| 
 
 காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 
  
50ஆம் ஆண்டு பொன்விழா சுற்றுப்போட்டிகள் இம்மாதம் 06ஆம் நாள் புதன்கிழமை 16.50 மணியளவில், ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கியது. 
  
 
  
மழை காரணமாக, மே 12 செவ்வாய்க்கிழமை மாலையில், ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெறவிருந்த போட்டி இடம் மாற்றப்பட்டு, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 
  
 
  
 
  
 
  
 
  
 
  
இப்போட்டியில், திருவனந்தபுரம் ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் அணியும், சென்னை எம்.எஸ்.யு. அணியும் மோதின. இதில், 1-6 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றிபெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 
  
 
  
 
  
அன்றாடம் நடைபெறும் போட்டிகள் அனைத்தும், www.azadtrophy.com என்ற இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டு வருகிறது. 
  
தகவல் & பட உதவி:  
A.M.முஹம்மத் யூனுஸ்
  
கூடுதல் படங்கள்:  
ஷேக்னா ‘PHM’ 
A.S.அஷ்ரஃப்
  
நடப்பாண்டு கால்பந்துப் போட்டி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
  
கடந்தாண்டு நடைபெற்ற ஆறாம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
  
[கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டன @ 09:09 / 15.05.2015]  |