Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:35:19 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5459
#KOTW5459
Increase Font Size Decrease Font Size
புதன், ஐனவரி 12, 2011
எஸ்.கே.: வாழ்க்கை குறிப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 6772 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (25) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சமூக ஆர்வலரும், காயல்பட்டணம் அல்ஜாமியுல் அஸ்ஹர் ஜும்மா பள்ளியின் செயற்க்குழு உறுப்பினரும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் கவுரவ ஆலோசகருமான கொச்சியார் தெருவை சார்ந்த எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் அவர்கள் இன்று காலை 11.20 மணியளவில் காலமானார்கள். அன்னாருக்கு வயது 69.

அன்னாரின் ஜனாஸா, நாளை வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு, குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

வணிகப் பெருங்குடியினராகிய சொளுக்கார் குடும்பத்தில் பிறந்த எஸ்.கே. அவர்கள் வளர்ந்தது இலங்கையில் கண்டி மாநகரில். அவருடைய தந்தை மர்ஹூம் எஸ்.கே.முஹம்மத் லெப்பை அவர்களை அதிபராகக் கொண்டு எஸ்.கே.எஸ். ஜுவல்லர்ஸ் அங்குதான் வணிகம் புரிந்தது. தனது தந்தையின் பராமரிப்பில் வளர்ந்த எஸ்.கே. அவர்கள், கல்வி பயின்றது கண்டி மாநகரில் உச்சியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற ட்ரினிட்டீ காலேஜ்.

ஏராளமான ஆங்கில, ஐரோப்பிய ஆசிரியர்களைக் கொண்டிருந்த அக்கல்லூரியில் மாணவர்களுள் கணிசமானவர் வெளிநாட்டினரே. ஆனால் அங்கே பயின்ற எஸ்.கே. அவர்கள், பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. உலகத்தின்பால் தனது கண்களைத் திறந்துவிட்டது திரித்துவக் கல்லூரிதான்... ஆனால் எதைப் பார்க்க வேண்டும்; எதை எப்படிப் பார்க்க வேண்டும்; எதைப் பார்க்கக் கூடாது என்பனவற்றைக் கற்றுத் தந்து என்னைப் பக்குவப்படுத்தியது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி என்று எஸ்.கே. அவர்கள் பின்னர் நினைவு கூறியதுண்டு .

அவர் கண்டியில் படித்தபோது அவருடைய சக கால மாணவர்களாக, வகுப்பறைத் தோழர்களாக இருந்தவர்கள் இலங்கை இராணுவத் தளபதி டென்ஸில் லக்ஷ்மன் கொப்பேகடுவ, ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட காமினி திஸாநாயக்க ஆகியோர். அவரது மற்றொரு தோழர் அதே கல்லூரியில் அவருக்கு சீனியராக இருந்த சட்ட வல்லுனர் அல்ஹாஜ் ஃபாயிஸ் முஸ்தஃபா அவர்களாவார்.

ஜமாஅத்தே இஸ்லாமியின் வழிகாட்டுதலில், அதன் அமீர்களாக இருந்த மவ்லானா ஜெய்லானி ஸாஹிப், மவ்லானா முஹம்மத் யூஸுஃப் ஸாஹிப், மவ்லானா தாஸீம் நத்வீ, மவ்லானா அஹ்மத் லெப்பை, மவ்லானா செய்யித் முஹம்மத் ஸாஹிப், அதில் முன்னோடிகளாக இருந்த மவ்லானா மவ்லவீ ரூஹுல் ஹக் ஸாஹிப், மவ்லானா அபூபக்கர் ஸாஹிப், மவ்லானா மவ்லவீ இப்றாஹீம் ஸாஹிப், மவ்லானா பி.டி.எம்.முஹ்யித்தீன் ஸாஹிப் ஆகியோருடன் நெருங்கி பழகினார். அந்தக் காலங்களில் ஆண் - பெண் இரு பாலருமடங்கிய இளைய தலைமுறையினருக்கிடையில் இஸ்லாமிய விளக்க வகுப்புகள், பயிற்சிப் பட்டறைகள் நடத்தினார். அதில் உருவான பலர் இன்று இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியில் மிக முக்கியப் பொறுப்புகளில் இருக்கின்றனர்.

இலங்கையிலிருந்து இந்தியா திரும்பிய பிறகு இந்திய ஜமாஅத்தே இஸ்லாமியோடு அவரது பயணம் தொடர்ந்தது. சென்னை மாநகரில் இருந்த காலங்களில், மவ்லானா மர்ஹூம் ஜெமீல் அஹ்மத் ஸாஹிப், மும்பை மாநகரில் இருந்தபோது மவ்லானா அல்லாமா மர்ஹூம் ஷம்சுத்தீன் பிலால் பீர்ஜாதா, டெல்லி மாநகரில் இருந்தபோது இந்திய ஜமாஅத்தே இஸ்லாமியின் 15க்கும் மேற்பட்ட பிரசுரமான நூல்கள், சஞ்சிகைகள் ஆகியவற்றின் கண்காணிப்பாளராக இருந்த மவ்லானா மர்ஹூம் முஹம்மத் யூஸுஃப் சித்தீக்கி, ஜமாஅத்தின் ஆங்கில சஞ்சிகையான Radiance இதழின் ஆசிரியர் அமீனுல் ஹஸன் ரிஸ்வீ மர்ஹூம் மற்றும் பேராசிரியர் அன்வர் அலீ கான் ஸோஸ் போன்றோரின் வழிகாட்டுதலில் தனது பயணம் தொடர்ந்ததாக பின்னர் நினைவுகூர்ந்தார் எஸ்.கே. அவர்கள்.

இந்தியாவில் 1975 அளவில் இந்திய முஸ்லிம் மாணவர் பேரவை (MUSLIM STUDENTS ASSOCIATION) அமைத்து, இந்தியா முழுவதும் அதற்காக சுற்றுப்பயணம் செய்தார். பிறகு இந்தியா முழுவதிலுமுள்ள ஜமாஅத்தே இஸ்லாமி செல்வாக்குக்குட்பட்ட அனைத்து இஸ்லாமிய மாணவ இயக்கங்களையும் ஒருங்கிணைத்து, இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தை (STUDENTS ISLAMIC MOVEMENT OF INDIA) அலிகர் பல்கலைக் கழகத்தில் 1976இல் அமைத்திட்ட ஐந்து நிறுவனத் தலைவர்களுள் எஸ்.கே.யும் ஒருவர். மற்ற நான்கு பேர் டாக்டர் அஹ்மதுல்லாஹ் சித்தீக்கீ, டாக்டர் முகீமுத்தீன், டாக்டர் ஸக்கீ கிர்மானீ, அமானுல்லாஹ் கான் ஆகியோர்.

1977இல் மீண்டும் இலங்கைக்கு வந்த எஸ்.கே. அவர்கள் அப்போது அமைந்த ஜனாதிபதி ஜெயவர்த்தன அரசில் சட்டப்பேரவைத் தலைவராக இருந்த மர்ஹூம் முஹம்மத் அப்துல் பாகிர் மாகார் அவர்களுக்கு ஆலோசகராக இருந்து, அப்போது பாகிர் மாகாரின் செயலாளராக இருந்த நண்பர் அப்துல் ஹமீத் முஹம்மத் அஸ்வருடன் பணியாற்றியதோடு, அஸ்வர் அவர்களோடு இணைந்து பாகிர் மாகார் அவர்கள் நிறுவிய உதயம் என்ற சமுதாய தமிழ் வார இதழில் பணியாற்றினார்.

1979இல் ஈரானியப் புரட்சி நடந்து, ஈரான் மன்னர் ஷா வெளியேற்றப்பட்டார். உலக நாடுகளிலிருந்த ஈரானிய தூதர்கள் இஸ்லாமிய ஆட்சியின் தண்டனைக்கு அஞ்சி லண்டனில் தஞ்சம் புகுந்தனர். அப்படி அனாதையாக்கப்பட்ட தூதரகங்களில் ஒன்று இலங்கையிலிருந்த ஈரான் தூதரகம்.

அந்நேரத்தில் அமைந்த ஈரானிய இஸ்லாமிய அரசு தனது இலங்கை தூதரகத்திலிருந்த இரண்டாம் நிலை அதிகாரியான அஸ்கர் தஸ்மாய்ச்சிக்கு ஓர் உத்தரவு பிறப்பித்தது: அடுத்து ஒரு முழுமையான தூதர் நியமிக்கப்படுகிற வரை அந்தப் பொறுப்பை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியிடம் ஒப்படைத்து, அப்போதைய அமீர் மவ்லானா முஹம்மத் யூஸுஃப் ஸாஹிப் அவர்களின் ஆணையின்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதே அந்த உத்தரவு.

மவ்லானா முஹம்மத் யூஸுஃப் ஸாஹிப், ஈரானிய தூதரகப் பணிக்கு எஸ்.கே. அவர்களை விட்டுத் தருமாறு அப்போதைய சபாநாயகர் அல்ஹாஜ் பாகிர் மாகாரிடம் கேட்டார். அனுமதி வழங்கிய அல்ஹாஜ் பாகிர் மாகார் அவர்கள், ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் ஈரானின் தூதரகத்துக்காக ஒதுக்குமாறு எஸ்.கே.யைப் பணித்தார். எஸ்.கே. அவர்களும் கிட்டத்தட்ட ஒரு தூதர் போன்றே ஈரானிய தூதரகத்தில் பணியாற்றினார். அப்போது நிறைய அரசு அதிகாரிகள், அந்நிய நாட்டு தூதுவர்கள் ஆகியோரையும், மிக அதிகமாக ஊடகத்தாரையும் சமாளிக்கின்ற பொறுப்பை மிகவும் திறமையுடன் செய்து, அல்ஹாஜ் பாகிர் மாகார், மவ்லானா முஹம்மத் யூஸுஃப் ஆகிய இருவரின் பாராட்டுக்களையும் பெற்றார். அப்போது இலங்கை முழுவதும் பயணித்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் எஸ்.கே. இருந்தார். பிறகு ஈரானிலிருந்து இலங்கை வந்த அதிகாரிகளும் கூட சிறிது காலம் எஸ்.கே. அவர்களின் வழிகாட்டுதலிலேயே பணியாற்றினர்.

1981இல் இந்தியா திரும்பி, டில்லி மாநகரின் அனைத்திந்திய இஸ்லாமிய மாணவரியக்கத்தின் நிறுவனமாகிய ஹிந்துஸ்தான் பப்ளிகேஷன் பதிப்பகத்தின் ஆங்கிலப் பிரிவுக்கு பொறுப்பாளராக இருந்தார். இந்திய தேசிய மொழிகள் பதினைந்திலும் நூற்களை வெளியிட்ட பெரிய நிறுவனமது.

அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த போதுதான் 1985இல் சஊதி அரேபிய அரசின் சார்பில், மஜம்மஅல் மலிக் ஃபஹத் லி தபாஅ அல் முஸ்ஹஃபிஷ் ஷரீஃப் - அதாவது, புனித வேதமாம் அல்குர்ஆனை அரபு மொழியில் பல அளவு வடிவங்களிலும் பதிப்பித்து மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காகவும், புனித வேதத்தை அனைத்து மொழியிலும் பதிப்பிப்பதற்காகவும் மன்னர் ஃபஹதால் நிறுவப்பட்டு, ஷெய்க் அப்துர்ரஹ்மான் அல்அகீல் என்பவரால் இயக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய அச்சகமாகும். அது மதீனா மாநகரின் மையப்பகுதியில் இருந்த அந்த பெரும் அச்சு வளாகத்தில் ஆங்கிலப் பிரிவில் பணியாற்றிட ஷெய்க் அவர்களாலேயே அழைக்கப்பட்டு, சஊதி அரசின் விருந்தினராக ஹஜ்ஜையும் முடித்து, பேராசிரியர் ஸலீம் கியானீ, அறிஞர் ஹபீபுர்ரஹ்மான், அறிஞர் ழியாவுத்தீன் அர்பல் ஆகியோருடன் அல்லாமா யூஸுஃப் அலீ அவர்களுடைய ஆங்கில தஃப்ஸீரில் திருத்தங்கள் செய்து, காலத்திற்கேற்ப நவீன விளக்கங்களைத் தருகின்ற பொறுப்பில் சிறப்பாக பணியாற்றினார் எஸ்.கே.

அந்த திருத்தப்பட்ட அல்லாமா யூஸுஃப் அலீ அவர்களின் அந்த ஆங்கில தஃப்ஸீர்தான் இன்று உலகெங்கும் புழக்கத்திலுள்ளது என்பது கவனிக்கத்தக்கதாகும். அன்ஸாரிகளின் வம்சவழி வந்த ஷெய்க் அப்துர்ரஹ்மான் பின் அகீல் அவர்களோடு இணைந்து புனித வேதமாகிய திருக்குர்ஆனில் பணியாற்றிய அந்த அரும்பெரும் வாய்ப்புதான் தனது அனுபவங்களில் உச்சகட்டம் என்று பின்னர் எஸ்.கே. நினைவுகூர்ந்தார்.

1992இல் அவருடைய நண்பர் அல்ஹாஜ் அப்துல் ஹமீத் முஹம்மத் அஸ்வர் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவால் அழைக்கப்பட்டு, வக்ஃப் மற்றும் இஸ்லாமிய சமய கலாச்சார அமைச்சராக பணியமர்த்தப்பட்டபோது, அவருக்கும் ஆலோசகராக இருந்து இலங்கையில் சமுதாயப் பணியைச் செய்வதற்கு அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார் எஸ்.கே. அக்காலத்தில், இலங்கை அரசின் சிறப்பு விருந்தினராக மீண்டும் ஹஜ்ஜுக்கு சென்று வந்தார் அவர்.

அதன் பிறகு நாடு திரும்பி, டில்லி மாநகரில் சிறிது காலம் இருந்துவிட்டு, சொந்த ஊராகிய காயல்பட்டினம் திரும்பினார். அங்கு மார்க்கப் பணியில் ஈடுபட்டு, இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் என்ற அமைப்பு உருவாகவும், ஆயிஷா சித்தீக்கா என்ற மகளிர் கல்லூரி அமையப்பெறவும் அவருடைய ஒத்துழைப்பை நல்கினார்.

ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக டாக்டர் ஜாகிர் நாயக் சென்னை வந்தபோது, அவருக்கு எஸ்.கே. அறிமுகம் செய்யப்பட்டார். அப்போது டாக்டர் ஜாகிர் நாயக் கேட்டுக்கொண்டதுக்கு இணங்கி அவரின் ஆங்கில உரையாடல்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணியை ஏற்றுக்கொண்டார். பல குறுந்தகடுகள் தற்போது வெளிவந்துள்ளன.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. INNA LILLAHI WA INNA ILAIHI RAJIWOON
posted by Abdulcsm (Hong Kong) [12 January 2011]
IP: 123.*.*.* Hong Kong | Comment Reference Number: 2174

Salaamun Alaikum,

"INNA LILLAHI WA INNA ILAIHI RAJIWOON!!!"

May Allah forgive his sins and award him the highest state in Jannathul Firdous Ahla!! inshaallah!!

and give his family Sabr ameen!!

Wasslaam,

Abdul Cader...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இன்னா லில்லாஹ்
posted by அப்துல் ரஹ்மான் (கத்தார்) [12 January 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 2188

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. INNA LILLAAHI WA INNA ILIHI RAAJIOON
posted by muhamed ibrahim (kpm) [12 January 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 2190

OUR COMMUNITY LOSS SUCH A KNOWLEDGABLE PERSON, MAY ALLAH MAKE HIS LIFE OF AAKHIRA GOOD, AAMEEN.FOR HIS FAMILY KEEP SABOOR.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. inna lillahi
posted by ஃபெரோஸ்கான் (Kuwait) [12 January 2011]
IP: 78.*.*.* Kuwait | Comment Reference Number: 2192

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அல்லாஹ் அவரின் பிழைகளை பொறுத்து சுவனத்தை தந்தருள்வானாக. அவரின் இளவல்களுக்கு குறிப்பாக என்னருமை சகோதரர் ஷமீமுக்கு அழகிய பொறுமையை தந்தருள்வானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Lasting Legacy
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [12 January 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 2193

Amazing biography. As he himself stated "ஷெய்க் அப்துர்ரஹ்மான் பின் அகீல் அவர்களோடு இணைந்து புனித வேதமாகிய திருக்குர்ஆனில் பணியாற்றிய அந்த அரும்பெரும் வாய்ப்புதான் தனது அனுபவங்களில் உச்சகட்டம் என்று பின்னர் எஸ்.கே. நினைவுகூர்ந்தார்", his work on the Qur'an would be the lasting legacy.

Thanks for publishing. After his passing away, i'm wondering if we didn't utilize his full potential.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Allahu Akbar
posted by Abdul Razak (Chennai) [12 January 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 2198

எஸ் கே மாமா உங்கள் வாழ்க்கையை படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு உத்வேகம் பிறக்கும், இவ்வளவு குறுகிய காலத்தில் சமுதாயத்துக்காக இவ்வளவு நிறையை பணிகளை பண்ண முடியுமா என்று..

உண்மையில் உங்கள் வாழ்க்கையை சமுதாயத்துக்கு மிக பயனுள்ளதாகவே கழித்துள்ளீர்கள். அல்லாஹ் உங்களுக்கு நல்ல கூலியை வளங்குவானாக .

அல்லாஹ் உங்கள் கப்ருடைய வாழ்க்கையை நல்லதாக ஆக்குவானாக. மறுமையுடைய வாழ்க்கையை வெற்றி ஆக ஆக்குவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Deep Condolences
posted by S.A.Thameemul Ansari (Libya) [13 January 2011]
IP: 41.*.*.* Libyan Arab Jamahiriya | Comment Reference Number: 2206

With the demise of this great man of knowledge ends an era in the history of Kayalpatnam. Deep condolences to the bereaved family and friends.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. வஃபாத் இரங்கல் செய்தி
posted by Jameel Mohamed (கீழக்கரை) [13 January 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2211

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அறிஞர் எஸ்.கே.ஷாஹுல் அவர்களின் வஃபாத் செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். 1986, 87 காலக்கட்டங்களி்ல் நான் சிம்மில் இருந்தப் பொழுது சகோதரர் எஸ்.கே அவர்கள் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு குர்ஆன் விளக்கவுரை நடத்துவர். அவர் நடத்தும் விதமும் பாங்கும் அலாதியானது. புது புது கருத்துக்களை பெறுவதில் தனி இன்பமும். 25 வருடங்களுக்கு முன்பு அவர்கள் நடத்திய அல் ஃபாத்திஹா சூராவிற்கான விளக்கத்தை இன்னும் என் மனதில் பசுமையாக வைத்துள்ளேன்.

அவர் பேசும் ஆங்கில புலமையும், தமிழ் அழகும் மிக மிக அலாதியானது. எங்களை விட 20 வருடத்திற்கும் மேலாக மூத்தவராக இருந்தாலும், ஒரு வயது ஒத்த தோழனைப் போல் அவர் பழகும் விதமும் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.

சென்ற சில மாதத்திற்கு முன்பு சன்டிவியில் நம் ஊர்களில் பயன்படுத்தும் வார்த்தைகள்தான் சுத்த தமிழ் என அவர் அளித்த விளக்கம் நிறைய சகோதரர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தது.

என்னுடைய சகோதரர்களில் ஒருவரான, நல்ல ஆசிரியரான, நல்ல நண்பரான எங்களது எஸ்.கே.அவர்கள் வஃபாத்தான செய்தி என்னை கண்கலங்க வைத்தது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன். அல்லாஹ் அவர்களுக்கு நல்லருள் செய்யட்டும்.

அவரை பிரிநதுள்ள அவரது குடும்ப அங்கதினர்களுக்கு அல்லாஹ் அழகிய பொறுமையை வழங்கட்டும் என துஆச் செய்கிறேன்.

சகோதரர்கள் ஷமீம், ஸாலிஹ் ஆகியோருக்கு என் ஸலாத்தினை தெரிவிக்கவும்.

அன்புடன் தாங்களின் சகோதரன்
கீழை ஜமீல் முஹம்மது
ஆசிரியர்
கீழக்கரை அஞ்சல்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. ஸதக்கத்துன் ஜாரியா
posted by M.S. அப்துல் ஹமீது (Dubai) [13 January 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2217

அல்லாமா யூஸுஃப் அலீ அவர்களின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பை பரந்து விரிந்து கிடக்கும் இப்பூவுலக மக்கள் படிக்கும் காலமெல்லாம் அந்த நன்மைகளில் ஒரு பகுதி எஸ்.கே. அவர்களுக்குப் போய்ச் சேரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Deep Condolences
posted by M.A.ABOOBACKER ( KALAVA) (YANBU AL BAHR) [13 January 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2220

INNALILLAHI WA INNAILAIHI RAJHOON


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. மண்ணுக்குள் புதைந்த விதை
posted by kavimagan (dubai) [13 January 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2231

மாமா! நீங்கள் வெறும்
மலர்ந்து உதிர்ந்த பூவல்ல!
மண்ணுக்குள் புதைந்த விதை!!

ஆங்கிலத்திற்கே ஆங்கிலத்தை
அறிமுகப்படுத்திய அகராதி!
அலங்காரம்,அகங்காரம் ஏதுமின்றி
அன்பாலே ஆட்சிசெய்த அதிகாரி!!

எந்தைக்கும் எனக்கும் மட்டுமல்ல-என்
ஐந்துவயது மகனுக்கும் தோழன் நீ!
தலைமுறைகள் தாண்டியஉன் நெறிமுறைகள்
தூங்காமல் தொடரட்டும் துலங்கட்டும்!!

ஒருமனிதன்என்ற முறையில்நீ செய்தபிழை
உண்டாயின் மன்னிக்க வேண்டிடுவோம்!
உயர்வான சுவனம்நீ ஏகிடவே
இருகரமேந்தி இறையிடமே முறையிடுவோம்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Thanks for Kayalpatnam.com
posted by Firdous (Dubai) [13 January 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2233

What we knew about SK mama was very little. Thanks for Kayalpatnam.com to bring the brief life history of SK Mama to limelight. It is inspiring! May Allah blesses him.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. எஸ்.கே.: வாழ்க்கை குறிப்பு!
posted by Mohamed Uvais (Eruvadi) [13 January 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2241

வாழ்பவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் இவரைப்போன்ற அருஞ்செயல் செய்தவர்களே.. அல்லாஹ் அன்னாரின் அனைத்து நற்செயல்களையும் அங்கீகரிப்பானாக. மறுமையில் நாம் அனைவரும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடன் ஒன்றாக இருக்க வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. aware of the death
posted by mujeebur rahman fasi (kuwait) [13 January 2011]
IP: 62.*.*.* Kuwait | Comment Reference Number: 2242

எஸ்.கே மாமாவின் மறைவு காயல்பட்டணத்திற்கு ஒரு பேரிழப்பு என்பதில் மாற்று கருத்து இல்லை. நான் அவர்களுடன் பழகிய காலங்களில் அவர்களின் மொழி திறமையும் தொலை நோக்கு பார்வையும் கண்டு ஆச்சரியமடைந்தேன். இப்படி பட்ட பல திறமைசாளிகள் சமுதாயத்தில் உருவாகி சமூகத்திற்கு பல்வேறு நல்ல பணிகள் ஆற்ற வேண்டும். மாமாவிற்காக துஆ செய்கின்றேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. SK Mama - a friend for all ages!
posted by Javed Nazeem (Chennai) [13 January 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 2250

Kavimagan wrote:

எந்தைக்கும் எனக்கும் மட்டுமல்ல-என் ஐந்துவயது மகனுக்கும் தோழன் நீ!

Good point Kavimagan.

Some time back, when I was in Kayal, took my 3 year old son for a walk to the Bazaar. While coming back, he refused to walk and insisted on carrying him. Happened to meet SK Mama near the AP st - SC road corner. He asked my son - why dont you walk? - for which my son said கால் வலிக்குது. He asked, உங்க வாப்பா கால் வலிக்காதா? My son calmly got down and started walking. He had this amazing ability to connect with people of all ages. Held his elders in high regard - I have personally seen his respect towards people like Syed Alim, my grand father and Kavignar SMB Mahmood Hussain.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. May his Soul Rest in PEACE
posted by Late Haji S.N Sulthan & Family (Kayalpatnam) [13 January 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 2252

We extend our deep & sincere condolences to SK Mama & their family

Let the Almighty Allah elevate his soul and keep him at JANNATHUL FIRDHOUSE

We all pray for his Maghfirath

A!meen

>>> INNA LILLAHI WA INNA ILAIHI RAJIOON <<<

FROM

SNS & FAMILY
1-C BEACH STREET
KAYALPATNAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Plz pray 4 his magfirath
posted by FSK (United Kingdom) [13 January 2011]
IP: 93.*.*.* United Kingdom | Comment Reference Number: 2255

"அல்லாமா அப்துல்லாஹ் யூஸுஃப் அலீ அவர்களின் மொழிபெயர்ப்பை படி; அந்த ஆங்கில நடை உனக்கு படிப்பதற்கு எளிமையாக இருக்கும்" என்று வலியுறுத்திய என் தந்தை அதில் தனது பங்களிப்பை பற்றி சொன்னதில்லை..

எங்கள் தந்தை எங்களுக்கு வழங்கிய மிகப்பெரிய சொத்து இந்த மண்ணின் மக்கள். கையில் இருந்த வைரத்தின் விலைமதிப்பு தொலைத்த பின்தான் புரிகிறது. எனது தந்தைக்கு மேலான ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் கிடைக்க இறைவனை இறைஞ்சுமாறு வேண்டுகிறோம். இரங்கல் கருத்து பதிவு செய்த அனைவருக்கும் நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. கருணையாளனே கருணை காட்டு
posted by Sikkandar Batcha (Coimbatore) [13 January 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 2258

யா அல்லாஹ்!
எஸ்.கே அவர்களின் மறுமை வாழ்வை செழிப்பாக்கு...! அன்னாரின் மீது உன் கருணை மழையை பொழி, உன்னையன்றி அவருக்கு கருணை காட்டக்கூடியவர்கள் யாருமில்லை.

அவருடைய குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை கொடு...!
சகோதரர் ஷமீம் அவர்களுகளின் மனவுறுதியையும், பொறுமையையும் அதிகப்படுத்து...!
அவர்களுக்கு ஆறுதல் கொடு...!

எங்களனைவரையும் மறுமையில் நல்ல நிலையில் சந்திக்க கூடியவர்களாக ஆக்கியருள்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. permanent
posted by ibrahim (ramnad) [14 January 2011]
IP: 218.*.*.* India | Comment Reference Number: 2261

Innalillaki va inna ilaki ragiun


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. INNA LILLAHI WA INNA ELAIHI RAAGIHOON
posted by Mohammed Rafeek K.M. (KOZHIKKODE/KERALA) [14 January 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 2262

Though I did not have very close contact with S.K.Mama , I heard more about his communication skills,language fluency etc, vacabulory power and translatery skills. To mention his world history knowledge , I would like to point just one incident.Once during my college days, I was reading news papers @ IIM library, I just asked S.K.MAMA Who formed Isreal? he told me the complete story of the formation of Israel which is still ever green in my mind .When I heard his death news I suddenly recalled this event.

MAY ALLAH FORGIVE HIS SINS AND ACCEPT HIS GOOD DEEDS THUS BY GIFTING JANNATHUL FIRDOUS. AMEEN. I HEREBY CONVEY MY SALAM TO HIS FAMILY MEMBERS.

" ASSALAMU ALAIKKUM"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. இதயம் கணத்ததே!!!இதையும் தாங்கவா?
posted by Mohamed Rafeeq (Holy Makkah) [14 January 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2263

எங்கள் அன்பு மாமா எஸ்.கே.அவர்கள் இம் மண்ணுலகிலிருந்து மறைந்தாலும்,எங்கள் நெஞ்சங்களில் என்றும் நிறைந்திப்பார்கள்.ஒவ்வொரு முறையும் நாங்கள் விடுமுறையில் ஊர் வரும் போது கடவாய்ப்பல் தெரிய சிரிப்போடு அடே!தம்பி சுகமா இருக்கிறீயா?என பாசத்தோடு கேட்பார்கள்.என் போன்ற அவர்களின் பாசத்திற்குறிய நிறைய தம்பிகள் இனி அவர் முகத்தைப் பார்க்கவே முடியாது என்பதாலோ, என்னவோ?கோடான கோடி பேர்கள் பார்க்கும் வாய்ப்பை நிஜம் நிகழ்ச்சியின் மூலம் சன் டி.வி யில் வந்து காட்சி தந்தார்கள்.சிலர் பேச்சைக் கேட்டால் இனிக்கும் அனால்,எஸ்.கே.மாமா என்ற உடனையே எங்கள் நெஞ்சமெல்லாம் இனிக்கும்.அன்னாரின் இழப்பை ஈடு செய்ய ஆண்டுகள் பல ஆகும்!என்பது நிதர்சனமான உண்மை!வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் மேலான நற் பதவிகளை வழங்கியருள்வானக!ஆமீன்.

M.N.L.முஹம்மது ரபீக்,
புனித மக்கா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. We will surely SK mama
posted by Kamil (USA) [14 January 2011]
IP: 68.*.*.* United States | Comment Reference Number: 2265

Inna lillahi wa inna ilahi rajioon. May Allah (SWT) shower His mercy on our dear brother and admit him into paradise. Surely lots of memories of my interaction with our beloved SK mama are running through my mind. Whenever I return to our native place from Canada/USA, he would choose to speak me in English. I have found him as a man of highly intellectual and compassionate.

May Allah (SWT) accept all his good deeds and bless his family with a beautiful patience.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. INNA LILLAAHI WA INNA ILIHI RAAJIOON
posted by Shahul Hameed (Al Jubail) [15 January 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2287

We lose great and wide knowledge mama Janab SK.Almighty Allah will give him Jannathul Firdous hereafter.

Deep condolences to the family and friends.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. ILLUSIONARY WORLD
posted by Eassa Zakkariya (JEDDAH) [15 January 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2303

Assalamu Alaikum

Sk Mama you are really a Miracle unique inbound personality and hormonic character which taught me more and more that How to Interact with youngeters without ego and to Respect Elders whoever in different platform and thougths which were choosen.

Mama; May Almighty enlighten your Qabr with full of Noor e Hakiki(Plz Say- Ameen)

Ya Allah keep his place in Jannathul Firdous-

Ya Allah Strenghthen our Qalb to Digest this Un Replaceable lost for our Soceity and my Family Members (Esp my Pillaigal Sk Shamim / Sk Salih and all

May Almighty be with Us - Ameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. பிரார்த்திக்க வேண்டுகிறோம்!
posted by SK Salih (Kayalpatnam) [08 February 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 2572

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...

சிறந்த சிந்தனையாளரும், பொதுநல ஊழியரும், சுயநலமற்றவருமான பெருமதிப்பிற்குரிய அல்ஹாஜ் M.L.ஷாஹுல் ஹமீத் (S.K.) அவர்கள், கடந்த 12.01.2011 அன்று காலை 11.20 மணிக்கு தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் (அழியும் உலகை விட்டும் நிலையான உலகத்தின் அளவில்) சேர்ந்துவிட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா மறுநாள் 13.01.2011 அன்று காலை 10.30 மணிக்கு காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் செய்துகொண்டோம். தங்களது இரங்கல் செய்திக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப பொருத்தருளி, அவர்களின் மண்ணறை வாழ்வை ஒளிமயமான சுவனப் பூஞ்சோலையாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாகத் தந்தருள தாங்கள் யாவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் சொல்லாலோ, செயலாலோ தீங்கு விளைவித்திருந்தால், அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், அதற்காக நாங்கள் யாவரும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் கடன் வைத்திருந்தால், இதனடியில் கண்ட அவர்களின் மக்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். அக்கடனை நாங்கள் திருப்பித்தரும் பொருட்டு, இந்த மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மனமார்ந்த துஆக்களுடன்,

அல்ஹாஜ் சொளுக்கு S.S.M.செய்யித் அஹ்மத் கபீர் (மர்ஹூம் அவர்களின் சிறிய தந்தை)
அல்ஹாஜ் சொளுக்கு S.S.M.யூஸுஃப் ஸாஹிப் - சாபு (சிறிய தந்தை)

அல்ஹாஜ் N.S.நூஹ் ஹமீத் B.Com. (மாமா)

அல்ஹாஜ் M.H.முஹம்மத் சுலைமான் (மச்சான்)
ஜனாப் M.H.செய்யித் அஹ்மத் கபீர் (மச்சான்)
அல்ஹாஜ் சொளுக்கு S.S.M.செய்யித் அஹ்மத் B.Com. (மச்சான்)

அல்ஹாஜ் M.L.செய்யித் இப்றாஹீம் (S.K.) (தம்பி)

அல்ஹாஜ் T.M.K.முத்து செய்யித் அஹ்மத் (சகளை)
கம்பல்பக்ஷ் அல்ஹாஜ் S.பாக்கர் ஸாஹிப் B.Sc. (சகளை)

அல்ஹாஜ் M.S.நூஹ் ஸாஹிப் B.Sc. (மைத்துனர்)
மவ்லவீ அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் M.S.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ (மைத்துனர்)

ஜனாப் S.H.ஷமீமுல் இஸ்லாம் (S.K.) M.A., M.Phil. (மகன்)
அல்ஹாஃபிழ் S.H.நஸீமுல் இஸ்லாம் முஹம்மத் ஸாலிஹ் (SK ஸாலிஹ்) (மகன்)

ஜனாப் M.L.அப்துர்ரஷீத் (அவ்லியா) (மருமகன்)
ஜனாப் M.A.K.முஹம்மத் இப்றாஹீம் ஸூஃபீ (மருமகன்)

அல்ஹாஃபிழ் A.முஹம்மத் (பேரன்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved