Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:35:07 AM
வியாழன் | 10 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1897, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1015:2918:1019:19
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:10
மறைவு18:03மறைவு24:00
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:44
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2518:4919:13
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13962
#KOTW13962
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுன் 27, 2014
இந்திய பொருளாதாரம் வலிமை பெற இஸ்லாமிய வங்கி முறை அவசியம்! ஜன்சேவா துவக்க விழா பொதுக்கூட்டத்தில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் பேச்சு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3532 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“இந்தியாவில் வட்டியில்லா வங்கி அமைப்பதை நோக்கி” என்ற இலக்குடன் பயணித்து வரும், ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கம் நிறுவனத்தின் காயல்பட்டினம் கிளை அலுவலக துவக்க விழா, இம்மாதம் 17ஆம் நாள் செவ்வாய்க்கிழமை 17.30 மணியளவில், 34சி, முதல் மாடி, மெயின் ரோடு, காயல்பட்டினம் என்ற முகவரியில் நடைபெற்றது.

அன்று 19.30 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், ஜன்சேவா விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், வேலூர் தொகுதி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:-



‘ஜன்சேவா’ காயல்பட்டினம் சாதனைப் பயணத்தில் ஒரு மைல் கல்:

காயல்பட்டினத்தில் பொதுநலன் கருதி பல்வேறு சேவை செயல்திட்டங்கள் செய்யப்பட்டு வருவதை நான் நன்கறிந்துள்ளேன். அவற்றுள் பெரும்பாலானவற்றை நேரிலும் கண்டு மகிழ்ந்துள்ளேன். அப்படிப்பட்ட இந்த ஊரில், வட்டியில்லா கடன் வழங்கும் நோக்குடன் ஜன்சேவா கிளை துவக்கப்பட்டுள்ளது, இந்நகரின் சாதனைப் பயணத்தில் ஒரு மைல் கல்.

வட்டி என்றால் என்ன, அதன் விளைவுகள் என்னென்ன என்பன பற்றி இங்கே பேசிய அனைவரும் விரிவாக விளக்கியுள்ளனர். சுருக்கமாகச் சொல்வதானால், பொருளாதாரத் தேவையுடையோர் வட்டியின் பக்கம் போகக் கூடாது என்பதே ஜன்சேவாவின் முக்கிய நோக்கமாகும்.

இஸ்லாமிய வங்கி (Islamic Banking) செயல்திட்டத்தில் பல வகைகள் உள்ளன. அவற்றுள், இந்த ஜன்சேவாவின் செயல்திட்டம் ‘முராபஹா’ வகையைச் சேர்ந்தது.

இன்னும் இலக்கை அடையவில்லை!

காயல்பட்டினத்தில் இதன் கிளை அமைந்துவிட்டது என்பதில் நாம் பெருமிதப்பட்டுக்கொண்டாலும், இதுவரை இந்த செயல்திட்டத்திற்கு 27 லட்சம் தொகை மட்டுமே பெறப்பட்டுள்ளது என்பது - காயல்பட்டினத்தைப் பொருத்த வரை ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவு அல்ல. இந்த ஊரின் தனவந்தர்கள் இருவர் நினைத்தாலே இத்தொகையைத் தந்துவிட இயலும். எல்லாவற்றுக்கும் தாராளமாக செலவழிக்கும் இந்த ஊர் தனவந்தர்கள், இந்த செயல்திட்டத்தின் உளத்தூய்மையான நோக்கத்தை உணர்ந்தவர்களாக அதிகளவில் பொருளாதாரத்தைத் தந்து, இந்த ஜன்சேவாவை வலிமைப்படுத்த முன்வர வேண்டும்.

வாணியம்பாடியில் சிறிய தொகையைக் கொண்டு துவங்கப்பட்ட ஜன்சேவா கிளை இன்று பெருந்தொகையுடன் வலிமை பெற்று விரிவடைந்துள்ளது என்பதை இத்தருணத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகிறேன். வாணியம்பாடி என்று சொல்லும்போது எனக்குள் ஒரு உரிமை ஒட்டிக்கொள்ளும். அதற்காக பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் கோபப்பட்டுக்கொள்ளக் கூடாது.

இஸ்லாமிய வங்கித் திட்டம்:

நம் நாட்டின் பொருளாதாரம் வலிமை பெற வேண்டுமானால், இங்கு இஸ்லாமிய வங்கி முறையை நடைமுறைப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். இக்கருத்தை, இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், நாடாளுமன்றத்தில் ஆற்றிய எனது கன்னிப் பேச்சிலேயே வலியுறுத்திக் கூறினேன்.

பெயர் பிடிக்காவிட்டால் தவிர்த்துக்கொள்ளுங்கள்!

“இஸ்லாம் என்ற சொல் கசப்பாக இருந்தால் விட்டு விடுங்கள்! ஏதேனும் ஒரு பெயரை வைத்துக்கொள்ளுங்கள்! ஆனால் இந்த செயல்திட்டத்தை கண்டிப்பாக கருத்தில் கொண்டு நிறைவேற்ற முன்வாருங்கள்!” என்று அப்போது நான் கூறினேன். இதைக்கேட்டு அனைவரும் சிரித்தனர்.

ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளிலெல்லாம் இஸ்லாமிய வங்கி முறை நடைமுறையில் உள்ளது.

வட்டி என்பது வன்கொடுமை. அதற்கு திருக்குர்ஆன் கூறுவதன் அடிப்படையில் செயல்படுவதே சரியான தீர்வாக அமையும். வட்டியை ஒழிக்கும் வகையில் இந்த நாட்டில் வலிமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

விரும்பும் காலம் விரைவில் வரும்:

பாலியல் வன்முறைக்கு இந்த நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டம் போதும் என்ற கருத்து பெரும்பாலோரிடத்தில் இருந்தது. ஆனால், டெல்லியில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்குள்ளாகி, உயிரிழந்த பிறகு அவசர சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் எதிர்த்தால், இன்னொரு கட்டத்தில் ஆதரிப்பர். இது காலத்தின் கட்டாயம். அந்த அடிப்படையில் வட்டிக்கு எதிரான சட்டங்களும் விரைவில் நடைமுறைக்கு வரும் என நம்பலாம்.

இருதயத்தில் நுழையவில்லை:

வட்டியில்லா பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, சில நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, அப்போதைய இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ரிசர்வ் வங்கி ஆளுநர் உள்ளிட்டவர்களையெல்லாம் நேரில் சந்தித்து, விளக்கமாகப் பேசினோம். அவர்கள் காதுகளுக்குள் நுழைந்த எங்கள் வாக்கியங்கள், அவர்களது கல்புக்குள் (இருதயத்துக்குள்) ஏனோ நுழையவேயில்லை. ப.சிதம்பரமும் அதை ஆர்வத்துடன் கேட்கவில்லை என பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகிறேன்.

2008ஆம் ஆண்டில், அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் தலைமையில், Committee In Financial Section Reforms என - நாட்டின் பொருளாதார சீரமைப்புக்காக ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டது. அந்த கமிட்டி பிரதமருக்கு அளித்த அறிக்கையில், வட்டியில்லாத வங்கி திட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என முக்கியமான பரிந்துரையை அளித்திருந்தது. அந்த கமிட்டியின் தலைவரை, அப்துர்ரக்கீப் ஸாஹிப் அவர்களுடன் இணைந்து சென்று சந்தித்தோம்.

வட்டியில்லா பொருளாதாரம் தொடர்பான அவரது பரிந்துரை குறித்து வினவியபோது, “அரசு இயந்திரம் ஒத்து வர வேண்டும்; அப்போதுதான் நடைமுறைப்படுத்த இயலும்” என்றார்.

சமுதாயத்தை ஏமாற்றாதீர்கள்!

சென்ற அரசு பெரும்பான்மை மக்களிடம் பெயரைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக திட்டமிட்டே இவற்றைப் புறக்கணித்துவிட்டதோ என்று கூறத் தோன்றுகிறது. கோடிக் கணக்கில் செலவு செய்து உருவாக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் அறிக்கை, கடந்த நாடாளுமன்றத்தில் விவாதத்திற்குக் கூட எடுத்துக்கொள்ளப்படாதது, அவர்களே நியமித்த குழு பரிந்துரைத்த பின்பும் வட்டியில்லாத பொருளாதாரத் திட்டத்தில் ஆர்வம் காண்பிக்காதது ஆகியவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இதைத் தவிர வேறொன்றும் சொல்ல எனக்குத் தோன்றவில்லை. “எங்கள் சமுதாயத்தை ஏமாற்றாதீர்கள்” என அப்போது நாங்கள் கண்டித்தோம்.

பாஜக அரசின் மீது நம்பிக்கை உள்ளது!

எனக்கென்னவோ, நடப்பு பாரதீய ஜனதா தலைமையிலான அரசு வட்டியில்லாத பொருளாதாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளதாகவே அதன் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. நாம் யாருக்கும் எதிரியல்ல. சிறுபான்மையினர் உரிமையை அழிக்கும் நினைப்போடு செயல்படும் எவரது நடவடிக்கைகளையும் எதிர்த்து நிற்பதே நம் பணி. ஆனால், அதே சாரார் சிறுபான்மையினர் உரிமையைப் பாதுகாக்கும் பணிகளைச் செய்தால், பாராட்டவும் நாம் தயங்க மாட்டோம்.

பாபரி மஸ்ஜிதை அது இருந்த இடத்தில் கட்டித் தருவோம் என்றும், அவரவர் மத வழிபாட்டு முறைகளுக்கு இந்த அரசு குறுக்கே வராது என்றும் பா.ஜ.க. அரசு சொல்லட்டும்! தெருவுக்குத் தெரு மேடை போட்டு பாராட்ட ஆயத்தமாக இருக்கிறோம்.

புதிய வியூகத்துடன் புதிய அரசை அணுகுவோம்:

கடந்த அரசோடு எங்கள் முயற்சிகள் நீர்த்துப் போய்விட்டதாக நாங்கள் கருதவில்லை. பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நம் பணி தொடரும். அந்த அடிப்படையில், புதிய வியூகத்துடன் நடப்பு பாஜக தலைமையிலான அரசையும் அணுகுவோம்.

இவற்றையெல்லாம் செய்வதால், இந்தியா நாளைக்கே இஸ்லாமிய அரசாக மாறிவிடும் என்றெல்லாம் சொல்வது மிகப்பெரிய கற்பனை.

அரிச்சுவடி கூட தெரியாதவர்கள்:

இஸ்லாமிய வங்கியை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய ஆடம் சின்ஹா என்பவர் தலைமையில் ஐவர் குழு ஒன்றை கடந்த அரசு நியமித்தது. இஸ்லாமிய வங்கி தொடர்பான அரிச்சுவடி கூட தெரியாதோ என்னவோ, “இஸ்லாமிய வங்கி இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட சாத்தியமில்லை” என அது அறிக்கையளித்திருக்கிறது.

லாபகரமான செயல்திட்டம்:

இந்த நாட்டில் இஸ்லாமிய வங்கி முறை என்பது நடைமுறைப்படுத்த சாத்தியமானது மட்டுமல்ல! பெரும் லாபம் தரக்கூடியதுமாகும். HSBC வங்கி, Standard Charted வங்கி ஆகியவற்றிலெல்லாம் Islamic Banking Cell உள்ளன என்ற தகவலைக் கொண்டே இதை உறுதி செய்துகொள்ளலாம். இது லாபகரமான செயல்திட்டம் என்பதை ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் நிரூபித்துள்ளன.

சோதனை அடிப்படையிலேனும் செய்ய முன்வாருங்கள்!

இஸ்லாமிய வங்கித் திட்டத்தை ஒரே கட்டமாகக் கூட இந்த நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டாம். ஏதாவது ஒரு மாவட்டத்தில், ஒரேயொரு வங்கியில் மட்டும் சோதனை அடிப்படையில் துவக்கமாக அதைச் செய்து பாருங்கள் என்றே நாங்கள் வலியுறுத்துகிறோம்.

உறங்கும் பணத்தை நாட்டுக்கு உதவச் செய்வோம்!

பயன்படுத்தப்படாத வங்கி வட்டிப் பணம் பல்லாயிரம் கோடி தொகை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறிதும் உதவாமல் உறங்கிக் கொண்டிருக்கிறது. கருப்புப் பணம் பற்றியெல்லாம் நாடாளுமன்றத்தில் பேசினோம். வெறுமனே குறிப்புகளை மட்டும் எடுத்துக்கொண்டனர்.

நடப்பு பாஜக அரசு திறந்த மனதுடன் இப்பிரச்சினையை அணுகி, நல்லதை நடைமுறைப்படுத்தும் என்று நம்புகிறோம். இந்த அரசுக்கு நம்பிக்கையூட்டுவதற்காக, எங்கெங்கெல்லாம் இஸ்லாமிய வங்கித் திட்டம் நடைமுறையிலுள்ளதோ, அங்கெல்லாம் அரசு பிரதிநிதிகளை அழைத்துச் செல்லவும் ஆயத்தமாக இருக்கிறோம்.

இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு காயல்பட்டினத்தில் வித்து:

இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு, காயல்பட்டினத்தில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டம் வித்திடட்டும்! இங்கு பேசப்பட்ட தகவல்களை ஒன்று கூட விடுபடாமல் உளவுத்துறை அரசின் காதுகளுக்குக் கொண்டு செல்ல அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

செவிடன் காதில் ஊதப்பட்ட சங்கு:

வட்டியில்லாத பொருளாதாரத் திட்டம், இஸ்லாமிய வங்கி செயல்திட்டம் குறித்து மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராக நான் 13 முறை நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறேன். இருந்தும் அனைத்துமே செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போனது.

ரூ. 1 கோடி இலக்கு:

காயல்பட்டினத்தில் இந்த ஜன்சேவா அமைப்பு துவங்கப்பட்டுள்ளதை நான் மனமார வரவேற்கிறேன். அதன் செயல்திட்டங்கள் சிறக்கவும், அனைத்து தரப்பு மக்களுக்கும் நிறைவான பலன்களைத் தரவும் வாழ்த்தி, துஆ செய்கிறேன்.

குறிப்பிட்ட கால அளவை நிர்ணயித்து, 1 கோடி ரூபாய் என இலக்கு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அதை அடையும் வரை தீவிரமாக முயற்சி செய்யுங்கள். உங்கள் முயற்சிகளுக்குத் தோள் கொடுக்கும் வகையில் நானும், பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களும் இந்த ஊரில் வீடு வீடாகச் சென்று விளக்கவும் ஆயத்தமாக உள்ளோம்.

நல்லவற்றை வரவேற்கப் பழகுவோம்!

அன்பானவர்களே! நல்ல செயல்திட்டத்தை யார் முன்னெடுத்தாலும் நாம் வரவேற்கப் பழகிக்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு, “அதை நடத்துவது யாரு?”, “அவங்க தொப்பி அணிந்திருப்பவர்களா?”, “விரல் அசைப்பவர்களா?” என்பன போன்ற வாதப்பிரதிவாதங்களை வளர்த்து, நம்மை நாமே அழிவிற்குக் கொண்டு செல்ல காரணமாகிவிட வேண்டாம் என அனைத்து தரப்பினரையும் அன்பொழுக வேண்டுகிறேன்.

தேர்தலில் வெற்றி - தோல்வி என்பது சகஜம். அது நம் சமூகப் பணிகளை ஒருபோதும் பாதிக்காது. அந்த வரிசையில் இந்தப் பணியும் 100 சதவிகிதம் அல்லாஹ்வுக்காக செய்யப்படும் பணி என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை. அந்த வகையில், அதற்குத் துணை நிற்க வேண்டியது நம் யாவர் மீதும் கடமை.

இந்தியாவிலுள்ள ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கத்தின் 21 கிளைகளிலும் சிறந்த கிளை என்ற பெயரைப் பெற்று இந்த காயல்பட்டினம் கிளை சிறப்புற வாழ்த்திப் பிரார்த்தித்து, எனதுரையை நிறைவு செய்கிறேன்.


இவ்வாறு, எம்.அப்துல் ரஹ்மான் பேசினார்.

ஜன்சேவா காயல்பட்டினம் கிளை நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர் செய்திருந்தனர்.

தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ


ஜன்சேவா குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 17:51 / 28.06.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Islamic Banking
posted by Muhammad Abubacker (Muscat) [28 June 2014]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 35651

Islamic Banking & business system to be appreciated in India and need of all the time. It's the only and best solution for smooth business transaction and to reduce the gap between rich and poor.

In some country's Islamic banking system is implemented but it's same like interest banking. Difference is only in the name but not in policies.

So it is the responsibility of the management and promoters to explain the murahaba system of Islamic banking. It will be more useful if www.Kayalpatnam.com publish a post explaining this banking system. It's not for argument but for awareness.

Once again, It's to be appreciated if Islam is not only in the name but also in practice in this banking system. I was not in Kayalpatnam so not aware whether someone explain about this banking system in that meeting or not. Still we have many questions about this Islamic banking system in current practice.

Honorable MP Abdur Rahman give a fruitful lecture about the importance and need of the system but last part of this speech can be avoided.

Islamic banking is welcomed but what is Islamic banking in current practice is subject to the research & conclusion of scholars. If everyone play their own role effectively without interfering in others part of role is always helpful to build a healthy society.

Islamic banking system is the best of all the time.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ISLAMIC BANK
posted by JAHIR HUSSAIN VENA (Bahrain) [28 June 2014]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 35659

"HSC வங்கி, Standard Charted வங்கி ஆகியவற்றிலெல்லாம் Islamic Banking Cell உள்ளன".....

Dear Admin,
Please correct the word to HSBC instead of HSC

Moderator: Corrected. Thanks!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...இஸ்லாமிய வங்கி முறை
posted by mackie noohuthambi (chennai) [28 June 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35661

அல்லாஹ்வுக்கும் அவனது ரசூலுக்கும் மிக விருப்பமான பெயர் அப்துர் ரஹ்மான். அதனால்தானோ என்னவோ, அவர்கள் வலியுறுத்தும் ஓர் நல்ல திட்டம் திறப்புவிழா காணவும் அவர்கள் வெறுக்கும் ஒரு திட்டம் மூடு விழா காணவும் இந்த பாராளுமன்ற உறுப்பினர் அப்துர் ரஹ்மான் அவர்களை தேர்ந்தெடுத்து அல்லாஹ் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பி உள்ளான் போலும். ஜவாஹிருல்லாஹ், ரஹ்மத்துல்லாஹ் என்ற பெயர்களும் இங்கு பொருத்தமாக இணைந்திருக்கிறார்கள்.

பெயரில் என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு ஒரு செய்தி. நபிகள் நாயகம் எதிரிகளிடம் தூது அனுப்ப ஒரு ஆளை தேர்ந்தெடுக்க முனைந்தபோது ஒருவர் எழுந்து நின்று நான் போகிறேன் என்றாராம். உங்களது பெயர் என்ன என்று கேட்டதற்கு, "கடுகடுப்பானவர்"என்ற அர்த்தம் கொண்ட பெயரை அவர் கொண்டிருந்ததால், அவரை உட்கார சொல்லி விட்டு வேறு ஆளை தேர்ந்தெடுத்தார்கள் என்ற செய்தி நான் கேள்வி பட்டிருக்கிறேன். இலங்கையில் ஒருவர் தன பிள்ளைக்கு பெயர் வைக்க வேண்டும், Z என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்கும் ஒரு பெயரை சொல்லுங்கள் என்று ஒரு ஆலிமிடம் சொன்னபோது, அவர் ZOO என்று பெயர் வையுங்கள் என்று சொன்னாராம். ஆக பேர் வைப்பதும் இஸ்லாத்தின் பார்வையில் மிக முக்கியம்.

இந்த வட்டி இல்லா கடன் வங்கி நமதூரில் ஆரம்பிக்கப் பட வேண்டிய அவசியத்தை அப்துர் ரஹ்மான் அவர்கள் மிக தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். EXAMPLE IS BETTER THAN PRECEPT என்று ஆங்கிலத்திலே சொல்வார்கள். நடை முறை சாத்தியம் என்று அதை நடத்திக் காட்டிக் கொண்டிருப்பவர்கள் இதை சொல்கிறார்கள். வெறும் வாய் சொல் வீரர்கள் அல்ல இவர்கள். எனவே, நமக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் நமக்கு விளக்கி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார்கள். முதன் முறையாக கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு சுமப்பது ஒரு சுகமாக இருந்தாலும் அவள் அந்த பத்துமாதங்களில் அனுபவித்து வரும் வேதனையும் பிரசவ வலியும் அவளுக்கு தான் தெரியும். அதை அனுபவித்து உணர்ந்தவள் மற்ற பெண்களுக்கு தைரியம் சொல்வார்கள். இது இயற்கை.

பாடு பட்டு சேர்த்த பணத்தை இப்படி வட்டி இல்லா வங்கி என்ற புதிய அனுபவத்தில் எப்படி முதலீடு செய்வது என்று எல்லோருமே ஒரு கணம் யோசிக்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த ஜனசேவா கூட்டுறவு கடன் சங்கம் நிர்வாகிகள், அப்துர் ரஹ்மான் அவர்கள் சொன்னபடி வீடு வீடாக பெண்களிடம் இதுபற்றி எடுத்து சொல்ல, கேட்க கேட்க - திருப்பி திருப்பி சொல்லி - அவர்களை திருப்திபடுத்தக் கூடிய பொறுமைசாலிகளை நியமித்து இந்த பணியை ஆரம்பித்து செயல்படுத்த முன்வரும்படி பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

காலப் போக்கில் இந்த நாட்டின் புதிதாக அமைந்துள்ள அரசுகூட இதை செய்ய முன்வரலாம். அல்லாஹ் யாரை வைத்து இந்த வேலையை செய்ய நாடியுள்ளானோ யார் அறிவார்கள் இஸ்லாத்துக்கு விரோதியாக இருந்த உமர், அபூ சுப்யான் போன்றவர்கள் நபி தோழர்களாக மாறியது எப்படி. விட்டுக் கொடுக்கும் தன்மையும் தட்டிக் கொடுக்கும் தன்மையும் கொண்ட நபிகள் நாயத்தின் நற்பண்புகள்தான் என்பதை மறுக்க முடியுமா.. இந்த நற்பண்புகள் நபிகள் நாயகத்தை போற்றி புகழ்வதற்கு மட்டுமல்ல, அதை நாமும் வாழ்வில் நடைமுறையில் கொண்டு வந்தால் அவர்கள் பெற்ற வெற்றி நமக்கும் கிடைக்கும் என்ற உண்மையை உணர்ந்து செயல்படுவதற்குத்தான் சொல்லப்படுகிறது..

அப்துர் ரஹ்மான் அவர்கள் இந்த ஆட்சியாளர்களுடன் இணக்கம் காண - சொல்லும் நிபந்தனைகள் நமதூரில் எல்லா ஜமாத்தினரும் பாகுபாடில்லாமல் நாங்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே குடையின்கீழ் இணைந்து நின்று இந்த வட்டி இல்லா கடன் வங்கி செயல்பட ஏற்றம் பெற சொல்லும் நல்ல முன்னுதாரணம் .

காவல் நிலையம் இல்லாத ஊர் - திரை அரங்கு இல்லாத ஊர் - மதுக் கடை இல்லாத ஊர் காயல்பட்டினம் என்ற பெயருடன் வட்டிக் கடை இல்லாத ஊர் காயல்பட்டினம் என்ற பெயரையும் தக்க வைத்துக் கொள்வோமாக.

வட்டிக் கொடுமையால் தினமும் நடக்கின்ற கொலை கொள்ளை தற்கொலை கணவன் மனைவி குடும்ப உறவுகளில் ஏற்படும் நெருக்கடி நிம்மதி இன்மை - இவைகளுக்கு ஒரே தீர்வு வட்டி இல்லா கடன் வங்கிதான் என்ற உண்மையை உணர்ந்து இந்த அரசே அதற்கு அங்கீகாரம் வழங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

மாஷா அல்லாஹ், அப்துர் ரஹ்மான் அவர்கள் சொல்வதுபோல் எத்தனை செல்வந்தர்களை வல்ல ரஹ்மான் இந்த ஊருக்கு தந்திருக்கிறான். அவர்கள் கடைக் கண்பார்வையில் - கட்டை விரல் அசைவில் - ஆள்காட்டி விரல் ஆணையில் இந்த வட்டி இல்லா கடன் வங்கி காயல்பட்டினத்தில் ஒரு பெரும் விருட்சமாக வளர முடியும். ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தி பக்கத்திலுள்ள பட்டி தொட்டிகளுக்கும் இது பரவி வட்டியின் கோரப்பிடியில் இருந்து முஸ்லிம் சமுதாயம் மட்டுமல்ல - சகோதர சமுதாயமும் மீண்டு நல்வாழ்வு வாழ அது பேருதவியாக இருக்கும்.அல்லாஹ் அருள் புரிவானாக.ஆமீன்.

ரமலான் முபாரக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [29 June 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35680

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த வட்டி இல்லா கடன் வழங்கும் அமைப்பில் அனைவரும் உறுபினராக இணைய வேண்டும் .

இந்த அமைப்பு அதற்கான அணைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் பொது மக்களுக்கு அதன் செயல்பாடுகள் அதனால் உண்டாகும் நன்மைகள் , மக்கள் இந்த அமைப்புடன் கலந்து செயல்படுவது அதன் நடைமுறைகளை அணைத்து மக்களுக்கும் நல்ல முறையாக கூற வேண்டும் , மாணவர்களிடமும் இதை எடுத்து கொண்டு சொல்லவேண்டும் இந்த அமைப்பில் உறுபினராக ஆவது அதன் நெறி முறைகள் போன்றவற்றை பாமரருக்கும் புரியும் வண்ணம் எடுத்து கூறனும் .

அப்துல் ரஹ்மான் , ஜவாகிருல்லாஹ் , இன்னும் பல இஸ்லாமிய அரசியல் தலைவர்கள் அரசியல்பாடுகளை விட இது போன்ற நம் மக்களின் பொருளாதார நலன் கொண்ட செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் இந்த முறையை அணைத்து ஜமாத்துகள் மூலமும் மக்களிடம் கொண்டு சேர்க்கணும் அந்தந்த மக்களின் மொழிகளில் இந்த செய்தியை பல வகை தொடர்பு ஊடகங்களின் மூலம் கொண்டு செல்லனும் கண்டிப்பாக உண்மையான இஸ்லாமிய நிதியில் வங்கிகளின் நன்மைகள் இந்திய மக்களுக்கு சரியான முறைகளில் சொல்லபட்டால் ஆதரவுகள் கண்டிப்பாக கிடைக்கும் இன்ஷா அல்லாஹ் அந்த காலம் வருவதற்கு கடுமையான உழைப்புகள் தேவை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வட்டியை வெறுப்பவர்கள் முயற்சி செய்தால் இவ்வங்கி நல்ல நிலைக்கு வரும்...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [29 June 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35690

நாம் நமது மாத வருவாயை பிற வங்கியில் சேமித்து அந்த வங்கி நமது சேமிப்பு பணத்தை வைத்து வட்டிக்கு விட நாம் ஏன் காரணமாக இருக்கவேண்டும்.. (இப்படி ஒரு நல்ல வங்கி நகரில் ஆரம்பத்தில் இல்லாமல் இருந்த காரணத்தினால் நமக்கு வேறு பாதுகாப்புக்கு வழியில்லை ஆகையால் பிற வங்கியில் நமது சேமிப்பை வைத்திருந்தோம் அவ்வங்கி நமது பணத்தை பிறருக்கு வட்டிக்கு கொடுத்து கொளுத்து வந்தது - அது கடந்த காலம்)

தற்போது நமக்கு நம் பணத்தை வட்டியின் பக்கம் தொடர செய்யாமல் இருக்க நாம் இந்த வட்டியில்லா வங்கியில் சேமிப்பு தொடங்கி இவ்வங்கியை வலுபெற செய்வது நமது கடமை.. இதனால் பல வியாபார பெருமக்கள் நமது சேமிப்பு பணத்தால் பயனும் பெறுகிறார்கள்.

குறிப்பாக நாம் ஒன்றிணைந்து (வட்டியை வெறுக்கும்) ஒரே சிந்தனையில் கவனம் செலுத்தினோம் என்றால் இவ்வங்கி இன்ஷா அல்லாஹ் விரைவில் இந்தியாவில் பல கிளைகளுடன் நற்பெயர் பெற்று விளங்கும் அதில் சந்தேகமில்லை.

பிற ஒருவன் / நிறுவனம் வட்டியில் கொழுக்க நாம் ஏன் நமது ஹலாலான பணத்தை பிற வங்கியில் ஏன் சேமிக்கணும்... இனி வேண்டாம்..

நகரில் நாம் அனைவரும் விரைவில் இவ்வங்கியில் சேமிப்பை தொடங்குவோமாக...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved