Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:52:12 AM
ஞாயிறு | 15 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1963, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0612:1915:3918:0819:23
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:24Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:02
மறைவு18:01மறைவு06:08
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0905:3506:01
உச்சி
12:13
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2418:5019:16
பௌர்ணமி @ 14:33
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19423
#KOTW19423
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுலை 12, 2017
பல்வேறு முறையீட்டுகளுக்குப் பின்பும் நகராட்சியின் மந்தப் போக்கு: தமிழக முதல்வரின் சிறப்புப் பிரிவு உள்ளிட்ட துறைகளுக்கு “நடப்பது என்ன?” குழுமம் புகார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1901 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சிப் பகுதிகளில் செய்யப்பட வேண்டிய பணிகள் நீண்ட காலமாக நிறைவேற்றப் படாமல் இருந்து வரும் நிலையில், அவை குறித்து தொடர்ந்து பலமுறை கோரிக்கைகள் அளித்த பின்பும் பெரும்பாலான பணிகளைச் செய்யாமல் மந்த நிலையிலேயே நகராட்சி அதிகாரிகள் இருப்பது குறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் – தமிழக முதல்வரின் சிறப்புப் பிரிவு உள்ளிட்ட துறைகளுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-

காயல்பட்டினம் உட்பட தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி மன்றங்களும், கடந்த அக்டோபர் மாதம் முதல் - மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் இயங்கி வருகின்றன. மன்றங்களின் அதிகாரங்கள் வழங்கப்பட்டு, உள்ளாட்சி மன்றங்களின் செயல் அதிகாரிகள் - சிறப்பு அலுவலர்களாக (SPECIAL OFFICER) செயல்புரிந்து வருகிறார்கள்.

இக்காலகட்டத்தில், காயல்பட்டினம் நகரம் அன்றாடம் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து, நகராட்சிக்கு – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக பல்வேறு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றுள் பெரும்பாலானவற்றின் மீது காயல்பட்டினம் நகராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நிலுவையில் உள்ள பணிகள் குறித்து - இரு முறை, நினைவூட்டல் மனுக்கள் நகராட்சிக்கு வழங்கப்பட்டன. அதன் பிறகும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே - கடந்த சில மாதங்களாக நிலுவையில் உள்ள பல்வேறு முக்கிய பணிகளை - மேலும் காலம் தாழ்த்தாமல் விரைந்து நிறைவேற்றிடக் கோரி, தமிழக முதல்வரின் சிறப்புப் பிரிவுக்கும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலர் (MAWS Secretary), நகராட்சி நிர்வாகத் துறை ஆணையர் (CMA) மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை திருநெல்வேலி மண்டல இயக்குநர் (RDMA) ஆகியோருக்கு மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த மனுவின் உள்ளடக்கம் வருமாறு:-

(1) காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் CCTV கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக பல்வேறு தருணங்களில் மனு

(2) ஏழு லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 2012ஆம் ஆண்டு வாங்கப்பட்டு - பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படாத 48 புஷ் கார்ட் (தள்ளு வண்டி) குப்பை சேகரிப்பு குறித்த மனு

(3) காயல்பட்டினம் நகராட்சியில் பணி புரிவதாகக் கூறப்படும் 30 நிரந்தர துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் 50 ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவுப் பணியாளர்கள் விபரம் - அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகள் விபரத்தையும் சேர்த்து வெளியிடக்கோரும் மனு

(4) நகரில் குடிநீர் வழங்கப்படும் பகுதி மற்றும் நேரம் ஆகியவற்றை முற்கூட்டியே அறிவிக்கும் கால அட்டவணை வெளியிடக் கோரியும், புதிதாக அமல்படுத்தப்பட்டு வரும் இரண்டாம் குடிநீர் திட்டத்தைப் பாதுகாக்க, திரு. பாஸ்கரன் மற்றும் திரு. நிஜார் ஆகியோரை காயல்பட்டினம் நகராட்சியிலிருந்து பணியிட மாற்றம் செய்யக் கோரி வழங்கப்பட்ட மனு

(5) பேருந்துகள் பயன்படுத்தும் பெரிய நெசவு தெரு மற்றும் எல்.கே.லெப்பை தம்பி சாலையைப் புனரமைக்கக் கோரி பல்வேறு தருணங்களில் வழங்கப்பட்ட மனு

(6) பேருந்து நிலையத்தில் - உள்ளே நுழையவும், வெளியே செல்லவும் - இரு வாயில்களும் பயன்படுத்தப்படுவதால் உள்ள ஆபத்து குறித்த மனு

(7) நகரின் பல்வேறு பகுதிகளில் நிலவும் தெரு நாய்கள் தொல்லைகள் குறித்து DOG SHELTER அமைப்பது உட்பட பிற நடவடிக்கைகளை எடுக்கக் கோரி வழங்கப்பட்ட மனு

(8) பல லட்ச ரூபாய் செலவில் - காயல்பட்டினம் கடற்கரை மற்றும் பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை பயன்பாட்டுக்கு திறந்து விடப்படாத கழிவறைகள் குறித்த மனு

(9) நகராட்சி நிதி நிலைமை, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் - பொதுமக்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கப்பட வேண்டும் (PUBLIC DISCLOSURE) என்ற அரசு விதிமுறையை மீறி, வெளிப்படைத் தன்மையின்றி நகராட்சி செயல்புரிந்து வருவது குறித்த மனு

(10) கடற்கரை கடைகளில் இருந்து கட்டணம் வசூல் செய்யும் உரிமம், வாகனங்களை நிறுத்தம் செய்ய உரிமம் பெற்றுள்ளவர்கள் - கடற்கரையை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், வாகனங்களை முறையாக நிறுத்த பொறுப்பு எடுக்கவேண்டும் என்ற விதிமுறைகளை இணைக்கக் கோரி வழங்கப்பட்ட மனு

(11) நகராட்சி தரப்பின் அலட்சியம் காரணமாக பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 43 சாலைகள், கொம்புத்துறை பகுதி குப்பைக் கிடங்கு, ஒப்பந்தப் பணியாளர் செந்தில் குமார், ஆக்கிரமிப்புகள் சம்பந்தமான வழக்குகளை துரிதமாக முடித்திடக் கோரிய மனு

(12) குடிநீரை சுத்திகரிக்க வேண்டும் எனக் கூறி நகராட்சி மூலம் ஜூன் மாதம் வெளியிடப்பட்ட CHLORINATOR அமைக்கும் டெண்டரில் உள்ள குறைபாடுகள் குறித்த மனு

(13) அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து அமைந்துள்ள குடித்தனங்களுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை ரத்து செய்யக் கோரி வழங்கப்பட்ட மனு

(14) நகரின் பல்வேறு பகுதிகளில், பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் தொடர்ந்து ஏற்படும் கசிவு & உடைப்புகளால் உண்டாகும் குடிநீர் வீண்விரயம் மற்றும் சுகாதாரக் கேடு குறித்த மனு

இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.

[பதிவு: ஜூலை 12, 2017; 9:00 am]


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved