| 
 அபுதாபி காயல் நல மன்ற செயற்குழு கூட்டத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் காதர் முஹைதீன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். இது குறித்து அம்மன்றம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
  
 
  
 
  
அமீரகதலைநகர் அபுதாபி காயல் நலமன்றத்தின் 26 ஆவது செயற்குழு கூட்டம் 12-12-2014 வெள்ளிக்கிழமை மாலை மன்றத்தின்  கவுரவத் தலைவர் அல்ஹாஜ் I. இம்தியாஸ் அகமது அவர்களின் தலைமையில், மன்றத்தின் பொதுசெயலாளர் ஜனாப் V.S.T. ஷேக்னா லெப்பை அவர்களின்  இல்லத்தில் வைத்து கூடியது. 
  
ஹாஃபிழ் நஹ்வி. S.A. இஸ்ஹாக் லெப்பை ஆலிம் மஹ்ழரி அவர்கள் இறைமறை கிராஅத் ஓத கூட்டம் துவங்கியது. 
  
கணக்குகளின் ஒப்புதல்:
  
5-வது பொதுக்குழுவின் வரவு செலவு கணக்குகள் சரிகண்டு  ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  
 
  
 
  
காயலின் வெள்ள  நிவாரனம் - ஓர் அலசல்:
  
சமீபத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நமது ஊர் மக்களின்  துயரங்களை அறிந்து நமது மன்றத்தால் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள உதவிகளுடன் மேலும் அத்தியவசிய தேவைகளை SHIFA  அமைப்புடன்  இயங்கும் வெள்ளநிவாரண குழு மூலம் நமது மன்றம் உதவிகள் செய்வதற்கான ஆலோசனைகள் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
  
சிறப்புவிருந்தினர் வருகை:
  
 
  
 
  
இந்திய யூனியன் முஸ்லிம்லீக்கின் தமிழ்நாடு மாநில  தலைவரும், தேசிய பொது செயலாளருமாகிய பேராசிரியர் K.M. காதர் முஹைதீன் அவர்களை மன்றத்தின் தலைவர் மவ்லவீ  ஹாபிஃழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் மஹ்ழரீஅவர்கள் வரவேற்க, மன்றத்தின் துணை தலைவர் S.A.C. ஷாகுல் ஹமீது அவர்கள் அறிமுக உரையாற்றினார்கள்.
  
 
  
 
  
சிறப்புவிருந்தினர் தனது உரையில் இந்தியாவில் இஸ்லாமியர்களின் வரலாறு,  தற்போதுள்ள முஸ்லிம்களின் நிலைமை, மத்திய, மாநில அரசுகளின் நோக்கம், அவைகளை எதிர்கொள்ளும் விதம், இறைநேசர்கள் அதிகம் கொண்ட  காயல்பட்டினத்தின் தனித்துவம் மற்றும் அதன் வரலாறு, சமுதாயத்துக்கு முஸ்லிம்கள் செய்யவேண்டிய சேவைகள் IUML - க்கு முஸ்லிம்கள் செய்யவேண்டிய கடமைகள் ஆகியவைகளை பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.
  
மன்றத்தின் மக்கள் தொடர்பாளர் A.R. ரிபாய் அவர்கள்  நன்றியுரை நவிழ, அடுத்தசெயற்குழு கூட்டம்  இன்ஷாஅல்லாஹ்  09-01-2015 ஆம் தேதி  வெள்ளியன்று அஸர் தொழுகைக்கு பின் நடைபெறும் என்று மன்றத்தின் தலைவர் மவ்லவீ  ஹாபிஃழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் மஹ்ழரீஅவர்கள் 
அறிவிக்க அவர்களின் துஆ மற்றும் கப்பாராவுடன் கூட்டம் இனிதே  நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
  
 
  
இவ்வாறு அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
தகவல்: 
அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக, 
செய்தி மற்றும் ஊடகத் துறை பொறுப்பாளர், 
M.E. முகியதீன் அப்துல் காதர்.
  
அபூதபீ காயல் நல மன்றத்தின் கடந்த செயற்குழு கூட்டம் குறித்த செய்தியினை காண இங்கே சொடுக்குக
  |