Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:56:43 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5670
#KOTW5670
Increase Font Size Decrease Font Size
புதன், பிப்ரவரி 16, 2011
காயலர் உடல் நலன் ஆய்வு (KAYALPATNAM HEALTH SURVEY) பணிகள் துவக்கம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3425 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு பொதுவாக ஏற்படும் ஆரோக்கியக் குறைவுகள் குறித்து பகுதிவாரியாக ஆய்ந்தறிந்து, அதற்கேற்ப நோய்த்தடுப்பு செயல்திட்டங்களை வகுத்திடும் பொருட்டு, வட அமெரிக்க காயல் நல மன்ற (நக்வா) உறுப்பினர் டாக்டர் அலீ ரஸாவின் தூண்டுதலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செயல்திட்டம் “காயல் உடல் நலன் ஆய்வு - KAYALPATNAM HEALTH SURVEY (KHS) 2011“.

வட அமெரிக்க காயல் நல மன்றம் (நக்வா), காயல் நற்பணி மன்றம் - தம்மாம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்த ஆய்வின் முதற்கட்ட முகாம், 13.02.2011 அன்று காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில், கத்தர் காயல் நல மன்றம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புகளால் நடத்தப்பட்ட புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமின்போது நடைபெற்றது. ஹாங்காங் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவரும், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா முகாமைத் துவக்கி வைத்தார்.





அனைத்துலக காயல் நல மன்றங்களின் அங்கத்தினர் ஆண்கள் பகுதியிலும், காயல்பட்டினம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் குழுவினர் பெண்கள் பகுதியிலும் தன்னார்வலர்களாகக் கலந்துகொண்டு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

உடல் உபாதைகள், அடிக்கடி ஏற்படும் ஆரோக்கியக் குறைவுகள், உணவுப்பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட கேள்விகளடங்கிய தகவல் சேகரிப்புத் தாளில், பொதுமக்களிடமிருந்து விபரங்கள் சேகரிக்கப்பட்டன.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி, பொதுமக்களின் எடை - உயரம் ஆகியவற்றை அளந்து, அதனடிப்படையில் அவர்களுக்கு BMI பதிவு வழங்கப்பட்டதுடன், சிறப்புப் பரிசுக்கான பரிசுக்கூப்பனும் வழங்கப்பட்டது. இம்முகாமில் 94 ஆண்களுக்கும், 136 பெண்களுக்கும் என மொத்தம் 230 பேருக்கு உடல் நல ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த முகாம்களை, பள்ளிவாசல்கள், பெண்கள் தைக்காக்கள், பொது நல அமைப்புகளின் வளாகங்கள், பள்ளி - கல்லூரிகள், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் நடத்தவுள்ளதாகவும்,

தொடராக மேற்கொள்ளப்படும் ஆய்வில் பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை காயல்பட்டினம்.காம் வலைளத்தின் முகப்புப் பக்கத்தில் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வருவதாகவும்,

முகாம் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், வட அமெரிக்க காயல் நல மன்ற (நக்வா) ஒருங்கிணைப்பாளருமான சாளை முஹம்மத் முஹ்யித்தீன் தெரிவித்துள்ளார்.

Daruttibyan Network: இச்செய்தியில் சில வாசகங்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. MT kaka
posted by Ibrahim (Chennai) [16 February 2011]
IP: 58.*.*.* India | Comment Reference Number: 2690

MT kaka kpm kku epo visit adicheenga?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. NAANAA THAANAA
posted by kavimagan (dubai) [17 February 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2697

அன்பு சகோதரர் ந.த.முஹம்மத் அலி அவர்களின் தன்னார்வப் பணி, இறையருளால் தொய்வின்றித் தொடரட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சில மாற்றங்கள் தேவை
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [17 February 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 2699

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

" உடல் நலன் ஆய்வு " பற்றிய செய்தி சேகரிப்பு முகாம் தொடங்கி விட்டது , அறிய மகிழ்ச்சி.

மேலும் , " அடுத்தடுத்த முகாம்களை, பள்ளிவாசல்கள், பெண்கள் தைக்காக்கள், பொது நல அமைப்புகளின் வளாகங்கள், பள்ளி - கல்லூரிகள், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் நடத்தவுள்ளதாகவும் " இருப்பது நன்மையைத்தரும் என்பதில் சந்தேகமில்லை.
--------------------------------------------
பொது மக்களிடமிருந்து சேகரிக்கும் விவரங்கள் மிகவும் முக்கியமானவை, பயனளிக்கக்கூடியவை. அப்படிப்பட்ட விவரங்களை சேகரிக்கும்போது கூடுமானவரை மிக சரியான தகவல்களை பெறவேண்டும் .

சரியான தகவல்களை வைத்து " ஆய்வு " செய்தால்தான் நல்லதொரு முடிவு கிடைக்கும்.

ஆகையால் செய்தி சேகரிக்கும் முறைகளில் சில மாற்றங்கள் தேவை.

1. ஒவ்வொருவரிடமும் ஏன், எதற்காக இந்த ஆய்வு எடுக்கப்படுகிறது என்பதை தனித்தனியாக சொல்லி விளக்கிய பின்பே இந்த செய்தி சேகரிப்பை தொடங்க வேண்டும். இதனால் இரண்டு, மூன்று நிமிடங்கள் அதிக செலவாகும் என்பது உண்மையே. ஆனால் கூடுமான வரை சரியான தகவல்கள் கிடைக்கும்.

2. படிவங்களை பூர்த்தி செய்யும்போது ஒவ்வொருவரையும் தனித்தனியாக வைத்தே பூர்த்தி செய்ய வேண்டும் அப்பொழுதுதான் கூடிய மட்டும் சரியான தகவலை பெறமுடியும். பிறருக்கு முன்பு சில விசயங்களை சொல்வதற்கு தடுமாற்றங்கள் ஏற்படலாம், கூச்சம் உண்டாகலாம் அல்லது விருப்பமில்லாமலும் போகலாம்.
--------------------------------------------
ஆகவே செய்தி சேகரிப்பு விசயத்தில் சில, சில மாற்றங்களை செய்வதால் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படலாம், நேரங்கள் அதிகம் செலவாகலாம் மற்றும் சில அசௌகரியங்களும் உண்டாகலாம்.

ஆனால் முறையான , கூடியமட்டும் சரியான தகவல்கள் கிடைக்கும். அதன்மூலம் நம்முடைய எண்ணங்கள் நிறைவேறும்.

அதனால் சில மாற்றங்களுடன் செய்தியை சேகரியுங்கள் - வல்ல அல்லாஹ் வெற்றியைத் தருவான் ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved