மேலப்பாளையம் முன்னேற்றக் கூட்டமைப்பு (Melappalayam Progressive Forum) & சென்னை கே.ஏ.எஸ்.ஜெய்னுல் ஆப்தீன் கம்பெனி ஆகியன இணைந்து, ஆண்டுதோறும் காயல்பட்டினத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளின் 12ஆம் வகுப்பு மாணவ-மாணவியருக்கான வினா-விடை வங்கி தமிழ் வழி புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கி வருகின்றன.
அந்த வரிசையில், நடப்பாண்டும் - காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம் - ஆறுமுகநேரி (கே.ஏ.) மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம், கே.ஏ.எஸ்.ஜெய்னுல் ஆப்தீன் கம்பெனி பங்குதாரர் ஹாஜி ‘ஜெஸ்மின்’ ஏ.கே.கலீல் புத்தகங்களை மொத்தமாக வழங்கினார்.


தகவல் & படங்கள்:
K.M.T.சுலைமான்
|