| 
 
 காயல்பட்டினம் ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளி - நெசவு ஜமாஅத்தின் முன்னாள் தலைவர் மர்ஹூம் ஏ.எஸ்.எம்.புகாரீ அவர்களின் இளைய சகோதரரும், பள்ளிவாசல்களில் பெரும்பாலும் ஒலிபெருக்கி இல்லாதிருந்த அக்காலத்தில், பொதுமக்களை பள்ளிவாசலில் நடைபெறும் தொழுகைக்கு அழைப்பதற்காக ‘அஸ்ஸலாத்’, ‘அஸ்ஸலாத்’ என்று தெருக்களின் வழியே உரத்த குரலில் கூறி வந்ததன் மூலம் ‘அஸ்ஸலாத் அப்பா’ என அனைவராலும் அழைக்கப்பட்டவருமான - காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவைச் சேர்ந்த வட்டப்பெட்டி அஹ்மத் ஸாலிஹ் ஹாஜியார், இன்று நண்பகல் 12.00 மணியளவில், கேரள மாநிலம் சங்கனாச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 86. அன்னார், 
  
வட்டப்பெட்டி மர்ஹூம் செய்யித் இப்றாஹீம் அவர்களின் பேரனும், 
  
வட்டப்பெட்டி மர்ஹூம் ஹஸன் அப்துல் காதிர் அவர்களின் மகனும், 
  
காயல்பட்டினம் ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளி - நெசவு ஜமாஅத்தின் முன்னாள் தலைவர் மர்ஹூம் ஏ.எஸ்.எம்.புகாரீ அவர்களின் இளைய சகோதரரும், 
  
மர்ஹூம் ஏ.எஸ்.எம்.மூஸா, ஏ.எஸ்.எம்.பிலால் ஆகியோரின் தந்தையும், 
  
ஹிழுறு முஹ்யித்தீன், ஹபீப் முஹம்மத் ஆகியோரின் தாய்மாமாவும், 
  
ஹஸன் இக்பால், ஜின்னா, ஆஸாத், இப்றாஹீம் தாரிக் ஆகியோரின் சிறிய தந்தையும், 
  
ஜஃபர் ஸாதிக், அப்துல் காதிர் ஆகியோரின் மாமனாரும், 
  
இப்றாஹீம் கலீல், அஃப்ஸல், அஹ்மத் ஸாலிஹ், இப்றாஹீம் ஸாஹிப், அஜ்மல், முஸ்தஃபா, கே.எம்.எஸ்.ஸாலிம் ரிஸ்வீ ஆகியோரின் பாட்டனாருமாவார். 
  
அன்னாரின் ஜனாஸா, இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின், சங்கனாச்சேரி புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 
  
சங்கனாச்சேரியிலிருந்து...  
தகவல்:  
அமீர் ஷாஹுல் ஹமீத் 
(+91 99444 36462)   |