Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:00:27 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18464
#KOTW18464
Increase Font Size Decrease Font Size
வியாழன், நவம்பர் 17, 2016
வெள்ளி முதல் வங்கிகளில் பழைய நோட்டுக்கு ரூ.2000 மட்டுமே மாற்றலாம்: மத்திய அரசு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2022 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வங்கிகளில் பழைய ரூ.500, 1000 நோட்டுகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ரூ.2000 மட்டுமே மாற்றலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய கெடுபிடி குறித்து பொருளாதார விவகாரத் துறை செயலர் செய்தியாளர்களிடம் விளக்கியபோது "பழைய நோட்டுகளை மாற்றுவதற்கான அளவுகளை குறைப்பது தொடர்பாக, "வங்கி கவுன்ட்டரில் அதிகப்படியான மக்கள் தங்கள் பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்ள வசதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசிடம் போதிய அளவு ரொக்க கையிருப்பு உள்ளது" என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பால் கடந்த 8-ம் தேதி இரவு முதல் இந்தியா முழுவதும் ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாத பணமாகிவிட்டன.

பொதுமக்கள் தங்கள் கையிலிருக்கும் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள அரசு சில வழிமுறைகளை அறிவித்தது. அதன்படி முதலில் ஒருவர் நாளொன்றுக்கு பழைய நோட்டுக்கு ரூ.4000 மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அதுவே நாளொன்றுக்கு ரூ.4,500 என சற்றே உயர்த்தப்பட்டது.

வங்கிகளில் பணத்தை மாற்ற மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் ஒரே நபர் மீண்டும் மீண்டும் பணத்தை மாற்றுவதாலேயே வங்கிகளில் கூட்டம் இருப்பதாகக் கூறி பணம் மாற்றுபவர்கள் கைவிரலில் மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ், "பழைய ரூ.500, 1000 நோட்டுகளுக்கு இனி ரூ.2000 மட்டுமே மாற்றலாம். இந்த உத்தரவு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்குவரும்" என்றார்.

இன்றைய அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்:

1. நாளை முதல் ரூ.500, 1000 நோட்டுகளுக்கு வங்கியிலிருந்து ரூ.2000 மட்டுமே மாற்ற முடியும்.

2. திருமண சீசன் என்பதால், வீட்டில் திருமணம் வைத்திருப்பவர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.5 லட்சம் பணம் எடுத்துக் கொள்ளலாம். மணமன், மணமகள் அல்லது அவர்களது பெற்றோர் உரிய ஆவணங்களைக் காட்டி பணம் எடுத்துக் கொள்ளலாம். விரிவான செய்திக்கு: | திருமணத்துக்கு ரூ.2.5 லட்சம் வரை நம் கணக்கில் எடுப்பது எப்படி?

3. பயிர்க் காப்பீட்டுக்கான ப்ரீமியம் செலுத்த கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது.

4. விவசாய சந்தை வர்த்தகர்கள் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் தொழிலாளர்களுக்கு கூலி வழங்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் ரூ.50,000 பணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

5. ராபி பருவ விவசாயத்துக்காக விவசாயிகள் கிசான் கடன் அட்டை பயன்படுத்தியோ அல்லது பயிர்க்கடன் மூலமாகவோ வாரத்துக்கு ரூ.25,000 பெறலாம்.

6. குரூப் சி பிரிவில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் ஊதிய முன் பணம் பெற்றுக் கொள்ள சலுகை அளிக்கப்படுகிறது.

7. விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்த வழியில் கிடைக்கும் பணத்திலிருந்து வாரத்துக்கு ரூ.25,000 பெற்றுக் கொள்ளலாம்.

தகவல்:
தி இந்து


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...பெண்களுக்கு சிறப்பு சலுகைகள்
posted by mackie noohuthambi (kayalpatnam ) [18 November 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44887

வெள்ளிக்கு தலைமை முதல் ஒரு நபருக்கு 2000 மட்டுமே பழைய நோட்டைக்கொடுத்து புது நோட்டுக்கள் வாங்கி கொள்ளலாம் என்ற அறிவிப்புடன் அவர்கள் காய் விரலில் மையும் வைக்கப் படும் என்ற தகவலும் இனிமேல் டிசம்பர் 30 திகதி வரை அந்த நபர் மீண்டும் வங்கிக்கு சென்று 2000 மாற்ற முயற்சிக்க வாய்ப்பில்லை என்பதும் கூடுதல் தகவல்.

பெண்கள் தங்கள் கைக் குழந்தையுடன் சென்றால் ஆண் குழந்தையாக இருந்தால் இலவசமாக மொட்டை அடித்து விடுவார்கள், பெண் குழந்தையாக இருந்தால் இலவசமாக காது குத்தி விடுவார்கள் என்ற இனிப்பான செய்தியும் வாட்சப்பில் வைரலாக பரவி வருகிறது.

எனவே பெண்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப் படுகிறது...இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் கணவன்மார்களை ஹோட்டலில் சாப்பிட்டுக் கொள்ள சொல்லி விட்டு காலை நேரத்தோடு வங்கிகளுக்கு செல்லுமாறு தாய்மார்கள் வேண்டிக் கொள்ளப் படுகிறார்கள். உங்கள் ஜனநாயக கடமையை சரிவர செய்து அரசுடன் ஒத்துழைக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.உங்கள் அசைவுகள் யாவும் வருமானவரி அதிகாரிகளால் நன்கு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வலிமையான பாரதம்
வளமான தமிழகம்

இதுவே எங்கள் குறிக்கோள்.இதை நம்ப மறுப்பவர்கள் தேச துரோகிகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved