Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:25:24 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5543
#KOTW5543
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஐனவரி 25, 2011
மகுதூம் பள்ளி முதல் தளத்தில் கான்க்ரீட் மேற்கூரை கட்டிடப் பணிகள் நிறைவேற்றம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3756 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மகுதூம் தெரு - குத்துக்கல் தெரு முனையில், புதுக்கடைத் தெரு - குறுக்கத் தெரு ஆகிய தெருக்களை அரவணைத்தவாறு அமைந்துள்ளது மகுதூம் பள்ளிவாசல்.

இட நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இப்பள்ளிவாசலின் பழைய கட்டிடம் அப்புறப்படுத்தப்பட்டு, புதிய கட்டிட கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தரைதளப் பணிகள் ஓரளவுக்கு முற்றுப்பெற்றுள்ளதையடுத்து, முதல் தளப்பணிகள் தற்சமயம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதல் தளத்தில் கான்க்ரீட் மேற்கூரை அமைப்புப் பணிகள் நேற்று நடைபெற்றது.


பள்ளி கட்டிடப் பணிகள் - குறுக்கத் தெருவிலிருந்து பதியப்பட்ட காட்சி...

கட்டிடப் பணிகள் குறித்து அப்பள்ளியின் கட்டிடப் பணிக்குழு சார்பில் அதன் தலைவர் ஹாஜி அரிஸ்டோ இக்பால் தெரிவித்துள்ளதாவது:-

அன்புடையீர அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...

இறையருளால் நமது மகுதூம் பள்ளிவாசல் கட்டிடப் பணிகள் பல்வேறு சிரமங்களுக்கிடையில் நடைபெற்று வருகிறது. தரைதளப் பணிகள் ஓரளவுக்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் தள கட்டுமானப் பணிகள் தற்சமயம் நடைபெற்று வருகிறது. மஹல்லாவாசிகள் மட்டுமின்றி நகர பொதுமக்கள் மற்றும் பலரின் பொருளாதார ஒத்துழைப்புகளைக் கொண்டே இக்கட்டுமானப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.


ஓரளவுக்கு முடிவுற்றுள்ள தரைதளப் பணிகள்...


முதல் தளத்தின் மேற்கூரைக்கான கான்க்ரீட் பணிகள்...


பள்ளி புதிய கட்டிடம் - வடமுனை (மேலிருந்து கீழாக)


பள்ளி புதிய கட்டிடம் - வடமுனை - படம் 2 (மேலிருந்து கீழாக)


பள்ளி புதிய கட்டிடம் – வடமேற்கு முனை (கீழிருந்து மேலாக)


பள்ளி புதிய கட்டிடம் – தென்மேற்கு முனை (கீழிருந்து மேலாக)

இப்பணிகளை இன்னும் துரிதப்படுத்தி விரைவாக நிறைவேற்றிடும் பொருட்டு ஒரு முஸல்லாவுக்கு (தொழுமிடத்திற்கு) ரூ.5000 (ஐந்தாயிரம் ரூபாய்) செலவாகும் என்று கணக்கிட்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி ஜமாஅத்தார், மஹல்லாவாசிகள் உள்ளிட்ட அனைத்து காயலர்களும், பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளில் ஆர்வம் கொண்டுள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் இதையே தங்களிடம் நாங்கள் நேரில் தரும் வேண்டுகோளாக ஏற்று, தங்களால் இயன்றளவுக்கு பல முஸல்லாக்களுக்கு நிதியுதவியை வாரி வழங்கிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

ஒரு முஸல்லாவுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட குறைவான அளவில் நன்கொடை தர விரும்புவோரும் தயங்காமல் இந்த வகைக்காக உதவலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்கொடைகள் தர விரும்புவோர்,

Bank Account No. 2081267035,
Central Bank of India,
Kayalpatnam Branch


என்ற வங்கிக் கணக்கிற்கு டி.டி.யாகவோ, காசோலையாகவோ அனுப்பித் தரலாம் என்றும், நேரில் சந்தித்து நன்கொடையளிக்க விரும்புவோர், பள்ளியை ஒட்டியுள்ள ஃபாயிஸீன் சங்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பள்ளி கட்டிடப்பணிக் குழு அலுவலகத்தில் தமது நன்கொடைகளை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறும் அன்புடன் வேண்டுகிறோம்.

எல்லாம்வல்ல அல்லாஹ் நம் யாவரின் நல்லமல்களையும் ஏற்று ஈருலகிலும் நன்மைகளை வாரி வழங்கியருள்வானாக ஆமீன்.

தற்சமயம், ஃபாயிஸீன் சங்க வளாகத்தில் ஐவேளை தொழுகை நடைபெற்று வருகிறது. பள்ளியின் தரை தள கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவுற்றதும், இன்ஷாஅல்லாஹ் விரைவில் பள்ளியின் தரை தளத்தில் தொழுகை நடைபெறும் என்பதையும் அன்புடன் அறியத் தருகிறோம்.


இவ்வாறு மகுதூம் பள்ளி கட்டிடப் பணிக்குழு தலைவர் ஹாஜி அரிஸ்டோ இக்பால் தெரிவித்துள்ளார்.

தகவல்:
மகுதூம் பள்ளி கட்டிடப் பணிக்குழு சார்பாக,
முஹம்மத் இப்றாஹீம் (48),
காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நேரில் பார்த்த உணர்வு
posted by Jiyaudeen (al-khobar) [25 January 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2393

மாஷா அல்லாஹ்.. மாஷா அல்லாஹ்..

எங்களைப்போல வெளிநாட்டில் வாழ்பவர்கள் கட்டிடப்பணிகளை நேரில் பார்த்த உணர்வு வருகிறது. மடக்கி மடக்கி பல கோணங்களில் எடுத்த புகைப்படங்கள் அருமை அருமை.

இன்ஷா அல்லாஹ் கூடிய சீக்கிரம் எல்லாப்பணிகளும் நிறைவு பெற்று எந்த இடைஞ்சலும் இல்லாமல் முழுமை பெற துஆ செய்கிறோம். மேலும் இந்த புனித பணியில் இனைந்துள்ள அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நற்கூலியை கொடுப்பானாக..!!

சரி, காங்கிரீட் போடும் வேலைக்கு வெள்ளை வேஷ்டி கட்டிக்கொண்டா செல்வது..மேலே தெறித்து விடப்போகிறது..பார்த்து பார்த்து .. (வீட்டிலே யாரு திட்டு வாங்குறது )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Masha allah.....
posted by M.S.ABDULAZEEZ (ganghzou) [25 January 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 2394

Masha allah.... i am very happy to see this insha allah i will pray in this new mosqe in very soon.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. MASJIDH CONSTRUCTION COMMITTEE
posted by M.A.C. AHAMED THAHIR (KOLKATA) [25 January 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 2395

DEAR JANAAB,

I WOULD LIKE TO MENTIONED U THAT, U HAVE NOT GIVEN PARTICULAR BANK ACCOUNT (PAYEE) NAME. THEN, HOW WE PUT THE CASH TO THAT ACCOUNT? SO, KINDLY GIVE ME DETAILS FOR ABOVE ACCOUNT PAYEE NAME..

THANKING YOU, WASSALAAM,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ‘‘நல்லோரின் உள்ளம் நாயனின் இல்லம்”
posted by Mohamed Rafeeq (Holy Makkah) [26 January 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2399

பாரம்பரிய மிக்க மகுதூம் பள்ளியின் கம்பீரமானத் தோற்றம் எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!இதற்காக உடலால்,உழைப்பால்,உள்ளத்தால்,பொருலால்,பனத்தால்,உதவியவர்களுக்கும்,உதவ நாடியிருப்பவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடத்திலிருந்து சிறப்பான நற்கூலி, இம்மையிலும்,மறுமையிலும் கிடைக்க, துஆ’ச்செய்கின்றேன்.ஆமீன்.

புனித மக்காவிலிருந்து,
எம்.என்.எல்.முஹம்மது ரஃபீக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Magdoum Palli
posted by M.A.S.Ayoob (Abu Dhabi) [26 January 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2405

Masha Allah its very nice to see the construction work going on full swing. Insha Allah lets hope for the completion of the mosque without any further hicupps.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Alhamdulillah
posted by Mohammed Zackariya (vellore) [26 January 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 2406

I am very happy 2 see the picture of Majid...after a long time i saw dis pic,so i am extremely happy...and also i would like 2 thanks masjid construction committee.Alhamdulillah...

wassallam....

Regards,
MOHAMMED ZACKARIYA LABEEB S/O S.T.Labeeb


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Admin
posted by Sayna (Bangkok) [26 January 2011]
IP: 203.*.*.* Thailand | Comment Reference Number: 2409

Dear Admin, or Shalie,

M.A.C.AHMED THAZIR Reqhest the Account name of the Masjid Untill now nobody update the news.

Just i will copy and paste his Request

DEAR JANAAB,

I WOULD LIKE TO MENTIONED U THAT, U HAVE NOT GIVEN PARTICULAR BANK ACCOUNT (PAYEE) NAME. THEN, HOW WE PUT THE CASH TO THAT ACCOUNT? SO, KINDLY GIVE ME DETAILS FOR ABOVE ACCOUNT PAYEE NAME..

THANKING YOU, WASSALAAM, Please updte this news


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. சுலைமான் மச்சான்.
posted by Mahmood Seyed (Kingdom Of Saudi Arabi.) [27 January 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2413

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு என்ன சுலைமான் மச்சான் அரசியலில் குதிக்கப் போகிறீர்களா? ‘ஆக்டிங் ‘ எல்லாம் ரொம்ப ஓவராக இருக்கு.

அரசியலில் குதிக்கப் போவதாக இருந்தால் அதில் தவறில்லை. மக்களுக்கு நல்ல பல நன்மைகளைச் செய்யலாம்.

ஆனால் நீங்கள் நிற்கும் இடத்திலிருந்து பின் பக்கம் குதித்து விடாதீர்கள். அங்கு ‘மைய வாடி’தான் இருக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved