| 
 காயல்பட்டினம் தாயிம்பள்ளி ஜமாஅத் கல்வி அமைப்பான தாயிம்பள்ளி ஜமாஅத் எஜுகேஷனல் வெல்ஃபர் அசோஸியேஷன் (TEWA) சார்பில், நடைபெற்று முடிந்த 10ஆம், 12ஆம் வகுப்புகளுக்கான அரசுப் பொதுத் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற - அப்பள்ளி மஹல்லா ஜமாஅத்திற்குட்பட்ட சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசளிப்பு விழா, இம்மாதம் 02ஆம் நாள் சனிக்கிழமை 17.30 மணியளவில், வள்ளல் சீதக்காதி நினைவு நூலக வளாகத்தில் நடைபெற்றது. 
  
 
  
தாயிம்பள்ளி ஜமாஅத் தலைவர் எஸ்.டி.வெள்ளைத்தம்பி, நகரப் பிரமுகர்களான எஸ்.எம்.மூஸா, எஸ்.இ.மரைக்கார் ஆலிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  
மாணவர் ஹாஃபிழ் அப்துர்ரஸ்ஸாக் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய - காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரியின் முதல்வர் எம்.ஏ.புகாரீ தலைமையுரையாற்றினார். கொமந்தார் இஸ்மாஈல் வரவேற்றுப் பேசியதோடு, நிகழ்ச்சிகளையும் நெறிப்படுத்தினார். 
  
நகரப் பிரமுகர்களான டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், எல்.கே.துவக்கப்பள்ளியின் பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் நா.பீர் முஹம்மத், மக்கா செய்யித் இப்றாஹீம், காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 
  
 
  
இந்நிகழ்ச்சியில், தாயிம்பள்ளி மஹல்லா ஜமாஅத்திற்குட்பட்ட - 10ஆம், 12ஆம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவியருக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. தாயிம்பள்ளி ஜமாஅத்தில் வசிப்போரும், தாயிம்பள்ளி ஜமாஅத்திலிருந்து வெளி ஜமாஅத்துகளில் திருமணம் செய்தவர்களின் மக்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். பரிசு பெற்றோர் விபரப்பட்டியல் வருமாறு:- 
  
12ஆம் வகுப்பில் முதல் மூன்றிடங்களைப் பெற்றோர்... 
  
முதலிடம் 
என்.ஏ.ஃபாத்திமா ரிஸ்மியா 
த.பெ. வி.டீ.நூருல் அமீன் 
(எஸ்.டி.வெள்ளைத்தம்பி ஹாஜியின் பேத்தி)  
முகவரி: தைக்கா தெரு, காயல்பட்டினம் 
பெற்ற மதிப்பெண்கள்: 1200க்கு 1150 
பள்ளி: சென்னையில் பயின்றவர் 
பரிசுத் தொகை: ரூபாய் 5 ஆயிரம்
  
இரண்டாமிடம் 
எஸ்.ஏ.ஷக்கூர் அஃப்ஸர் 
த.பெ. செய்யித் அஹ்மத் 
முகவரி: கே.டி.எம். தெரு, காயல்பட்டினம் 
பெற்ற மதிப்பெண்கள்: 1200க்கு 1124 
பள்ளி: எல்.கே.மேனிலைப்பள்ளி 
பரிசுத் தொகை: ரூபாய் 3 ஆயிரம்
  
மூன்றாமிடம் 
அப்துல் காதிர் நவ்ஃபல் 
த.பெ. நிளார் 
(கே.எம்.தவ்லத் ஹாஜி பேரன்)  
முகவரி: கே.டி.எம். தெரு, காயல்பட்டினம் 
பெற்ற மதிப்பெண்கள்: 1200க்கு 1041 
பள்ளி: எல்.கே.மேனிலைப்பள்ளி 
பரிசுத் தொகை: ரூபாய் 2 ஆயிரம்
  
10ஆம் வகுப்பில் முதல் மூன்றிடங்களைப் பெற்றோர்... 
  
முதலிடம் 
எஸ்.எஸ்.மதீஹா நாச்சி 
த.பெ. சாமு ஷிஹாபுத்தீன் 
(முஹம்மத் ஸாலிஹ் பேத்தி)  
முகவரி: பிரதான வீதி, காயல்பட்டினம் 
பெற்ற மதிப்பெண்கள்: 500க்கு 492 
பள்ளி: அரசு மகளிர் மேனிலைப்பள்ளி 
பரிசுத் தொகை: ரூபாய் 3 ஆயிரம்
  
இரண்டாமிடம் 
கே.எம்.முஹம்மத் அப்துல் ரஸ்ஸாக் 
த.பெ. காஜா முஹ்யித்தீன் 
(தானா பாய் பேரன்)  
முகவரி: கே.டி.எம். தெரு, காயல்பட்டினம் 
பெற்ற மதிப்பெண்கள்: 500க்கு 491 
பள்ளி: எல்.கே.மேனிலைப்பள்ளி 
பரிசுத் தொகை: ரூபாய் 2 ஆயிரம்
  
மூன்றாமிடம் 
எஸ்.எச்.சாமு ரஈஃபா 
த.பெ. ஷாஹுல் ஹமீத் 
முகவரி: அலியார் தெரு, காயல்பட்டினம் 
பெற்ற மதிப்பெண்கள்: 500க்கு 486 
பள்ளி: எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி 
பரிசுத் தொகை: ரூபாய் 2 ஆயிரம்
  
சாதனை மாணவ-மாணவியருக்கு மேடையில் வீற்றிருந்தோர் பரிசுகளை வழங்கினர். 
  
 
  
 
  
நிகழ்ச்சியில் அங்கம் வகித்த அனைவருக்கும், ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது. 
  
 
  
வள்ளல் சீதக்காதி நினைவு நூலக தலைவர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இந்நிகழ்ச்சியில், தாயிம்பள்ளி ஜமாஅத்தைச் சேர்ந்த ஆண்கள் திரளாகக் கலந்துகொண்டனர். 
  
 
  
 
  
ஏற்பாடுகளை, தாயிம்பள்ளி ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் வள்ளல் சீதக்காதி நினைவு நூலக அங்கத்தினர் செய்திருந்தனர். 
  
தகவல் & படங்கள்:  
முஹம்மத் ஸிராஜுத்தீன்
  
தாயிம்பள்ளி ஜமாஅத் எஜுகேஷனல் வெல்ஃபர் அசோஸியேஷன் சார்பில் கடந்த கல்வியாண்டில் (2013-2014) ஜமாஅத்திற்குட்பட்ட சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்ட தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!  |