Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:05:12 PM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5649
#KOTW5649
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, பிப்ரவரி 11, 2011
காயலர்களுக்கு CFFCயின் தாழ்மையான வேண்டுகோள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4165 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் புற்றுநோய் பரவலுக்கான காரணிகளைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டுள்ள குழுமம் CANCER FACT FINDING COMMITTEE - CFFC. இக்குழுமத்தின் மூலம் இதுவரை செய்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், அதற்குதவியுள்ள காயல் நல மன்றங்கள், இனி செய்யப்பட வேண்டிய பணிகள், அதற்காக எதிர்பார்க்கப்படும் காயலர்களின் ஒத்துழைப்புகள் குறித்து CFFC ஒருங்கிணைப்பாளர் சாளை ஷேக் ஸலீம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

அன்புள்ளம் கொண்ட காயலர்களே, உங்கள் அனைவருக்கும் CFFC யின் சார்பில் எங்களின் ஸலாத்தினை உரித்தாக்குகிறோம். அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

CFFC என்ற கேன்சர் நோயின் காரணிகளை கண்டறியும் குழு அல்லாஹ்வின் பேரருளாலும், எங்களையும்-எங்கள் செயல்திட்டங்களையும் அங்கீகரித்து, பொருளாதார ஒத்துழைப்புகளை தந்தருளிய கத்தார், ஜித்தாஹ், சிங்கை, ரியாத் மற்றும் குவைத் காயல் நல மன்றங்களின் பேராதரவாலும், தனது எல்லையை நோக்கி வெற்றிகரமாக பயணித்துக்கொண்டிருக்கிறது.

எங்களின் செயலாக்கத் திட்டத்தின் மொத்த செலவீனங்கள் ரூ.5 லட்சம் வரை ஆகும் என்று ஏன்கனவே அறிவித்திருந்தோம். ஆனால் CFFCக்கு வசூலில் கிடைத்த பணத்தை வைத்து எங்களால் எதுவரை பயணிக்க முடியுமோ அதுவரை பயணித்து வந்துள்ளோம். கடல் தண்ணீர் மற்றும் காற்று சோதனை செய்து முடித்தாகிவிட்டது. முடிவுகள் அதனுடைய ஆய்வறிக்கையுடன் வெகு விரைவில் வெளியிடப்படும்.

CFFCயின் அடுத்தகட்ட நடவடிக்கையாக மொபைல் டவர்களிலிருந்து ஏற்படும் கதிரியக்க வீச்சுக்கள் ஏற்படுத்தும் உடல் உபாதைகள் மற்றும் நமதூரில் நிறுவப்பட்டிருக்கும் மொபைல் டவர்கள் Standard Codeகளை சரிவர பின்பற்றபபட்டுள்ளனவா என்பதை அறியும் ஒரு சோதனையும் செய்யப்படவேண்டியுள்ளது. இச்சோதனைக்கு மட்டும் ரூ.1,76,000 செலவாகும் என்று quotation வந்திருக்கிறது. இந்த சோதனையை நாம் நமது ஊரில் கண்டிப்பாக செய்துதான் ஆகவேண்டிய ஒரு கட்டாயம் நம்மிடையே உள்ளது.

எந்த ஒரு கருத்தையும் யாரோ சொன்னார்கள் என்று ஏற்று, விட்டு விடாமல் அதில் இருக்கும் நன்மை தீமைகளை நாமே அறிந்து மக்களுக்கு தெரிவிப்பதில் CFFC உறுதியாக உள்ளது. ஊர் நலம் என்று வரும்போது இந்த தொகை ஒன்றும் பெரியதாக இல்லாவிட்டாலும், CFFCயிடம் போதுமான நிதி இல்லாததால், நாங்கள் பொதுமக்களிடம் நேரடியாக உதவி கோரி இந்த வேண்டுதலை உங்கள் முன் வைக்கிறோம்.

நமது ஊரின் நலனில் அக்கறை உள்ள, CFFC யின் செயல்பாடுகளில் நம்பிக்கை உள்ள அனைவரும் தயவுசெய்து உங்களின் மேலான பொருளாதார ஒத்துழைப்புகளை இக்ரா செயலாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் அவர்களுக்கு அனுப்பி தரும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இதற்காக நிதியுதவி செய்வோரின் பட்டியல், நன்கொடையாளர்களின் விருப்ப அடிப்படையில் காயல்பட்டினம்.காம் வலைதளத்தில் தினமும் update செய்யப்படும். எங்களின் பணிகள் முடியும் தருவாயில் CFFCயின் எல்லா வரவு செலவுகளும் நமது இதே வலைதளத்தில் அறிவிக்கப்படும்.

எல்லாம்வல்ல அல்லாஹ் நமது அனைவரின் முயற்சிகளையும் வெற்றியாக்கி தருவானகவும் ஆமீன்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தங்கள் சேவை நமதூருக்கு தேவை
posted by A.W.Md Abdul Cader Aalim bukhari (Mumbai) [11 February 2011]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 2613

CFFC க்கு அஸ்ஸலாமு அலைக்கும், தங்கள் சேவை நமதூருக்கு தேவை தங்களின் அன்பான இந்த வேண்டுகோளை நீங்கள் அறிவித்து இருந்தீர்கள் ஆனால் தாங்கள் தயவு கூர்ந்து CFFC யின் BANK A\C NO அல்லது அதனை சார்ந்தவர்களின் A\C NO கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. CFFC - Account Details
posted by Salai Sheikh Saleem (Dubai) [11 February 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2614

Thanks for your interest Dear Alim Muhammed Abdul Cader and CFFC appreciate your initiative and interest over our community.

Dear All: Assalamu Alaikkum (varah) Please generously remit your contributions to the following A/C Details and immediately upon remittance, please send us a email confirming your remittance to haseen70@yahoo.com

Account Detail:

Name: Sheikh Nawas
Bank: ICICI - Kayalpatnam - savings AC
AC No.: 615301006699


Jazakkumullah Hairan !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வேண்டுகோள்!
posted by Mohammad. (saudiarabia) [11 February 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2619

அஸ்ஸாலமு அலைக்கும். காயல் நகர மக்களுக்காக தாங்கள் மேற்கொன்டுள்ள இப்பணி மிகவும் மகத்தானது. நமதூரில் கடல், காற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லியுள்ளீர்கள். குடிதண்ணீர் மற்றும் போரிங் தண்ணீரையும் பரிசோதனை செய்யவில்லையா? ஏனெனில் நமதூரின் கழிவு நீர்தொட்டியின் வழியாகவே குடிதண்ணீர் இணைப்பு பெரும்பாலும் இருக்கிறது. போரிங் இணைப்பும் கழிவு நீர் தொட்டியின் அருகிலேயே உள்ளது. இதைப்பற்றியும் பரிசோதனை மேற்கொண்டால் நல்ல்து. CFFC உறுப்பினர்களுக்கு எஙகளின் வாழ்த்துக்களும், துஆக்களும். இதற்காக நாம் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க கடமைப்பட்டுள்ளோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. வேண்டுகோள் :
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [11 February 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 2624

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

கடல் நீர் மற்றும் காற்று சோதனை செய்து முடித்தாகிவிட்டது என்பதை அறியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.

அடுத்து மொபைல் டவர் மூலமாக ஏற்படக்கூடிய பாதிப்புக்களை கண்டறிய சோதனை செய்ய இருப்பதும், அதற்குண்டான செலவினங்களை பற்றிய விவரங்களையும் அறிவித்திருக்கிறீர்கள்.

இன்ஷா அல்லாஹ்! நமது மக்கள் அதற்குரிய செலவினங்களை வாரி வழங்குவார்கள். நீங்களும் உங்கள் முயற்சிகளை தொய்வு இல்லாமல் தொடர்ந்து செய்து வெற்றியும் பெறலாம்.
------------------------------------------------
சகோதர , சகோதரிகளே !

பொதுவாக உலகம் முழுவதும் புற்று நோயின் தாக்கம் இருந்தாலும் , நமது ஊரிலே அதன் பாதிப்பினால் நிறைய உயிர்களை இழக்கிறோம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே!.

ஒவ்வோர் உயிருக்கும் இறப்பு என்பது விதியாக்கப்பட்டதுதான் அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் புற்று நோய் போன்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு, மிகுந்த நோவினையுடன், சொந்த பந்தங்களும் வேதனையடைந்து மரணம் அடைவதைத்தான் பொறுக்க முடியவில்லை.

புற்று நோய் அல்லது அந்த மாதிரியான ஒரு கொடிய நோய் நம் ஊர் மக்களுக்கு ஏற்பட என்ன காரணம்? என்பதை கண்டறிந்து அது நம் மக்களை இறைவனருளால் பாதிக்காத வண்ணம் பாதுகாக்க வேண்டிதான் CFFC பல வழிகளிலே முயற்சி செய்கிறது.

எனவே அதன் செலவினங்களுக்காக நாம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த அளவு அது ஒரு ரூபாயாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு இலட்சமாக இருந்தாலும் சரி அவரவர்களுக்கு இயன்றதை கொடுத்து இந்த முயற்சியை வெற்றி பெற செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமையுமாகும்.

இது புற்று நோயால் பாதிக்கபட்டவர்களுக்காக என்றோ? அல்லது ஒரு குறிப்பிட்ட நபருக்காக வேண்டியோ செய்யபடுகிற முயற்சி அல்ல. நம் ஊரில் வாழ்கின்ற அத்தனை மக்களுக்காகவும், நம் பிற்கால சந்ததிகளுக்காகவும் செய்யபடுகிற ஒரு முயற்சி.

எனவே இதற்காக கொடுக்கின்ற ஒவ்வொரு ரூபாயிக்கும் காலாகாலமும் தொடராக நன்மை கிடைத்துக்கொண்டே இருக்கும் என்பதை நினைவில் கொண்டு உதவிடுங்கள்.
------------------------------------------------
வேண்டுகோள் :

இந்த செய்தியை படிக்கும் ஒவ்வொருவரும் உதவிடுவதுடன், மற்றவர்களுக்கும் தெரிவித்து உதவச் செய்வீராக.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவனின் கருணையினால் CFFC யின் முயற்சிகள் வெற்றி பெற்று , நம் மக்கள் அனைவரையும் கொடிய நோய்களின் தாக்கத்திலிருந்து காப்பாற்றுவானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. புற்று நோய் காரணிகள்
posted by Salai Sheikh Saleem (Dubai) [12 February 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2634

CFFC க்கு ஆதரவு தெரிவித்து இருக்கும் அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள். புற்று நோய் காரணிகள் என்று நாம் எடுத்துக்கொண்டால் கணக்கிலடங்கா காரணிகள் உண்டு, அவை எல்லாவற்றையும் ஆராய வேண்டும் என்றால் அதற்காக தனி ஒரு அமைப்பே உருவாக்க வேண்டும். CFFC யானது குறிப்பிட்ட மற்றும் அதிகமாக தாக்கங்கள் உண்டு என்று பலராலும் நம்பப்படுகின்ற காரணிகளை மட்டுமே கருத்தில் கொண்டு செயல் பட்டு வருகின்றது.

அதில், தண்ணீர், காற்று, மொபைல் டவர்கள், கிணற்று மற்றும் குடி தண்ணீர், மீன்கள், மற்றும் நமதூரில் விற்பனை ஆகும் மிகவும் மலிவான சமையல் எண்ணை வகைகள் போன்றவற்றை மட்டுமே focus பண்ணிக்கொண்டு இருக்கிறோம். இவைகளில் மறைந்து இருக்கும் உண்மைகள் வெளியில் வந்தாலே நமக்கு போதும்.

CFFCயை பொறுத்தவரை, நமதூருக்கு ஊழியம் செய்வது எங்கள் கடமை, எங்களை ஆதரித்து ஊக்கம் அளிப்பது உங்கள் உரிமை. நிதி நிலைமையை வைத்து, நாங்கள் எவ்வளவு தொலைவிற்கும் செல்ல தயார். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Your contribution to CFFC
posted by Salai Sheikh Saleem (Dubai) [14 February 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2652

In my previous posting, I have mentioned Br. Sheik Nawas name as "Sheikh", please correct it and generously remit your contribution to CFFC to the following A/C Details:

Account Detail:

Name: Sheik Nawas
Bank: ICICI - Kayalpatnam - savings AC
AC No.: 615301006699

Jazaakkallahu Hairan !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
வழமைபோல “செங்கடல்”!  (12/2/2011) [Views - 4626; Comments - 4]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved