|
தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள முனைவர் சி.என்.மகேஷ்வரன் இன்று அலுவலகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இன்று மதியம் 01.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை இரவிச்சந்திரனிடமிருந்து ஆட்சித்தலைவருக்கான பொறுப்புகளைப் பெற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேலூர் மாவட்டம் சின்னபள்ளிக்குப்பத்தைச் சார்ந்த நான் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொள்வது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும், மாவட்டத்தில் மக்கள் குறைகள் எதுவாக இருந்தாலும் அவை தனக்குத் தெரிவிக்கப்படுகையில் உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆவலாய் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அனைத்துத் துறை அலுவலர்களோடு கலந்துரையாடி, நடப்பு நிலைமைகளைத் தெரிந்துகொண்டு, எத்திட்டத்திற்கு முன்னுரிமை அளிப்பதென்பதை முடிவு செய்யவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சி.க.வீரனன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பால.சக்திதாசன் ஆகியோர் அப்போது உடனிருந்தனர். |