| 
 காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீயுடைய சகோதரியின் கணவர், சொளுக்கார் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் கே.டீ.ஷெய்கு நூருத்தீன் இன்று அதிகாலை 04.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 60. அன்னார், 
  
மர்ஹூம் காதிர் மீரா ஸாஹிப் அவர்களின் மகனும், 
  
மர்ஹூம் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் நஹ்வீ செய்யிது அப்துல் காதிர் அவர்களின் மருமகனாரும், 
  
பெரிய குத்பா பள்ளியின் முன்னாள் கத்தீப் / மஹ்ழரா அரபிக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மர்ஹூம் அல்ஹாஜ் ஸாஹிப் தம்பி ஆலிம் முஃப்தீ அவர்களின் மருமகனும், 
  
மர்ஹூம் கே.டீ.நெய்னா முஹம்மத், அல்ஹாஜ் கே.டீ.கத்தீபு முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகியோரின் சகோதரரும், 
  
நஹ்வீ எஸ்.ஏ.கே.முத்து ஃபாத்திமா என்பவரின் கணவரும், 
  
எஸ்.என்.செய்யித் இஸ்மாஈல் நாச்சி, எஸ்.என்.உம்மு ஹபீபா, ஹாஃபிழ் எஸ்.என்.நெய்னா முஹம்மத் ஆகியோரின் தந்தையும், 
  
எம்.ஏ.மீரா ஸாஹிப், எச்.ஏ.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ஆகியோரின் மாமனாரும், 
  
அபூபக்கர், முஹம்மத் நூஹ், சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் ஆலிம் மஹ்ழரீ ஆகியோரின் மச்சானும், 
  
எம்.ஏ.முஹ்யித்தீன் அப்துல் காதிரின் தாய்மாமாவும், 
  
மர்ஹூம் மவ்லவீ எஸ்.ஏ.அஷ்ரஃப் ஆலிம் ஃபாஸீ, சொளுக்கு எஸ்.எம்.ஐ.செய்யித் முஹம்மத் ஸாஹிப் ஆகியோரின் சகலையும் ஆவார். 
  
அன்னாரின் ஜனாஸா, இன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 
  
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 08:12 / 06.05.2016.]
  
[செய்தி திருத்தப்பட்டது @ 09:53 / 06.05.2016.]  |