Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:10:49 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17817
#KOTW17817
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மே 24, 2016
அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவு பட்டமளிப்பு விழாவில் 6 மாணவர்களுக்கு ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம்! சிங்கை கா.ந.மன்றம் சார்பில் ஊக்கப்பரிசு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2122 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மத்ரஸத்துல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவின் சார்பில் நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில், 5 மாணவர்கள் ஹாஃபிழுல் குர்ஆன் பட்டம் பெற்றுள்ளனர். சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் அவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-

மாணவர்கள் திருக்குர்ஆனை மனனம் செய்வதற்காக, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தால், மத்ரஸத்துல் அஸ்ஹர் எனும் பெயரில் திருக்குர்ஆன் மனனப் பிரிவு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மத்ரஸாவின் 16ஆம் ஆண்டு துவக்க விழா, ஹாஃபிழுல் குர்ஆன் பட்டமளிப்பு விழா, ஐ.ஐ.எம். தீனிய்யாத் 21ஆம் ஆண்டு நிறைவு விழா ஆகியன, 06.05.2016. வெள்ளிக்கிழமையன்று, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.



அன்று காலையில் - கிராஅத், பேச்சு, துஆ மனனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. மஃரிப் தொழுகைக்குப் பின் நடைபெற்ற நிகழ்ச்சிகளை, காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டர் மேலாளர் டீ.வி.எஸ்.ஜக்கரிய்யா நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் ஸனது பெறும் மாணவர்களான எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா கிராஅத் ஓத, எஸ்.முஹம்மத் கிஸார் அதற்கான தமிழாக்கத்தை வழங்க, எஸ்.ஏ.என்.அஹ்மத் அம்மார் மாணவர்கள் சார்பில் சிற்றுரையாற்றினார்.

திருமறை குர்ஆனை ஓதும் முறைகள் குறித்தும், மாணவர்களுக்குத் தேவையான அறிவுரைகளை உள்ளடக்கியும் - அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ உரையாற்றினார்.



தொடர்ந்து, மத்ரஸத்துல் அஸ்ஹரில் பயின்று, திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள 5 மாணவர்களுக்கு ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டச் சான்றிதழ் வழங்கப்பட்டது.







நாகர்கோவில் ஜாமிஅத்துல் ஃபிர்தவ்ஸிய்யா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ காஜா முஹ்யித்தீன் ஃபிர்தவ்ஸீ இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.

பட்டம் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:-



(1) ஹாஃபிழ் எஸ்.எம்.அஹ்மத் அம்மார்
(த.பெ. எம்.எஸ்.ஷேக் அலீ நுஸ்கீ, ஆறாம்பள்ளித் தெரு)

(2) ஹாஃபிழ் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா
(த.பெ. எம்.எச்.முஹம்மத் அலவீ, கே.டீ.எம். தெரு)

(3) ஹாஃபிழ் எஸ்.முஹம்மத் கிஸார்
(த.பெ. எம்.ஷாஜஹான், சுலைமான் நகர்)

(4) ஹாஃபிழ் எம்.எஸ்.அனஸ் இஸ்மாஈல்
(த.பெ. எம்.ஐ.முஹம்மத் ஷுஅய்ப், கே.டீ.எம். தெரு)

(5) ஹாஃபிழ் எஸ்.ஏ.ஃபர்ஹான்
(த.பெ. எம்.ஐ.ஷேக் அப்துல் காதிர், எல்.எஃப்.வீதி)

(6) எம்.யாஸிர்
(த.பெ. எஸ்.எம்.மரைக்கார், ஹாஜி அக்பர்ஷா 2ஆவது தெரு)

காயல்பட்டினத்தில் இயங்கும் திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாக்களில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக சிங்கப்பூர் காயல் நல மன்றத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் - ஹாஃபிழ் பட்டம் பெறும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், பட்டம் பெற்ற 5 மாணவர்களுக்கும் தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் ஊக்கத்தொகையை, அம்மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சாளை நவாஸ் - பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வழங்கினார்.



பட்டம் பெற்ற மாணவர்கள் சார்பில், ஹாஃபிழ் எம்.எஸ்.அனஸ் இஸ்மாஈல் ஏற்புரையாற்றினார்.

தொடர்ந்து, காலையில் நடைபெற்ற சன்மார்க்க பல்சுவைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், கடந்த கல்வியாண்டில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கும், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகிகளால் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பரிசு பெற்றோர் விபரம்:-

>>> ஹிஃப்ழுப் பிரிவு ஆண்டிறுதித் தேர்வில் முதல் மூன்றிடங்களை, எஸ்.என்.அஹ்மத் அம்மார், எஸ்.ஏ.ஃபர்ஹான், எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா ஆகியோர் பெற்றனர்.

>>> ஹிஃப்ழுப் பிரிவு இளநிலை மாணவர்களுக்கான ஆண்டிறுதித் தேர்வில், எஸ்.இ.முஃபீத், யு.இசட்.கே.முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோர் முதல் இரண்டு இடங்களைப் பெற்றனர்.

>>> ஹிஃப்ழுப் பிரிவு நடுநிலை மாணவர்களுள், எம்.என்.நஸீம், எச்.முஹம்மத் ஸர்ஃபராஸ் ஆகியோர் முதலிரண்டிடங்களைப் பெற்றனர்.

>>> ஹிஃப்ழுப் பிரிவு உயர்நிலை மாணவர்களுள் ஏ.எம்.ரஜீன், எஸ்.ஐ.ஆர்.முஹம்மத் முஜாஹித் ஆகியோர் முதலிரண்டிடங்களைப் பெற்றனர்.

>>> தீனிய்யாத் முதல் பிரிவில், எஸ்.என்.அஹ்மத் அம்மார், எஃப்.ஏ.முஹம்மத் ஹுஸைன், எஸ்.ஐ.ஆர்.முஹம்மத் முஜாஹித் ஆகியோரும்,

>>> இரண்டாவது பிரிவில், எச்.முஹம்மத் ஸர்ஃபராஸ், எம்.என்.நஸீம், எம்.ஏ.கே.முஹம்மத் அப்துல்லாஹ், எல்.எச்.செய்யித் அஹ்மத் ஆகியோரும் பரிசுகளைப் பெற்றனர்.

>>> இவ்வாண்டின் சிறந்த மாணவருக்கான பரிசை எம்.எஸ்.அனஸ் இஸ்மாஈல் பெற்றார்.

>>> பேச்சுப் போட்டி முதல் பிரிவில், எஸ்.என்.அஹ்மத் அம்மார், எம்.எஸ்.அனஸ் இஸ்மாஈல், எஸ்.எம்.சுல்தான் ஆரிஃப் ஆகியோர் முதல் மூன்றிடங்களைப் பெற்றனர்.

>>> பேச்சுப் போட்டி இரண்டாவது பிரிவில், எஸ்.ஐ.ஆர்.முஹம்மத் முஜாஹித், எம்.ஏ.கே.ஹமீத் அப்துல்லாஹ், ஏ.எம்.இஸ்மாஈல் ஆகியோர் முதல் மூன்றிடங்களைப் பெற்றனர்.

>>> மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டியில், எஸ்.என்.அஹ்மத் அம்மார், எஸ்.ஏ.ஃபர்ஹான், எம்.ஏ.கே.ஹமீத் அப்துல்லாஹ், கிஸார், வி.இசட்.கே.முஹம்மத் முஹ்யித்தீன், எச்.முஹம்மத் ஸர்ஃபராஸ் ஆகியோரடங்கிய அணி பரிசு பெற்றது.

>>> அனைவருக்குமான வினாடி-வினா போட்டியில், ஹாஃபிழ் பி.எம்.செய்யித் இஸ்மாஈல், ஹாஃபிழ் எஸ்.ஏ.என்.முஹம்மத் அலீ, ஹாஃபிழ் முஹம்மத் அலீ, அப்துல்லாஹ் மரைக்கார் ஆகியோர் பரிசுகளைப் பெற்றனர்.

பள்ளி செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் நன்றி கூற, கஃப்பாரா துஆவுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. காயல்பட்டினத்தைச் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்டனர். மகளிருக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.







ஏற்பாடுகளை, மத்ரஸத்துல் அஸ்ஹர் திருக்குர்ஆன் ஹிஃப்ழுப் பிரிவு ஆசிரியர்களான மவ்லவீ ஹாஃபிழ் இம்ரான் உமரீ, ஹாஃபிழ் எஸ்.எம்.பி.செய்யித் முஹம்மத் மற்றும் பள்ளி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தகவல் உதவி:
T.V.S.ஜக்கரிய்யா


மத்ரஸத்துல் அஸ்ஹரில் கடந்த ஆண்டு (2015) நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

சிங்கப்பூர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved