| முஹைதீன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் இன்று 66வது  குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஆண்கள் பிரிவில் நடந்த நிகழ்ச்சியில் - ஹாஜி ஏ.கே. கலீல் ரஹ்மான், கே.எம்.டி. சுலைமான், ஹாபிழ் ஏ.எல்.சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 
  
 
  
 ஹாஜி  எம்.எம்.சுல்தான் கொடியேற்றி வைத்தார். டாக்டர் பீ.ஏ.எம். ஜாபர் சாதிக் - சிற்றுரை ஆற்றினார். பள்ளிக்கூட முதல்வர் ஸ்தீபன் உட்பட அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.
 
 
  
 பெண்கள் பிரிவில் நடந்த நிகழ்ச்சியில் - ஹாஜா எம்.ஏ. சுபைதா கொடியேற்றி வைத்தார். ஹாஜா எம்.ஏ.கே. கிதுறு பாத்திமா சிற்றுரை ஆற்றினார்.
 
 தலைமை ஆசிரியை ஹசீனா - உட்பட அனைத்து ஆசிரியைகளும், மாணவிகளும் கலந்துக்கொண்டனர்.
 
 தகவல்:
 கே.எம்.டி.சுலைமான்,
 துணைச் செயலாளர், முஹைதீன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி.
 
 முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் கடந்தாண்டு (2014) நடைபெற்ற குடியரசு நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
 
 முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
 |