Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:36:35 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5322
#KOTW5322
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், டிசம்பர் 21, 2010
பிள்ளைகளுக்காக பெற்றோர் சில தியாகங்களைச் செய்தேயாக வேண்டும்! இக்ராஃ கலந்தாலோசனையில் தலைமையாசிரியர்கள் வலியுறுத்தல்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4331 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தம் பிள்ளைகளின் ஒழுக்கம் மற்றும் கல்வி முன்னேற்றத்திற்காக பெற்றோர் சில தியாகங்களைச் செய்தேயாக வேண்டும் என, உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட - நகர பள்ளிக்கூடங்களின் தலைமையாசிரியர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டத்தில் தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.

இக்கூட்டம் குறித்து, இக்ராஃ செயலர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

மாணவியரை விட மாணவர்களின் கல்வித்தரம் ஆண்டுதோறும் படிப்படியாக குறைந்துகொண்டு வருவதைக் கருத்தில் கொண்டு, அவர்களின் கல்வித் தரத்தை முன்னேற்றுவதற்கான காரணிகளை ஆய்ந்தறிந்து செயல்படுத்திட வேண்டும் என்பதற்காக, முதற்கட்டமாக காயல்பட்டினம் நகர பள்ளிக்கூடங்களின் தலைமையாசிரியர்களை ஒன்றுகூட்டி கருத்துக் கேட்பது என்று அண்மையில் நடைபெற்ற இக்ராஃ செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் இக்ராஃ தலைவரும், சிங்கப்பூர் காயல் நல மன்றத் தலைவருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் தலைமையில், இக்ராஃ அலுவலகத்தில் நடைபெற்றது.

கலந்துகொண்டோர்:

நகரின் 06ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தனர்.

எல்.கே.மேனிலைப்பள்ளி சார்பில் அதன் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி சார்பில் அதன் தலைமையாசிரியர் ஸ்டீஃபன்,

அரசு மகளிர் மேனிலைப்பள்ளி சார்பில் அதன் தலைமையாசிரியை யு.திருமலை,

சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி சார்பில் அதன் தலைமையாசிரியை ஜெஸீமா,

சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி சார்பில் அதன் தலைமையாசிரியை எம்.செண்பகவல்லி ஆகியோர் கலந்துகொண்டனர்.

சென்டரல் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் காஜா முகைதீன் தம் குடும்ப நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக வெளியூர் சென்றுவிட்டதால், அவரது பிரதிநிதியாக அப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர் இசட்.ஏ.ஷேக் அப்துல் காதிர் வந்திருந்தார்.

எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை மீனா சேகர் மருத்துவ சிகிச்சைக்காக வெளியூர் சென்றுவிட்டதால் அவரது பிரதிநிதியாக அப்பள்ளியின் அரபி ஆசிரியை முஹம்மத் ஃபாத்திமா, வரலாற்று ஆசிரியை அந்தோனியம்மாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



மாணவர்களின் எண்ணிக்கை குறைவுக்கான காரணம்:

அரசு பொதுத்தேர்வுகளில் - குறிப்பாக பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் கலந்துகொள்ளும் மாணவியரை விட மாணவர்களின் எண்ணிக்கை குறையக் காரணமென்ன என்று துவக்கமாக வினவினார் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன்.

பிறப்பு விகிதத்தில் பெண்களை விட ஆண்கள் குறைவு...

வெளியூர்களில் படிப்பவர்கள் பெண்களை விட ஆண்கள் அதிகம்...

பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டு, தொழிற்கல்வி (ஐ.டி.ஐ., பாலிடெக்னிக்) பயிலச் செல்லல்... கடைகளுக்கு வேலை பார்க்கச் செல்லல்...

ஆகியவற்றில் மாணவியரை விட மாணவர்களின் எண்ணிக்கை கூடுதல் ஆகியன காரணமாக இருக்கலாம் என தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.

அரசு உதவிகள் நிறைவாகக் கிடைக்கின்றனவா?

சிறுபான்மை மாணவர்கள் உள்ளிட்ட மாணவ-மாணவியருக்கு அரசு வழங்கும் உதவித்தொகைகள் முறையாக அவர்களுக்குக் கிடைக்கின்றனவா என்று வினவப்பட்டது.

இதற்கு ஒரே சொல்லில் விடை தர இயலாது...

குறிப்பிட்ட அளவிலான மாணவ-மாணவியருக்குக் கிடைக்கிறது என்றாலும், விண்ணப்பிக்கும் எல்லா மாணவ-மாணவியருக்கும் அது கிடைப்பதில்லை...

சில வசதியான மாணவர்களுக்கு கிடைக்கும் அதே உதவித்தொகை, ஏழை மாணவர்களுக்கு கிடைக்காமலும் போய்விடுகிறது.

இதற்கான காரணம் என்னவென்று உறுதியாகத் தெரியவில்லை...

உதவித்தொகை வழங்கப்படுவதற்கான மாணவர்களின் விண்ணப்பங்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது என்பது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கலாம்...


இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மாணவர்களின் கல்வித் தரம் குறையக் காரணம் என்ன?

மாணவியருடன் ஒப்பிடுகையில் மாணவர்களின் கல்வித்தரம் குறையக் காரணமென்ன என்று வினவப்பட்டது.

இதற்கு அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் பல்வேறு கருத்துக்களை பின்வருமாறு தெரிவித்தனர்:-

எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா - தலைமையாசிரியர், எல்.கே.மேனிலைப்பள்ளி:

கவனச்சிதைவு:

மாணவர்களின் கவனம் இந்நகரில் மிகக் கடுமையாக சிதைக்கப்படுகிறது...

மாணவர்களில் ஏழை - பணக்காரர் என்ற பாகுபாடின்றி, பெரும்பாலும் அனைத்து மாணவர்களிடமும் மோட்டார் பைக், மொபைல் ஃபோன் உள்ளது...

பெற்றோர் ஒத்துழையாமை:

மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பெற்றோர் ஒத்துழைப்பு மிக மிகக் குறைவு...

மாணவர்களின் நலனுக்காக அவர்களை சில நேரங்களில் கண்டிக்கவும், தண்டிக்கவும் வேண்டிய அவசியம் உள்ளது. எனினும், தற்காலத்தில் அது விஷயத்தில் அரசின் சட்டங்கள் ஆசிரியர்களுக்கு சாதகமாக இல்லை என்பது, தவறு செய்யும் மாணவர்கள் அதே வழியில் தொடர வாய்ப்பேற்படுத்திக் கொடுத்துள்ளதை உணர முடிகிறது...

எங்கே சட்டம் நம்மை தண்டித்துவிடுமோ என்ற அச்சத்தில் ஆசிரியர்களும் தண்டிப்பு, கண்டிப்பு எதையும் செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்...

தீய நண்பர் வட்டம்:

சில மாணவர்கள் இயற்கையில் நல்லவர்களாக இருந்தாலும், அவர்களுடன் சேரும் நண்பர்கள் அவ்வாறில்லாத நிலையில், தொடர்ச்சியாக அவர்களுடனேயே இருந்திருந்து, இவர்களும் கல்வியில் ஆர்வம் குன்றியவர்களாகவும், தீச்செயல்கள் புரிவோராகவும் உள்ளனர்...

இப்போது நடைபெற்று முடிந்துள்ள அரையாண்டுத் தேர்வின்போது கூட, நாளை முக்கியமான ஒரு தேர்வு இருக்கையில், இன்று மாலையில் மேல்நிலை மாணவன் ஒருவன் கையில் க்ரிக்கெட் விளையாடுவதற்கான உபகரணங்களுடன் வீரநடை போட்டு விளையாடச் சென்றுகொண்டிருப்பதை நானே நேரடியாகக் கண்டும் ஒன்றுமே சொல்ல இயலாத நிலை...

தேர்வில் முறைகேடு:

வகுப்பிற்குள் ஆசிரியர் நடத்தும் பாடத் தேர்வுகளில் கூட மாணவர்கள் பிட் எடுத்து வந்து முறைகேடுகளைச் செய்யும் நிலை...

பிட் எழுதுவதைக் கொண்டாவது அப்பாடத்தின் சில பகுதிகளில் மண்டையில் ஏறும் என்று கூறலாமோ என்று தோன்றுகிறது... அதையும் ஒழிக்கும் விதமாக நகரின் நகலகங்களில் (ஜெராக்ஸ் கடைகள்) நுண்ணகல் (மைக்ரோ ஜெராக்ஸ்) எடுத்துக் கொடுப்பதன் மூலம், அந்த வாய்ப்பும் போய்விட்டது. இதுபோன்ற ஜெராக்ஸ் எடுத்துக் கொடுக்கக் கூடாது என அக்கடை உரிமையாளர்களிடம் வலியுறுத்தப்பட வேண்டும்.

விடைத்தாள்கள் படும் பாடு:

மாணவர்களின் தேர்வு விடைத்தாள்களை மதிப்பெண் இட்டு, ஆசிரியர்கள் அவர்களிடம் வழங்குகின்றனர். அதைப் பார்த்து, எதற்காக தனது மதிப்பெண் குறைந்தது என்று கூட பார்க்கத் தேவையில்லை... அந்த பாடவேளை முடியும் வரையிலாவது மாணவர்கள் அதைத் தம் கையில் வைத்துக் கொள்கிறார்களா என்றால் இல்லை.

அவர்கள் அந்த இடத்திலேயே அவற்றை சுக்குநூறாகக் கிழித்து, வகுப்பறையிலேயே போட்டு, வகுப்பறையையே குப்பையாக்கி விடுகின்றனர். அதன் பிறகு அங்கு துப்புரவுப் பணி மேற்கொண்டால், ஒரு பெரும் காகிதப் பொதியையே சுமக்க வேண்டியிருக்கும். அவ்வளவு குப்பைகள்...

இப்படியிருந்தால், அவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் ஆசிரியர்களின் மனது என்ன பாடுபடும் என்று பாருங்கள்...

மாணவர்கள் பெற்றோரின் கட்டுப்பாட்டில் இல்லை:

மாணவர்கள் பெற்றோரின் - குறிப்பாக தாய்மாரின் கட்டுப்பாட்டிலேயே இல்லை என்று சொல்ல வேண்டும். சில நேரங்களில் ஒரு மாணவனின் தாயாரோ, தந்தையோ, வீட்டிலுள்ள மூத்த ஆண்களோ நம்மிடம் வந்து, அம்மாணவன் குறித்த சில குறைகளைத் தெரிவித்துவிட்டு, “சார்... இதை நீங்களே சுயமாக சொல்வது போல சொல்லுங்க சார்! நான்தான் சொன்னேன் என்று மட்டும் அவனுக்குத் தெரிந்துவிட்டால் வீட்டையே ஒரு வழி பண்ணிவிடுவான் சார்... நான் இங்கு வந்து போனதைக் கூட எக்காரணம் கொண்டும் அவனிடம் வெளிப்படுத்தி விடாதீங்க சார்...” என்று மிகுந்த பயத்துடன் சொல்லும் அவல நிலை!


இவ்வாறு எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா தெரிவித்தார்.

யு.திருமலை - தலைமையாசிரியை, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி:

மாணவர்களின் தவறுகளை ஊடகங்கள் பெரிதுபடுத்தல்:

இன்று, “ஆசிரியர் கண்டித்ததால் மாணவி தற்கொலை... மாணவர் தற்கொலை” என்று செய்திகள் வெளிவராத நாளே இல்லை... நாளேடுகளும், தொலைக்காட்சி அலைவரிசைகளும் வரிந்து கட்டிக்கொண்டு இதுகுறித்து தொடர் செய்திகளை வெளியிடுவதால், தவறு செய்யும் மாணவர்களிடையே அதே வழியில் ஊக்கமும், நியாயத்திற்காக கண்டிக்கும் ஆசிரியர்களுக்கு, “நமக்கேன் வம்பு... பாடத்தை மட்டும் நடத்திக்கொண்டு போவோம்... அவள் படித்தால் என்ன? படிக்காவிட்டால் என்ன...?” என்ற மனநிலை இயற்கையாகவே வந்துவிடுகிறது.

ஆசிரியையரின் தியாகம்:

பொதுவாக அரசுப் பள்ளிக்கூடங்களில் விதித்த நேரங்களில் மட்டுமே ஆசிரியர்கள் பணியாற்றுவர் என்றுள்ள நிலையில், இத்தனை சங்கடங்களையும் தாண்டி எம் பள்ளி ஆசிரியையர் வார விடுமுறை நாட்களில் கூட மாணவியருக்கு சிறப்பு பாட வகுப்புகளை நடத்துவதற்காக தியாக மனப்பான்மையுடன் வந்து சென்று கொண்டிருக்கின்றனர்...


இவ்வாறு அரசு மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை யு.திருமலை தெரிவித்தார்.

ஸ்டீஃபன் - தலைமையாசிரியர், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி:

பெற்றோருடன் கலந்தாய்வு:

மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக தற்போது தலைமையாசிரியர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடத்துவதைப் போல, அனைத்துப் பெற்றோரும் கலந்துகொள்ளும் வகையில் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையில் நேரடி நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்...

பொது அரங்கங்களில் அவர்கள் அனைவரையும் அவசியம் வரவழைத்து, அங்கு இதுபோன்ற கல்வி ஆர்வலர்களின் மனக்குறைகளை வெளிப்படுத்த வேண்டும்...

சிறப்பு வகுப்புகளில் மாணவர்களின் வருகை:

தேர்வு காலம் நெருங்குகையில், மாணவர்களை எப்படியேனும் சிறந்த தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகளை (special classes) நடத்துகின்றனர். ஆனால், ஒரு வகுப்பில் பாதியளவுக்குக் கூட மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை எனும்போது, ஆசிரியர்களின் ஆர்வம் என்ன பாடுபடும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்!

அவர்கள் நன்மைக்காகத்தான் நாம் அழைக்கிறோம் என்ற உணர்வு கூட இல்லாமல் மாணவர்கள் செயல்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது...


இவ்வாறு முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஸ்டீஃபன் தெரிவித்தார்.

எம்.ஜெஸீமா - தலைமையாசிரியை, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி:

மாணவ-மாணவியர் உடல்நலனில் பெற்றோர் அக்கறை செலுத்தல்:

மாணவ-மாணவியரின் உடல் நலன் விஷயத்தில் பெற்றோர் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். குறிப்பாக, அரசுப் பொதுத்தேர்வு நடைபெறும் காலங்களில் அவர்களின் உடல் நலன் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அவர்களின் படிப்புக்கு வீட்டில் வசதி செய்து தரப்பட வேண்டும். மாணவ-மாணவியரை - அவர்கள் டியூஷன் சென்று படித்தாலும், அவர்களின் படிப்பு நிலவரங்கள் குறித்து பெற்றோர் தினமும் விசாரித்துக்கொள்ள வேண்டும்.

தேர்வு காலங்களில் இதர அரசுப்பணிகளை ஆசிரியர் மீது சுமத்தல்:

மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஆசிரியர்கள் கூடுதல் அக்கறையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்வுக் காலங்களின்போது, மக்கள்தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் பட்டியல் சேகரிப்பு உள்ளிட்ட அரசுத்துறை வேலைகளை ஆசிரியர்கள் மீது சுமத்துவது போன்ற நடவடிக்கைகள் மாணவ-மாணவியரின் கல்வித்தரத்தை நிச்சயம் பாதிக்கவே செய்யும்.

அரசு கட்டளையிடும்போது ஆசிரியர்களால் அதை மறுக்கவியலாது. அதே நேரத்தில், மாணவர்களின் தேர்ச்சி பின்தங்கும்போது ஆசிரியர்களால் என்ன சொல்ல முடியும் என்று நினைக்கவே பாரமாக உள்ளது. வரும் பிப்ரவரி மாதத்திலும் இதுபோன்று ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று சில பட்டியல்களைச் சேகரிக்க பணிக்கப்பட்டுள்ளனர்.


இவ்வாறு சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை எம்.ஜெஸீமா தெரிவித்தார்.

செண்பகவல்லி - தலைமையாசிரியை, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி:

இக்ராஃவில், அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட பின்னர், சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் செண்பகவல்லி, தன் பள்ளி ஆசிரியையருடன் ஒரு கலந்தாய்வை நடத்தி, அதில் தீர்மானிக்கப்பட்டவற்றை அறிக்கையாக ஆயத்தம் செய்துகொண்டு வந்து, சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

பெற்றோர் கேபிள் டிவி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்...

பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியரின் பெற்றோர் வீட்டில் கேபிள் டிவி பாரப்பதை தங்களின் குழந்தைகளுக்காக தியாகம் செய்யவேண்டும்.

பெற்றோர் கண்காணிப்பு:

டியூஷன் மற்றும் பள்ளியில் படிப்பதை, படித்த பெற்றோராக இருந்தால் தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி, அவர்களுடன் நட்பாக பேசிக்கொண்டே படித்ததை செக் பண்ணலாம். படிக்காத பெற்றோரெனில், வீட்டில் உள்ள சகோதர-சகோதரிகளின் மூலம் இவ்வாறு செய்யலாம்.

பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்தில் பங்கேற்றல்:

பள்ளியில் நடத்தப்படும் பெற்றோர்-ஆசிரியர கூட்டத்தில் பெற்றோர் தவறாது கலந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அந்தக் குழந்தையின் படிப்பு மற்றும் நடவடிக்கைகளைத் தெரிந்துகொள்ள முடியும். பெற்றோரில் பெரும்பாலோர் அவ்வாறு கலந்துகொள்வதே கிடையாது.

மாணவியர் விடுமுறை எடுப்பதைத் தவிர்த்தல்:

மாணவிகள் Study Class, Special Class-க்கு அடிக்கடி விடுமுறை எடுக்காமல் வந்தால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற முடியும். பெற்றோரும் இதைக் கவனத்தில் கொண்டு, கண்காணிப்புடன் செயல்பட வேண்டும்.

கைபேசி நடமாட்டம்:

சில மாணவியரிடம் கைபேசி (செல்ஃபோன்) நடமாடுவதை பெற்றோர் கண்டிப்பாக அறிந்து, அதைத் தவிர்க்கச் செய்ய வேண்டும்.

இரவுப் பாடம்:

இரவு நேரங்களில் குழந்தைகள் அதிக நேரம் படிக்க வேண்டியது இல்லை. இரவு 10.30 மணிவரை படித்தாலே போதும். காலை 05.00 மணியில் இருந்து 08.00 மணி வரை புரிந்து படித்தாலே மாணவியர் எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெற்றிடலாம். தினமும் இதை செய்ய வேண்டும். தேர்வு நேரங்களில் மட்டும் செய்வதால் முழுப்பயன் கிடைக்கப் போவதில்லை.

கனிவான கண்டிப்பு:

பெற்றோரும் சரி, ஆசிரியரும் சரி... மாணவ-மாணவியரைக் கண்டிக்கும்போது, அவர்கள் தம் தவறை உணரும் வகையில் அக்கண்டிப்பு இருத்தல் வேண்டும். அல்லாமல், அவர்கள் தம் படிப்பையே வெறுக்கும் அளவுக்கு அது இருக்கக் கூடாது.

ஒவ்வொரு பருவத்தேர்வு முடிந்த பிறகும், அவர்கள் பெற்ற மதிப்பெண்களைப் பார்த்து, அதற்கேற்ப அவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை (கவுன்சலிங்) கொடுக்கலாம்.

பெற்றோருக்கு இதுபோன்ற கூட்ட ஏற்பாடு:

பெற்றோருக்கும் இதே மாதிரி ஒரு கூட்டம் போட்டு கருத்துக்களைக் கேட்டறியலாம்... நமது கருத்துக்களையும் அவர்களுக்குத் தெரிவிக்கலாம்.


இவ்வாறு, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை செண்பகவல்லி அறிக்கை சமர்ப்பித்தார்.

இசட்.ஏ.ஷேக் அப்துல் காதிர் - ஆசிரியர், சென்ட்ரல் மேனிலைப்பள்ளி:

டியூஷன் மோகம்:

எல்.கே.ஜி. பயிலும் குழந்தைகளையும் கூட டியூஷனுக்கு அனுப்பும் பழக்கம் இந்த ஊரில்தான் உள்ளதென்று கருதுகிறோம்... பெற்றோர்கள் ஃப்ரீயாக இருப்பதற்காக பிள்ளைகளை அவ்வாறு அனுப்பி விடுகின்றனர்.

ஒழுங்காக படிக்காத மாணவர்களை மட்டுமே சில ஆண்டுகளுக்கு முன்பு வரை டியூஷனுக்கு அனுப்புவார்கள். ஆனால் இன்று டியூஷன் படிக்காவிட்டால் அது ஒரு கேவலம் என்றாகிவிட்டது நமதூரில்... நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் கூட டியூஷனுக்குச் சென்றுதான் படிக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளனர்.

இதனால் வீட்டில் மாணவர்கள் பாடங்களைப் படிப்பதென்பதே தற்காலத்தில் இல்லாமலாகிவிட்டது.


இவ்வாறு சென்ட்ரல் மேனிலைப்பள்ளி ஆசிரியர் இசட்.ஏ.ஷேக் அப்துல் காதிர் தெரிவித்தார்.

அந்தோனியம்மாள் - ஆசிரியை, எல்.கே.மெட்ரிகுலேஷன் பள்ளி:

சிறு குழந்தைகளைக் கூட கண்டிக்க இயலவில்லை:

ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவர்களைக் கூட கண்டிப்பது கடினமாக உள்ளது. அப்படி அட்டகாசம் செய்கின்றனர். இவர்கள்தானே பின்னர் வளர்ந்து, பெரிய மாணவர்களாகின்றனர்...?

படித்துக் கொடுக்கும் ஆசிரியர்களையே - அவர்களின் உருவத்தைக் கிண்டல் செய்யும் அளவில் இச்சிறு மாணவர்களின் தரம் உள்ளது. நல்ல பிள்ளைகளும் இருக்கின்றனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

பொது நிகழ்ச்சிகளில் பெற்றோருக்கு அறிவுரை:

கல்வியின் முக்கியத்துவம், பிள்ளைகள் விஷயத்தில் பெற்றோரின் கடமைகள் போன்றவை குறித்து, உங்கள் பொது நிகழ்ச்சிகளில் அறிஞர்களைக் கொண்டு அடிக்கடி உபதேசம் செய்துகொண்டிருக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை தொழுகை நேர உரையிலும் இதுகுறித்து தொடர்ந்து பேசப்பட வேண்டும்.


இவ்வாறு எல்.கே.மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியை அந்தோனியம்மாள் தெரிவித்தார்.

மேற்கண்டவாறு, நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்கள் அமைந்திருந்தன.

ஆசிரியர்களின் தரம்:

பின்னர், ஆசிரியர்களின் பாடம் நடத்தும் தரம் குறித்து, இக்ராஃ தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் கேட்டார்.

1980களில் முழு அளவிலும், 90களில் திருப்தியான அளவிலும் ஆசிரியர்கள் தியாக மனப்பான்மையுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பாடங்களை நடத்தியதோடு, மாணவர்களையும் நெறிப்படுத்தினர் என்பதும், 2000க்குப் பிறகு அது கொஞ்சங்கொஞ்சமாகக் குறைந்து, இன்று பெரும்பாலும் இல்லாமலாகிவிட்டதும் உண்மையே!

எனினும், இதற்கு ஆசிரியர்கள் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. மாணவர்களின் அலட்சியம், பெற்றோரின் கட்டுப்பாடின்மை, அரசின் பல்வேறு சட்டதிட்டங்கள் இவையனைத்தும், நாம் விரும்பியோ விரும்பாமலோ மாணவ-மாணவியருக்கு அவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்த விஷயங்களில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கையில், நமக்கு எதற்கு வம்பு...? பேசாமல் பாடங்களை மட்டும் நடத்திவிட்டுச் செல்ல வேண்டியதுதான்... என்ற மன நிலைக்கு ஆசிரியர்கள் மாறி வருகின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை...


இவ்வாறு ஆசிரியர் குழுவினர் தெரிவித்தனர்.

மொத்தத்தில்,

மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து சரியாக புரிய வைக்கப்பட வேண்டும்...

அவர்களுக்குக் கல்வியில் கவனச்சிதைவை ஏற்படுத்தும் காரணிகளைக் கண்டறிந்து களைந்திட வேண்டும்...

பெற்றோர் மாணவர்களை தம் கட்டுப்பாட்டில், கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்...

என்ற கோரிக்கைகள் இக்கலந்தாய்வுக் கூட்டத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

வந்திருந்த அனைவருக்கும் இக்ராஃ துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான் நன்றி கூற, மாலை 06.00 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது.


இவ்வாறு இக்ராஃ செயலாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Thanks for the news
posted by Shakeel ahamed (Seattle, USA) [21 December 2010]
IP: 24.*.*.* United States | Comment Reference Number: 1725

Well organised and in great detail. Thanks for the news.

All the opinions are very good, Headmistress Shenbagavalli's points require more attention.

eg.
பெற்றோர் கேபிள் டிவி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்...

பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியரின் பெற்றோர் வீட்டில் கேபிள் டிவி பாரப்பதை தங்களின் குழந்தைகளுக்காக தியாகம் செய்யவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Meeting in right direction
posted by Abdul Razzaq Lukman (Dubai) [21 December 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1726

I appreciate IQRA for arranging this kind of meeting. This is conducted on correct time as the public exams are around the corner.

Likewise a meeting is to be arranged for parents and teachers of all schools or atleast with the concerned school. parents must have the moral responsibility to cooperate with the teachers to give good education and good characters to their children.

As Haneefa sir mentioned parents should not(not avoid) give their kids bike and mobile phone as they distract their studies.

Parents should watch their child's friends. Each school should conduct "Open House" to interact with parents about their children studies and behavior.

All the best for our children to score good marks and pass out with flying colors in the forthcoming public exam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Sariyana Neramum,Nitharsanamana Unmaiyum
posted by Satni.S.A.Seyedmeeran (JEDDAH.K.S.A) [21 December 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1731

IQRAvin Anaithu Narpanikalilum Intha Pani Melum Oru Siranthathore Narpani. Mashaallah. Sariyana Nerathil Alagana, Avasiyamana Karthukalai Pakirnthu Konda Perum Mathippirkum Mariyathaikumriya Anaithu Pallikalin HEADMASTERS, TEACHERS & IQRA Managing Committeekum Manamarntha Nanrikal.

Nanum PLUS2 Padikkum Maganin Thanthai Enbathal Ithu Pondra Meeting Before Final Exam Timelum Nadathumarum Migaum Anbudan Vendukiren.

THARVESH & SALIHS KAKAS Udambai Nalla Kavnichyikonga. ALLAH UNGALIN ELLA Kariyankalilum Menmelum Vetriyum, Nanmaiyum Purivanaga AAMEEN. MASALAMA.

Endrum Maratha ANBUDAN
Satni.Seyedmeeran.JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Practice of Malpractice???
posted by Firdous (Dubai) [21 December 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1734

Cheer to Iqra! Hope president of Iqra going right way in right time! Hats off!!!

As Hanifa Sir told micro copy should be banned to school students. Photo Copier shops should co-operate.

Secondly school should not encourage malpractice at any cost. Even the result of exams falls. We knew schools themselves helped in direct or indirectly for malpracticing.

Lets build our community, our future, our kids in morally, ethically, educationally strong! Inshah Alla we will succeed!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Teachers' gathering.
posted by AbdulKader (Abu Dhabi.) [21 December 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1735

Dear Brothers and Sisters, Assalamu’alikum

I thank IQRA for organizing this useful and very informative event. I am convinced that this news compilation (the summary of the meeting) is very well conveyed to every one of us. Every bit of information shared in here is indeed very useful. With this, every parent should act to prepare their action plans towards their children’s education, in particular with BOYS.

On the other hand, I request IQRA to look into the improving the quality (standard) of teacher being deployed amongst our schools.

I would also request all readers of this news to motivate others to read this topic.

Assalamu’alikum


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Hats off to Iqra.............
posted by Shameemul Islam (Chennai) [21 December 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 1737

This is yet another feather in the cap of Iqra. A very good meeting that was well organised by Iqra. Although every inch of the matter is discussed it is the boys and girls whom required to bell the cat. Continuous awareness has to be made through all the bayans and more particularly the Jumu'a sermons that should insist the seekers of knowledge to pay huge attention to their steps to the future without also failing in their moral values.

Parents........ for Allah's sake and for the welfare of your offspring lessen your attachment with the devil box and spend more time with your loved ones. Lastly............ ENNATHAAN VAAZAHPPALATTHAY VAAYIL URICCHY VECCHAALUM...........!!!!!!!!!!!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Uphill Task
posted by A.W.S. (Kayalpatnam) [22 December 2010]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 1741

From the 6 comments surfaced on this page, It appears to me that this article reached more Kayalites abroad than the locals.

May I therefore suggest, IQRA to make a great effort to convey the message (Recommendations from Headmasters) to the parents by organizing s similar meeting. It is an uphill task, but it worth the effort.

It is very clear from the teachers point of view that the students especially boys lack not only education but also disciplines. Without parent support and co-operation there is very little IQRA can do.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Think about Future
posted by ziyad (Kolkata) [22 December 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 1745

Assalamu Alaikum (Varah),

IQRA did the great job with teachers regarding education standards of students. Why don't all people (Parents & Teachers) join together to improve their children education?.

And also, please think about future of our students?

alone study only enough to improve them?

In my school days, i've seen, many teachers & also parents critisised their children by comparing with other children. These are many reasons to do their children uninterested in education.

Why don't the parents & teachers change themselves?

Why don't think differently to improve them?

Don't concentrate only 10th std., +2. These two studies not enough to improve them. Please concentrate all students to improve them from their Pre-KG itself.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. கோடான நன்றிகள்
posted by Jiyaudeen (Al-Khobar) [22 December 2010]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1746

இக்ராஃ விற்கும் கலந்து கொண்ட அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் கோடான நன்றிகள்.(அதற்கும் மேலான வார்த்தை கிடைக்கவில்லை). அனைவர்களுடைய கருத்தும் உண்மையே.

முன்பு எல்லாம் ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் தவறு செய்யும் தம் பிள்ளைகளை "கண்கள் இரண்டையும் வைத்துவிட்டு, தோலை உரித்து விடுங்கள்" என்று சொன்ன காலம் போயி, இப்போது "அவன் தோலில் உங்கள் சுண்டு விரல் கூட படக்கூடாது" என்று ஆகிவிட்டது.

பல பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகள் எங்கு இருக்கின்றார்கள் என்றே தெரியாது!! கேட்டால் ஒரே பதில் - இங்கு எங்கியாவதுதான் இருப்பான். (ஆனா பாருங்க.. அவன் நண்பர்களுடன் தோப்பில் குளித்துக்கொண்டு இருப்பான், 3 நாட்கள் கழித்து போதுத்தேர்வும் கூட-" சென்ற முறை நான் ஊர் வந்த சமயம் நடந்த அனுபவம்"). இதன் அர்த்தம் நம்பிக்கையா அல்லது பொறுப்பு இல்லாமையா என்று தெரியவில்லை. அனைத்துக்கும் வல்ல அல்லாஹ் நல்ல முடிவை தரட்டும்.(ஜியாவுதீன்,அல்கோபர்).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Thanks
posted by S.S. Jahufer Sadik (Jeddah- K.S.A) [22 December 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1747

Many thanks for the teachers and Iqra management who participiate in the meeting,

Meanwhile Iqra should arrange the Class leaders meeting from all over schools to reach this msg to all of our students. Thanks and regards.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Kudos to IQRA
posted by Shaikna Lebbai (Gurgaon) [22 December 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 1748

Dear Brothers,

Firstly I would like to congratulate IQRA for organizing such a wonderful gathering of intellectuals.

All the Head Masters / Head Mistresses have clearly pointed out the reasons for boys not scoring better marks than girls.

All of them have said the facts. Now that the reasons are identified, it is time for all parents to improve on the shortfalls.

For the benefit of all parents, my humble suggestion will be to print all these points as leaflets and distributed to all people of our town.

Insha Allah, we will achieve success and hope that boys also score well in the coming exams.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. கேபிள் டிவி. உரிமையாளர்கள்
posted by N.S.E. மஹ்மூது (Yanbu, Saudi Arabia) [22 December 2010]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1749

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இக்ராஃ சிறப்பான, சிறந்ததொரு கூட்டத்தை கூட்டி தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையாடியது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதிலே கலந்துக்கொண்ட அனைவர்களுடைய கருத்துக்களும் ஒவ்வொரு கோணத்திலிருந்தும் பார்க்கையில் சிறப்புடையதே!

ஆசிரியர்கள் தரப்பிலே, அவர்கள் தினமும் சந்தித்து வருகின்ற பிரச்சினைகளை எப்படி சொல்வது, யாரிடம் சொல்வது என்று மூடி மறைத்தவைகள் எல்லாம் இன்று இக்ராஃவின் இந்த கலந்தாலோசனையால் வெளியாகிவிட்டது. இதன் மூலம் பெற்றோர்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் நிறைய படிப்பினைகள் கிடைத்திருக்கிறது. இந்த செய்தியை படிக்கும் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவது நல்ல பயனைத்தரும்.

------------------------------------------------

பள்ளிக்கூட நிர்வாகம் :-

தலைமை ஆசிரியர்கள் அவ்வப்போது "பெற்றோர்கள் - ஆசிரியர்கள்" கூட்டத்தை பொதுவாக கூட்டி கருத்துக்களை பரிமாறிக்கொள்வது சிறப்புடையது.

மூன்று மாதத்திற்கு ஒருமுறை பெற்றோர்களை அழைத்து பொதுவான கலந்துரையாடல் இல்லாமல் தனியாக மாணவரையும் அவருடைய பெற்றோரையும் வைத்து "வகுப்பு ஆசிரியர்" கலந்துரைத்தால் மிகவும் பயனளிக்கும். இது நடைமுறை சாத்தியமா என்பதை பார்க்கவும்.

---------------------------------------------

பெற்றோர்கள் :-

தங்கள் குழந்தைகள் நன்றாக படிக்கிறார்களா? சரியான நேரத்தில் பள்ளிக்கூடம் செல்கிறார்களா? திரும்பி வருகிறார்களா? என்பதை கண்காணித்து வரவேண்டும்.

தயவு செய்து சொல்லாதீர்கள் "எங்கள் பிள்ளைகள் எல்லாம் நல்ல பிள்ளைகள், நாங்கள் அப்படி ஒன்றும் மோசமாக வளர்க்கவில்லை என்று" கால சூழ்நிலை மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை பெற்றோர்களே உணருங்கள்.

அவசியம் ஒவ்வொரு பெற்றோர்களும், பெற்றோர்கள் கூட்டத்தில் கலந்து அவ்வப்போது உங்கள் பிள்ளைகளின் நிலைகளை அறிய வேண்டும்.

அது மட்டுமல்லாது பெற்றோர்கள், வகுப்பு ஆசிரியர்களை சந்தித்து தங்கள் குழந்தையின் படிப்பு, ஒழுங்குகளை பற்றி நேரில் கேட்டு தெரிந்திருக்க வேண்டும், இந்த சந்திப்பு குறைந்தது இரண்டு மாதத்திற்கொரு முறை இருக்க வேண்டும்.

மேலும் எல்லோரும் கூறுவது போல் பரீட்சை நேரத்தில் கேபிள் டிவி. ஏன் டி.வி.யை பார்ப்பதையே தவிர்த்து உங்கள் குழந்தைகளின் படிப்புக்கும், ஆரோக்கியத்திற்கும் உதவி ஒத்தாசை செய்யலாமே. இது ஒன்றும் முடியாத காரியமில்லை.

நம்ம ஊரில் சில பெற்றோர்கள், பிள்ளைகள் படித்து முடியும்வரை டிவி. வாங்குவதில்லை என்று உறுதியாக இருந்து பிள்ளைகள் எல்.கே.ஜி.யிலிருந்து தொடங்கி மாஸ்டர் டிகிரி வாங்கிய பின்னும் டிவி வாங்கி வைக்காத வீடுகளும் உண்டு. அதனால் உங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக குறைந்தபட்சம் பரீட்சை நேரத்திலாவது டிவி. பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.

----------------------------------------------

கேபிள் டிவி. உரிமையாளர்கள் :-

பொதுவாக கேபிள் டிவியினால் மக்களுக்கு அதிகமான கேடுதான் என்பது கேபிள் டிவி நடத்துபவர்களிலிருந்து அனைத்து தரப்பு மக்களும் அறிந்ததே! இதிலே யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது.

என்னுடைய வேண்டுகோள்! என்னவென்றால் கேபிள் டிவியை நடத்துபவர்கள், பரீட்சை காலங்களில் "செய்தியைத் தவிர" வேறு எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஒளிபரப்புவதில்லை என்று உங்கள் சங்கத்தின் மூலம் முடிவு செய்து செயல்படுத்தலாமே.

இதனால் மாணவர்கள் மனம் சிதறாமலும், பெற்றோர்கள் கவனமும் பிள்ளைகள்மீது இருக்கும். நம் மக்களின் வாழ்வு சிறந்ததாக அமைய வழி பிறக்குமே. எனவே கேபிள் டிவி உரிமையாளர்கள் உதவிடுவீர்களா!!!???.

--------------------------------------------

மாணவமணிகளே! :-

என் அன்பார்ந்த மாணவமணிகளே, நீங்கள் ஒவ்வொருவரும் பரீட்சை நேரத்தில் கஷ்டப்பட்டு படிக்கிறீர்கள், ஆனால் பரீட்சை எழுதும்போது படித்தது அத்தனையும் ஞாபகத்துக்கு வருவதில்லை, சிலதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. இதனால் உங்களுக்கு மார்க்கு குறைவோ, அல்லது தோல்வியோ ஏற்படுகிறது.

இதற்கு என்ன காரணம் என்றால் ஆசிரியர் பாடம் நடத்தும்போது அதில் கவனத்தை செலுத்தாமல் எங்கோ, எதையோ நினைத்துக்கொண்டோ, பார்த்துக்கொண்டோ இருப்பதுதான்.

இதை நீங்கள் தவிர்த்து, பாடம் நடத்தும்போது முழு கவனத்தையும் பாடத்தில் செலுத்தினால் உங்களுக்கு பிரைவேட்டாக டியூஷன் வைக்கத் தேவை இல்லை, பரீட்சை நேரத்தில் இரவு, பகலாக டென்ஷனுடன் படிக்க வேண்டியதில்லை.

அடுத்தது மிகவும் முக்கியம், நீங்கள் படிப்பது அறிவையும், ஆற்றலையும் வளர்ப்பதற்குத்தான். அந்த அறிவை யாரிடமிருந்து பெறுகிறோம்! பெற்றோரிடமிருந்தும், ஆசிரியரிடமிருந்தும்தான். அந்த அறிவை புகட்டக்கூடியவர்களை நாம் மதிக்கவில்லை என்றால் நாம் ஒருபோதும் அறிவு ஞானம் பெறமுடியாது.

எனவே பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் கேளி, கிண்டல் செய்யாது அவர்களை மிகவும் கண்ணியமாக நடத்துங்கள்.

உங்கள் படிப்பு முடியும் வரை, பைக்கோ, செல்போனோ உபயோகப்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். இன்ஷாஅல்லாஹ்! நிச்சயமாக நீங்கள் உங்கள் படிப்பில் மட்டுமல்ல உங்கள் வாழ்விலும் முன்னேற்றம் அடைவீர்கள்.

------------------------------------------

இக்ராஃ:-

மாணவர்களின் எண்ணிக்கை குறைவுக்கான காரணம் கூறும்போது "பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டு, தொழிற்கல்வி (ஐ.டி.ஐ., பாலிடெக்னிக்) பயிலச் செல்லல்... கடைகளுக்கு வேலை பார்க்கச் செல்லல்..." என்று குறிப்பிட்டார்கள்.

இந்த இடைநிறுத்தம் வரக்காரணம் பொருளாதாரம் இல்லாமை.

சிலர் கல்விக்காக இயக்கங்களில் / மன்றங்களில் இருந்து உதவிகள் பெற்று படிப்பதை விரும்புவதில்லை. காரணம் அந்த உதவிகள் எல்லாம் விளம்பரப்படுத்தப்படுகிறதால், அது அவர்களின் சுய மரியாதைக்கு இழுக்கு என்று நடுத்தரக் குடும்பத்தினர் சிலர் நினைக்கின்றனர்.

எனவே, இந்த மாதிரியானவர்களுக்கு 'முழு உதவித்தொகை' என்றில்லாமல் திரும்ப பெறுகிற மாதிரி 'கடனாக' கொடுத்து உதவி செய்யலாமே. அது அவர்களுக்கு மன ஆறுதலை அளிக்கும், தொடர்ந்து படிப்பவர்கள் எண்ணிக்கையும் கூடும்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. இதோ காயலரின் தகப்பன்.
posted by s.s.md meera sahib (riyadh) [23 December 2010]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1751

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர்களே!

இதோ இக்ரா கல்வி சங்கம் செய்திருக்கும் பணி சாதாரண விஷயம் அல்ல! நாம் நம் மக்களை அவர்களின் பாட்டுக்கு விட்டுவிடுகிறோம்.

நம் தாய்மார்களை குறை சொல்லவும் முடியாது. பல தாய்மார்கள் பிள்ளைகளின் படிப்பின் மீது அக்கறை காட்டினாலும், தாய்மார்களை மனதை தொடும் அளவுக்கு எதையாவது சொல்லி பிள்ளைகள் அவர்கள் விரும்பியதை சாதித்து விடுகின்றனர். இது தாய்மார்களின் இயற்கையான பலஹீனம். இதை ஒன்றும் செய்ய முடியாது.

வீட்டில் 9, 10 வயது பிள்ளைகள் இருப்பவர்கள் இருந்தால் கண்டிப்பாக வாப்பாமார்கள் பிள்ளைகளின் எல்லா விசயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

இதோ இக்ரா கல்வி சங்கம் செய்திருக்கும் பணி காயலரின் தகப்பனாக இருந்து, இக்ரா கல்வி சங்க அங்கத்தினருக்கு ஓராயிரம் நன்றிகளும், துவாக்களும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. TEACHERS MEETING
posted by NOOHU SAHIB (DUBAI) [23 December 2010]
IP: 80.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1758

I AM VERY MUCH WELCOME THE DECISION OF IQRA TO INVITE THE HEADS OF OUR TOWN SCHOOLS TO DISCUSS ABOUT THE FUTURE OF OUR CHILDREN EDUCATION. VERY GOOD DIRECTION.

I HOPE THE NEXT STEP TO ARRANGE A CO AXIS MEETING OF TEACHERS STUDENTS AND PARENTS INSHA ALLAH. ONCE AGAIN I CONGRATULATE IQRA MEMBERS FOR THEIR TIRELESS JOB FOR THE WELFARE OF OUR FUTURE GENERATION.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Regarding IP and email id
posted by Riluvan (Michigan) [23 December 2010]
IP: 99.*.*.* United States | Comment Reference Number: 1765

Publishing IP address opens up the computer for port scanning, thus creates security issues to those posting messages. You could obfuscate the email-ids just to defend from spiders; however, displaying full ip is not agreeable.

I appreciate if you could make your case how this helps transparency; nevertheless, if the aim is to establish non-repudiation, the site can allow only registered users to post comments. Some forums today allow folks to post comments through various identity providers to which the user is already a registered user, reducing the burden of registering into this site.

Publishing IP address would discourage people from posting comments. The option then others have now is to post messages through anonymous proxies in which case the stated purpose can be still violated.

[administrator: we have had instances where people have posted replies/comments under two different names - from the same ip, just to raise the temperature in the discussion board. your concerns are valid. insha allah, will find a way]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Good work by IQRA
posted by Ahamed 48 (Chennai) [23 December 2010]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 1766

Maasha allah.Excellent meeting organised by IQRA. Keep up the good work brothers.

The comments provided by every nominees are really valid one. Parents needs to ensure that if any of their child falls in this category, please take appropriate action to take their child to become a rolemodel of other(s). Kind advice from us.

ஒரு பெற்றோர் தன் பிள்ளைகளுக்கு செய்யும் நல்லரங்களிலேயே மிகவும் சிறந்தது அவர்களுக்கு நல்ல கல்வி அளிப்பதே ஆகும் - Prophet Mohamed(Sal).

அன்புடன்
அஹ்மத் 48


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் இதமழை!  (21/12/2010) [Views - 2846; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved