Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:40:02 PM
சனி | 4 மே 2024 | துல்ஹஜ் 1738, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்02:45
மறைவு18:28மறைவு15:00
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4705:1305:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:41
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5199
#KOTW5199
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், டிசம்பர் 7, 2010
நகரில் 18 வயதுக்குக் குறைவானோருக்கு சிகரெட் விற்பதைத் தவிர்க்கச் சொல்ல வேண்டும்! ஐக்கியப் பேரவைக்கு சிங்கை கா.ந.மன்ற செயற்குழு வேண்டுகோள்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3813 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் 18 வயதுக்கும் குறைவானோருக்கு பீடி, சிகரெட் உள்ளிட்ட புகைக்கும் பொருட்களை விற்பதைத் தவிர்க்குமாறு விற்பனைக் கடைகளை காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை வலியுறுத்த வேண்டுமென சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் (KWAS - க்வாஸ்) செயற்குழுக் கூட்டம் 04.12.2010 அன்று மாலை 05.00 மணிக்கு, மன்றச் செயலர் ரஷீத் ஜமான் தலைமையில், மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. ஹாஃபிழ் ஹஸன் ளாஃபிர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.



புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:

சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு பெற்றிடும் பொருட்டு சில காலமாக சிங்கையில் தங்கியிருந்த காயலர்களான நிஃமத்துல்லாஹ், ஹஸன் மவ்லானா, ஹஸன் ளாஃபிர் ஆகியோருக்கு நல்ல வேலைவாய்ப்புகள் அமைந்துள்ளதையடுத்து, அவர்கள் மன்றத்தின் புதிய உறுப்பினர்களாக்கப்பட்டு, இக்கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டனர்.

இன்னும் வேலைவாய்ப்புக்காக முயற்சித்துக் கொண்டிருக்கும் மன்ற உறுப்பினர் ஷேக் அப்துல் காதிரின் சகோதர்ர் ஜக்கரிய்யாவுக்கு தகுந்த வேலைவாய்ப்பு கிடைக்க மன்றத்தின் சார்பில் தொடர்ந்து உதவிகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

நலிந்தோருக்கு சமையல் பொருட்களுதவி - கணக்கறிக்கை தாக்கல்:

கடந்த ஹஜ் பெருநாளின்போது, நகரின் நலிந்தோருக்காக மன்றத்தால் வழங்கப்பட்ட அத்தியாவசிய சமையல் பொருட்களுதவி குறித்த விபர அறிக்கையை துணைச் செயலர் மொகுதூம் முஹம்மத் சமர்ப்பித்தார். ரூபாய் முப்பத்தாராயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தைந்து தொகையை செலவாகக் கொண்டு, நகரின் நலிந்த 37 குடும்பங்களுக்கு இச்சமையல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.

இந்த வினியோகத்தில் ஈடுபட்டு, சிறப்புற நடத்தித் தந்தமைக்காக மன்ற உறுப்பினர் பாக்கர் ஸாஹிப், நகரின் பொதுநல ஆர்வலர் மஹ்மூத் லெப்பை ஆகியோருக்கு மன்றத்தின் சார்பில் மனப்பூர்வமான நன்றி தெரிவிக்கப்பட்டது. அடுத்த வினியோகம், 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

வரவு செலவு கணக்கறிக்கை தாக்கல்:

இக்கூட்டத்தில் மன்றத்தின் வரவு செலவு கணக்கறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை சந்தா தொகை நிலுவையிலுள்ளோர், இம்மாததுடன் நடப்பு கணக்காண்டு நிறைவடைவதைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தமது நிலுவை சந்தா தொகையை மன்றத்தில் செலுத்துமாறு கூட்டத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். நிலுவையிலுள்ள உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு நிலுவைத் தொகையைப் பெற்றிடும் பொறுப்பு மன்ற உறுப்பினர் கே.எம்.டி.ஷேக்னா வசம் ஒப்படைக்கப்பட்டது.

நலிந்த நகர்மக்களுக்காக இன்னும் அதிகளவில் உதவிப்பணிகளை செய்திடும் பொருட்டு, உறுப்பினர்கள் தமது சந்தாத் தொகைகளை இன்னும் அதிகரித்து வழங்கலாம் என உறுப்பினர் ஹரீஸ் கருத்து தெரிவித்தார். இதுகுறித்து கலந்தாலோசனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

சந்தா தொகையில் ஒரு பகுதியை சேமித்தல்:

மன்றத்தின் வருமானத்தைப் பெருக்கிடும் பொருட்டு, உறுப்பினர் சந்தாத் தொகை நிதியிலிருந்து ஒரு பகுதியை தனியே ஒதுக்கி வைக்கலாம் என உறுப்பினர் முஹம்மத் அலீ சென்ற கூட்டத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

அவ்வாறு ஒதுக்கப்படும் தொகையைக் கொண்டு, மன்றத்தின் வருமானத்தைப் பெருக்கிடும் வகையில் தங்கத்தில் முதலீடு, நிலம் வாங்கல் உள்ளிட்டவற்றைச் செய்யலாம் என உறுப்பினர்கள் முஹம்மத் அலீ, உதுமான் ஆகியோர் கருத்து தெரிவித்தனர். அடுத்த நிதியாண்டில் இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என அப்போது உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

வரும் ஓராண்டிற்கான செலவை நிதி ஒதுக்கீட்டு அறிக்கையாக (பட்ஜெட்) வெளியிடலாம் என உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்த கருத்து ஏற்கப்பட்டு, அடுத்த (2011) நிதியாண்டிலிருந்து அது செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இக்ராஃவிற்கு பொருளுதவி - தலைவர் முடிவுக்கு வரவேற்பு:

இக்ராஃவின் அலுவலகத் தேவைக்காக மன்றத்தின் சார்பில் 5 நாற்காலிகள் வழங்கப்படும என அண்மையில் நடைபெற்ற இக்ராஃ செயற்குழுக் கூட்டத்தில், மன்றத் தலைவரும், இக்ராஃ தலைவருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் வெளியிட்ட அறிவிப்புக்கு இக்கூட்டம் வரவேற்றுள்ளது.

அத்துடன், புதிதாக இக்ராஃவிற்கு 10 உறுப்பினர்களைச் சேர்ப்பதென தீர்மானிக்கப்பட்டது. அப்பணிக்கான ஒருங்கிணைப்பாளராக, மன்ற துணைச் செயலர் மொகுதூம் முஹம்மத் நியமிக்கப்பட்டார்.

புதிய உண்டியல் வினியோகம்:

மன்றத்தின் வருமாத்தைப் பெருக்கும் மற்றொரு திட்டமான உண்டியல் மூலம் நிதி சேகரிப்புத் திட்டத்தின் கீழ், இதுவரை உண்டியல் பெறாத உறுப்பினர்களுக்கு புதிய உண்டியல்களை வழங்கும் பொறுப்பு உறுப்பினர் உமர் ரப்பானீயிடம் ஒப்படைக்கப்பட்டது. வரும் 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் அனைத்து உண்டியல்களும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அடுத்த பொதுக்குழு:

மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை கிழக்கு கடற்கரை பூங்காவில் (East Coast Park) 15.01.2011 அன்று நடத்தலாம் என உத்தேசமாக தேதியும், இடமும் முடிவு செய்யப்பட்டது. விரைவில் அது குறித்து உறுதியான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

புதிய இலச்சினை (Logo) உருவாக்கம்:

மன்றத்திற்கான புதிய இலச்சினையை உருவாக்கும் பொறுப்பு உறுப்பினர் ஹஸன் மவ்லானா வசம் ஒப்படைக்கப்பட்டது. டிசம்பர் 31ஆம் தேதிக்குள் புதிய இலச்சினையை உருவாக்கித் தருமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

சிறப்பு மலர் வெளியீடு:

ஏற்கனவே முந்தைய செயற்குழுக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்ட படி, சிங்கப்பூர் காயல் நல மன்றம் - KWAS அமைப்பின் சார்பில் சிறப்பு மலர் வெளியிடுவதென தீர்மானிக்கப்பட்டு, அதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டது.

மன்றச் செயலர் ரஷீத் ஜமானைத் வழிநடத்துபவராகக் கொண்டு, மொகுதூம் முஹம்மத், சாளை நவாஸ், ஏ.எம்.உதுமான், கே.எம்.டி.ஷேக்னா, இஸ்மத் ஷாஜஹான், முஹம்மத் அலீ, ஹரீஸ், ஹஸன் மவ்லானா ஆகிய உறுப்பினர்கள் இச்சிறப்பு மலருக்கான ஏற்பாட்டுக் குழுவினராக நியமனம் செய்யப்பட்டனர்.

மன்ற உறுப்பினர்கள், கவிதை, கட்டுரை, வரலாற்றுத் தகவல்கள், துணுக்குகள் உள்ளிட்ட தமது படைப்புகளை kwasingapore@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

காயல்பட்டினத்திலிருந்து இம்மலரை வடிவமைக்கும் பொறுப்பாளர் அடுத்த கூட்டத்தில் நியமிக்கப்படுவார் எனவும், இதுகுறித்து மேலும் கலந்தாலோசனை செய்திடுவதற்காக 12.12.2010 அன்று கூடுவதெனவும், அதற்கான நேரம், இடத்தை மன்ற துணைச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் தெரிவிப்பார் எனவும் இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

நகரில் புற்றுநோய் விழிப்புணர்வு:

நகரில் புற்றுநோய் குறித்து பொதுமக்களை முழுமையாக விழிப்புணர்வடையச் செய்வதற்கான அனைத்து ஒத்துழைப்புகளும் மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த இரண்டு வாரங்களாக காயல்பட்டினம்.காம் வலைதளத்தில் புற்றுநோய் குறித்து தொடராக வெளியிடப்பட்டு வரும் அரிய தகவல்களடங்கிய செய்திகள் மன்றத்தால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாகவும், நகரில் புற்றுநோய் விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தனியொரு குழு அமைக்கப்பட வேண்டுமெனவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இளம் வயதினருக்கு சிகரெட் விற்பனை தவிர்ப்பு:

நகரில், 18 வயதுக்கும் குறைவானோருக்கு பீடி, சிகரெட் உள்ளிட்ட புகைப்பொருட்களை விற்பனை செய்வதைத் தவிர்க்க சம்பந்தப்பட்ட கடைகளை வலியுறுத்துமாறு, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையை மன்றம் கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.

உறுப்பினருக்கு மண முன்வாழ்த்து:

26.12.2010 அன்று திருமணம் செய்யவுள்ள மன்ற உறுப்பினர் பி.எஸ்.எம்.காதருக்கு மன்றத்தின் சார்பில் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அந்நாளில் ஊரிலிருக்கும் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் தனது திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு வருங்கால மணமகனும், மன்ற உறுப்பினருமான பி.எஸ்.எம்.காதர் உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

விவாதிக்க வேறு எதுவும் இல்லாத நிலையில், உறுப்பினர் ஹரீஸ் துஆவுடன், இரவு 07.00 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது. மன்ற செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் இக்கூட்டத்தில் திரளாகக் கலந்துகொண்டனர்.




இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
மொகுதூம் முஹம்மத்,
துணைச் செயலாளர்,
காயல் நல மன்றம், சிங்கப்பூர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Why not stop for all?
posted by Moosa Sahib (Chennai - Mannady) [07 December 2010]
IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 1461

Hi,

This is very funniest request from Singapore Kayal Welfare Association.

Why not you request to stop cigarette sales within kayal. From this you encourage others(above 18) to take cigarette.

From this we know, younger peoples (below 18) can easily get cigarette within kayal. Those younger peoples took cigarette in outskirts of beach or in ground.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Condition
posted by Sayna (Bangkok) [07 December 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 1463

in newsuku yannoda comments pothu vanavai,

1.Pillaingaluku mathiel Cigarate kudipathai thaviruthu kollungal.

2.Unavu Thaniyangal virukum idagalil cigarate virka thadai saiungal.

3.Pallie koodam, Madurasa, Masjid,Koil ipadie pothuvana idangalil cigarate kudipathai thadai saiungal,

4.Hotel and Resturant , fast food stall ipadi patta idagalil cigarate kudipathai thadai saiungal,

5.Pillaigalidam Cigarate vanga solluvathai thaviruthu vidungal

ipadi oru news podunga , ipadie oru araikai vittu irukaalam.

18vayasuku keelay ullavangaluku cigarate virpathai thavirka solluvathum nallathu thaan,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சின்னதாக ஒரு நன்மை!
posted by N.S.E. மஹ்மூது (Yanbu, Saudi Arabia) [07 December 2010]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1467

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நல்ல பல திட்டங்களை தீட்டி ஊர்மக்களுக்கு உதவிடும் சிங்கப்பூர் கா.ந.மன்றத்தினருக்கு முதலில் என் வாழ்த்துக்கள்.

அழகான முறையில் கூட்ட நிகழ்வுகள் நடந்திருக்கு, எல்லாம் முறையாக கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கின்றீர்கள் அல்ஹம்துலில்லாஹ்.

சிகரெட் , பீடி போன்ற புகைக்கும் பொருட்களை 18 வயதுக்கும் குறைவானவர்களுக்கு விற்க தடை விதிக்கும்படி கேட்டிருப்பது வரவேற்க தக்கது. ஏதோ சின்னதாக ஒரு நன்மை உண்டாகத்தான் செய்யும்.

இருந்தாலும் வயது என்று குறிப்பிடாமல் மொத்தத்தில் புகைக்கும் பொருட்கள் விற்பதை படிப்படியாக நிறுத்துவதற்கு ஏற்ற யோசனையை வகுத்து ஐக்கியப் பேரவைக்கு அனுப்பினால் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.

சகோதரர் ' Sayna ' அவர்கள் குறிப்பிட்டது போன்ற கட்டளைகளை , மேலும் பொருத்தமான கட்டளைகளை பிரப்பிக்கச் சொல்லலாம். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Smoking awareness
posted by Salai.Mohamed Mohideen (California) [07 December 2010]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 1472

Its a good suggestion since we 'Not selling Cig's for under 18' in countries like USA,Singapore (& many more) since smokers has to show their ID to buy Cig's. But will it work out in kpm?

Smokers will bring their ID or even sellers mind about the ID or under 18 rathar than business? So the Idea of 'Not selling cig's for under 18' is a good thought but not making sense from practical point of view

Br.Sayna's points/tips should be considered. My thought is, rathar than saying 'not selling for under 18', we need to eradicate this smoking (across all ages) by creating more awareness through relvant programs in KPM since it leads to Oral, lung cancer etc


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. How does it fair?
posted by Ibrahim (Chennai) [08 December 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 1476

How does it fair to sell cigars to above 18 dear?

Ban cigar selling in city. Each seller must know that if he/she is earning the money by selling haram things. It is with one's own nafs.

Let starts campaign not to sell cigars

NO CIGARS. NO MURDERS. NO MURDERERES


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Chubby
posted by Ibrahim (Chennai) [08 December 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 1478

I couldn't find Azhar Chubby.. Where is he? Do call if you see this comment dude. I lost my hp hope you know. Can get my new # in your yahoo offline


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved