Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:30:19 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16475
#KOTW16475
Increase Font Size Decrease Font Size
புதன், ஆகஸ்ட் 26, 2015
பப்பரப்பள்ளி நிலத்தில் குப்பை கொட்டுவதை செப். 03க்குள் நிறுத்தாவிட்டால், அறவழியில் போராட்டம் வீரியப்படும்! நகராட்சி ஆணையரிடம் எல்.எஃப்.ரோடு பகுதி மக்கள் தெரிவிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5044 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகரில் சேரும் குப்பைகளை பப்பரப்பள்ளி நிலத்தில் கொட்டுவதை வரும் செப்டம்பர் 03ஆம் நாளுக்குள் நிறுத்தாவிட்டால், அறவழியில் போராட்டம் இன்னும் வீரியப்படும் என, அப்பகுதி மற்றும் எல்.எஃப். வீதியை உள்ளடக்கிய 13ஆவது வார்டு பொதுமக்கள், நகராட்சி ஆணையரிடம் தெரிவித்துள்ளனர். விரிவான விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் சேரும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, எல்.எஃப். வீதிக்குத் தென்பகுதியில் அமைந்துள்ள பப்பரப்பள்ளி நிலத்தில் பல்லாண்டு காலமாக நகராட்சியால் கொட்டப்பட்டு வருகிறது.

நகராட்சியின் துப்புரவுப் பணியாளர்களாலும், அடையாளம் தெரியாத சிலராலும் அடிக்கடி அக்குப்பைக் கிடங்கில் தீ வைப்பதால் ஏற்படும் புகை மூட்டம் அப்பகுதி முழுக்கப் பரவி, சுற்றுப்புறத்தில் குடியிருப்போரது உடல் நலனுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

நாளுக்கு நாள் அப்பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கேயே குப்பைகள் கொட்டப்படுவதும், அக்குப்பைகளில் அடிக்கடி தீ வைப்பதும் தொடர்வதால், அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, 23.08.2015 அன்று காயல்பட்டினம் துளிர் பள்ளி கேளரங்கில் அப்பகுதி மக்கள் மற்றும் பொதுநல அமைப்பினரின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் இறுதியில், பகுதி மக்கள் திரண்டு சென்று, நகராட்சி ஆணையரிடம் முறையிடுவதென தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, இன்று காலை 10.30 மணியளவில், காயல்பட்டினம் எல்.எஃப். வீதி பொதுமக்களும், பொதுநல அமைப்பினரும் காயல்பட்டினம் நகராட்சி அலுவலக வளாகத்தில் திரண்டனர்.







அவர்களின் சார்பில் சில பிரதிநிதிகள் நகராட்சி ஆணையரைச் சந்தித்து, பின்வருமாறு மனு அளித்தனர்:-





























இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில், நகரின் சர்வகட்சியினர் இணைந்து பின்வருமாறு மனு அளித்தனர்:-







பப்பரப்பள்ளி நிலத்தில் குப்பை கொட்டுவதை வரும் செப்டம்பர் 03ஆம் நாளுக்குள் நிறுத்த வேண்டும் என்றும், அது நடக்கவில்லையெனில் அறவழியில் போராட்டம் வீரியப்படும் என்றும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பப்பரப்பள்ளியில் குப்பை கொட்டப்படும் இடத்தில் நிலம் வைத்துள்ள உரிமையாளர்கள் சார்பிலும் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், அப்பகுதியில் குப்பை கொட்டுவது நிறுத்தப்படவில்லையெனில் நீதிமன்ற உதவியை நாடப்போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுக்களை காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-



“காயல்பட்டினம் நகராட்சியால் பப்பரப்பள்ளி நிலத்தில் தற்போது குப்பை கொட்டப்படுவதால் அப்பகுதி மக்கள் சந்திக்கும் சுகாதாரக் கேடு பிரச்சினைகளை நான் அறிவேன்.

குப்பை கொட்டுவதற்காக மாற்று இடம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்காக நானும், 17 உறுப்பினர்களும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையும் இணைந்து ஒரு தனவந்தரிடம் நிலம் பெற்றோம். ஆனால் அங்கு பணிகளைச் செய்வதற்கு - சில சுயநலம் கொண்டவர்களால் நீதிமன்றத்தில் தடையாணை பெறப்பட்டுள்ளதால் உடனடியாக அங்கு குப்பை கொட்ட இயலவில்லை. என்றாலும், இதுகுறித்து தீர ஆராய்ந்து, விரைவில் மாற்று இடம் தேர்வு செய்யப்படும்”
என்றார்.

இதைக் கேட்ட பொதுமக்கள், “அந்த சில சுயநலம் கொண்டவர்கள் யார்? அவர்களின் பெயர்களைக் கூறுங்கள்!” என்று கேட்டனர். ஆனால், ஆணையர் அவர்களின் பெயர்களைக் கூறவில்லை. பின்னர், அங்கு வந்திருந்த செய்தியாளர்களிடம் பேட்டியளித்துவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.



காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், பொருத்துநர் நிஸார், நகர்மன்ற 11ஆவது வார்டு உறுப்பினரும், துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன், நகர்மன்ற உறுப்பினர்களான எம்.ஜஹாங்கீர், ஏ.கே.முஹம்மத் முகைதீன், ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி ஆகியோரும் இதன்போது உடனிருந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. விரைவில் மாற்று இடம் தேடவேண்டும்...!
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [26 August 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41757

கடந்த காலதில் நகர்மன்ற உறுப்பினர்கள் சர்வே எண் 278 /1 ல் குப்பை கிடங்கு அமைய பெற மிக முக்கியமான BUFFER ZONE தீர்மானத்தை எதிர்த்த ஒரே காரணத்தினால் இன்றைக்கு இவ்வளவு பெரிய பிரச்சனைகளை பப்பரப்பள்ளி / எல்.எஃப்.ரோடு பகுதியை சார்ந்து இம்மக்கள் சந்திக்க நேர்ந்துள்ளது என்பதை அறியும் போது மனம் வேதனை கொள்கிறது -

அப்பகுதியில் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தினமும் துர்நாற்றத்தால் / நோயால் அவதிபடும் செய்திகளை இம்மக்கள் கூறும் போது மனம் கனக்கின்றன - விரைவில் மாற்று இடம் தேடவேண்டும் உடனே நகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை நிறுத்த வேண்டும் -

நகராட்சிக்கு நன்கொடை அளித்த இடத்தில் buffer zone தீர்மானம் நிறைவேற்றி கொடுப்பதில் அப்படி என்ன சிக்கல் வர போகிறது தெரிந்தவர்கள் விளக்குங்கள் - உறுப்பினர்கள் buffer zone தீர்மானம் நிறைவேற்றாததால் இன்றைக்கு அணைத்து மக்களுக்கும் பாதிப்பகை விட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [26 August 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41758

அஸ்ஸலாமு அலைக்கும்

ஊர் பொது மக்களின் இந்த போராட்டம் முற்றிலும் நியாமானதே .....கண்டிப்பாகவே நமது நகர் மன்ற மரியாதைக்குரிய தலைவி அவர்களும் / அந்த தொகுதி மரியாதைக்குரிய உறுப்பினர் அவர்களும் நம் மக்களோடு இணைந்து இதற்க்கு ஒரு நல்லதோர் தீர்வு மிக அதிக விரைவில் ஏற்பட வழி செய்தால் நல்லது .....

ஏற்கனவே இந்த விசையம் .நமது ஊர் அனைத்து மக்களுக்கும் >> what app << மூலம் வந்து பொது மக்கள் உள்ளூர் .. வெளியூர் வாழ் நம் மக்கள் யாவர்களும் கடுமையான வேதனைக்கு உள்ளானார்கள் ......என்பதும் குறிப்பிட தக்கது ....

இப்பகுதியில் குடி இருப்பு மக்கள் & துளீர் குழந்தைகளும் / வழிபாடு தளங்களும் ....குறிப்பாக மக்கள் சாப்பிடும் ஆடு அறுப்பு தொட்டி இருப்பதாலும் ...நம் நகராச்சி அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல் இந்த விசையத்தில் துரிதமான நடவடிக்கை எடுக்க வேணும் ......

இவர்கள் காலத்தை கடத்தினால் நம் ஊர் மக்கள் ஒட்டு மொத்தமாக '' அறவழியில் '' போராட்டத்தை தீவிர படுத்த வேணும் ..

மக்களின் நியாயமான இந்த போராட்டத்தில் .....நல்லதே நடக்கும் வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...நீரோட்டம் இல்லாமல் நிலம் விளையாது போராட்டம் இல்லாமல் நலம் விளையாது
posted by mackie noohuthambi (colombo) [27 August 2015]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 41759

பொது மக்களின் இந்த அணுகுமுறை மிகவும் பாராட்டுக்குரியது. குட்ட குட்ட குனிபவனும் முட்டாள் குனிய குனிய குட்டுபவனும் முட்டாள் என்பார்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது. நகர்மன்ற உறுப்பினர்களும் நகர்மன்ற தலைவி அவர்களும் நிர்வாக அதிகாரி அவர்களும் கூட்டாக சேர்ந்து ஊரில் நல்ல விஷயங்கள் நடக்கவும் ஊர் முன்னேறவும் பாடு படவேண்டும்

மாறாக இங்கோ ஈகோ பிரச்சினைகளால் நலத்திட்டங்கள் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றன. யார் அதிகாரம் மிக்கவர் யாருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்று நீதி மன்றங்கள் சொல்வதில் பல பரீட்சை பார்க்கிறார்கள் பஞ்சாயத்து சட்டங்களும் தெளிவாக இல்லை. எல்லா விஷயங்களும் சட்டமன்றத்தில் கூட வாத விவாதம் இல்லாமல் விதி 110 என்று ஒன்றை வைத்துக்கொண்டு ALL PASS என்று எல்லாவற்றையும் நிறைவேற்றி விடுகிறார்கள். அந்த நிலையில் கூட நம் ஊர் நலத்திட்டங்கள் நீதி மன்றங்களால் நிறுத்தி வைக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இப்போது செப்டம்பர் 3ம் திகதிக்கு முன் ஓர் நல்ல முடிவு ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.'' பல சிக்கல்களின் தீர்வு ஒரு சிறிய விட்டுக் கொடுப்பதில் இருக்கிறது. நெருங்கி உட்கார்ந்து பேசுவதில் இருக்கிறது. ஒரு சிறிய மன்னிப்பில் இருக்கிறது'' இதை உணர்ந்து எல்லோரும் பரந்த மனப்பான்மையுடன் செயல்பட்டால் ஒரு முடிவு ஒரு விடிவு கண்டிப்பாக ஏற்படும்.

போராட்டம் என்று அறிவித்திருப்பவர்கள் தயவு செய்து செல்போன் கோபுரங்களை நோக்கி பார்வையை உயர்த்தாதீர்கள். அது இப்போது ஒரு பேஷன் ஆக போய் விட்டது.உயிரோடு இருந்தால்தான் போராட முடியும். உயிரோடு வாழ்வதற்குத்தான் போராட்டமே நடத்துகிறோம். எனவே அறவழியில்போராட்டம் என்பது சாலை மறியல்கூட நல்லதல்ல மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப் படாமல் நாட்டின் சட்டங்களுக்கு மதிப்பு கொடுத்து ஜனநாயக ரீதியில் போராடுங்கள். அந்த போராத்துக்கு கூட அவசியம் இருக்காது என்று நினைக்கிறோம்.

பரீட்சையில் தோற்பவர்களுக்கு செப்டெம்பரில் மீண்டும் பரீட்சை எழுத வாய்ப்பு கிடைக்கும். தோல்வி அடைந்த மாணவர்கள் COME SEPTEMBER என்று SEPTEMBER ரை வரவேற்பார்கள் எனக்கும் அந்த அனுபவம் உண்டு.

LET US WELCOME SEPTEMBER . LET US WELCOME OUR MUNICIPALITY ADMINISTRATION TO FIND A SOLUTION TO THIS SANITATION PROBLEM . CLEANLINESS IS NEXT TO GODLINESS GOD BLESS YOU ALL .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Seyed Mohamed (Sayna) (Bangkok) [27 August 2015]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 41763

நம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ்

நம் இந்திய சுதந்திரத்தை புறக்கணித்தவர் , இதை யாரும் மறந்து விட கூடாது. இந்திய சுதந்திரத்தை புறக்கநிதவர்களை நாம் எவ்வாறு கூப்பிடவேண்டும்

கப்பி பேஸ்ட் :

குப்பை கொட்டுவதற்காக மாற்று இடம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்காக நானும், 17 உறுப்பினர்களும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையும் இணைந்து ஒரு தனவந்தரிடம் நிலம் பெற்றோம். ஆனால் அங்கு பணிகளைச் செய்வதற்கு - சில சுயநலம் கொண்டவர்களால் நீதிமன்றத்தில் தடையாணை பெறப்பட்டுள்ளதால் உடனடியாக அங்கு குப்பை கொட்ட இயலவில்லை. என்றாலும், இதுகுறித்து தீர ஆராய்ந்து, விரைவில் மாற்று இடம் தேர்வு செய்யப்படும்” என்றார்.

இவரின் முதல் போய் இவர்களும் மட்ற்ற 17 உருபினர்களும் , அந்த தனவந்தர் நிலம் கொடுக்கும் பொழுது நீங்கள் காயல் பட்டினத்தில் இருந்தீர்கள, அப்படி நீங்கள் சொன்னால் உங்கள் பதவி காலம் காயல்பட்டினத்தில் எதனை ஆண்டுகள் பணி ஆற்றுநீர்கள்,

கோப்பி பேஸ்ட் :

சில சுயநலம் கொண்டவர்களால் நீதிமன்றத்தில் தடையாணை பெறப்பட்டுள்ளதால் உடனடியாக அங்கு குப்பை கொட்ட இயலவில்லை

யாரு சுயநலம் கொண்டவர்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும், உங்கள் பணி காலத்தில் எதை வேண்டாலும் செய்து விடுவீர்கள் நீங்கள் பணியை விட்டு போன பிறகு அவதி படுப்பது நாங்கள்,

அந்த தனவந்தர் கொடுத்த நிலமும் , DCW கழிவு நீர் ஓடையும் எவ்வளவு தூரத்தில் இருகின்றது சொல்ல எழுமா , எங்கள் ஊரில் கேயன்செர் வியாதி வருவதற்கு DCW ஒரு காரணமாக இருக்கலாம் என்று நாங்கள் நினைகிட்ரூம் நீங்கள் இந்த பயோ காஸ் திட்டத்தை அதற்க்கு அருகமைல அமைத்த பிறகு DCW நிர்வாகம் எங்களால் இல்லை அவர்களின் பயோ காஸ் கழிவினால் இல்லை கசிவினால் தான் அந்த ஊரு பதிக்க பட்டது என்று சொல்லி விட்டு , எதை வேண்டாலும் செய்வார்கள் ,

சரி அப்படியாநாளும் தனவந்தர் கொடுத்த எடத்துக்கு பக்கத்துள் மக்கள் வசிக்க வில்லையா நீங்கள் கொட்டும் குப்பையால் அங்கு உள்ள மக்களுக்கு பாதிப்பு வரதா அதற்க்கு உங்களால் உத்திரவாதம் தர முடிஉமா ,

வசதி படைத்தவர்களுக்கு வந்தால் ரத்தம் , எங்களை போன்றவர்களுக்கு வந்தால் அது தக்கலி சட்டினியா ,

வார்த்தைகளை விடும் முன் யோசிக்க வேண்டும் யாரை பார்த்து சில சுயநலம் கொண்டவர்கல் என்று சொன்னீர்கள் , எதிர்ப்பு தெய்ரிவிக்கும் நல்ல உள்ளம் கொண்ட காயல் மக்கள் சுயநலம் படைத்தவர்களா? இல்லை நீங்களா?

ஒரு அதிகரி இப்படி பேசியது தவறு நான் இதை வன்மையாக கண்டிகெரெய்ன் , அதிகரி பொறுப்பில் இருக்கும் பொது பொறுப்பாக நடக்க வேண்டும், பொறுப்பாக பதில் சொல்ல வேண்டும் , எவ்வாறு என்றல் மனுவை வாங்கி விட்டு விசாரணை செய்கின்றோம் என்று சொல்ல வேண்டும் , அதை விட்டு விட்டு சுயநலம் கொண்டவர்கள் என்று சொன்னது தவறு,

தாங்கள் எங்கள் ஊரில் உங்கள் பதவி காலம் வரை தான் இருப்பீர்கள் அதற்க்கு பிறகு சென்று விடுவீர்கள் , காலம் முழுக்க கஷ்டபடுவது எங்கள் காயல் மக்கள் , எங்கள் காயல் மக்கள் இன்னும் ஏன் இதை புரிந்து கொள்ளவில்லை என்று கவலையாக இருகின்றது ,

அன்பு காயல் மக்களே இன்று உள்ளதை மட்டும் பார்க்காதீர்கள் உங்கள் பெயரன் , பெய்தி உடைய வாழ்கையை பாருங்கள், நாம் இறைவனடி சேர்ந்த பிறகு நம் காயல் சமுதையை இருக்க வேண்டும் என்று நினைத்தால் அந்த இடத்தில பயோ காஸ் அமைய விடாமல் தடுபீர் , அதை பற்றி கவலை இல்லை என்றல் எது வேண்டாலும் செயுங்கள் ,

இப்படிக்கு
செய்யது முஹம்மது (செனா )
பாங்காக் - தாய்லாந்து


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [27 August 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 41766

மக்கள் ஆரவாரம் இல்லாத கொட்டமடை காட்டின் அருகில் உள்ள நிலம் தானே தலைவர் வாவு அப்துல் ரஹ்மான் ஹாஜியார் கொடுதிருக்கும் இடம். இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை.

ஊர் நலன் முக்கியம். தவறு இருந்தால் தட்டி கேளுங்கள் .லஞ்சஒழிப்பு துறை இருக்கிறது,தலைவியோ, உறுப்பினர்களோ , அதிகாரிகளோ தவறு செய்தாலும் பொது மக்களாகிய நாம் தான் சட்டையை பிடித்து இழுத்து நியாயம் கேட்க முடியும். தயவு செய்து வருகின்ற திட்டங்களை முட்டுக்கட்டை போடாதீர்கள் என்று மிகுந்த பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Vilack sma (jeddah) [27 August 2015]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41770

பப்பரப்பள்ளி நிலத்திற்கு உரிமையாளர்கள் ஆரம்பத்திலேயே இதை எதிர்த்து இருந்தால் பிரச்சினை வந்திருக்காது . செப்டம்பர் 3 ம் தேதிக்குள் , நகராட்சி " தற்காலிக " மாற்று இடத்தை தேடிப்பிடிக்கும் . ஆனால் நிரந்தரமாக ஒரு இடம் ...???? அது இந்த ஆட்சியில் முடியாத காரியம் .

மேலும் , இன்று ஊரின் பெரும்பான்மையான இடங்கள் பப்பரப்பள்ளியாகத்தான் உள்ளது . ஒவ்வொரு தெருவிற்கும் குறிப்பிட்ட நேரத்தில் நகராட்சியின் குப்பை அள்ளும் லாரி வருகிறது . நம்மில் எத்தனை பேர் அந்த லாரியில் குப்பை கொட்டுகிறோம் ? லாரி போன பிறகு சாவகாசமாக வந்து குப்பையை தெருவில் வீசி எறிகிறோம் .

இதைவிட மோசமானது , எவருக்கும் தெரியாமல் அடுத்தவன் வீட்டு வாசலில் இரவோடு இரவாக , அல்லது மதியம் ஊர் அடங்கிய நேரத்தில் குப்பையை வைக்கிறோம் .

பப்பரப்பள்ளி ..அந்த நில உரிமையாளர்களுக்கு எந்த அளவு முக்கியமானதோ அதுபோல்தான் ஒவ்வொரு வீட்டுக்காரருக்கும் அவரவர் வீட்டின் சுகாதாரம் முக்கியமானது . என்று திருந்தும் இந்த சமூகம் ?///


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (Royal Kaya-628204l) [28 August 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41771

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர். KWT காயல்பட்டணம் நல அறக்கட்டளை என்ற அமைப்பு ஊரில் உதயமான நேரம்.L .F .ரோடு வாழ் குடிமக்கள் அனைவர்களின் சார்பாக ஒரு கோரிக்கைமனு KWT அமைப்புக்கு கொடுக்கப்பட்டது. அதில் அவர்கள் வசிக்கும் பகுதியில் குப்பைகளை கொட்டுவதால் ஏற்படும் சொல்லணாத்துயரத்தை விளக்கி.அனைத்து மக்களின் கையெழுத்து சம்மத்ததுடன் கோரிக்கை மனுவை கொடுத்து எங்கள் அமைப்பின் மூலம் நகராட்சியிலிருந்து நல்ல தீர்வை பெற்று தரும்படி வேண்டிக்கொண்டார்கள்!

இந்த L .F ரோடு மக்களின் குறையை தீர்த்து விட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் KWT அமைப்பின் தலைவர் அபுபக்கர் அவர்களும், இணைசெயலாலர்களாகிய முஜாஹித், அகமது சாகிப் அவர்களும் அந்த நேரத்தில் செயலாராக இருந்த நான் உட்பட பல சகோதரர்களோடு அன்றைய நகராட்சி த் தலைவர் ஜனாப் சேகு அப்துல் ரஹ்மான் ஹாஜி அவர்களை காயல் நகராட்சி அலுவலகத்தில் L .F ரோடு மக்கள் சார்பாக இந்த குப்பைகொட்டும் தீமை கழையும் கோரிக்கையை முன்வைத்தோம்!

எங்கள் கோரிக்கையை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட தலைவர் அவர்கள் அந்த L .F மக்கள் படும் இன்னல்களுக்காக மனம் வருந்தினார்.அதோடு அதற்கு ஒரு தீர்வு வழியையும் கூறினார்கள்!.அவர்களின் சொந்ததமான இடத்தில் அதாவது கற்புடையார் பள்ளிக்கு வெகுதூர வடக்கே ( இப்போது பையாகேஸ் அமைவதற்காக கட்டப்படும் இடத்தில் என்று நினைக்கிறேன் ) அந்த இடத்தில் 100 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்ட பெரிய பத்து குழிகளை தோண்டி அதில் இந்த குப்பைகளை போட்டு மூடி விட வேண்டும். அந்த குழிகள் நிறைந்தவுடன் புதிய குழிகளை தோண்ட வேண்டும் இதற்காக என் நிலத்தை இலவசமாக தருகிறேன் என்று கூறிய தலைவர் JCB மூலம் குழி தோண்டுதல் மேலும் அந்த இடத்திற்கு வாகனம் வரக்கூடிய சாலைகள் அமைத்தல் ஆகிய வேலைகளை KWT அமைப்புதான்செய்ய வேண்டும் என்றார்கள்! !

ஊர்நலன் நாடி KWT அமைப்பும் அவர்களின் நிபந்தனைக்கு ஒப்புகொண்டது . முறைப்படி எழுதி தாருங்கள் என்று கேட்கவே எழுத்து மூலமும் நாங்கள் உறுதியளித்தோம்! எங்களிடம்,வாய்,எழுத்து மூலம் எல்லா உறுதியையும் பெற்றுக்கொண்ட தலைவர் அவர்கள் நான் முறைப்படி உங்கள் KWT.க்கு பதிவாளர் அலுவலகத்தின் மூலம் பதிவு பத்திரம் தயாரித்தே தந்து விடுகிறேன் பிறகு நீங்கள் வேலையை அதிகார பூர்வமாகவே ஆரம்பித்து விடலாம் என்றார்கள்

நாங்களும் மெத்த மகிழ்வுடன் வெளி வந்தோம்.அடுத்து தலைவர் எங்களை அழைப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்த்தோம் அடுத்த ஒரு வாரம்வரை எங்களை அழைத்தபாடில்லை.சகோதரர் முஜாஹித் அவர்கள் தலைவர் மகனாரை சந்தித்து விஷியத்தை விளக்கி உங்கள் தந்தை அழைப்புக்காக காத்திருக்கிறோம் உடனே கேட்டு சொல்லுங்கள் என்று சொல்லியுள்ளார்!

தந்தையிடம் கேட்டு சொன்ன பதிலை பெற்ற நாங்கள் ஆச்சிரியமும் விரக்தியும் அடைந்தோம் தலைவர் சொல்லி அனுப்பி விசியம் யாதெனில். நாங்கள் (KWT அமைப்பு ) தூத்துக்குடியில் சுற்றுப்புற சூழல் அமைப்பு அலுவலகத்தில் அந்த இடத்தில் வேலை செய்வதற்கு தடையில்லா சான்றிதல் கொண்டு வர வேண்டுமாம் அப்படி கொண்டு வந்தால் அடுத்த நிமிடமே அவர்கள் நிலத்தில் தோண்டும் உரிமையை பத்திர பதிவு செய்து தந்து விடுவார்களாம்!

தலைவர் அவர்களை நகராட்சியில் பார்க்க முடியவில்லை வீட்டிலாவது சந்திக்க நேரம் ஒதுக்கித்தாருங்கள் என்று அவர்கள் மகனாரிடம் வேண்டினோம். தலைவர் சொன்ன வேலையை செய்து முடித்த கையோடு அவர்களை சந்திக்கணுமாம், அதுவரை சந்திக்க விரும்பவில்லை என்ற தோரணையில் பதில் வந்தது!

மேற்கண்ட அனைத்து சம்பவங்களும் அல்லாஹ் அறிய அன்றைய KWT பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது அவர்கள் அனைவர்களும் அறிந்ததே!

ஆக, மேற்கண்ட என் உண்மை விளக்கத்தினால் நாம் அறிய வருவது, இப்போது பிரச்சனைக்குள்ளாகி நீதி மன்றத்தில் இருக்கும் இடத்தை நிச்சியம் சுற்றுப்புற சூழல் இயக்ககம் அனுமதி அளிக்காது என்பது உறுதியாகிறது. அதுமட்டுமல்ல இதற்கு எளிதில் அனுமதி கிடைக்காது என்பதை அன்றைய தலைவர் அவர்களும் அறிந்திருந்த சிதம்பர ரகசியமோ என்ற ஐயப்பாடும் எழுந்துள்ளது! .

ஆகவே அன்புள்ளம் கொண்ட கண்ணியவான்களே, ஊர் மக்கள் நலன் நாடி விட்டு கொடுக்கும் மனப்பக்குவத்தில் அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட ஒர் இடத்தை தேர்வு செய்து அதில் குப்பைகொட்டவோ பயாகேஸ் அமைக்கவோ உடனடி நடவடிக்கையை எடுக்கவும்!

இந்த நன்மை பயற்கும் நிகழ்விற்கு எந்த" ஈகோ" வும் பார்க்காமல் நகராட்சியின் தலைவர் முதல் அனைத்து உறுப்பினர்களும் மற்றும் ,அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கி எங்கள் ஊரை இந்த இன்னல் களிலிருந்து காப்பாற்றுங்கள்.அல்லாஹ் உங்கள் நல்லெண்ணத்திற்குறிய நன்மைகளை பன்மடங்களாக்கித் தருவான்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved