உலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் – 26.12.2019. வியாழக்கிழமையன்று 18.45 மணியளவில், கலீஃபா அப்பா தைக்கா வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இக்ராஃவின் அண்மைக்காலச் செயல்பாடுகள், நிகழாண்டில் வழங்கப்பட்ட கல்விக் கடன், அரசு போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி, “சந்தியுங்கள் காயலின் முதன்மாணவர்களை – 2019” நிகழ்ச்சி, இக்ராஃவுக்கான புதிய இணையதளம் துவக்கம் உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் கருத்துக்கள் பரிமாறப்படவுள்ளன. கூட்டத்தில் பங்கேற்க – இக்ராஃவின் செயற்குழு உறுப்பினர்களுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கூட்ட ஏற்பாடுகளை, இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஒருங்கிணைப்பில் அதன் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
|