Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:18:48 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5397
#KOTW5397
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஐனவரி 4, 2011
சுனாமி தொகுப்பு வீடு கட்டிடப்பணிகளை உடனே நிறுத்தி, தேர்தல் புறக்கணிப்பைத் தவிர்த்திடுக! ஐக்கியப் பேரவை கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5599 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (18) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கற்புடையார்பள்ளி வட்டம் (சிங்கித்துறை) கோஸ்மரை தர்கா அருகில், அரசின் சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

இந்த வீடுகளில், நகரின் பூர்வீகமற்றவர்களைப் புதிதாகக் குடியமர்த்தப் போவதாகக் கூறி, அரசு அதனைத் தடுக்கக் கோரி இன்று கடையடைப்பு போராட்டத்திற்கும், மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை காயல்பட்டினம் பிரதான வீதியில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் இன்று காலை முதல் மாலை வரை நகரின் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

இன்று மாலை 04.30 மணிக்கு காயல்பட்டினம் பிரதான வீதி - நெசவுத் தெரு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமை தாங்கினார்.

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், கே.எம்.டி. மருத்துவமனை தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, ஐக்கியப் பேரவை செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான் ஜமாலுத்தீன், ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு முத்து ஹாஜி,

ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி, ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ, குருவித்துறைப்பள்ளி செயலர் ஹாஜி எஸ்.எம்.கபீர், ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார், ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்ஃபார், ஹாஜி பிரபுத்தம்பி, இரட்டைக்குளத்துப் பள்ளி செயலாளர் ஹாஜி முஹ்யித்தீன் தம்பி, ஐக்கிய விளையாட்டு சங்க துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர்,

இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் (ஐ.ஐ.எம்.) குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, ஹாஜி ராவண்ணா அபுல்ஹஸன், ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத், ஏ.கே.பீர் முஹம்மத், ஹாஜி எல்.எஸ்.அன்வர், நகர்மன்ற உறுப்பினர் சுகு, ஹாஜி ஜரூக், ஹாஜி கைலானீ மற்றும் நகர ஜமாஅத் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.





இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

மஹ்ழரா அரபிக்கல்லூரியின் ஹிஃப்ழுப் பிரிவு பேராசிரியர் ஹாஃபிழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். ஐக்கியப் பேரவை துணைச் செயலாளர் ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர் வரவேற்றுப் பேசினார். தலைமையுரையைத் தொடர்ந்து, நகர பொதுநல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.







பின்னர், காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் கஸ்ஸாலி மரைக்கார், நகர்மன்ற உறுப்பினர் காசிராஜன், இரத்தினபுரி சமுதாயப் பிரதிநிதி இளந்தளிர் முத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மாரியப்பன், காங்கிரஸ் பிரமுகர் ஷாஜஹான், தி.மு.க. பிரமுகர் காயல் மவ்லானா,

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை கவுரவ ஆலோசகர் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத், ம.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் காயல் அமானுல்லாஹ், தே.மு.தி.க. நகர செயலாளர் கேப்டன் சதக்கத்துல்லாஹ், அருணாச்சலபுரம் பகுதி பிரமுகர் ராம்குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைச் செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப், அப்துர்ரஷீத் அவ்லியா மற்றும் பலர் உரையாற்றினர்.



மேற்படி கட்டிடப்பணிகள் தொடரப்பட்டால், நகர மக்கள் அனைவரும் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டி வரும் என உரையாற்றியோர் பலர் தெரிவித்தனர். பின்னர் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. (தீர்மானங்கள் தனிச்செய்தியாக தரப்படும்.) ஐக்கியப் பேரவை துணைச் செயலாளர் ஹாஜி செய்யித் முஹம்மத் அலீ நன்றி கூற, மவ்லவீ முத்துச்சுடர் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீயின் துஆவுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகரின் அனைத்து ஜமாஅத்துகளைச் சார்ந்த பொதுமக்களும், அனைத்து அரசியல் கட்சிகள் - பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகளும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.





















ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில், துணை ஆய்வாளர் சுவாமிதாஸ் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை கடையடைப்பு துவங்கியது முதல், மாலை கண்டன ஆர்ப்பாட்டம் முடியும் வரை நகரின் எந்தப் பகுதியிலும் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Unity is Strength
posted by NALEER AHMED, VENA JAHIR, RILWAN RSL (BAHRAIN) [04 January 2011]
IP: 77.*.*.* Bahrain | Comment Reference Number: 2017

Well organized Protest Rally. It is the need of the day to protect our kayalpatnam customs, culture and heritage. We extend our gratitude to Aikiya Peravai President, the Members and other kayalites those who joined hands for well Organizing such mass Rally for conveying our Protest to the Govt.

May Almighty Allah reward us for your efforts (Insha Allah)and shower his grace on us.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. regarding protest
posted by samu shihabdeen (coimbatore) [04 January 2011]
IP: 218.*.*.* India | Comment Reference Number: 2018

assalam to all kayal people. insha allah be united like tis in all our native problems wich v r facing like tis. allah will fulfill all our dreams & save our kayalpatnam. aameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. SUCESSFULL BANTH
posted by THANGATHAMBY KADERSAHIB (UAE) [04 January 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2019

VERY VERY IMPORTANT THIS BANTH/COPERATION ALL POLITICAL MEMBEARS/LEADER THANKS/SPECIAL THANKS FOR KAYAL AIKIYA PERAVAI/KAYALPEOPLES/MASA ALAH KAYALPATNAM SAME LIKE STEEL NEVER BEND INSHA ALAH THANKS .THANGATHAMBY UAE


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. regarding protest
posted by madiha mahfuz (coimbatore) [04 January 2011]
IP: 218.*.*.* India | Comment Reference Number: 2020

assalam all kayal people nice to c u all united in tis protest. alhamdu lillah allah will save our native from all evils...

plz try to be united like tis to fix a common fare for autos & taxies wich is running in kayal. LET US BE UNITED LIKE TIS TO HAVE A HEALTHY & PEACEFUL KAYALPATNAM. salam to all kayal guys.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஏன் இந்த அலட்சியம் ?
posted by Salai Sheikh Saleem (Dubai) [04 January 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2021

மாஷா அல்லாஹ்!

இப்படி ஒரே குடையின் கீழ் எல்லா காயலர்களையும் கொண்டு வந்த காயல் ஐகக்கியப்பேரவைக்கு ஒட்டுமொத்த காயலரகள் சார்பில் பாராட்டுக்கள் . நமதூர் இதே மாதிரி எல்லா விஷயங்களிலும் ஒற்றுமையாக இருப்போமானால் இதுவே நமது பலமாக இருக்கும். ஆனால் ஒரே விஷயம் மனதை வருடுகிறது - இவ்வளவு பேர்கள் கூடியிருக்கும் ஒரு போராட்ட களத்தில் ஒருவருக்கு கூடவா நமதூரை உயிர் மற்றும் பொருளாதார அளவிலும் சீரழித்துக்கொண்டு இருக்கும் கேன்சர் நோயின் காரணங்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை கேட்டுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை? இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் எப்போது கிடைக்கும்?. ஏன் இந்த அலட்சியம் ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Better late than never
posted by A.W.S. (Kayalpatnam) [05 January 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 2022

Al-hamdulillah. This peaceful protest was successful that people turned up in large number.

Aikiya Peravai should not take this attendance for granted and think that people support them in great numbers. It is the "Cause"(Protest against illegal project) that people supported. In fact Peravai failed in all their attempts to stop that project and finally informed people.

I visited the site and shocked to see the amount of construction materials brought in. It must be going on for the last one year or so.

Had we (kayalites) been inform earlier, we could have shown our discontent to the government in a better way, probably by not participating in the last year's "Bye election".

Some say "It is too late". I say to them, "Better late than Never".

Peravai's last minute effort should be appreciated.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Agitation against Invadors
posted by Cnash (Makkah) [05 January 2011]
IP: 92.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2024

Alhamdulillah!!

So happy to see our Kayalites under one banner besides it is excited to notice the active involvement of our Kayal non-Muslim brothers in this agitation. Beyond doubt this unity will bring success in this issue and it is a major footstep for the future endeavors (to root out the key element (DCW) for spreading various dreadful diseases including recent cancer outbreak in Kayal (Pandemic???). This stage had brought the hopes to flight against DCW (If the facts are brought to the table by CFFC)

Further legal measures should be concerned followed by this protest. We are in a right time that the vote drifter would seek our town for the upcoming assembly election. It is well known through the past political history of Kayal that one major party who is ruling at this time the TN and kingmaker (or Spectrum Raja Maker!!!) of central govt would grasp our vote bank. The election boycott pronouncement will knock their deaf ears to indulge their regime dream of next round play in their political games. We believe the government will listen our voice at least this time in considering the volume of vote. If the government still persists on their stance to deceive us with usual chanting of Kayalpatnam – Kalangarpatnam etc…, we shall bear out ourself as a spirited human being not a numbness corpse.

Br. Saleem, I think this stage and mass was aimed for one objective and no necessity to raise the voice against cancer which might divert the attention.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. கலைஞர்பட்டணம்
posted by IBN SAHIB (Dammam, Saudi Arabia) [05 January 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2025

அது என்ன திமுக ஆட்சியில் மட்டும் நம்மூர் கடற்கரையில் தொகுப்பு வீடுகள் கட்டப்படுகின்றன? சென்ற திமுக ஆட்சியிலும் மீனவத் துறை அமைச்சராக இருந்த ஜெனிபர் சந்திரனின் கடைக்கண் பார்வையில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. இப்பொழுது மீண்டும். காயல்பட்டணம் கலைஞர்பட்டணம் என்பதால் அதிகமான அன்பு போல!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. நோக்கம் வெற்றி பெறட்டும்
posted by mauroof (Dubai) [05 January 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2026

இந்த மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த காயல்மாநகர பொதுமக்கள் அனைவருக்கும் எனது மனம் உவந்த நன்றிகள்.

போராட்டத்தின் பல்வேறு புகைப்படங்களை KAYALPATNAM.COM -ல் பார்த்தபோது மனது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. இது போன்று ஊரின் பல்வேறு பிரச்சனைகளில் பொதுமக்கள் ஒன்றுபட்டு இருப்போமேயானால் காயல்மாநகர் அதன் தனித்தன்மையை இழக்காமலும் நல்லதோர் வளர்ச்சியையும் பெரும் என்று நம்புகிறேன். அல்லாஹ் போதுமானவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. VALKA NAM OTRUMAI,VALIA NAM KAYAL
posted by SATNI.S.A.SEYEDMEERAN (jeddah.ksa) [05 January 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2027

ASSALAMUALAIKKUM.IRAI ARULAL NAM ONDRU PATTOM AVANARULAL NAMAKKU UNDU NALVALVU.INSHAALLAH.KADAI ADAIPPU SEYTHA ANAITHU VANIKARKAL,AUTO,VAN,TAXI DRIVERS,OWENERKAL MATRUM KANDANA ARPPATTATHIL KALANDU KURAL KODUTHA ANAITTH ARASIALVATHIKAL,PRYIYAVARKAL,ILAINGERKAL,MANAVARKAL,MATRUM ANAITHU SAMUTHAYA NANBARKAL KURIPPAGA AIYKKIA PERAVAI PIRAMUKARKAL,MARIYTHAIKU URIAVARKAL ANAIVARUKKUM ENGALATHU NENGARNTHA NANDRIKAL NALVALTHUKAL.JAZAKKALAH KHAIRA.KAYALIN NALAM NADUM RAHMATHUN LIL AALAMEEN MEELAD PERIYAM & PODU NALA PERAVAI.(ESTD 1985)KUTHUKKAL STREET.KPM.ALL MEMBERS & SATNI.SEYEDMEERAN.JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Masa Allah
posted by A.M. Syed Ahmed (Riyadh - KSA) [05 January 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2028

Happy to see all the faces together at once, Please giveup the ideological thoughts & internal fighting from now, be united and this day we feel a real Kayalan.

Don't caste your vote, that is your power to cut the power who are against the historical town and jealous against our wealth & good living with the communal hormany compared to other towns in TN.

My pain some political faces are missing from this scene? This is ture or my eyes reflection?

"Fake friend is more dangerous then a real enemy"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Thanks to All Kayalites
posted by Abu Mahmoood (Riyadh) [05 January 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2030

Assalamu Alaikum

Porattathil kalanthu konda anaithu sahothararhalukum enathu manamarntha nandriyai therivithu kolhiren.

Ellam Valla Allah, Namathu anaithu muyarchihalukum Vetriyai thara Dua seihiren.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. UNITY IS THE GREAT
posted by NOOHU SAHIB (DUBAI) [05 January 2011]
IP: 80.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2031

ALHAMDULLILLAH. ALLAH HELPS ALL OF US TO STAND UNITY IN OUR TOWN ISSUES. MY HEART IS SHEDDING TEARS TO SEE THIS KIND OF UNITY NEVER HAPPENED BEFORE. I WOULD LIKE TO THANK ALL OUR KAYALITES SOCIAL ORGANISATIONS MUHALLA JAMATHS POLITICAL ORGANISATIONS YOUTH ORGANISATIONS BROTHERLY COMMUNITY PEOPLE WHO HAS RAISED THEIR VOICES UNITEDLY AGAINST THIS CULPRIT PROJECT.

HAIL KAYAL AIKKIYA PERAVAI MEMBERS ELDERS AND ORGANISERS. MAY ALLAH GIVES US GOOD HEALTH WEALTH AND ALL HIS BLESSINGS ON OUR PEOPLE AAMEEN.

GOOD DECISION TAKEN TO BOYCOT POLLS IF OUR DEMANDS ARE NOT MET WITH JUSTICE.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Welcome to the decision
posted by Riyath (Hong Kong) [05 January 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 2032

Let us avoid participating in this election unless they stop constructing houses in our land. Never give a chance to over estimate the land prices and help avoiding property bubble.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. இலவச வீடுகள்
posted by IBN SAHIB (Dammam, Saudi Arabia) [06 January 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2039

தமிழக அரசு இத்திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும். இல்லை இல்லை இந்த திட்டம் ஆரம்பித்தாகி விட்டது நாங்கள் நிறைவேற்றியே தீருவோம் என்று பிடிவாதம் பிடித்தால்....

நம்மவர்களின் வரிப்பணத்தில் இருந்துதானே இத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. நமதூரில் இலவச வீடுகள் பெரும் அளவிற்கு ஏழைகள் இல்லையா? எனவே திட்டத்தை நிறைவேற்றுங்கள் ஆனால் காயல் முஸ்லிம் ஜக்கிய ஜமாத் கைகாட்டும் ஏழைகளுக்கு மட்டுமே வீடுகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துங்கள்.

அதையும் இந்த திமுக அரசு மறுத்தால், நாம் வரும் தேர்தலில் மொத்தமாக வாக்களிக்க வேண்டும் இவர்களுக்கு எதிராக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. MSG
posted by sameer azhar (kayalpatinam) [06 January 2011]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 2040

assalam alaikum kayal people nice to c u all united in tis protest. alhamdu lillah allah will save our native from all evils...

plz try to be united like tis to fix a common fare for autos & taxies wich is running in kayal. LET US BE UNITED LIKE TIS TO HAVE A HEALTHY & PEACEFUL KAYALPATNAM. wassalam to all kayal people


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Unity of Kayalities
posted by K.M.S.OMER (Chennai) [06 January 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 2042

In course of time this protest will bring the greatest changes in kayalpatnam,The crowd insist to get back the land..The crowd shows that as long as we get back our native land we will not get back from our steps...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. யார் இருந்து என்ன பயன்?
posted by முஹம்மது நூஹு.M.A.C (சென்னை) [06 January 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 2049

கலைஞர் பட்டணம், தளபதிக்கு பிடித்த ஊர், அஞ்சா நெஞ்சனை அனுமதியின்றி பார்க்கும் ஊர் மக்கள், மாநில முதல்வரை என்னேரமும் சந்திக்கும் தேசிய கட்சி யின் மாநில பிரதினிதிகள், கொடைவள்ளல்கள், தொழில் அதிபர்கல், ஆளும் கட்சி சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினர், இப்படி எத்தனயொ தகுதிகள் இருந்தும் இந்த ஒரு பிரச்சனைக்காக நாம் கடை அடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டம் என்ன கொடுமை இது? இதற்கு மேலும் நமது ஊர் மக்கள் ஒன்று படாமல் இருந்தால் இன்னும் சில வருடங்களில் காயல் பட்டணம் என்கின்ற பெயரே தமிழக வரைபடைத்தில் இருக்காது. தேர்தல் நேரத்தில் நாம் நமது ஒற்றுமையை காட்டவேண்டும். இந்த பிரட்சனைக்கு தீர்வு கடை அடைப்பு மட்டும் இல்லை , உடனே முதல்வர், துனை முதல்வர், மத்திய அமைச்சர் அழகிரி ஆகியோரை சந்தித்து தீர்வு காண வேண்டும் நமது ஊரை காப்பற்ற வேண்டும். மேலும் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யும் நமது ஊர் மக்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு மாற்று மத நண்பர்களுக்கு விலைக்கு விற்கும் கேவலமான செயலை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved