Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:38:32 AM
திங்கள் | 9 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1957, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0012:1315:3318:0419:17
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:21Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:52
மறைவு17:59மறைவு00:23
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0605:3205:58
உச்சி
12:10
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2118:4819:14
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20496
#KOTW20496
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மே 4, 2018
வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையால் பயன்பெற்றோர் விபரப் பட்டியல்: ஹாங்காங் கஸ்வா பொதுக்குழுவில் வெளியீடு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3394 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்திலுள்ள ஏழை மாணவர்களுள் தகுதியுள்ளோரக்கு – அவர்களது மேற்படிப்பிற்கான அனைத்து செலவினங்களுக்கும் பொறுப்பேற்று உதவுவதன் மூலம், அவரது குடும்பத்திற்கு வருமானத்தை ஈட்டும் ஒருவரை உருவாக்கல் என்ற ஒற்றைத் திட்டத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஹாங்காங்கிலுள்ள காயல் இளைஞர்களால் நடத்தப்பட்டு வருகிறது காயல்பட்டினம் மாணவர் நலச் சங்கம் – Kayal Students Welfare Association – KSWA.

அதன் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், இதுவரை படித்துப் பயன்பெற்றவர்களது விபரப் பட்டியல், தற்போது படித்துக்கொண்டிருப்போர் விபரப் பட்டியல் உள்ளிட்டவை – அதன் பொதுக்குழுக் கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கூட்டம் குறித்த நிகழ்வறிக்கை:-

KSWA ஹாங்காங்கின் (KAYAL STUDENTS WELFARE ASSOCIATION, HONG KONG ) 20 வது பொதுக்குழு கூட்டம் விமரிசையாக நடைபெற்றது.

இறையருளால் எமது அமைப்பின் 20 வது பொதுக்குழு கூட்டம் கடந்த 14/4/2018 அன்று KOWLOON MASJID சமூக கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நம் ஊர் பெரியோர்கள் ஜனாப் கம்பல்பக்ஸ் பாக்கர், ஜனாப் சேகு, ஜனாப் ஹசன் மரைக்கார் ஆகியோர்கள் தலைமை வகித்தார்கள்.

முதலாவதாக எங்கள் செயற்குழு உறுப்பினர் ஹாபிழ் M.N. முஹைதீன் கிராத் ஓதி ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து எங்கள் செயற்குழு உறுப்பினர் S.H. முகம்மது மக்பூல் கூட்டத்திற்கு வந்திருக்கும் அனைவர்களையும் வரவேற்று பேசினார். அடுத்ததாக எங்கள் செயற்குழு உறுப்பினர் M. செய்யது அஹமது அமைப்பின் விரிவான அறிக்கையை அனைவர்களின் முன்னிலையில் வாசித்தார். அதிலிருந்து கீலே சில முக்கிய செயல்பாடுகள் மற்றும் விபரங்கள்,



கஸ்வா அமைப்பின் அறிமுகமும், இது வரை ஆற்றிய பணிகளின் சுருக்கமும் மற்றும் இந்த வருடத்திற்குரிய ஆண்டறிக்கையையும்

கஸ்வா அமைப்பு 1998-ம் ஆண்டு ஜனவரி மாதம் மற்றும், புண்ணியமான ரமலான் மாதத்தில் நிறுவப்பட்டு, இப்போது 20-வது ஆண்டில் அல்லாஹ் கிருபையை கொண்டு செவ்வனே செயல்பட்டு வருகின்றது, அல்ஹம்துலில்லாஹ்.

கஸ்வா அமைப்பு 22 பேர் கொண்ட நிர்வாகக் குழு (Executive Committee) உறுப்பினர்களைக் கொண்டு நிர்வாகம் செய்யப்படுகிறது. இவர்கள் உட்பட 117 பேர் தற்போது உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர் மாதாந்திர சந்தா கட்டணமாக ஒவ்வொருவரும் கஸ்வா ஆரம்பித்த நாளிலிருந்து ஐம்பது (50) ஹாங்காங் டாலரும், இரண்டு பெருநாள் மாதங்கள் மட்டும் கூடுதலாக நூறு (100) ஹாங்காங் டாலரும் செலுத்துகின்றனர். ஆக மொத்தம், ஒரு உறுப்பினர், எட்டு நூறு (800) ஹாங்காங் டாலர் செலுத்துகின்றனர்.

காயல்பட்டிணத்தில் படிக்கும், காயல்பட்டிணத்தை சார்ந்த முஸ்லிம் மாணவர்கள், அவர்களின் பள்ளிக்கூட +2 படிப்பை முடித்த பிறகு தொழிற்கல்வி மேற்படிப்பிற்காக அவர்களின் மதிப்பெண்களை வைத்து மேற்படிப்பு படிக்க (அதாவது merit basis) அனுமதி கிடைத்தும், அவர்களின் குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக மேற்படிப்பு படிக்கச் சேர முடியாமல் போனவர்களுக்கு முழுமையாக உதவுவதே கஸ்வா அமைப்பின் முக்கிய குறிக்கோள் ஆகும்.

மாணவர்களின் முழு கல்லூரிச் செலவையும் கஸ்வா ஏற்றுக்கொள்கிறது. கல்லூரி கட்டணம், விடுதி கட்டணம், உணவு கட்டணம், போக்குவரத்து மற்றும் இதர படிப்பு செலவுகள் அனைத்தையும் கல்லூரி ஆரம்ப நாள் முதல் கல்லூரி படிப்பு முடியும் வரை முழுமையாக கஸ்வா செலுத்தும். இதன் மூலம் மாணவர்களுக்கு கஸ்வா உதவுகிறது என்று சொல்வதை விட, மாணவர்களை கஸ்வா தத்து எடுத்துக் கொள்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

கஸ்வா-வின் உதவி கேட்டு விண்ணப்பிக்க மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படை தகுதி - தொழிற்கல்வி பட்டப் படிப்பிற்கு நுழைவு பெற்றிருக்க வேண்டும் (அதாவது professional course admission on merit basis). கஸ்வா-விற்கு விண்ணப்பிக்கும்போது, மாணவர்கள் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்:

• மாணவரின் பெற்றோர் அல்லது குடும்ப பெரியவர் கையொப்பமிட்ட கடிதம்.
• +2 mark sheet மற்றும் கல்லூரி நுழைவு பெற்ற சான்றிதழ்
• மாணவர் பள்ளி கல்வி பயின்ற தலைமை ஆசிரியரின் கடிதம்.
• மாணவர் வீடு இருக்கும் ஜமாஅத் கடிதம்

கஸ்வா என்றவுடன் பலருக்கு ஞாபகம் வரும் நபர் மர்ஹூம் கத்தீப் S.A. ஹாமிது. மர்ஹூம் அவர்களின் நினைவாக "Marhoom Katheeb Hameed Annual Award" என்ற பரிசை ஒவ்வொரு ஆண்டும் +2-வில் ஊரிலேயே முதல் மாணவருக்கு அளிப்பதாக கஸ்வா அறிவித்தது.

"Marhoom Katheeb Hameed Annual Award" என்பது ஒரு கேடயம் மற்றும் தற்போது ரூபாய் பத்தாயிரம் கொண்ட பரிசாகும். இந்த பரிசு 2002ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் முதல் மாணவர் அல்லது மாணவியாக வந்த பள்ளியில், காலை மாணவர் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் வைத்து வழங்கப்படுகிறது. ஊர் topper பரிசு என்று ஊரிலேயே முதன் முதலில் வழங்கியது கஸ்வா-தான் என்பதும், அது "Marhoom Katheeb Hameed Annual Award" என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்றும் 2014ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், +2 தேர்வில் திருக்குர்ஆனை மனனம் செய்துள்ள ஹாஃபிழ் மாணவர்களுக்குள் நகரளவில் முதலிடம் பெரும் மாணவருக்கு கஸ்வா உறுப்பினர், பாசமிகு சகோதரர் Marhoom ஹாஃபிழ் என்.எச்.ஷாஹுல் ஹமீத் நினைவாக 3 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் வழங்கப்படுகிறது.

இவைப்போக, 2014ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், மருத்துவ படிப்பில் NEET தேர்வில் நகரளவில் முதலிடம் பெரும் மாணவருக்கு மற்றும் பொறியியலுக்கான கட்ஆப் (cutoff) மதிப்பெண்ணில் , நமதூர் அளவில் முதலிடம் பெரும் மாணவருக்கான பணப்பரிசு தலா ரூ.3,000 பணப்பரிசும் வழங்கப்படுகிறது.

கஸ்வா-வின் சாதனைகளில் முதன்மையானது 37 பட்டதாரிகளை உருவாக்கியதுதான்.

ஒரு M.B.B.S, ஒரு Ph.D, ஒரு M.E., ஒரு M.Tech, ஒரு M.B.A, ஒரு B.D.S, ஒரு B.Pharm, ஒரு B.Sc (Hotel&Catering), ஒரு B.Arch, மூன்று B.Tech, மற்றும் 25 B.E பட்டதாரிகளை கஸ்வா இதுவரை உருவாக்கி உள்ளது. இவர்களில் 2017ல் ஒருவர் B.E., ஒருவர் B.Tech, படிப்பினை முடித்தனர்.

கஸ்வா-வின் ஆதரவில் தற்போது 6 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களில் மூவர் B.E, இருவர் B.Sc (AHS) (Allied Health Science) படித்து வருகிறார்கள். மற்றும் ஒருவர் IAS (Indian Administrative Services) Coaching course படித்து வருகிறார். இவை போக சில வருடம் முன்பாக தனியார் மருத்துவ நிறுவனம் ஒன்று ஏற்றுக்கொண்ட ஒரு மாணவியின் M.B.B.S, படிப்பு செலவுக்காக கஸ்வாவின் பங்காக ரூபாய் ஒரு லட்சம் செலுத்தப்பட்டது. கஸ்வா-வின் ஆதரவில் படிக்கும், படித்த மாணவர்கள் யாவரும் தங்கள் துறையில் முதன்மை மாணவர்களாக திகழ்ந்திருக்கிறார்கள் என்பதில் கஸ்வா பெருமை கொள்கிறது.

KSWA STUDENTS - TURNED PROFESSIONAL GRADUATES

Degree Course Number of graduates

MEDICAL STREAM:

M.B.,B.S. Medicine and Surgery 1
M.B.,B.S. Medicine and Surgery (1 part sponsor)
B.D.S Dental Surgery 1
B. Pharm Pharmacy 1
TOTAL MEDICAL GRADUATES 3 (excl. part sponsor)

ENGINEERING STREAM:

M.E. Electronics and Communication Engineering 1
M.Tech. Bio Technology 1
B.Tech. Bio Technology 1
B.Tech. Information Technology 1
B.Tech. Plastics Technology 1

B.E. Aeronautical Engineering 1
B.E. Civil Engineering 2
B.E. Computer Science & Engineering 2
B.E. Electronics and Communication Engineering 5
B.E. Electrical and Electronics Engineering 4

B.E. Information Technology 1
B.E. Instrumentation and Control Engineering 5
B.E. Mechanical Engineering 4
B.E. Production Engineering 1
B.Arch. Architecture 1
TOTAL ENGINEERING GRADUATES 31

OTHER STREAM

Ph.D Molecular Biology 1
M.B.A 1
B.Sc Hotel & Catering Management 1
TOTAL OTHER GRADUATES 3
TOTAL KSWA GRADUATES 37

CURRENT KSWA STUDENTS

Degree Course Number of students

ENGINEERING STREAM

B.E. Mechanical Engineering 2
B.E. Civil Engineering 1
TOTAL ENGINEERING STUDENTS 3

MEDICAL STREAM

B.Sc Allied Health Science 2
TOTAL MEDICAL STUDENTS 2

OTHER STREAM

IAS Coacing Course 1
TOTAL OTHER STUDENTS 1
TOTAL CURRENT KSWA STUDENTS 6

வரவு செலவு குறிப்பு

அடுத்ததாக எங்கள் செயற்குழு உறுப்பினர் P.S.A. கபீர் அமைப்பின் வரவு செலவு கணக்கை அனைவர்களின் முன்னிலையில் வாசித்தார்.



அதிலிருந்து சில முக்கிய விபரங்கள்,,

1998 முதல் சென்ற மாதம் வரை சுமார் ஒன்று புள்ளி நான்கு மில்லியன் (1.4million) ஹாங்காங் டாலர்கள் (அதாவது ஏறக்குறைய ஒரு கோடியே பதினைந்து லட்சம் இந்திய ரூபாய்) பொருளாதாரத்தில் பின்னடைந்த மாணவர்களின் கல்விக்காக கஸ்வா செலவு செய்துள்ளது, மாஷா-அல்லாஹ்.

31 MARCH 2018 கணக்கின்படி, கஸ்வாவின் வருமானம் 70 சதவிகிதம் உறுப்பினர்களின் சந்தா மூலம் பெறப்பட்டுள்ளது. 22 சதவிகிதம் பழைய மாணவர்களிடமிருந்தும், 8 சதவிகிதம் நன்கொடைகள் மூலமாகவும் பெறப்பட்டுள்ளது. இதிலிருந்து. 89 சதவிகிதம் மாணவர்களின் படிப்பிற்காகவும், 11 சதவிகிதம் இதர செலவுகளுக்கும் உபயோகம் செய்யப்பட்டது.

துளிர் சிறப்பு பள்ளிக்கு கஸ்வாவின் உதவி

துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளிக்கு மூன்று பயிற்சி அறைகளை கட்டுவதற்கு சென்ற வருடம் கஸ்வா 4 லட்சம் ரூபாய் வழங்கியது. கட்டிட வேலைகள் 2017 மே மாதம் தொடங்கி தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. மொத்தம் 8 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கிய வேலைகளுக்கு சிங்கப்பூர் காயல் நல மன்றம் மீதி 4 லட்சம் ரூபாயை வழங்கியது. வேலைகள் முடிவதற்கு 8 லட்சம் ரூபாய்க்கு மேல் தேவைபட்டால், அதை தாங்கள் ஈடுகட்டிகொள்வோம் என்று வேலைகள் ஆரம்பித்த போது துளிர் நிர்வாகம் கூறியது. வேலைகள் நிறைவடைவதற்கு 8 லட்சத்திற்கு மேல் இன்னும் 1.5 லட்சம் ரூபாய் தேவைப்பட்டதால், துளிர் நிறுவனத்திற்கு அரசாங்கத்திடமிருந்தும் மற்ற இடங்களிருந்து வர வேண்டிய உதவிகள் வராததால் கட்டிட வேலைகள் முடங்கியது. நாம் தொடங்கி வைத்த திட்டம் முடிவடைந்து பயன் கொடுக்க வேண்டும் என்பதால், கஸ்வா நிர்வாக குழுவினர் மற்றும் உறுப்பினர்களின் சொந்த நிதியால் 1.5 லட்சம் ரூபாயை கஸ்வாவின் பெயரில் வழங்கி வேலைகளை துரிதமாக முடிக்க உதவி செய்திருக்கின்றது. இன்ஷா அல்லாஹ் வேலைகள் இன்னும் சில மாதத்தில் முடிவடையும்.

ஐ.ஏ.எஸ் தேர்வு பயிற்சியில் கஸ்வாவின் மாணவி

மாஷா அல்லாஹ், எமது நீண்ட கால திட்டமான IAS, IPS, IFS போன்ற Union Public Service Commission நடத்தும் பரீட்சைகளுக்கு நமதூர் மாணவர்களை பயிற்சிவிப்பதற்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்திருகின்றது.

சென்ற வருடம் B.E படிப்பில் 87 விழுக்காடு மதிப்பெண்களுடன் தேர்வாகிய, +2வில் 1100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற, பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தை சார்ந்த நமதூரைச் சார்ந்த ஒரு பெண் மாணவிதான் IAS ஆவதற்கு மிகவும் ஆவலாக உள்ளதாகவும், அதுவே அவரது நாட்டம் என்றும், தனது முழு முயற்சியையும் வழங்குவேன் என்றும் கூறி, தமக்கு கஸ்வா ஐ.ஏ.எஸ் தேர்வு பயிற்சிக்கு நிதியுதவி அளிக்கக்கோரினார். அவருடன் கஸ்வா நிர்வாக குழு உறுப்பினர்களும், உள்ளூர் பிரதிநிதி அல்-ஹாஃபிள் M.I. யூஸுஃப் ஸாஹிப் அவர்களும் நேராகவும், தொலைபேசி மூலமாகவும் நேர்காணல் நடத்தி அவருடைய நாட்டத்தினை அறிந்துக் கொண்ட பின்னர், அவருக்கு நிதியுதவி அளிக்க கஸ்வா முன் வந்தது. இவர் வெற்றிகரமாக தேர்வுகளை முடித்து நமதூரின் முதல் IAS அதிகாரியாக ஆவதற்கும், இன்னும் பல IAS மற்றும் IPS, IFS அதிகாரிகளாக நமதூர் மக்கள் ஆவதற்கு இந்த முயற்சி உதவி புரிவதற்கும் வல்ல நாயன் அருள் புரிவானாக. ஆமின்.

கஸ்வாவின் ஆயுள் உறுப்பினர் திட்டத்திற்கு இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் கோரப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டது.

இந்த திட்டத்தின் விவரம்:

எவ்வளவு நாள் அதே 50 ஹாங்காங் டாலர் கொடுப்பது, எங்களுக்கும் வயது ஆகிறது, நாங்களும் ஹாங்காங்கும் ஊரும் வெளிஊருமாகா இருக்கிறோம், ஏன் மொத்தமாக கேட்கக்கூடாது என்று சில மூத்த உறுப்பினர்கள் கேட்டு கேட்டுகொண்டதற்கிணங்க இந்த ஆயுள் கால திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 48 வயது நிரம்பிய உறுப்பினர்கள் ஆயுள் உறுப்பினர்களாகலாம். அதாவது 49 வயது முதல் 58 வயது வரை எக்காலத்திலும் ஆயில் கால உறுப்பினர்கள் ஆகலாம். இது கட்டாயம் அல்ல, அவர்கள் விருப்பபட்டால் சாதாரண உறுப்பினர்களாகவும் தொடரலாம்.

ஆயுள் உறுப்பினர்களாக விரும்புபவர்கள், அவர்கள் 58வது வயது நிரம்புவதற்கு மீதமிருக்கும் வருடங்களுக்கு எந்த வருடம் சேருகிராரோ அந்த வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடத்திற்கும் 600 ஹாங்காங் டாலர் என தற்போது நிர்ணயிக்கப்பட்டிற்கும் முழு தொகையை, மொத்தமாகவோ அல்லது அதிக பட்சம் மூன்று தவனை முறையில், ஆயுள் உறுப்பினராக சேர்ந்த மூன்று வருடத்திற்குள் செலுத்த வேண்டும். ஆயுள் உறுப்பினராவதற்கு முன்னர் அவர் ஏதாவது சந்தா நிலுவை வைத்திருப்பின் அதையும் செலுத்த வேண்டும்.

அடுத்ததாக கல்வி மற்றும் வேலை வழிகாட்டுதல் நிகழ்ச்சியாக நம் ஊரின் பிரதிநிதிகள் K. Muhammad Gani, கஸ்வாவின் உறுப்பினர்கள் H.S. Abdul Gaffar மகள் G. Zulaiha Zulfika & M. Shaik மகள் M.Zaarifa மற்றும் கஸ்வாவின் செயற்குழு உறுப்பினர் M.N. Minhaj Mohaideen பேசினார்கள்.





அடுத்ததாக கஸ்வாவின் செயற்குழு உறுப்பினர் D. இஸ்மாயில் நன்றி உறை வழங்க , நம் ஊரைச் சேர்ந்தவரும் - Hong kong Kowloon Masjid தலைமை இமாமுமான M.A.K. ஷுஐப் நூஹு ஆலிம் அவர்கள் துஆ ஓதினார்கள்.



இறுதியாக காயல் கோழிக்கறி கஞ்சி, சமோசா, பகோடா, பூந்தியுடன் இரவு சாப்பாடு நடைபெற்று இனிதே நிகழ்வுகள் அனைத்தும் முடிவுற்றது,. வ-ஆகிர்த்தஃவானா அனில் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் . வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலிஹில் கரீம். அல்ஹம்துலில்லாஹ்.






இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[செய்தி திருத்தப்பட்டது @ 10:53 / 05.05.2018.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by M. S. Shah Jahan (Colombo) [04 May 2018]
IP: 123.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46162

கல்விக்கண் திறப்பவர்கள் ஒரு நாளும் கண் மூடுவதில்லை என்பார்கள். உங்கள் பணி அளப்பரியது. வாழ்த்துக்கள்.

“நம் ஊர் மற்றும் Hong kong Kowloon Masjid தலைமை இமாம்”

இதன் அர்த்தம் அவர் நம் ஊரிலும் Hong kong Kowloon Masjid லும் தலைமை இமாம் என்று பொருள்படும். நம் ஊரைச்சேர்ந்த Hong kong Kowloon Masjid தலைமை இமாம்” என்பதே சரி.

Moderator: செய்தி திருத்தப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
வீணாப்போன தண்ணீர்! (?!)  (4/5/2018) [Views - 1992; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved