Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:09:06 PM
புதன் | 11 செப்டம்பர் 2024 | துல்ஹஜ் 1868, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5612:2115:2518:2519:35
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:26
மறைவு18:20மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5805:2205:47
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4119:0519:30
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13509
#KOTW13509
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஏப்ரல் 15, 2014
நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆதரவு யாருக்கு? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம் அறிவிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4150 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நடப்பு நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுகவுக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, அடுத்து யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இம்மாதம் 14ஆம் நாள் திங்கட்கிழமை கலந்தாலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 15) செவ்வாய்க்கிழமை அவ்வமைப்பின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அவ்வமைப்பின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி வருமாறு:-

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு யாருக்கு?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர செயற்குழு இன்று திருச்சியில் மாலை 3 மணிக்கு கூடியது. அதிமுகவுக்கான ஆதரவினை வாபஸ் பெற்றதனை தொடர்ந்து அடுத்தது யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதனை முடிவு செய்ய இச்செயற்குழு கூடியது.

செயற்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் சில தொகுதிகளில் காங்கிரஸை ஆதரிப்பது என்றும் மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணியை ஆதரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொகுதிகள் ஆதரவு விபரம்:-

சிதம்பரம்,திருவள்ளூர் தொகுதிகள் – விடுதலை சிறுத்தைகள் கட்சி
தென்காசி தொகுதி – புதிய தமிழகம் கட்சி
மயிலாடுதுறை, தேனி, மற்றும் கன்னியாகுமரி தொகுதிகள் – காங்கிரஸ் கட்சி
மற்ற தொகுதிகளில் திமுகவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு.

விரிவான தகவல்கள் விரைவில் இன்ஷா அல்லாஹ்.


இவ்வாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by MAC.Mujahith (Mumbai) [15 April 2014]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 34376

ததஜ வின் தேர்தல் ஆதரவு தள்ளாட்டம்..."

ஒரு பொதுக்குழு, 3 செயற்குழு 4 நிர்வாகக் குழு அமர்ந்து பல்வேறு நிலைகளுக்குப் பின் தட்டுத் தடுமாறி ஒரு தேர்தல் நிலைப்படை அறிவித்து இருப்பது ததஜ வரலாற்றில் இதுவே முதல் முறை !

இதன் மூலம் அரசியலில் ததஜ ஒரு தெளிவற்ற நிலையை கொண்டிருப்பதையே காணமுடிகிறது! இருப்பினும் இறுதி முடிவைக் கொண்டே எதையும் தீர்மானிக்க முடியும் என்பதால் அதன் இறுதி முடிவு பெருமப்பாலும் சமுதாயத்துக்கு சாதகமாகவே இருப்பதால் அதை வரவேறகிறோம்!

33 தொகுதிகளில் திமுகவுக்கு ஆதரவு எனும் நிலை மதவாத சக்திகளுக்கும் அதன் தோழமைகளுக்கும் விழுந்த சம்மட்டி அடியாகவே இருக்கும்! என்பதால் மனதார வரவேற்கிறோம்! இரண்டாவதாக மதவாத எதிர்ப்பில் நம்முடன் தோளோடு தோள் நிற்கும் திருமாவளவனுக்கும், கடந்த காலங்களில் நம்மோடு நின்ற புதிய தமிழகம் கிரிஷ்ணசாமி அவர்களுக்கு கொடுக்கும் ஆதரவையும் தொலை நோக்கான முடிவாகவே பார்க்கிறோம் ! மனதார வரவேற்கிறோம்!

அடுத்ததாக தர்காவாதியாக இருந்தாலும் கடந்த காலங்களில் இட ஒதுக்கீடு குறித்த பிரதமர் சந்திப்பு உள்ளிட்டவைகளை ஏற்படுத்திக் கொடுத்தவரும், சமுதாயப் பிரமுகருமான ஹாருன் மற்றும் குமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கான ஆதரவு கூட உங்கள் பார்வையில் சரியானதாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளதால் அதையும் கூட வரவேற்கிறோம்!

ஆனால் மயிலாடுதுறையில் மமக வேட்பாளரை விட்டு விட்டு மணிசங்கர் ஐயருக்கு ஆதரவு எனும் நிலைதான் தங்களின் சமுதாய அக்கரையில் சந்தேகம் கொள்ள வைக்கிறது! இதில் மமக ஆதரவு எனும் நிலை எடுத்திருந்தால் எங்கேயோ உயர்ந்திருபீர்கள்!

இது உங்களுக்கு பாதகமான முடிவும் கூட ! எப்படி என்றால் ஒரு வேளை மணிசங்கர் ஐயர் வெற்றி பெற்றால் நீங்கள் சமுதாயத் துரோகி என தூற்றப்படுவீர்கள்!

உங்களின் ஆதரவால் வாக்குகள் பிரிந்து அதிமுக வெற்றி பெற்றால் நீங்கள் எதற்காக கூட்டணியை விட்டு வெளிஏறினீர்ர்களோ அது நடக்கும் ! அப்போதும் துரோகி என்று தூற்றப்படுவீர்கள் !

அல்லாஹ் நாடி மமக ஜெயித்து விட்டால் உங்கள் பிரசாரத்தால் எந்தத் தாக்கமும் இல்லை என்பதை அரசும் , நீங்கள் ஆதரித்த கட்சிகளும் உணர்ந்து கொள்ளும் ! வெறும் கையை விரித்துக் காட்டுவது போன்ற செயல்தான் இது!

மயிலாடுதுறையில் தமுமுகவினரோடு நேரடி போட்டியில் ஈடுபட்டு தோற்றால் என்ன பிரதிபலிப்பை ஏற்படுத்துமோ அதுதான் ஏற்படும்! அது எப்படியும் ததஜவுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும்!

ஆக மொத்தத்தில் மயிலாடுதுறையில் உங்களுக்கு எதிரான முடிவையே எடுத்து உள்ளீர்கள் !

38 தொகுதிகளில் உங்களின் முடிவை வரவேற்கும் என்னைப் போன்றவர்களால் மயிலாடுதுறை முடிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ..... முன் விட்டை பின் விட்டை என்ன?
posted by Abdul Wahid S. (Kayalpatnam) [15 April 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 34378

சாக்கடையிலிருந்து மீண்டு கூவத்தில் விழுந்த கதையாகிவிட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வளர்த்த கடா..... மார்பில் பாயுதடா.....!!!
posted by s.s.md meerasahib (TVM) [16 April 2014]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 34382

அன்பார்ந்த இஸ்லாமியர்களே......... முடிவை வரவேற்கிறேன். முஸ்லிம்களின் ஒற்றுமையின் அடிப்படையில். ம.ம.க விசயத்தில் தவறு செய்து இருகிறேர்கள். இந்த நாட்டம் எல்லாம் பி.ஜே. வின் நாட்டப்படி அல்ல. அல்லாஹ்வின் நாட்டப்படி. இந்த முடிவையும் எதிர்க்கும் கூட்டம் அவர்களிடமே........ அதுவும் நம் ஊரில் உண்டு.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. வருத்தத்துடன், வரவேற்கவேண்டிய முடிவு.
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [16 April 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 34383

தங்களின் கொள்கை முடிவுக்கு (மமகவுக்கு எதிர் முகாமில் இருப்பது) மாற்றமாக, கவுரம் பார்க்காமல் அதே கூட்டணிக்கு ஆதரவாக ததஜ எடுத்த முடிவு, வருத்தத்துடன் கூடிய வரவேற்கத்தக்கது.

அவர்களின் அறிவிப்பில், திமுகவை தவிர வி.சி கட்சி மற்றும் கிருஷ்ணசாமி கட்சியின் பெயரை குறிப்பிட்டவர்கள், திமுக சின்னத்தில் போட்டியிடாமல் தங்களது சொந்த சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் லீக் கட்சியின் பெயரை குறிப்பிடாதது வேண்டுமென்று செய்த செயலாக இருக்காது என்றே நினைக்கிறேன்.

சகோதரர் அப்துல் வாஹித் அவர்களின் ஆதங்கம் புரிகிறது. அதிமுக மற்றும் திமுக, கடந்த காலங்களில் பாஜகவை ஆதரித்த காரணத்தால் அப்படி சொல்லி இருக்கலாம். ஆனால், அந்த இயக்கம் எந்த நடவடிக்கை எடுத்தாலும் குறை கூறுவது சரியாக இல்லை. நீங்கள் ஆதரிக்கும் ஆம் ஆத்மி கட்சி, அதிமுக & பாஜக கூட்டணியை வெற்றி கொள்ளும் நிலையில் இருந்தால், AAP -யை ஆதரிப்பதில் அர்த்தம் இருக்கிறது.

நமது தூத்துக்குடி தொகுதியை பொறுத்த வரை, கடந்த 15 ஆண்டுகளில், நமதூருக்கு எந்த நலத்திட்டங்களும் கொண்டு வரவில்லை, DCW விஷயத்தில் நியாத்துக்கு போராடவில்லை என்ற ஆதங்கத்தில் வேண்டுமானால் திமுகவை எதிர்க்கலாம்.

ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக, பாஜகவை ஆதரிக்காது என்று நம்பலாம். பாஜக கூட்டணி மற்றும், பாஜகவை ஆதரிக்க இருக்கும் அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் திமுக கூட்டணியை ஆதரிப்பது தான். சரியான முடிவை தான் ததஜ எடுத்துள்ளது.

தம்பி முஜாஹித் கருத்து போல், ததஜவினர், மயிலாடுதுறையில் சகோதரர் ஹைதர் அலி அவர்களை ஆதரித்து இருந்தால், ததஜவினரின் இமேஜ் எங்கோ உயர்ந்திருக்கும்.

கன்னியாகுமரியில் காங்கிரசை ஆதரிக்கும் காரணம் தெரியவில்லை. ஒரு வேளை அந்த தொகுதியில் காங்கிரசுக்கு ஓரளவு செல்வாக்கு இருப்பதனால் இருக்கும்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Rilwan (TX) [16 April 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34384

சகோதரர் Abdul ரசாக் அவர்கள் திமுக வை நம்ப முடிவெடுத்திருப்பது ஆச்சிரியப்பட வைக்கிறது ... திமுக வில் அப்படி எந்த சத்தியவான் உங்களுக்கு உறுதி மொழி கொடுத்தார் என தெரியவில்லை .. திமுகவில் சத்தியவான்கள் இன்னும் இருக்கிறார்களா என என்னால் நம்ப முடிய வில்லை ..

திமுக செய்த எந்த அசிங்கம் உங்கள சுடவில்லை என எனக்கு புரிய வில்லை . திருட்டு கும்பல் திமுகவை கையில் வைத்திருக்கும் வரை என் ஆதரவு திமுகவிற்கு கிடையாது ..

ஆம் ஆத்மி தோற்கும் கட்சி என நீங்களே முடிவ செய்து விடாதீர்கள் ... முடிவு செய்ய வேண்டியது தேர்தல் .. வெற்றிபெறும் கட்சிக்குதான் ஒட்டு endraal, நீங்கள் பீஜெபிக்குதான் போட வேண்டும் .

நீங்கள் உங்கள் கொள்கையில் நியாயம் இல்லாதா முடிவுகள் எடுத்தல், பயந்து கொள்கைகள் மாற்றுபவராக இருந்தால் உங்கள் சந்ததியினரும் உங்களைதான் பின்பற்றுவார்கள் . சிறந்த முன் மாதிரியாக முடிவுகள் edungal . உங்கள் முடிவின் மீது உங்களுக்கு மரியாதை இருக்கட்டும் .

திமுக சார்பில் ஒரு கழுதை நிறுத்தப்பட்டாலும் ஒற்றுமை என்ற பெயரில் கழுதைக்கு ஒட்டு போடுவேன் என்பது பொது அறிவுக்கு பொருந்தவில்லை .. சுயமரியாதைக்கு உகந்ததல்ல .

ஒரு சழ்க்கடை கட்சிக்கு ஒட்டு போட்டு உங்கள் ஓட்டை அசிங்கப்படுத்தாதீர்கள் ..அப்படி ஒன்றும் நாம் தரம் தாழ்ந்து பொய் விட வில்லை

வெற்றியையும் தொழ்வியையும் தீர்மானிப்பவன் இறைவன் ... நம் சக்திக்குள் நாம் நல்லவர்கள் பக்கம் நிற்க வேண்டும் ,,.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Shaik Dawood (Sharjah) [16 April 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34386

அது அவங்களுடைய தனி பட்ட பிரச்சனை.(TNTJ & MMK ) அதை பற்றி எல்லாம் கவலை இல்லை. முஸ்லிம்கள் எல்லாம் ஒன்று பட்டு ஒரே அணியில் இணைந்து விட்டோம், இதுவே நமக்கு போதும்... பெரிய வெற்றி ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இணை வைக்காத இஸ்லாமியர்களுக்கு மட்டுமே இதன் தத்துவம் விளங்கும்.
posted by M.S.SAYYID MOHAMMED (BANGKOK) [16 April 2014]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 34387

ம.ம.க.வோ. ஹைதர் அலியோ அப்படியென்ன மன்னிப்பே இல்லாத குற்றத்தைச் செய்து விட்டனர்.

கோவை கலவரத்தின் போது நம் மக்கள் கொல்லப்பட்டதை விடவும், பொருட்கள் சூறையாட காவல்துறை பாதுகாப்பு அளித்ததை விடவும், இன்று வரை விசாரணைக் கைதிகளாக சிறையில் வாட வழிவகுத்ததை விடவும் கொடூரமான செயல்களை செய்துவிட்டனரா?

குஜராத் கலவரத்தின் போது பா.ஜ.க.வுடன் கொஞ்சி குலாவிய தி.மு.க , தான் உள்ளிருந்து அனுபவித்து வரும் பதவி சுகத்தை இழக்க விரும்பாத தி.மு.க , பா.ஜ.க.வின் அந்த பாசிச ஆட்சி முழுமையாக 5 ஆண்டுகள் ஆள உதவிய தி.மு.க, இந்த தேர்தல் முடிந்தவுடன் பா.ஜ.விற்கு ஒரு சில சீட்கள் தான் தேவை என வந்தால், அது தி.மு.க. அ.தி.மு.க. இருவரிடமும் இருந்தால் நான் தருகிறேன் என்று முண்டியடித்தக்கொண்டு ஆதரவு கொடுக்கும் தி.மு.க. என முந்தா நாள் வரை மூச்சிற்கு மூன்னூறு முறை முழங்கிக் கொண்டிருந்தார்களே, அந்த தி.மு.க.வை விடவுமா ம.ம.க.வினர் மோசமானவர்கள்.

ம.ம.க.விடம் ஒரே ஒரு சீட் தான் உள்ளது. அது பா.ஜ.க.விற்கு ஆட்சி அமைக்க தேவைப்படுகிறது, அந்த நேரத்தில் பா.ஜ.க.வும் அவர்களிடம் ஆதரவு கேட்டால் அப்போது ஆட்சி அமைக்க, ம.ம.க ஆதரவு கொடுத்து விடுவார்களோ என்ற அச்சமா?

தி.மு.க.வை மன்னித்து விடலாம் ஆனால் ம.ம.க.வை மன்னிக்கவே முடியாது என்றால் அப்படி என்ன தேவனே வந்தாலும் விடமாட்டேன் என்ற குற்றத்தை செய்து விட்டனர். அண்ணனிடம் மன்னிப்பு கேட்காதவரை அல்லது அண்ணன் மன்னிக்காதவரை யாருக்கும் விமோசனம் இல்லை என்பதே நிதர்சனம்.

ம.ம.கவிற்கு எதிரான நிலைப்பாடு என்ற அண்ணனின் கோட்பாடால் ஒவ்வொரு முறையும் ஆதரவு நிலைமை மாறிப் போகிறது. இந்த தடவை ம,ம,க, தி.மு.க.பக்கம் சென்று விட்டதால் மாற்றமான நிலை எடுக்க அண்ணன் விரும்பினார். ஒப்புக்கு சப்பாணியாய் செயற்குழுவைக் கூட்டி பில்டப் கொடுத்து அ.தி.மு.க. விற்கு ஆதரவாகப் பேசி ஒப்புதல் வாங்கிவிட்டார். ஆனால், இதற்கு மாவட்ட பொதுக் குழுவில் ஆதரவு இல்லை. கொடி பிடிக்க ஆள் இல்லை.அண்ணனுக்கு பிரஷர் கொடுத்தனர். அண்ணன், பா.ஜ.க.வை விமர்சித்து பேச ஜெயலலிதாவிற்கு பிரஷர் கொடுக்க முயன்றார். ஆனால், ஜெயலலிதாவோ, கட்சிக் காரர்களையும் பா.ஜ.க.வை விமர்சிக்கக் கூடாது என்று கட்டளைப் போட்டு விட்டார்.

மீண்டும் அண்ணன் ஜெயலலிதாவிற்கு பிரஷர் கொடுத்தார்.. போயா, உன் ஆதரவும் தேவையில்லை, கத்திரிக்காயும் தேவையில்லை. நிபந்தனை இல்லாத ஆதரவு தருவதாக இருந்தால் தா. இல்லையேல் நடையை கட்டு, உனக்காக என் கோட்பாடை எல்லாம் மாற்ற முடியாது என மறுத்துவிட்டார். வேறு வழியில்லை. ஜெயலலிதா, பா.ஜ.க.வை விமர்சித்து பேச மறுப்பதாலும், தி.மு.க.மற்ற கட்சியினர் பா.ஜ.க.வை கடும்ம்மையாக விமர்சிப்பதாலும் அ.தி.மு.க.விற்கு ஆதரவு வாபஸ் என பயமுறுத்தினர். (அப்போதும் தி.மு.க.விற்கு ஆதரவு என்று சொல்லவில்லை.) அதிலும் ஜெயலலிதா பணியவில்லை.

இப்போது செயற்குழுவைக் கூட்டினார். தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கவே அநேகர் விரும்பினர். அண்ணனுக்கு அது பிரச்னையில்லை. ஏனெனில், ம.ம.க.விற்கு எதிரான நிலைப்பாட்டால் ஏற்பட்டது தான் அ.தி.மு.க. ஆதரவு நிலைப்பாடு தவிர, தி.மு,க, விற்கு எதிர் என்பதால் அல்ல. அப்படியானால் ம.ம.க.வை ஆதரிப்பது இணை வைப்பாகிவிடுமே. அது தான் ‘ம.ம.க.வை ஆதரிக்க மாட்டோம்’ என்ற நிபந்தனையுடன் தி.மு.க.விற்கு ஆதரவு.

இணை வைக்காத இஸ்லாமியர்களுக்கு மட்டுமே இதன் தத்துவம் விளங்கும்.

M.S.செய்யது முஹம்மது
பாங்காக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...நீயும் நானுமா..
posted by mackie noohuthambi (chennai) [16 April 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34388

நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா? அறிவைக் கொடுத்ததோ துரோணரின் கௌரவம் - நல் அறிவை கெடுத்ததோ அர்ஜுனன் கௌரவம் - நடந்தது அந்த நாள் முடிந்ததா பாரதம்? மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே - மூன்றென வைத்ததோ மன்னவன் தலையிலே ..ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே...

கௌரவம் திரைப் படத்தின் பாடல் வரிகள் இவை. பாச மலர் படத்தின் பாடல் வரிகளை சுட்டிக் காட்டி வரதட்சினை ஒழிப்பு பிரச்சாரம் செய்த பீஜே அவர்களுக்கு கௌரவம் பட பாடல்கள் நினைவில் இருக்காமல் போக வாய்ப்பில்லை. இன்று நடக்கும் அரசியல் குருசேத்திரத்தில் வெற்றி வாகை சூட வேண்டியவர்கள் பாண்டவர்கள் அணியா அல்லது எதிரணியா என்று தீர்மானிக்க இன்னும் ஏழு நாட்களே மீதி இருக்கும் இந்த நேரத்தில் இஸ்லாமிய சமுதாயம் ஒன்றுபட்டு நிற்கும் ஒரு அற்புதமான போர்க் களத்தில் "மயிலாடுதுறையில்" ஒரு முஸ்லிம் சகோதரனை - அதுவும் தான் வளர்த்த பிள்ளையை தன் கையாலேயே குழிதோண்டி புதைக்கும் ஒரு பாதக செயலுக்கு பீஜே அவர்கள் பச்சை கொடி முடிவு அதிர்ச்சி அளிக்கிறது.

நீங்கள் எடுத்திருக்கும் 3 தொகுதிகள்பற்றிய முடிவில் முஸ்லிம்களுக்கு உடன்பாடு முரண்பாடு இருந்தாலும் மயிலாடுதுறையில் உங்கள் பிள்ளைக்கு நீங்கள் செய்யும் துரோகம் இது என்பதை மாற்று மதத்தினரும் சொல்வார்கள் மீண்டும் ஒரு தரம் நீங்கள் மக்களிடம் சொல்வதுபோல் இரண்டு ரக அத இஸ்திகாரா தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் கேளுங்கள், நீங்கள் செய்த இந்த முடிவில் நன்மை இருக்கிறதா என்று. மீளாய்வு செய்யுங்கள்.

ஆன்மீகத்தில் நீங்கள் கொண்டு வந்த சீர்திருத்தங்களில் என்போன்றவர்களுக்கு உடன்பாடில்லை. இப்போது அரசியல் சக்தியாக நீங்கள் மாறியுள்ளதில் ஆட்சேபணையும் இல்லை. நீங்கள் சொன்னால் அது சரியா தவறா என்று எண்ணிக் கூடப் பார்க்காமல் உடனடியாக உங்கள் ஆணையை செயல்படுத்த துடிக்கும் இளைஞர்கள் தொண்டர்கள் உங்களுக்கு இருக்கிறார்கள் என்ற உண்மையை மறுக்க மறைக்க முடியாது. ஆனால் அழியாத பழியாக இந்த சமுதாயத்தில் ஒரு கறைபடிந்த வரலாற்று பிழையாக அது ஆகி விடக் கூடாதே என்று அஞ்சுகிறேன்.

பெருமையும் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. அதை நாம் கை வசப்படுத்த நினைப்பது அல்லாஹ்வுக்கு உடன்பாடானதல்ல. விட்டுக் கொடுப்பதும் தட்டிக் கொடுப்பதும் தூய நபி வழி.இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்கள் முன் எடுத்து வைக்க புறப்பட்ட நீங்கள் அதில் வெற்றி கண்டீர்கள் என்று என்னால் முழுமையாக சொல்ல முடியவில்லை. இந்த அரசியல் குருசேத்திர போரிலாவது முஸ்லிம்கள் வெற்றி பெற உங்கள் பங்களிப்பை தாருங்கள்.

மத்தியில் நல்லாட்சி அமைவதற்கு நபிகள் நாயகம் கற்று தந்த துஆ :

ALLAAHUMMA LAA THUSALLITH ALAINAA MANN LAA YARHAMNAA VALAA YAKHAAFUKA FEENA..

உங்களுக்கு தெரியாத நபி மொழியா - நீங்கள் அறியாத நபி வழியா -- பின் ஏன் இந்த தயக்கம் மயக்கம். அல்லாஹ் தவ்பீக் செவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. முஸ்லிம்களின் வாக்குகள் 100% ஐயும் ஒருமுகப்படுத்துக
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [16 April 2014]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 34389

எது எப்படியோ . முஸ்லிம் அரசியல் கட்சிகள் அனைத்தும் இன்று ஓரணியில். நம் சமுதாயத்திற்கு இது நன்மை பயக்கும். அல்லா திமுக அணிக்கு நாற்பது தொகுதிகளிலும் வெற்றியை கொடுப்பானாக ஆமீன்.

ஆம் ஆத்மி நண்பர்களுக்கு,

"உங்கள் வாதங்கள் நியாயமானவைதான்.எனினும் ஆம் ஆத்மி கட்சி இரண்டாம் நிலையில் இருந்தால், உங்கள் கூற்றுப்படி நாம் அவர்களுக்கு வாக்களிக்கலாம். அது ஐந்தாம் இடத்தில் உள்ளது.எனவே அவர்களுக்கு அளிக்கும் வாக்குகள் , மறைமுகமாக மதவாத சக்தியின் வெற்றிக்கு துணைபுரியும்".

எனவே மதவாத சக்தியை தோற்கடிக்க ஒரே வழி , பலம்வாய்ந்த திமுக கூட்டணியை ஆதரிப்பதுதான் .

முஸ்லிம்களின் வாக்குகள் 100% ஐயும் ஒருமுகப்படுத்த நீங்களும் துணை நிற்க வேண்டும்.வடஇந்திய தொலைகாட்சியின் தற்போதைய கருத்து கணிப்பின்படி திமுக கூட்டணி தமிழ்நாட்டில் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

எனவே முஸ்லிம்களின் வாக்குகளை நாம் வீனடித்துவிடவேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. எந்த கட்சியும் பரிசுத்தவான்கள் நிறைந்த கட்சி இல்லை.
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [16 April 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 34391

தம்பி ரிழ்வான், நாட்டில் திமுக உட்பட எல்லா கட்சிகளும் கொள்ளைக்கார கும்பல் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு சில கம்யூனிஸ்ட்களை தவிர, கொள்ளை அடிப்பதில் எல்லோரும் கூட்டு கொள்ளைக்காரர்கள். ஆம் ஆத்மி கட்சி, முழுமையாக சோதித்து பார்க்கப்படவில்லை என்பதே உண்மை.

உங்களின் ஆதங்கம் தான் என் ஆதங்கமும். பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் அபாயம் பரவலாக உள்ளது. திமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்காது என்ற உத்தரவாதம் தரமுடியுமா? என்ற கேள்விக்கு, தொலைக்காட்சிகளில் செய்தி முழுமையாக பார்க்கவில்லையோ, அல்லது திமுகவினரின் குறிப்பாக ஸ்டாலின் உடைய பரப்புரைகளை ஒளிப்பரப்பும் தொலைக்காட்சி சேனல்கள், நீங்கு இருக்கும் இடத்தில் தெரிவதில்லை என்று நினைக்கிறேன்.

நான் திமுகவுக்கு, பாஜகவுடனான உறவில், அந்தக் கட்சி பத்தரை மாற்று தங்கம் என்று சான்றிதழ் கொடுக்க மாட்டேன். ஆனால், இந்த தேர்தலில் அந்த தவறை திமுக செய்யாது என்று முழுமையாக நம்புகிறேன். மறைவானவற்றை அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

ஆம் ஆத்மி தோற்கும் கட்சி என நீங்களே முடிவ செய்து விடாதீர்கள் (C & P) நான் முடிவு செய்யவில்லை. நிதர்சனத்தை சொல்கிறேன். எனது அனுமானத்தில், தமிழகத்தில் அந்த கட்சிக்கு டெபாசிட் தொகை கிடைக்கும் 2 தொகுதிகள், தூத்துக்குடி & கன்னியாகுமரி. மற்ற மக்கள் ஓட்டு போடுகிறார்களோ இல்லையோ, இந்த இரு வேட்பாளர்களுக்காக மீனவ சமுதாயம் மற்றும் கிருஸ்துவ சமுதாயம் வாக்களிக்கும். மற்ற தொகுதிகளில் அந்த கட்சி டெபாசிட் கூட வாங்காது.

எனது நிலைப்பாட்டை, பல முறை இந்த இணையதளத்தில் தெரிவித்துள்ளேன். நமதூரை பொருத்தவரை, திமுக எந்த நலத்திட்டங்களும் கொண்டுவரவில்லை. இந்த தொகுதியில் வேண்டுமானால், திமுகவை எதிர்க்கலாம். ஆனால், இப்போது நடைபெறுவது நமதூரை உள்ளடக்கிய தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் இல்லை. இந்தியாவுக்கான தேர்தல். இந்த தலைப்பும், ததஜவின் ஆதரவு பற்றியது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

இப்போதைய சூழலில் பாஜக & பாஜகவை ஆதரிக்க இருக்கும் அதிமுகவை வீழ்த்தக்கூடிய, ஓரளவு நம்பகத்தன்மை உள்ள கட்சி, திமுக என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகள் வரும் காலங்களில் தெளிவாக தெரிந்துவிடும். அப்போது, அது நமக்கு நன்மை பெற்று தரும் கட்சி என்றால், அடுத்த தேர்தல்களில் திமுக உட்பட அனைத்து கட்சிகளையும் ஓரங்கட்டிவிட்டு, ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்கலாம்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [16 April 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34392

என்ன கருத்து எழுதுவது என்றே புரியவில்லை.

அண்ணனின் ADMK ஆதரவு என்றவுடனே,குழந்தைக்கு பேதிக்கு கசப்பு மருந்து கொடுக்கின்றாரே என்று இருந்தது.

பின்பு ADMK விற்கு ஆதரவு வாபஸ் என்றதும், கசப்பு மருந்து கொடுத்த வாய்க்கு தேன் தடவுகிறாரே என்று ஆறுதல் உண்டானது.

இப்பொழுது, மயிலாடுதுறையில் நம் சகோதரருக்கு எதிராக வேளை பார்க்கிறார் என்ற நிலையை அறிந்ததும் கொடுத்தது மருந்து அல்ல, அனைத்தும் மெதுவாக கொல்லும் விஷம் என்பது தெரிகின்றது.

ஆக மொத்தம், என்னைப்போன்ற TNTJ /அண்ணன் அனுதாபிகளை, இயக்கம் இழந்து வருகிறது என்பதே உண்மை.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. திட்டமிட்டு செய்ததுதான்
posted by M.S.SAYYID MOHAMMED (BANGKOK) [16 April 2014]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 34393

தம்பி அப்துர் ரசாக்கின் ஒரு கருத்தில் முரண்படுகிறேன்.

“அவர்களின் அறிவிப்பில், திமுகவை தவிர வி.சி கட்சி மற்றும் கிருஷ்ணசாமி கட்சியின் பெயரை குறிப்பிட்டவர்கள், திமுக சின்னத்தில் போட்டியிடாமல் தங்களது சொந்த சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் லீக் கட்சியின் பெயரை குறிப்பிடாதது வேண்டுமென்று செய்த செயலாக இருக்காது என்றே நினைக்கிறேன்”. (C&p)

எவ்வளவு அறிவாளிகள் கூடி 3 நாட்கள் யோசித்து எழுதப்பட்ட தீர்மானம் தெரியுமா?

முஸ்லிம் லீக் சார்பிலும், த.மு.மு.க. சார்பிலும் சமுதாயத் தலைவர்கள் எத்தனை பேர் போய் தங்கள் கௌரவம் பாராமல் த.த.ஜ.விடம் பேசினார்கள். முஸ்லிம் லீகிற்கு ஆதரவு நிலை எடுப்பதை வெளிப்படையாக அறிவித்தால் ம.ம.க. விற்கு ஏன் ஆதரவு கொடுக்கவில்லை என்ற கேள்வி வரும். இனி அதற்கு அதில் சொல்லணும். முஸ்லிம் லீக் பொது எதிரி தான். அதைக் கண்டுக்கொள்ளாமல் போய்விடுவோம். லீகிற்கு போடுகிறவன் போடட்டும், விரும்பாதவனை நாம் தொல்லை செய்யவேண்டாம் என்ற கருத்தில் ஜாக்கிரதையாக கையாளப்பட்ட யுக்தி தான் இது.

திருமாவளவனும், கிருஷ்ண சாமியும் அனுப்பிய தூதுக்கள் அ.தி.மு.க. விற்கான ஆதரவு விளக்கிக் கொண்டதற்கு பின் இருக்கலாம். ஆனால் முஸ்லிம் லீகின் சார்பாக ஆரம்ப முதலே கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பிறகு எப்படி மறக்கும். லீக் தனிச் சின்னத்தில் நிற்பது தெரியாதா? அப்துர் ரகுமான் இடஒதுக்கீடு கேட்டு பேசாமல் இருக்கிறாரா?

அப்துர் ரஹ்மானைவிட ஹாரூன் எந்த விதத்தில் மார்கத்தில், சமூக, சமுதாய விசயங்களில் மேலானவர். ஹாரூன் என்றாவது பாராளுமன்றத்தில் இடஒதுக்கீடு கேட்டு பேசியுள்ளாரா? ஹாரூனை ஆதரிப்பதை நியாப்படுத்த கன்னியாகுமரி வேட்பாளருக்கு ஆதரவு. இவர்கள் என்ன முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வாங்கித் தருவதாக வாக்களித்தார்களா?

அண்ணனை மன்மோகன் சிங்கிடம் அழைத்துச் சென்றதுதான் ஹாரூன் செய்த மகத்தான பணி என்று நினைக்கிறேன்.

எனவே முஸ்லிம் லீக் கட்சியின் பெயரை குறிப்பிடாதது வேண்டுமென்றே திட்டமிட்டு புறக்கணித்த செயல் என்று நம்போமாக.

M.S.செய்யது முஹம்மது
பாங்காக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [16 April 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34394

அஸ்ஸலாமு அலைக்கும்,

முன்பு கூறியது போல அவங்க சகாக்கள் கூட அவரின் முந்திய முடிவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.

மேலும் இந்த அரசியல் சூழ்நிலையை பொருத்தவரை தமிழகத்தில் தி . மு . க . கூட்டணீதான் நமக்கு சாதகமான கூட்டணி என்பதை பாமரனும் அறிவான்.

அதை தவிர்த்து அம்மாவுக்கு அல்லது மற்ற எந்த கட்சிகளுக்கும் போடும் நம் ஓட்டுகள் கண்டிப்பாக வீண்தான் என்பதை அனைவரும் நன்கு அறிவோம் .

நல்ல வேலை தேர்தளுக்கு 8 நாட்களுக்கு முன்பு தங்களுடைய அமைப்பின் நிலைபாடுகளை கூறி சமுதாய ஓட்டு மிகச் சிறிய அளவு சிதர இருந்ததை கூட நிறுதியமைக்கு நன்றி கூறதான் வேண்டும் .

அதையும் தாண்டி மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு கிடையாது என்பது சிறுபிள்ளை தனமான ஒன்று என்றாலும் சமுதாயத்துடன் அவர்கள் ஒன்று நிற்பதை நாம் இந்த சூழலில் நினைத்து பார்க்க வேண்டிய ஒன்று .

குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை மற்ற முஸ்லிம் அமைப்புகள் , கட்சிகள் போன்றவற்றை காட்டிளும் இந்த அமைப்பின் அமைப்புரிதியான செயல்பாடுகளும் , மக்கள் தொடர்பும் மிக வலுவானது என்பதை நாம் கண்டிப்பாக ஒத்துக் கொள்ளதான் வேண்டும் . இது கண்டிப்பாக பொது எதிரியை வீழ்த்த உதவும் .

தமிழக அரசியல் நிலைமை அம்மா வுக்கு பாதகமாக மாறியதை போல் இந்திய அளவில் இன்ஷா அல்லாஹ் மோடி அலை என்பது நுரையாக மாறிவிடும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. மு.க வின் பக்கா நிலைப்பாடு.
posted by s.s.md meerasahib (TVM) [16 April 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 34395

சில ஞான சூநியம்கள் ஒண்ணுமே....... நாட்டு நடப்பை கவனிக்காமல் முந்திக்கொண்டு கமாண்டுக்கு முன்னிலை வகிக்கின்றன. முந்திரிக்கொட்டைகள். பார்க்க இந்த லிங்கை. இதிலும் நம்பிக்கை இல்லை என்றால் கருணாநிதியின் நெஞ்சை பிளந்துதான் பரிசோதிக்கணும். நம்பிக்கை என்பதுதான் ஒரு இறை விசுவாசியின் கொள்கை. இதுக்கு மாறாக எண்ணம்கள் தோன்றினால் "ஒஸ்வாஸ்" என்னும் சைத்தானின் எண்ணம் என்றுதான் அர்த்தம்.

http://www.maalaimalar.com/2014/04/16122758/karunanidhi-announcement-bjp-p.html


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [16 April 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34402

இவரது முடிவு ஒருகொள்கை அற்றவர் என்பதனை தெளிவு படுத்தயுள்ளது. விஸ்வரூபம் சினிமா விசயத்தில் முதல்வர் தன் சொந்த எதிரி நடிகர் கமலஹாசனை பழிவாங்க இவர் இயக்கத்தை பகடைக்காயாக்கிது, இவரை தற்பெருமையின் உச்சாணிக்கே கொண்டு சென்றுள்ளது என்பதனை ஜெயா வின் எல்லா குணமும் அறிந்து அவரோடு கைகோர்தது மூலம் அறிய முடிந்தது.

தற்போது இவரால் ஆளாக்க பட்ட ஒரு முஸ்லிமை தற்போது வேண்டாதவர் என தனிபட்ட வெறுப்பை காட்டுவது மூலம் இவர் ஒரு சுய நலவாதி சமுதாய அக்கறை கொண்டவர் அல்ல என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. p .j .அவர்களுக்கு மனம் திறந்த மடல்:..
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [16 April 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34406

p .j .அவர்களுக்கு மனம் திறந்த மடல்:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் சகோதரர் P.ஜைனுலாப்தீன் அவர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்! நீங்கள் நலமுடனும் நீடித்த ஆயுளுடனும் வாழ்ந்துயர வல்ல அல்லாஹ்வை வேண்டியவனாக,

என்னுடைய இந்த சிறிய மடலை எழுதுகிறேன்.இமியளவு நேரங்க்கூட ஓய்வில்லாமல் தேர்தல் பணியில் பம்பரம் போல் சுழன்றுகொண்டிருக்கும் தங்களுக்கு சாதாரண சாமானிய ஆதம் சுல்தானின் இந்த அன்பு வேண்டுகோள் மடலுக்கு ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்குமாறு வேண்டுகிறேன்!

இந்த தேர்தலில் உங்கள் இயக்கமான TNTJ ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரிப்பதென்ற முடிவுக்கு மிக்க மகிழ்ச்சியையும், முஸ்லிம் மானிடன் என்ற அடிப்படையில் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்!

தங்கள் அமைப்பின் நிலைப்பாட்டில் மூன்று தொகுதிகளில் காங்கரசை ஆதரிப்பதென்று முடிவு எடுத்திருக்கிறீர்கள் , காங்கரசை ஆதரிப்பததென்பது உங்கள் உரிமை ஆனால் அதே நேரத்தில் மயிலாடுதுறையில் நம் சமுதாய சகோதரரை எதிர்த்து களம் இறங்குவோம் என்ற நிலைப்பாடுதான் எந்த ஒரு உண்மையான,மார்க்க உணர்வோடு ஒன்றன கலந்த முஸ்லிமும் ஏற்க முடியாத ஒன்றாகும்.எந்த சூழ்நிலையிலும் சமுதாய ஒற்றுமையை விரும்பும் என்போன்றவர்களின் மனதில் ஏதோ ஒரு கவலைக்கோடு கிழித்து போன்ற உணர்வே மேலோங்குகிறது!

தா மு மு கவிற்கும் உங்கள் இயக்கத்திற்கும் உள்ள கருத்து வேற்பாட்டை ஆராய நான் முன் வரவில்லை.அதே நேரத்தில் நாம் மிகவும் சிரமப்பட்டு நான்கு முஸ்லிம் வேட்பாளர்களடங்கிய தொகுதிகளைப்பெற்று அதுவும் வெற்றிவிளிம்பிக்கு சென்றுகொண்டிருக்கிறது என்ற சந்தோஷ செய்திகள் இறைவன் உதவியால் இன்றுவரை வந்துகொண்டிருகின்ற இந்த வேளையில்,அந்த நான்கு வைரங்களில் ஒரு வைரத்தை தாங்கள் பட்டைதீட்ட மறுப்பதோடு ,அது வைரமல்ல வெறும் கண்ணாடிக்கல் தான் என்று நம் எதிரியும் எள்ளி நகையாடும் வாய்ப்புக்கு உங்களின் முடிவு வழிகோளாக அமைந்துவிடுமோ என்பதை என்னும்பொழுது உள்ளபடியே உள்ளம்வேதனை அடைகிறது!

அன்பின் P .J.அவர்களே தற்போது நம்முன் இருக்கும் பொதுஎதிரியை வீழ்த்த எந்தெந்த வியூகத்தை வகுக்க வேண்டுமென்பதை தாங்கள் அறியாதவர் அல்ல.இந்த நேரத்தில் நமக்குள் இருக்கும் கருத்து மாச்சிரியத்தையும், கருத்து வேறுபாடுகளையும் களைந்தெறிய வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் அல்லவா இருக்கிறோம்!

முஸ்லிம்களுக்கு இடஒதிக்கீடு வேண்டுமென்று மிகப்பெரிய சிறை நிரப்பும் போராட்டதை TNTJ அறிவித்தது அப்போரட்டத்திற்கு நம் இன மக்களுக்கு நன்மை கிடைக்கவேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு எந்தவித பகைமை உணர்வையும் பாரட்டாது எல்லா முஸ்லிம் அமைப்பும் குறிப்பாக தாமு மு க முதல் அனைத்து சுன்னத்துல் ஜமாத் அமைப்பு சகோதரர்களும் குடும்பத்தோடு வந்து உங்களோடு ஒன்றன கலந்து துணை நின்று ஒத்துழைத்த அந்த நிகழ்ச்சியை மனசாட்சியுடன் சற்று உங்கள் மனக்கண் முன்னே நிறுத்திப்பாருங்கள்!

ஆகவே அன்பு சகோதரர் P J அவர்களே நன்மையையும், பெருந்தன்மையையும் முன்னிறுத்தி நம் சமுதாய மக்களுக்காக உங்களின் முடிவை மறுபரிசீலனை செய்து, நம் நான்கு இஸ்லாமிய வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைக்க முன்வருமாறு அன்புடன் வேண்டுகிறேன்!

நன்மையையும்,உண்மையும் உள்ள கருத்தை மறுபரிசீலனை செய்ய என்றும் தயங்காதவர்தான் நீங்கள் என்ற புண்ணியப்பெயரை பெற்றவர் என்பதாலும், உங்களுக்கு நான் புதியவன் அல்ல, தவ்ஹீத் இயக்கம் தளிர்விட்ட காலத்திலிருந்தே காயலில் உங்களோடு சேர்ந்து பணியாற்றி பல இன்னல்களையும் சொல்லடியும், கல்லடியும் பெற்றவர்களில் இந்த முஹம்மது ஆதம் சுல்தானும் ஒருவன் தான் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்னாலுள்ள நினைவுகளை அசைபடுத்தினாலே புரிந்துகொள்வீர்கள் என்ற அந்தகால நிகழ்வு சாட்சியத்தினாலும், அந்த நெருக்கதின் உரிமையினாலும் என் இந்த வேண்டுகோளை வைத்திருக்கிறேன்! நல்ல மறுபரிசீலனை முடிவிற்காக காத்திருக்கிறோம்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,

இவண்,
அன்பு சகோதரன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!
மின்னஞ்சல்: aljomaih _sultan @yahoo .com
கைபேசி:00966505361849.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [16 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34409

அறிவிப்பாளர் பலகீம் கண்டு இருக்கிறார். இவரின் அறிவிப்பு இனி தமிழ்நாடு அரசியலில் எடுபாடாது. தேர்தலுக்கு பின் 2011 சட்டமன்ற தேர்தலில் வடிவேலுக்கு என்ன கதியோ அதுதான் இவருக்கு, பொறுத்து இருந்து பார்க்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved