Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:08:10 PM
சனி | 4 மே 2024 | துல்ஹஜ் 1738, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்02:45
மறைவு18:28மறைவு15:00
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4705:1305:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:41
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5761
#KOTW5761
Increase Font Size Decrease Font Size
சனி, மார்ச் 5, 2011
காயல்பட்டினத்தில் சிறப்பு சாலைகள்! டெண்டர் விபரம்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4673 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் சிறப்பு சாலைகள் (Special Roads Programme 2010 - 2011) திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலைகள் தற்போது போடப்பட்டு வருகின்றன. ஏறத்தாழ 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

நவம்பர் 1 அன்று காயல்பட்டின நகராட்சியால் திறக்கப்பட்ட இந்த டெண்டர்களை தூத்துக்குடியை சார்ந்த எஸ்.ரம்போலா என்பவர் பெற்றுள்ளார். இவரை தவிர காயல்பட்டினம் பூந்தோட்டத்தை சார்ந்த ஆர்.தளவாநிமுத்து என்பவரும் இந்த டெண்டரில் பங்கேற்றுள்ளார்.

இரு தொகுப்புகளாக இந்த டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. முதல் தொகுப்பு (Package 1) டெண்டர் தொகை ரூபாய் 99.33 லட்ச ரூபாய். இரண்டாம் தொகுப்பு (Package 2) டெண்டர் தொகை ரூபாய் 97.19 லட்ச ரூபாய்.

முதல் தொகுப்பில் உள்ள தெருக்கள்

1. கீழ நெய்னார் தெரு
2. சிறுபள்ளி வழியாக சித்தன் தெரு முதல் நெய்னார் தெரு வரை
3. தெற்கு ரோடுக்கு எதிர்புறமாக விசாலட்சுமி கோயில் தெரு
4. காய்தேமில்லத் நகர் மெயின் ரோடு
5. மேல நெசவு தெரு முதல் வன்னியக்குடி தெரு வரை
6. பிரின்ஸ் தெரு
7. அரசு மருத்துவமனை வழியாக பை பாஸ் ரோடு முதல் சிவன் கோயில் தெரு வரை

இரண்டாம் தொகுப்பில் உள்ள தெருக்கள்

1. இரத்தினபுரி கிழக்கு தெரு முதல் தொலைபேசி அலுவலகம் வரை
2. ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸ் வழியாக சதுக்கை தெரு முதல் வடக்கு முத்தாரம்மன் கோயில் தெரு வரை
3. புதுக்கடை தெரு
4. வடக்கு முத்தாரம்மன் கோயில் தெரு முதல் கோமான் புத்தூர் வரை
5. சீதக்காதி நகர்
6. அலியார் தெரு

காயல்பட்டின நகராட்சியின் டெண்டர்களில் பங்கேற்க (Contractors List) பத்து பேர் பதிவு செய்துள்ளனர். அவர்கள் விபரம் வருமாறு:-

Class I முதல் Class 4 வரை

1. டி.தளவாநிமுத்து
2. ஏ.அலெக்சாண்டர்
3. எஸ்.ரம்போலா
4. எஸ்.சுதர்சன்

Class 5

1. டி.தங்கப்பூ
2. எப்.முனவரா
3. எஸ்.குமரேசன்
4. ஏ.முருகன்
5. ஜே.முருகேசன் (Jaya Suriya Construction)
6. எஸ்.பால்ராஜ்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. More attention ..
posted by Mohamed Salih (Bangalore) [05 March 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 3021

Its 2 bad to see the tender persons. even 1 muslim from our kayalpatnam didn participate in the tender..??? why any reason is there?/.. or not willing to earn money ( means through halal way ) this kind of project ???? we only syaing we didn get any job?? why we should think about these kind of job.. if we people take the tender we can give directly / indirectly jobs to our native people.. insha allah..

PLs iterest more on this ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Waiting for our kayal tenders
posted by Sayna (Bangkok) [05 March 2011]
IP: 203.*.*.* Thailand | Comment Reference Number: 3025

Mohamed Salih kaka sollura mathrie ,

Intha tender ta kayalpatanathai sartha yarum illai,

Reasons

1.Tender vida porom du ithu varaikum arivipu vida villai, 2.sathiya islam marka padi nadaka vida mattargal, 3.Neethie , narmaiyaga nada ka Aluvalagaral vida mattargal, 4.Naarmaiyaga nadathu roattai pottal , kutram kandu pidipargal.

ipadie niraya iruku,

Insa Allah varum kalathil namaludaiya oru velaigalai nama oru makkalay kandipaga yaduthu nadathu vargal, Avargaluku nammal eyandara uthaviyai saioom, Avargaluku idai uru saibavargalai , umilthu thupoom, Varungalai kayal ilangargal ipoluthay usaraga irukeerargal, Utharanathu samibathila arambita pallaie manavargal yallorum sarthu arambitha savai maiyam

Inimalum kuniyatheergal kayalargalay , Namaludaiya panathai velie oruku karargaluku tender yandara paril kuduka venduma, Vilithu Yalumbungal , ithu ungaludaiya panam, ungalidam langam ketpavargalaium ,vangupa varglaium cell phone mulamaga record saithu publisity pannugal,

Katta kaka moosa kakavai record saithu youtubela pottu poroganam illai, Langam lavanyam vangum kulla narigalai youtuble la podungal


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில்......
posted by Ahamed (Chennai) [05 March 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 3027

சகோதர் சொன்னது மிக சரியே...

சில காரணத்தினால் ரோடு பழுதானால் ஒப்பந்தகாரர்களே விசாரிக்கபடுவர். அவர் உண்மையாகவே நன்றாக செய்து இருந்தாலும்.....

இதற்கு பதில், நமது ஊர் சங்கங்கள் சார்பாக ஒரு நபரை அல்லது ஒரு குழுவை நியமித்து அவர்கள் மூலம் இதை போன்ற பொது விசயங்களை நடத்தல்லாம். கணக்குகளை அந்த குறிபிட்ட சங்கக்களே பார்த்துக்கொள்ள வேண்டியது.

இதன் மூலம் நமக்கு வர வேண்டிய நலன்கள் நம்மை வந்து சேரும் என்பதில் சந்தேகம் இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. டெண்டர் ...
posted by முத்துவாப்பா.... (al khobar) [05 March 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3029

கற்புடையார் வட்டம் (சிங்கித்துறை) குடியிருப்புகள் கட்ட ஆரம்பிப்பதற்கு முன் நாம் எந்தவித நடவடிக்கைகளோ போரட்டாங்களோ எதிர்ப்போ எதுவும் தெரிவிக்கவில்லை. அவர்கள பாதி கட்டிமுடித்த பிறகு தான் நாம் வாயிலும் வயித்திலும் அடித்து கொண்டோம்.அதே மாதிரி தான் இந்த டென்டர் விசயமும் . டென்டர் விடும் போது யாரும் எடுக்க முன் வராமல் இப்பொழுது நாம் புலம்பி என்ன ஆக போகின்றது. இப்படியே போய் கொண்டிருந்தால் கடைசியில் அவர்கள் நம்மை ஊரைவிட்டு விரட்ட போரட்டம் நடத்தினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை....

என்றும் அன்புடன்
முத்துவாப்பா....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ROAD CONTRACT
posted by MAHMOOD RAJVI (KAYALPATNAM) [06 March 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 3034

ASSALAMUALAIKKUM,

ROAD CONTRACT EDUPPATHELLAM IRUKKATTUM CONTRACTIRKU MUNBU VITTA TENDER NOTICE PATRI OORIL YARUKKAVATHU THERIYUMAA? THERIYATHAAN VIDUVAARKALA NUM PUNNIYAVAANKAL(COUNCILORS).

ORU SILAR THAVIRA ELLORUM OOLAL PERVALIKAL ITHIL ENGU IRUNTHU INTHA CONTRACT ELLAM HALALANA VALIYIL KIDAIKKUM ENAVEYTHAAN NUMMIL NALLORAKAL ITHAN PAKKAM THALAIVAIPPATHILLAI.

"USARA IRUKKA VENTIYA OOR MAKKAL URANGUM POTHU ELLAM OOLAL MAYAMEY".

Moderator's Note: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. விபத்துகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் கீழ நெய்னார் தெரு சாலை.
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [06 March 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3035

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

சிமென்ட் சாலைகள் போடுகிறோம் என்ற பெயரில் ஆங்காங்கே தெரு முனைகளில் போர்டுகளை வைத்திருக்கிறார்கள். போர்டுகளில் அழகாக, தெளிவாக, முறையாக ஒப்பந்தத்தின் விவரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் சாலைகள் போடும் வேலைகள்தான் முறையாக ஆரம்பிக்கப்படவில்லை. ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் முறையாக நடைபெற வில்லை. போடப்பட்ட சாலைகளில் அழகுமில்லை, தெளிவுமில்லை.
--------------------------------------------
விபத்துகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் கீழ நெய்னார் தெரு சாலை.

கடந்த ஒரு வாரமாக கீழ நெய்னார் தெருவில் (முஹிய்யதீன் மெட்ரிக் பள்ளி அருகில்) சாலை தோண்டப்பட்ட நிலையிலேயே இருக்கிறது, சுமார் நூறடி தூரத்திற்கு, ஓர் அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு பள்ளமாக கிடக்கின்றது.

நெய்னார் தெரு முனையிலும் சாலை தோண்டப்பட்ட நிலையிலேயேதான் கிடக்கின்றது.

இதனால் கடந்த ஒரு வாரமாக மக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருப்பதுடன், கீழ நெய்னார் தெருவில் தோண்டப்பட்ட பள்ளத்தில் பலரும் விழுந்து விபத்து ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.

மேலும் இங்கு எந்த வாகனமும் ஸ்கூட்டரோ, ஆட்டோவோ, காரோ எதுவும் போகமுடியாத அளவில் பள்ளமாக இருக்கிறது. ஒரு வாரமாக இருக்கும் இந்த இடையூறை அகற்றுவதற்கு அந்த பகுதியின் நகர்மன்ற உறுப்பினர் ஏதும் நடவடிக்கை எடுக்கக் கூடாதா?.
--------------------------------------------
தீவுத் தெரு - கீழ நெய்னார் தெரு முனையில் வைக்கபட்டிருக்கும் தகவல் பலகை.

காயல்பட்டணம் நகராட்சி சிறப்பு சாலைகள் திட்டம் : 2010 - 2011

கீழ நெய்னார் சாலை (தீவுத் தெரு முதல் முஹிய்யதீன் மெட்ரிக் பள்ளி வரை) சிமென்ட் சாலை அமைத்தல்.

மதிப்பீடு : 26.75
பணி ஆரம்பம் நாள் : 01 -12 - 2010
பணி உத்தேசமாக முடிவடையும் நாள் : 31- 03 - 2011
ஏறக்குறைய இருபத்தியேழு இலட்சம் ரூபாய்க்கு கொடுக்கபட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட வேலை நாட்கள் 4 மாதங்கள்.

இதுநாள் வரை சாலை அமைக்கும் வேலை நடைபெறவில்லை. மூன்று மாதங்கள் சென்று விட்டன.

மேலே குறிப்பிட்டபடி இந்த சாலை நூறு அடி தூரத்துக்கு தோண்டிபோட்டதோடு நிற்கிறது, அதுவும் சென்ற வாரம்தான் தோண்டினார்கள். இனி அவர்களுக்கு இருக்கும் கால அவகாசமோ மூன்று வாரங்கள் மட்டுமே!?

இந்த மூன்று, நான்கு வாரத்திற்குள் சிமென்ட் சாலை போட்டு முடிப்பதாக இருந்தால் அந்த சாலையின் தரம் எப்படி இருக்கும் என்பதை மக்களே புரிந்துகொள்ளுங்கள்.

இதிலே காண்ட்ராக்டரை மட்டுமே என்னால் குறை சொல்ல முடியாது. நமது நகராட்சி நிர்வாகமும், உறுப்பினர்களுமே அதிக பொறுப்புக்குரியவர் ஆவர்.
------------------------------------------
பொது மக்களே!

இந்த மாதிரியான இடையூறுகள் இல்லாத, சுத்தமான, சுகாதாரமான நகரமாக நமது ஊர் திகழ வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் தயவு செய்து இனி வரும் காலங்களிலாவது அரசியல் கட்சியில் இல்லாத, பொது தொண்டு செய்யக்கூடிய, நேர்மையான, இறைவனுக்கு பயந்த மற்றும் சுறுசுறுப்பான நபர்களை மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து நகராட்சியை மக்களாட்சியாக மலரச்செய்யுங்கள்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Pls vote for Social service canditate..
posted by Mohamed Salih (Bangalore) [07 March 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 3049

Dear Brother & Sister..

Thanks for your comments . all comments are very good..

Sayna comments are good worth.. Allah knows every thing..

Mr. N.S.E Mohmood says is 100 percent correct.. so we elect the person who is serving to our native.. if we select the candidate like that.. we will achive a lot..

Best regards,
Mohamed Salih.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Not even a single muslim
posted by Matheen (London) [07 March 2011]
IP: 81.*.*.* United Kingdom | Comment Reference Number: 3070

I totally agree with my friend Salih. Not even a single muslim from our town participated in the tender.

If we would have taken the project, we would better do it (without corruption and responsibility), because he would be using that street as well.

But the people who are not from kpm usually don't care and never come back until the next tender.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. காண்ட்ராக்டர்கள்
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [08 March 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3074

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

சகோதரர்களே!

காண்ட்ராக்ட் எடுத்து நடத்தக்கூடிய அளவுக்கு ஊர் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் யாருமே இல்லையா ? என்று பலரும் ஆதங்கப்படுகிறீர்கள் உண்மைதான்.

நேர்மையாக நடக்க விரும்பும் நம்ம ஊருக்காரங்க யாரும் அரசாங்க சம்பந்தப்பட்ட காண்ட்ராக்ட் எடுக்க விரும்பமாட்டார்கள்.

காரணம் பலரையும் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்க வேண்டும்.
அரசாங்க ஊழியரிலிருந்து வார்டு மெம்பர் வரை கவனித்தால்தான் காண்ட்ராக்ட் கிடைக்கும் அப்படி கவனிக்கும் பட்சத்தில் வேலையின் தரம் மிக,மிக மோசமாக இருக்கும்.

100 ரூபாய்க்கு காண்ட்ராக்ட் எடுத்தால் 25 ரூபாய் மதிப்புக்குத்தான் வேலை நடக்கும்.

இலஞ்சம் பலருக்கும் கொடுக்கப்படும் தொகை = 55
காண்டார்க்டரின் இலாபம் ------------------------------ = 20
ஆக மொத்தம் ----------------------------------------------- = 75

இந்த 75 போக மீதி இருக்கும் 25 க்குதான் ரோடு போட முடியும். இப்படி கொடுக்கும் தொகையில் கால் பங்குக்குத்தான் வேலை நடக்கும்.

இதை மிகைப்படுத்தி சொல்வதாக நினைக்க வேண்டாம், யாரையாவது எந்த ஊரிலாவது தெரிந்த காண்ட்ராக்டரிடம் விசாரித்து பாருங்கள் தெரியும், எல்லா ஊரிலும் அப்படித்தான் என்பது.

இதன் காரணமாகவே நம் ஊர் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் காண்ட்ராக்ட் எடுக்க விரும்புவதில்லை.

-------------------------------

பொது நலத்தை விரும்பும், கறை படாத கைகளை உடையவர்கள் உறுப்பினர்களாக நமது நகரசபைக்கு வந்தால் இன்ஷா அல்லாஹ்! காண்ட்ராக்டர்கள் சிலர் என்ன பலரும் உருவாகக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

அப்படி நமது ஊர் ஜமாஅத் காரர்கள் அல்லாது வெளியில் உள்ளவர்கள் காண்ட்ராக்ட் எடுத்தாலும் நல்ல திறமான ரோடுகளை போடுவார்கள், நமக்கும்/நமது உறுப்பினர்களுக்கும் அவர்களை கேள்விக் கேட்கக் கூடிய அதிகாரம் கிடைக்கும்.

அந்த ஒரு நல்ல பொது நலன்களை செய்யக்கூடிய ஒரு மக்கள் மன்றம் உருவாக எல்லாம் வல்ல அல்லாஹ்! நமக்கு கிருபை செய்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Thanks to my friend..
posted by Mohamed Salih (Bangalore) [08 March 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 3077

Thanks a lot my dear friend matheen..

If we select the ward members from our jammath people, we have rights to ask all the questions to them.. ( then we can say we will never pay any bribe to any one..)

So we also responsible to elect the member in right way..
comming election wake up and make our poll in right way..
MAy allah help in this regard insha allah..

Note:
The news editor pls give all the suggestions ( what we are given ) to every jammth people before elect the candicate.. if we done like this then they come to know people are watching them otherwise its end in very bad condition...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. IMPORTANT NOTE
posted by hasbmackie (dubai) [09 March 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3122

first of All, no one recd the matter of tender given to public befor 2 months.

Muncipality Head only can monitoring how much money allotted for these projects from govt, and he should the correct person who should fear Allah and give control to watch or auditing all the invoices, this way only we can protect from money corruption,.....in this regard....

After road works done, control with auto drivers to drive in limited speed...each corner in the road should have construct speed breakers.

All light should properly work on the whole nights.

The strongness of the road works will be identified once the heavyrain come on july or august.

I dont have idea why this much delays by municipality to starts this project when govrnment allotted money to the muncipality..

Every one has in power to answer the question in AAkirath...

Is it 14laks corruption from these projects if project got approved on december?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved