Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:59:40 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13527
#KOTW13527
Increase Font Size Decrease Font Size
சனி, ஏப்ரல் 19, 2014
நாடாளுமன்றத் தேர்தல் 2014: அதிமுக வேட்பாளர் நட்டர்ஜிக்கு ஆதரவு கோரி நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட அதிமுகவினர் பரப்புரை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2393 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் நட்டர்ஜிக்கு ஆதரவு கோரி, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் உள்ளிட்ட அதிமுகவினர் பரப்புரை செய்துள்ளனர். விபரம் வருமாறு:-

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

இத்தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியியில், வழக்குரைஞர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவு கோரி, அதிமுகவில் அங்கம் வகிக்கும் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், அதிமுக காயல்பட்டினம் நகர துணைச் செயலாளர் கே.ஏ.ஷேக் அப்துல் காதர், கிளை நிர்வாகிகளான காயல் மவ்லானா, ‘மீசை’ முகைதீன், இல்யாஸ், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், செந்தமிழ்ச்செல்வன் மற்றும் அதிமுகவினர் வாகன பரப்புரை செய்து வருகின்றனர்.













படங்களில் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ


அதிமுக தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அம்மா அம்மா அம்மா ... இன்னும் 2 மாதம் தான் அம்மா... நீ நினைத்ததை சாதித்து விட்டாய் நான் மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா..
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [19 April 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34444

இந்த சேர்மன் அம்மாவிற்கு வேறு வழியில்லை சில ஆதிக்க சக்திகளுக்கு நகரில் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்க்காகவும் நகருக்கு குடி திட்டம் நல்ல முறையில் தொய்வில்லாமல் நடக்க வேண்டும் என்பதற்க்காகவும் அ தி மு க கட்சியில் இணைந்தார் - என்ன செய்ய தேர்தல் நேரங்களில் கட்சிக்கு பிரசாரம் செய்து தானே ஆகவேண்டும்.. குயில் வேஷம் போட்டால் கூவி தானே ஆகவேண்டும்.. ஏதோ இந்த அம்மா கூவுது பாவம் அவங்க சூழ்நிலை அப்படி அமைத்து விட்டது காரணம் நகரின் சில கண்னியவான்களே..!

அன்பார்ந்த வாக்காள பெருமக்களே...! நமது தொகுதியில் அணைத்து கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டு இருக்கும் வேட்பாளர்களின் கடந்த கால மக்கள் சேவைகள் என்ன..? அவர்கள் கடந்து வந்த பாதைகள் என்ன..? தொண்டுகள் என்ன என்ன.? அவர்களின் தலைமையின் நிலை என்ன என்பதனை அறிந்து உங்கள் வாக்குகளை அளியுங்கள்..! ஒரு நல்ல நபரை நமது பிரிதிநிதியாக மக்களவைக்கு தேர்ந்தெடுங்கள்..!

மக்களே சிந்திப்பீர்...! நல்ல நபருக்கு வாக்களியுங்கள்...! குற்ற பின்னணி இல்லாத நல்ல நபரை நாம் பரிந்துரைப்போம்..!

நாம் ஒரு மாற்றத்திற்காக 5 ஆண்டுக்கு பிறகு இம்முறை வாக்களிக்க விரும்பி நமது ஓட்டுக்கள் சிதறி விடுமோ என்ற தவறான பிரசாரத்தை நம்பி உங்கள் மனசாட்சிக்கு எதிராக கொள்ளையர்களை பதவியில் ஏற நாம் காரணமாகி விட வேண்டாம்.. நம்மை பாதுகாப்பவன் இறைவன் மட்டும் தான்... எந்த கட்சியோ / எந்த கட்சியின் தலைவனோ அல்ல..

நம்பிக்கையை மனதில் நினையுங்கள்.. எப்போதுமே மக்களுக்காக போராடும் ஒரு போராளிக்கு வைப்பளியுங்கள்.. கடந்த காலங்களில் மாற்றி மாற்றி திராவிட கட்சிகளுக்கு ஓட்டளித்து ஏமாந்தது போதும்..!

நல்லவர்களை நாம் / நமது (ஓட்டு) பரிந்துரைக்காத வரை எந்த மாற்றமும் நாட்டில் நடைபெறுவதில்லை..!

கடந்த (2009) 5 ஆண்டுக்கு முன் நாம் நமது வாக்குகளை அளித்து வெற்றி பெற செய்து மக்களவைக்கு அனுப்பி வைத்த தி மு க கட்சியின் MP நமது நகருக்கு செய்த திட்டங்கள் என்ன அதையும் ஒரு முறை வாக்கு அளிக்கும் முன் நினைத்து பாருங்கள்..! தவறாக நாம் வாக்களித்து இனியும் 5 ஆண்டுகள் பொன்னான காலத்தை வீண் விரயம் செய்ய வேண்டாம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Rilwan (TX) [19 April 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34460

தற்போதைய நகர் மன்ற தலைவருக்காக அன்று குரல் கொடுத்ததற்காக வெக்கப்படுகிறேன் ..

சுய சிந்தனை உடையவர் .. அறிவுப்பூர்வமான முடிவுகள் எடுப்பவர் .. அரசியல் அழுத்தங்களுக்கு விலை போகாதவர் என நம்பினேன் ,,

அவ்வாறாக இல்லை என்பது தெளிவாகி உள்ளது .. அடுத்த நகர் மன்ற தேர்தலில் எங்கள் களம் வேறு மாதிரி இருக்கும் என்பதை நகர் மன்ற தலைவருக்கு தெரிவித்து கொள்கிறேன் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Rilwan (TX) [20 April 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34461

சகோதரர் முத்து இஸ்மாயில் ... மயில் வேஷம் போட்ட ஆடனும் ... யானை வேஷம் போட்டா பிச்சை எடுக்கணும் ..

சில காரியம் ஆக நேர்மையற்ற கட்சிக்கு ஆதரவு கொடுப்பது கொள்கை பிடிப்பின்மையே காட்டுகிறது .,

நகரமன்ற தலைவி மக்களை நம்பட்டும் .. இறைவனை நம்பட்டும் ..ஆனால் தராதரம் அற்ற ஒரு அரசியல் தலைமையை ஆதரிப்பது சகிக்க வில்லை ..

அம்மாவிடம் காரியம் நடக்கவேண்டும் என்றால் காலில் விழ வேண்டும் ..அம்மாவை குடும்ப தெய்வமக விழிப்பட வேண்டும் .., அம்மாவோட ஹெலிகாப்டருக்கு கீழே இருந்தே கும்பிடனும் .... அம்மா கை அசைத்தால் உசேன் போல்ட் மாதிரி ஓடனும் ,,'

இதெல்லாம் நடக்கிற காரியமா ? இதையும் மீறி பல தரன்கேட்டவர்கள் இதயெல்லாம் செய்ய தயாராகத்தான் இருக்கிறார்கள் ... ஆனால் .. வெக்கம் மானம் சூடு சொரணை என்று மனித பண்புகள் இருப்பவர்களுக்கு இது கஷ்டம் ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved