| 
  
இருதய சம்பந்தப்பட்ட நோய்கள் (CARDIAC), நீரிழிவு நோய் (DIABETES), நாட்பட்ட நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் (LUNG DISEASES), புற்று நோய் (CANCER) போன்றவை தொற்றும் தன்மையற்ற நோய்கள் (NCD) ஆகும். இவை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது.
  
உலகில் அதிகளவு உயிர்கொல்லி  நோய் வகைகளாக தொற்றும் தன்மையற்ற நோய்கள் (NCD) மாறி வருகின்றன.
  
மத்திய - மாநில அரசுகள் , இதனை எதிர்கொள்ள திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் - காயல்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில், இதற்கான நிரந்தர மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
  
தினமும் - காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் இந்த மையத்தில் -  பொது மக்கள் இலவசமாக பரிசோதனைகள் மேற்கொள்ளலாம். 
  
இரத்த பரிசோதனை, இரத்த அழுத்தம், ECG போன்ற பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் பல ரூபாய் மதிப்பிலான மருந்துகளும் - இலவசமாக வழங்கப்படுகின்றன.
  
இந்த இலவச சேவையை அதிகமான மக்கள் பயன்படுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில், நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் சார்பாக - விழிப்புணர்வு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
  
 
  
 
  
 
  
 
  |