Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:06:10 AM
வெள்ளி | 3 மே 2024 | துல்ஹஜ் 1737, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:59
மறைவு18:27மறைவு14:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5230
#KOTW5230
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 9, 2010
தமிழில் செய்தி வழங்கும் சேவை துவக்கி 10 ஆண்டுகள் நிறைவு! செய்தி ஆசிரியர்கள் குழு அமைப்பு!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3129 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (19) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் தமிழில் செய்தி வழங்கும் சேவை துவங்கி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அல்ஹம்துலில்லாஹ். 1998 ஆம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவக்கப்பட்ட, தி காயல் ஆன் தி வெப், 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் என்ற தலைப்பில் முதல் செய்தியுடன் தமிழில் செய்திகள் சேவையை துவக்கியது. அதற்கு முன்னதாக (நவம்பர் 20, 2000 முதல்) ஆங்கிலத்தில் செய்தி சேவை துவக்கப்பட்டது. இது சில காலமே தொடர்ந்தது.

இத்தருணத்தில் காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு 10 ஆண்டுகளாக தொடர்ந்து செய்தி தந்துவரும் அப்துல் மாலிக் மற்றும் முஹம்மது அலி (மாஸ்டர் கம்ப்யூட்டர் அகாடமி) ஆகியோருக்கும், ஏறத்தாழ நான்கு ஆண்டுகளாக செய்திகள் அளித்துவரும் எஸ்.கே.ஸாலிஹ்க்கும் (தாருத்திப்யான்), இவ்வாண்டு முதல் மக்காவிலிருந்து செய்திகள் தர துவங்கியுள்ள ஒய்.எம்.ஸாலிஹ்க்கும், இவ்வாண்டு முதல் சென்னையிலிருந்து செய்திகள் தர துவங்கியுள்ள எம்.என். புஹாரிக்கும் தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் சார்பாக நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.

மேலும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் மூலம் தங்கள் ஆதரவை வழங்கி வரும் இந்தியா உட்பட உலகெங்கும் வாழும் காய்லர்களுக்கும், நல மன்றங்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும், பிற ஸ்தாபனங்களுக்கும் எமது நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

இணையதளத்தின் நீண்டக்கால நன்மையை கருத்தில் கொண்டு சில மாற்றங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

காயல்பட்டணம்.காம் பல சிறு இணையதளங்களாக பிரிக்கப்பட உள்ளது. தற்போது இணையதளத்தில் உள்ள பல பக்கங்கள் தனி இணையதளங்களுக்கு மாற்றப்படும். முதல் கட்டமாக KayalSky.com என்ற இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. பிற இணையதளங்கள் படிப்படியாக செயல்பட துவங்கும். இம்மாற்றங்கள் மார்ச் 2011 க்குள் நிறைவுபெறும். இன்ஷாஅல்லாஹ். இன்னும் சிறந்த சேவைகள் கொடுக்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காகவும், இணையதள பணிகளை பிரித்து பராமரிப்பது எளிதாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் - இம்மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

காயல்பட்டணம்.காம் - இம்மாற்றங்களுக்கு பின்னர் - செய்தி மற்றும் அதன் தொடர்பான அம்சங்களை கொண்ட இணையதளமாக மட்டும் செயல்படும். இணையதளத்தில் தற்போது உள்ள பிற அம்சங்கள், பிற இணையதளங்கள் மூலம் தொடரும் என்பதையும் தெரிவித்துகொள்கிறோம்.

காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு செய்தி ஆசிரியர்கள் குழு (Editorial Board) அமைக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் செய்திகள் தொடர்பான முடிவுகளை இக்குழுவே எடுக்கும். அக்குழுவில் உள்ளவர்கள் வருமாறு:-

(1) ஏ.தர்வேஷ் முஹம்மது
(2) சாலை முஹம்மது பஷீர் ஆரிப்
(3) எஸ்.ஹெச்.ஷமீமுல் இஸ்லாம்
(4) எம்.என்.புஹாரி
(5) கே.ஜே.சாஹுல் ஹமீது
(6) எஸ்.கே.ஸாலிஹ்
(7) எம்.எஸ்.முஹம்மது சாலிஹு

இது தவிர - இணையதளத்தில் வெளிவரும் செய்திகள் குறித்த குறைகள், கருத்துகள் பெற நடுவர் (Ombudsman) ஒருவரும் விரைவில் அறிவிக்கப்படுவார். இவர் இணையதளத்தை நடத்தும் தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட்க்கோ, செய்திகளை முடிவு செய்யும் ஆசிரியர் குழுவிற்கோ தொடர்பில்லாதவராக இருப்பார்.

செய்திகளை விரைவாக வெளியிட - இணையதளத்திற்கு செய்திகள் அனுப்புபவர் -news@kayalpatnam.com என்ற ஈமெயில் முகவரிக்கு தங்கள் செய்திகளை இனி அனுப்பும்படி கேட்டு கொள்கிறோம்.

தங்கள் ஆதரவும், ஆலோசனைகளும் தொடர்ந்துவர வேண்டுகிறோம்.

- தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Congratulation
posted by P. Zainul Abdeen (Dubai) [09 December 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1511

"போலியோ தடுப்பு சொட்டு மருந்து என்ற செய்தியில் துவங்கி இப்போ உள்ள DCW மற்றும் புற்றுநோய் தடுப்பு செயல்திட்டம் குறித்து வரை அனைத்து செய்திகளுமே நல்ல பிரோஜனம் அளிக்ககூடியதாகவே இருந்தது என்று சொன்னால் மிகையாகாது . உங்களுடைய சேவை இன்னும் பற்பல ஆண்டுகள் தாண்டியும் செம்மையாக செல்ல வல்ல அல்லாஹ்அருள் புரிவானாக ஆமீன். இன்னும் இதுக்காக உதவி புரிந்தவர்கள் அனைவர்க்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

WISH YOU ALL THE VERY BEST


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Well Done - Keep Going
posted by Thaika Ubaidullah (Macau - China) [09 December 2010]
IP: 202.*.*.* Macau | Comment Reference Number: 1512

Alhamdu Lillah, Let me congratulate the whole team for this mile stone. All our prayers and support are with you all.

May the site achieve the goal of bringing the community together. Please try and classify the news in to different catogories and add catagory for children/students. Best wishes and salam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வாழ்த்துகள்
posted by Deen (Hong Kong) [09 December 2010]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 1514

செய்தி ஆசிரியர்கள் குழுவுக்கு மனமார்ந்த நன்றிகள் பல - சேவை மேலும் தொடர வாழ்த்துகள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Masha Allah
posted by S.H.Abul Hassan (Tung Chung) [09 December 2010]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 1515

Congratulation, wish you all the best


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. கவினோடு வாழியவே!
posted by kavimagan (dubai) [09 December 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1516

கடல்கடந்து வாழுகின்ற காயலர்தம் - நெஞ்சில்
கரும்பாக இனிக்கின்ற ஊடகமே! - நெட்டில்
அலசாத பொழுதில்லை உனைதினமே - பொட்டில்
அடித்தாற்போல் உண்மைகளை உரைக்கின்றாய்!

ஒற்றுமையாய் ஓருணர்வாய் வாழ்வதற்கே - எங்கும்
ஒருமுகமாய் நின்றுநலம் செய்வதற்கே - பொங்கும்

அன்போடு சேய் அணைக்கும் தாயெனவே - செங்கல்
இல்லாமல் எமையிங்கு இணைத்(த) தளம்

காயல்பட்டணம்.காம்
கவினோடு வாழியவே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. congrats
posted by Mohammed Aarif (sri lanka) [09 December 2010]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 1517

My hearty wishes and greetings for the entire team for ur hardwork and tireless 10 yrs. may you grow more....
Congratulation


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. வாழ்த்துக்கள் !!!.
posted by N.S.E. மஹ்மூது (Yanbu - Saudi Arabia) [09 December 2010]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1518

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

வாழ்த்துக்கள் !!!

கடந்த பத்து ஆண்டுகளாக தமிழில் செய்திகளை வழங்கி நல்லதொரு சேவையை செய்து வரும் காயல்பட்டணம்.காம் இணையதளத்துக்கும், அதற்கு உறுதுணையாக இருந்து செய்திகளை கொடுத்துக்கொண்டிருக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருளை பொழிவானாக.

உண்மையாகவே! நம்ம ஊர் செய்திகளை அறிந்துக்கொள்வதற்கு ரொம்பவும் பயனுள்ள இணையதளம்.

இன்றைய சூழ்நிலையில் மிகவும் அவசியம் அறியப்பட வேண்டிய செய்திகளை தவறாது தந்துகொண்டே இருப்பது நல்ல பலனை தருகிறது.

கடந்த சில மாதங்களாக வாசகர்கள் கருத்து தெரிவிப்பதற்காக ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்து, அதன் மூலம் மக்கள் அவரவர் கருத்தைப் பதிந்து வருகிறோம். இது பல வகைகளில் பலனை தருகிறது. இதன் காரணமாக நிறைய காரியங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

இதற்கெல்லாம் வழிவகுத்த உங்கள் அனைவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள். உங்கள் சேவைகள் மேலும், மேலும் வளர எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Hearty congratulations
posted by Samu (Dxb) [09 December 2010]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1519

Now, kayalpatnam.com is an essential in the daily routine of many kayalyts. Hearty congratulations for your untiring service and all the very best to your future endeavors.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Good Achievement
posted by S.T. LABEEB (TSUTIN, LA, USA) [09 December 2010]
IP: 99.*.*.* United States | Comment Reference Number: 1523

When I was in Hongkong in 1969 to know our hometown news it took at least one week. But now I know our native news before they know. So my personal salute to your service rendered to our community for which Almighty Allah rewards your team. Ameen.

Wishing S.T. Labeeb from USA(Camp)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. ALHAMDU LILLAH
posted by AHAMED MUSTHAFA (Dubai, U.A.E.) [09 December 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1524

MY HEARTIEST THANKS TO THE ENTIRE TEAM.ALL THE BEST.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. MY HEARTY CONGRATS!!!
posted by Abul Hassan (LONDON) [10 December 2010]
IP: 82.*.*.* United Kingdom | Comment Reference Number: 1527

Dear KOTW Board,

I can't find a word to congrats enough!! its a an amazing service. When ever I go online the first thing to visit KOTW to find out what is happening in my hometown and other ad-hoc news aswel.

ITS TRULY FANTASTIC SERVICE!!! MAY ALMIGHTY ALLAH PROLONG YOUR SERVICE TO UNITE OUR KAYAL COMMUNITY!!! AMEEN!!!

Abul Hassn ibn Sadakathulla
LONDON, UK


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Fabulous Job!!
posted by Salai.Mohamed Mohideen (California) [10 December 2010]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 1530

Heartiest congratulations to KOTW team. It’s a good piece of example for team work and great milestone in continual (social) work. Also am sure it brought kayalites across the world under one umbrella to share our views/overseas news with pics & plays a critical role in echoing kayalites (esp. overseas) feelings over the net on critical issues like Cancer etc

Keep up this good work by always maintaining unbiased status and go with technology by bringing up necessary changes whenever its reqd.

Good luck!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. தமிழில் செய்தி வழங்கும் சேவை துவக்கி 10 ஆண்டுகள் நிறைவு! செய்தி ஆசிரியர்கள் குழு அமைப்பு
posted by Pirabu Mubvarak (Hong Kong) [10 December 2010]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 1534

Assalamu Alaikum,

My Heartiest Wishes for The Entire Team Who Made it Possible for These Days And Wish the Same to be continued for the Coming Days.

May Almighty Allah Make all our Efforts come True......Aameen!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Wish u all the best
posted by Mohamed Salih (Bangalore) [10 December 2010]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 1536

MY HEARTIEST THANKS TO THE ENTIRE TEAM.ALL THE BEST.

MAY ALLAH BLESS IN ALL THE WAYS.. MY BEST WISHSES FOR FUTURE IDEAS..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Good work
posted by Ahamed mustafa (dubai) [10 December 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1545

Guys,

Good work & keep the tempo going. Congratulations on this great achievement !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Hats off
posted by A.M. Syed Ahmed (Riyadh) [11 December 2010]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1561

Hats off TO The Kayal FIRST TRUST....I am your fan & reader since the begining ,really guys you are doing a great job for the kayal society..

With my knowledge no town or villages having thier own website in tamilnadu developed by individual fully with social service moto & bring the small village to the WORLD SHOW (INTERNET)

I used to show & say the fotos and Islamic history of our town to the fellow foreign workers, Especially Arabs & Asians, They feel very happy & appreciate the site , all the credits will go to you guys.

I wish & pray for your service will go years & years with the same social spirit & let Almighty Allah give a long life to you all.

My request

Add some jokes & stories (with ethics) which will make the readers more happy.

Thanks & wishes


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. TEN GOLDEN YEARS IN SERVICE TO KAYAL
posted by Salai Sheikh Saleem (Dubai) [11 December 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1567

அன்பார்ந்த காயல்பட்டினம்.காம் நிறுவனர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

நகர சேவையில் 10 ஆண்டுகள் என்பது இலேசான சாதனை இல்லை. அதுவும் கருத்து வேற்றுமைகள் மிகுந்து இருக்கும் ஒரு ஊரில் எல்லா தரப்பினரையும் திருப்தி படுத்தி நம் சமுதாயமும் சமூகத்தவர்களும் பயன்பெறும் முறையில் சீராக பணியாற்றி கொண்டிருக்கும் உங்கள் மேலான சேவைகள் அல்லாஹ் அருளால் தொடர்ந்து வெற்றி பெற வல்ல அல்லாஹ்வை இரு கரம் ஏந்தி துஆ செய்கிறேன். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Cheers!!!
posted by Riyath (Hong Kong) [12 December 2010]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 1575

Thanks for all your hardwork.

Keep your network growing and good work continues. Humble request to not change the frame of this news page since its very famous and easy to view the news.

All the best for all your future plan...



**Wasalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Congratulations to the entire News Team !!
posted by Arabi Haja (Hong Kong ) [12 December 2010]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 1584

My hearty congratulation to the entire news editor team of Kayalpatnam.com

You will be remembered for your contribution in objective reporting on health matters of Kayalpatnam, leaving behind mostly raw news merely informative, circulated in your page all these years.

Objective reporting on health is commendable and good start. This will make us to be cautious of brewing health hazard in our neighborhood and sea pollution in our beach believably caused by DCW.

Please do not allow sensation in these issues (caused by DCW) while reporting, as there is a possibility of communal overtone and political fallout.

You need to focus on civic administrative side (eradication of prevailing municipal corruption) may contribute a healthy living in our town.

Also appreciate the comments from the readers with expressive acknowledgment and real concern on health. The readers should also come forward to expose corrupt members and officials to clean up our civic body.

You have a long journey to go and I along with all others, wish the team all the success in your endeavour. May I seek Allah's help and reward for this noble task. Wassalam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
கரைந்து வரும் கனவாய்!  (10/12/2010) [Views - 2929; Comments - 2]
கடலை நோக்கி கீரிக்குளம்!  (10/12/2010) [Views - 2977; Comments - 1]
மீண்டும் செங்கடல்!  (9/12/2010) [Views - 4550; Comments - 5]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved