Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:46:51 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20078
#KOTW20078
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஐனவரி 4, 2018
வார்டு மறுவரையறை: ஆணையத் தலைவர், மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையருக்கு “நடப்பது என்ன?” வழங்கிய ஆட்சேபனைக் கடிதத்தின் முழு விபரம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1127 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியில் வார்டுகள் மறுவரையறை தொடர்பாக, மறுவரையறை ஆணையத் தலைவர், மாவட்ட ஆட்சியர், காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் ஆட்சேபனைக் கடிதம் அளித்திருந்தது. அதன் முழு விபரத்தைத் தற்போது அக்குழுமம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-

காயல்பட்டினம் நகராட்சியின் மறுவரையறை செய்யப்பட்ட 18 வார்டுகள் விபரம், நகராட்சி ஆணையரால் - டிசம்பர் 30 சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. காயல்பட்டினம் நகராட்சி வரைவு விபரங்கள் குறித்த ஆட்சேபனைகள் - ஜனவரி 4 க்கு முன்னர் தெரிவிக்கப்படவேண்டும் என்றும் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மறுவரையறை ஆணையம் (DELIMITATION COMMISSION) வெளியிட்டுள்ள கொள்கைகளுக்கும், விதிமுறைகளுக்கும் (Principles and Criteria for Delimitation of Wards; Duties of Delimitation Authorities) மாற்றமாக - காயல்பட்டினம் நகராட்சி வார்டுகள் மறுசீரமைப்பு பட்டியல் இருப்பதால், தற்போதைய நிலையில் - அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என விரிவான ஆட்சேபனை கடிதம் இன்று (2-1-2018) - மறுவரையறை ஆணையத்தின் தலைவரான தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையருக்கும், மாவட்ட மறுவரையறை அதிகாரியான தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கும், வார்டு மறுவரையறை அலுவலரான காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கும் - பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டது.

மேலும் - மனுவின் நகல், காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையரிடம், இன்று நேரடியாகவும் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த மனுவில் உள்ள விபரங்கள் வருமாறு:

காயல்பட்டினம் நகராட்சியின் மறுவரையறை செய்யப்பட்ட 18 வார்டுகள் விபரம், நகராட்சி ஆணையரால் - டிசம்பர் 30 சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது.

மறுவரையறை ஆணையம் (DELIMITATION COMMISSION) வெளியிட்டுள்ள கொள்கைகளுக்கும், விதிமுறைகளுக்கும் (Principles and Criteria for Delimitation of Wards; Duties of Delimitation Authorities) மாற்றமாக - காயல்பட்டினம் நகராட்சி வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதால், தற்போதுள்ள நிலையில் - காயல்பட்டினம் நகராட்சிக்கான மறுவரையறை வார்டு விபரங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.

(1) தமிழ்நாடு உள்ளாட்சிமன்றங்கள் மறுவரையறை விதிமுறைகள் 2017 இன் விதிமுறை 5(c) படி - இறுதியாக மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு (Census) அடிப்படையில் - வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்படவேண்டும்.

(5) (c) The delimitation of wards in every Local Body shall be on the basis of the population as ascertained at the last preceding census of which the relevant figures have been published.

ஆனால் - காயல்பட்டினம் நகராட்சியின் வார்டுகள் மறுசீரமைப்பில் இந்த விதிமுறை - அடிப்படையாக கொள்ளப்படவில்லை. ஒரு வார்டின் சராசரி மக்கள்தொகை என்னவென இருக்கவேண்டும் என முடிவு செய்ய மட்டும் - 2011 மக்கள்தொகை எடுத்துக்கொள்ளப்பட்டு (2255), ஒவ்வொரு பகுதியின் மக்கள்தொகை விசயத்திற்கு - 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு விபரங்கள் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இது - மறுவரையறை ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகளுக்கு மாற்றலான செயலாகும்.

(2) மறுவரையறை ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகள்படி - ஒரு பகுதியின் மக்கள்தொகை விபரங்கள் இல்லாத பட்சத்தில் - அந்த பகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள விபரங்கள் - அடிப்படையில், மறுவரையறை மேற்கொள்ளப்படவேண்டும்.

(6) (f) The underlying criteria for delimitation is that each ward of the Local Body concerned shall have parity in population as far as practically possible on the basis of last preceding census: Provided that where the population figures of any area is not available from the census figures published, the Inspector in the case of Village Panchayats, Panchayat Union Councils or District Panchayats or Town Panchayats or the Commissioner of the Municipalities concerned or the Commissioner of the Municipal Corporations concerned, as the case may be, may determine the population of such area with preference to the voting strength of the area as per the relevant portion of the current electoral roll of the Tamil Nadu Legislative Assembly Constituency.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, காயல்பட்டினம் நகராட்சியில் 9,417 குடியிருப்புகள் உள்ளன. ஆனால் - தற்போது காயல்பட்டினம் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுவரைமுறைபடி காயல்பட்டினம் நகராட்சியில் - மார்ச் 2017 நிலவரப்படி - 14,187 குடியிருப்புகள் உள்ளது என்றும், இந்த எண்ணிக்கை - நகரில் உள்ள வீட்டு தீர்வைகளின் (Property Assessments) மொத்த எண்ணிக்கை அடிப்படையில் பெறப்பட்டது என்றும் - நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்த அடிப்படையிலான மறுவரைமுறை ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

2011 அடிப்படையிலான மக்கள்தொகை அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளாமல், 2017 ஆம் ஆண்டுக்கான வீட்டுதீர்வைகள் எண்ணிக்கை அடிப்படையில் - சராசரி குடியிருப்புகள் எண்ணிக்கை (788) நிர்ணயம் செய்யப்பட்டு, ஒரு குடியிருப்பின் சராசரி நபர்கள் கணக்கிடப்பட்டு (2.86) - மறுவரைமுறைக்காக, ஒரு வார்டின் மக்கள் தொகை நிர்ணயம் செய்யப்படுவது, உண்மை நிலவரத்தை வழங்காது.

அக்டோபர் 2017 வரை திருத்தப்பட்ட ஒவ்வொரு பகுதியின் வாக்காளர் பட்டியல் - தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு பகுதியின் மக்கள்தொகை விபரம் இல்லாத பட்சத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து விபரங்கள் பெறப்படவேண்டும் என தெளிவாக மறுவரையறை ஆணையம் விதிமுறையில் [6(f)] தெரிவித்தப்பிறகும் - அதனை பின்பற்றாமல், வீட்டுதீர்வைகள் (Property Assessments) எண்ணிக்கை அடிப்படையில் மக்கள் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் - தற்போது வெளியிடப்பட்டுள்ள மறுவரையறை விபரங்கள், ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை.

மேலும் - தற்போதைய வரைவு வரைமுறை விபரங்களை பார்த்ததில், வீட்டு தீர்வை எண்ணிக்கை அடிப்படையிலான கணக்கிடப்பட்ட மக்கள்தொகை கொண்டு மறுவரைமுறை செய்யப்பட்டதால், ஒவ்வொரு வார்டின் வாக்காளர் எண்ணிக்கை சராசரியை விட - சில இடங்களில் 30 சதவீதம் வரை வேறுபடுகிறது. இது - மறுவரைமுறை ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறையை [6(d)] எவ்வித அவசியமும், காரணமும், இன்றி, மீறும் செயலாகும்.

(6) (d) 10% (ten per cent) variation of population shall be permissible for making clear boundary in territorial wards. In the case of Village Panchayats, such variation shall not exceed 25% (twenty five percent).

(3) மறுவரைமுறை ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகள்படி [6(a), 6(b)], சீரமைக்கப்படும் வார்டுகள், இயற்கையான (natural) அல்லது மனிதர்களால் (man made) உருவாக்கப்பட்ட எல்லைகள் கொண்டதாகவும், பரப்பளவில் சுருக்கமாகவும் (compact), அடுத்தடுத்தாகவும் (contiguous) இருக்கவேண்டும்.

(6) (a) Each ward shall have clear boundaries, either Natural or Manmade.

(6) (b) The shape of each ward shall be geographically compact and contiguous.

ஆனால் - காயல்பட்டினம் நகராட்சியால் தற்போது மறுவரைமுறை செய்யப்பட்டுள்ள பல வார்டுகளில் - இந்த விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. குறிப்பாக - புதிய வார்டு 12 மற்றும் புதிய வார்டு 14 தவிர, மீதியுள்ள 16 வார்டுகளின் எல்லைகளிலும் இந்த விதிமுறை மீறப்பட்டுள்ளது. பெருவாரியான வார்டுகள் இவ்வாறு முறையற்ற வகையில் - மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதற்கான காரணம், தவறுதலான மக்கள் தொகை கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது என்றாலும், சில வாக்கு வங்கிகளை தக்க வைக்க/உருவாக்க செய்யப்பட்ட முயற்சியின் விளைவாக பல வார்டுகள் - விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளன. இது மறுவரைமுறை ஆணையம் தெளிவாக பிறப்பித்துள்ள 6(c) விதிக்கு புறம்பான செயலாகும்.

(6) (c) There shall be no gerrymandering for the purpose of consolidation of specific vote banks

இது தவிர - வெளியிடப்பட்டுள்ள வரைவு மறுவரையறை விபரங்களில் - வேறு பல்வேறு பிரச்சனைகளும் உள்ளன; போதிய கால அவகாசம் இல்லாததால், அவைகள் குறித்து இங்கு முழுமையாக, உடனடியாக, ஆவணங்களுடன் பதிய இயலவில்லை.

எனவே - தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சிக்கான, மாதிரி வரைவு வரைமுறையை நிறுத்திவைத்து, பொதுமக்களுக்கும், பொது நல அமைப்புகளுக்கும் போதிய கால அவகாசம் வழங்கி, பொதுமக்களின், பொது நல அமைப்புகளின் பரிந்துரைகளை முறையாக பெற்று, திருத்திய, வரைமுறை செய்யப்பட்ட காயல்பட்டினம் நகராட்சி வார்டுகள் விபரத்தை தயாரித்து, வெளியிட வார்டு வரைமுறை அலுவலர்/காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையருக்கு உத்தரவிட தங்களை கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

[பதிவு: ஜனவரி 2, 2018; 10:00 pm]
[#NEPR/2018010204]


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved