.

இக்கூட்டத்தில் ஹாஜி எம்.எம்.உவைஸ், ஹாஜி மிஸ்கின் சாஹிப் (பாஸி), ஹாஜி வாவு அப்துல் கஃப்பார், ஹாஜி என்.எஸ்.நூகு ஹமீது (கம்பல்பக்ஸ்), ஹாஜி எஸ்.எம்.உஜைர், ஹாஜி எஸ்.ஏ.முஸ்தபா, ஹாஜி மெய்தீன் தம்பி, ஹாஜி வாவு நாசர், ஹாஜி மெய்தீன் தம்பி (துரை காக்கா), ஹாஜி செய்யது முஹம்மது அலி, ஹாஜி ஜரூக், ஹாஜி பிரபு தம்பி, ஹாஜி கலீல் (ஜெஸ்மின்), எம்.எல்.அப்துர் ரஷீது (அவ்லியா), எல்.எம்.இ.கைலானி, ஹாஜி பி.மி.மீரா சாஹிபு, ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.இஸ்ஹாக், ஹாஜி எஸ்.ஹைச்.மஹ்மூது நெய்னா ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

எல்லாம்வல்ல இறைவனின் கிருபை நம் அனைவர் மீதும் என்றும் நிலவட்டுமாக ஆமீன்.

நன்றி. வஸ்ஸலாம்.

தங்கள் உண்மையுள்ள,
(ஒப்பம்)
ஹாஜி எம்.எம்.உவைஸ்,
தலைவர்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. REEL SHOULD NOT REAL
posted by MUJAHID (CHENNAI) [31 March 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 3665

REEL SHOULD NOT REAL. IKIYA PERAVAI IS NOT AN ACCEPTING AUTHORITY OR COMMITTEE OF KAYAL SOCIETY. EVEN WE CANT UNDERSTAND IF IKKIYA PERAVAI MISCOMMUNICATE THEIR FILTHIEST AGENDA WITH WHOLE PEOPLE THEN WHY DID KAYALPATNAM.COM EXPOSE THIS NEWS? IS THIS PATHRIKAI THARMAM? WHY DID SK SALIH HAS PARTICIPATED IN THIS MEETING AND MAKING DUA?

IS THIS DRAMATIC EITHER DIPLOMATIC? KINDLY EXPLAIN THIS CRITERIA FOR THIS ISSUE IN ORDER TO EASY UNDERSTANDING TO THE WHOLE KAYAL PEOPLE.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. டேக் இட் ஈஸி...!!! எல்லாம் நம் நன்மைக்கே!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்.(ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.) [31 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3667

நம் ஐக்கியப் பேரவையின் செயல்பாடுகள் யாவும் ஓர் தொலைநோக்குச் சிந்தனைக்குரியதாகவே இருக்கும்.

சும்மா!பொழுதுபோக்கிற்காக அவர்கள் அதை நடத்திக்கொண்டு வரவில்லை! பெரிய மனிதர்கள், சீரிய சிந்தனையாளர்கள், ஊர் ஒற்றுமை, மற்றும் பொது நலத்தில் அக்கரை கொண்டவர்கள், மனித நேயமிக்க தனவான்கள், இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து, ஆபத்துகளும், நெருக்கடிகளும், நமதூருக்கு வந்த பல காலகட்டங்களில் நிதனத்தோடும், நீதத்தோடும், செயல்பட்டு, தீக்கமான பல முடிவுகளை எடுத்து நமதூருக்கு தீங்கு வரவிடாமல், ஓர் அரனாகவே திகழ்ந்து நம்மைப் பாதுகாத்தவர்கள்!

நம் இணையதளத்தில் வெளிவந்த தேர்தல் புறக்கணிப்பு செய்திக்கு மறுப்பு வெளியிட்டிருப்பது, வரக்கூடிய ஆட்சி மாற்றத்தாலோ, அல்லது ஆளுங்கட்சியே ஆட்சிக்கு வந்தாலோ, நமக்கு ஏதேனும் நெருக்கடிகள் ஏற்பட்டுவிடக்கூடாதே? என்கின்ற அடிப்படையில் தான் இருந்திருக்கும்.

இதை ஓர் கவுரவப் பிரச்சனையாக தாங்கள் (காயல்பட்டணம்.காம்) எடுத்துக்கொள்ளாமல் நம் மூத்தவர்கள் நம் நன்மைக்காக கூறிய அறிவுரையாகவே கருதிக்கொள்ளும்படித் தாழ்மையோடு வேண்டிக்கொள்கின்றேன்.

காயல்பட்டணம்.காமின் சேவை தொய்வின்றித் தொடர்ந்து வர,என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Ikkyia Peravai
posted by Salai S Nawas (Singapore) [31 March 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 3668

Is Ikkya peravai registered under government act?

How many memberes they have?

Who elected the president?

On what basis or criteria the president was elected?

Its a fixed president or rotating?

What they have done so far to kayalpatnam?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. காயல்பட்டணம்.காமிற்கு ஓர் ஸல்யூட்...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்.(ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.) [31 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3669

நம் ஐக்கியப் பேரவை குறித்து நான் எழுதிய கருத்துக்களை தனிக்கை செய்யாமல் அப்படியே வெளியிட்டது உங்களின் பெருந்தன்மையைக் காட்டுகின்றது. இதிலிருந்தே தெரிகின்றது உங்கள் இணையதளம் மக்கள் மனதை இனைக்கும் தளமாக, இனிக்கும் தளமாக உயர்ந்து நிற்கின்றது.

பொதுவாக ஒரு அமைப்பின் நிறை, குறைகளைச் சுட்டிக்காட்டி அந்த அமைப்புக்கே கருத்துக்களை அனுப்பும் போது நிறைகளை மட்டும் பதித்து விட்டு, குறைகளை மறைப்பது இயல்பான ஒன்றே!ஆனால் நீங்கள் அப்படி இல்லை! வாசகர்களின் கருத்துக்கு மதிப்பளித்து உள்ளதை உள்ளபடியே வெளியிட்டமைக்காக நன்றி!!! காயல்பட்டணம்.காமிற்கு ஓர் ஸல்யூட்...!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இணக்கம் தொடர வேண்டும், இறுக்கம் மறைய வேண்டும்
posted by mauroof (Dubai) [31 March 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3671

காயல்பட்டினம்.காம் மற்றும் ஐக்கியப்பேரவையின் சேவைகள் நகருக்கு இன்றியமையாதவை. இவ்விரு அமைப்பின் சேவைகளை தனித்தனியே சொல்ல வேண்டுமெனில் பட்டியல் மிகப்பெரியதாக இருக்கும். இவ்விரு அமைப்பில் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடுகள் எழும்போது தங்களுக்குள்ளாகவே அமர்ந்து பேசி ஒரு இணக்காமான சூழலை ஏற்படுத்த வேண்டுமே அன்றி ஒரு போதும் இறுக்கமான சூழல் வந்து விடக்கூடாது என்பதே ரும்பான்மையான நகர மக்களின் விருப்பம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. 'சுனாமி குடியிருப்புகளும், தேர்தல் புறக்கணிப்பும்' தொடர் கட்டுரை
posted by Salai.Mohamed Mohideen (California) [31 March 2011]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 3672

முதலில் காயல்பட்னம் டாட்காமில் வெளிவந்த 'சுனாமி குடியிருப்புகளும், தேர்தல் புறக்கணிப்பும்!' ஒரு தொடர் கட்டுரையே (Article)யன்றி அது ஒரு நியூஸ் ஆக எனக்கு தோணவில்லை. அது நியூஸ் செக்சனில் இடம்பெற்று இருந்தாலும் கூட.

நாம் எல்லாரும் அறிவோம்... இதே வெப்சைட்டில் சமீபத்தில் DCW பற்றி கூட ஒரு தொடர் கட்டுரை வெளிவந்தது. அதையும் கூட DCWவிடம் அனுமதி வாங்கித்தான் வெளியிடனும் என்று DCW சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? அந்த கட்டுரை வந்திருக்காவிட்டால் நம்மில் நிறைய பேருக்கு DCWவில் என்ன நடக்கின்றது என்று தெரிந்து இருக்க வாய்ப்பு இருந்து இருக்காது.

அதற்காக நமது ஐக்கிய பேரவையும் DCWவும் ஒன்று என்று அர்த்தம் இல்லை. கட்டுரை என்று வரும் போது எல்லாம் ஒன்றுதான் ஊடகத்துறைக்கு என்பது நாம் அறிந்ததே. செய்திகளும் மற்றும் கட்டுரைகளுடன் கூடிய கேள்விகளும்தான் 'உள்ளே' என்ன நடக்கின்ற என்பதை வெளிகொனர்கின்றன என்பதில் நம்மில் யாவருக்கும் ஐயமில்லை

எத்தனையோ ஊடகங்கள் கட்டுரைகளை வெளியிடுகின்றன. அத்தனை ஊடகங்களும் சம்பந்தபட்டவர்களிடம் அனுமதி வாங்கித்தான் வெளியிடனும் என்று சொன்னால் அதை அவர்களால் வெளியிடவும் முடியாது மேலும் அது பத்திரிக்கை சுதந்திரத்தை தட்டி பறிப்பதட்க்கு சமமாகிவிடும் என்பதை நாம் அறிவோம்.

அதே நேரத்தில் அந்த கட்டுரையில் ஒரு வேளை தவறு இருந்தால் சுட்டி காட்டுகின்ற உரிமை நிச்சயம் நமக்கு இருக்கிறது மேலும் அதை அவர்கள் மக்களுக்கு தெரிவுபடுத்துகிற கடமையும் ஊடகங்களுக்கு உள்ளது. பத்திரிக்கை துறை என்பது மக்கள்/மன்றம் மறந்ததை ஞாகபகப்படுத்துவதும் மேலும் தேவைப்பட்டால் எந்த ஒரு தவறையும் சுட்டிகாட்டுவது அவர்கள் வழக்கத்தில் உள்ளது.

இந்த கட்டுரைக்காக கூட்டிய அவசரக்கூட்டத்தை, ஏற்கனவே அறிவித்தபடி ஐக்கிய பேரவையின் 'தேர்தல் புறக்கணிப்பு' முடிவு என்ன என்பதனை அறிவிப்பதற்காக கூட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்குமே. நமது ஐக்கிய பேரவையை நம்பி ஒரு நாள் வியாபாரத்தையும் (நஷ்டத்தையும்) பொருட்படுத்தாமால் ஒத்துழைப்பு நல்கிய நல்உள்ளங்களுக்கு பேரவையின் முடிவை (புறக்கணிப்பு தேவை அல்லது தேவையில்லை) அறிவிக்க வேண்டியது நமது கடமையல்லவா?

மேலும் இப்பொழுது அறிவித்துள்ள நமது பேரவையின் முடிவை (***நடைபெற இருக்கின்ற பொதுத்தேர்தலை யாரும் புறக்கணிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை.) என்பதை தகுந்த காரணங்களுடன் மக்களுக்கு முன்னரே தெளிவுபடுத்தியிருந்தால் இந்த தொடர் கட்டுரை வந்து இருக்காதோ?

நமது பேரவை "அரசு தனது போக்கினை மாற்றிக் கொள்ளவில்லை எனில் சட்டசபை தேர்தலினை காயல்பட்டின மக்கள் புறக்கணிக்க நேரிடும்" என்று அறிவிப்பதற்கு முன், நாம் இப்பொழுது சொல்லும் காரணத்தை "தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென்று மக்களை வற்புறுத்துவது சட்டப்படி குற்றமாகும்" முன்னேரே அறிந்து இருந்தால் ஒருவேளை இந்த விஷயம் இந்த அளவுக்கு சிக்கலாகி (complicated) ஆகி இருக்காதோ மேலும் 'தேர்தலை புறக்கணிக்க நேரிடும்' என்ற அஸ்திரத்தை தீர்மானமாக ஏற்ற வேண்டிய சூழ்நிலை வந்து இருக்காது.

இந்த கருத்துக்கள் எதையும்/எவரையும் நியாயப்படுதுவற்காகவோ அல்லது குறை கூறுவதற்காகவோ பதிய வில்லை. நடப்பது எதுவாக இருந்தாலும் அது நமது ஊர்க்கு நன்மையாகவே அமைய வேண்டும் மேலும் நாம் எல்லோரும் ஒற்றுமையாக நமது சுய/ மார்க்க கொள்கை வேறுபாடுகளை மறந்து நமதூர் நன்மைக்காக ஓரணியில் நிற்க வேண்டும் என்பதே எல்லோருடைய அவா!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. பேரவையில் உள் அரசியல்
posted by kudack (qatar) [31 March 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 3675

assalamu alaikkum,

jan.. 4th pothukootethil pirechenaiku mudivu illai endraal election boycott seivom endru sonne iykiye perevai nirvakigal ,ஜனவரி மாதமும், பிப்ரவரி மாதமும் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை வெளியிட்டிருந்த ஐக்கிய பேரவை, now ***பேரவை அரசியலிலும், ஆன்மீகத்திலும் தலையிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது, endru தீர்மானம் நிறைவேற்றப்பட்டது , ??????????????????? பேரவையில் உள் அரசியல் நடைபெறுகிறது,

அரசியலில் பேரவை தலையிடaaது என்று sonnal சுனாமி குடியிருப்பு பிரச்சனை அரசியல் பிரச்சனை இல்லையா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved