| சஊதி அரபிய்யா – தம்மாம் காயல் நல மன்றத்தின் 88-ஆவது பொதுக்குழு கூட்டம், குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வாக 21.02.2020 வெள்ளிக்கிழமையன்று நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள, மன்றத்தின் நிர்வாகக் குழுவின் சார்பில் காயலர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கை:
 அன்புடையீர்,
 
 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வரபக்காத்துகு!
 
 நமது தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 88-ஆவது பொதுக்குழு கூட்டம் & 5-ஆவது குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வு, இன்ஷா அல்லாஹ் 21 பிப்ரவரி 2020 வெள்ளிக்கிழமையன்று தம்மாம் அல்-ஃபைஸலிய்யா புறநகர் பகுதியிலுள்ள (தம்மாம் 91) இஸ்திராஹாவில் (ஓய்வில்லத்தில்) காலை 7:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடைபெறவுள்ளது.
 
 சென்ற ஆண்டுகளை போன்று, இவ்வாண்டும் சிறப்பான முறையில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்துவருகின்றோம்.
 
 பல்சுவை நிகழ்ச்சிகள், உள்ளரங்க / வெளிப்புற விளையாட்டுகள், நீச்சல் குளப் போட்டிகள் ஆகியவை இடம்பெறுகின்றன. காலை சிற்றுண்டி, மதிய உணவாக களரி கறி, மாலை தேநீர் / சிறுகடி ஆகியன நிகழ்விடத்தில் அளிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
 
 நம் மன்ற சகோதரர்கள் குடும்பத்தோடு கலந்துகொள்வதோடு, கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் ஏனைய காயலர்களையும் ஆதரவாளர்களையும் அழைத்து வருமாறு வேண்டிக்கொள்கிறோம்.
 
 
   
 கூடுதல் விபரங்களுக்கு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவினரை தொடர்புகொள்ளவும்.
 
 --------------
 
 தகவல்:
 நிர்வாகக் குழு
 தம்மாம் காயல் நற்பணி மன்றம்
 
 
 |