| 
 எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு அமைப்பின் சார்பில், “எனக்கில்லையா கல்வி?” எனும் தலைப்பில் ஆவணப்படம் திரையிடும் நிகழ்ச்சி, 09.09.2016. வெள்ளிக்கிழமையன்று, 16.30 மணியளவில், காயல்பட்டினம் துஃபைல் வணிக வளாகத்திலுள்ள ஹனியா சிற்றங்கில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாளை பஷீர் வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை:- 
  
எழுத்து மேடை மையம் தமிழ் நாடு சார்பில் 
“எனக்கில்லையா கல்வி?“  
ஆவணப்பட திரையிடல் நிகழ்வு! 
  
```````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
  
இடம்:  
ஹனியா சிற்றரங்கம் 
துஃபைல் வணிக வளாகம் 
ஹாஜி அப்பா பள்ளிவாசல் அருகில் 
மெயின் சாலை - காயல்பட்டினம்
  
காலம்: மாலை 04:30
  
வெள்ளிக்கிழமை 09 / 09 / 2016. 
  
```````````````````````````````````````````````````````````
  
அன்பார்ந்த காயல் வாசிகளே! 
  
அஸ்ஸலாமு அலைக்கும்! எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் நமதூரில் ஆவணப்பட திரையிடல்களும் நூலாய்வுகளும் அவற்றையொட்டிய கலந்துரையாடல்களும் விவாதங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. 
  
எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் பத்தாவது நிகழ்வாக வரும் வெள்ளிக்கிழமை (09/ 09/ 2016) மாலை 04:30 மணியளவில் ஆவணப்பட இயக்குனரும் நட்சத்திர பேச்சாளருமான பாரதி கிருஷ்ண குமார் இயக்கிய “ எனக்கில்லையா கல்வி ? “ ஆவணப்படம் திரையிடப்பட உள்ளது. 
  
திரையிடலைத் தொடர்ந்து கல்வி குறித்த கருத்து பரிமாற்ற அமர்வும் நடைபெறும். 
  
நடுவணரசு கொண்டு வரப்போகும் புதிய கல்விக்கொள்கையின் பின்னணியில் கல்வி குறித்த நமது பார்வையை உருவாக்கிக் கொள்ள இந்த நிகழ்வை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். 
  
இவண் 
எழுத்து மேடை மையம் – தமிழ் நாடு 
செல்: 9171324824
  
``````````````````````````````````````````````````````````````````````````
  
குறிப்பு:- எழுத்து மேடை மையம் தமிழ் நாடு - எந்த ஒரு அமைப்பையோ இயக்கத்தையோ சாராத தன்னிச்சையான சிந்தனைத் தளமாகும். 
  
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  |