| 
  
  
  காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - மூன்று வாரப்பயணமாக மார்ச் 15 அன்று,  அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில், அமெரிக்கா சென்றடைந்தார். நகர்மன்றத் தலைவர் - அமெரிக்காவின்  பல்வேறு நகரங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில் 
கலந்துக்கொள்கிறார்.
  
INTERNATIONAL VISITOR LEADERSHIP PROGRAM என்ற திட்டத்தின் கீழ், DIVERSITY IN THE 
US FOR MINORITY YOUTH LEADERS என்ற தலைப்பிலான இந்த பயணத்தில் அவருடன், தமிழகத்தை சேர்ந்த மேலும் நான்கு சிறுபான்மை சமுதாய 
சமூக ஆர்வலர்கள் - ஜென்னத்துல் குபுரா (Women's Integrated National Development - WIND அறக்கட்டளை), ஜைபுநிஷா (நிர்வாக 
அறங்காவலர் மற்றும் தலைவர், மனிதம் அறக்கட்டளை), ஆளூர் முஹம்மது ஷாநவாஸ் (இஸ்லாமியர் உரிமைகள் ஆர்வலர் / குறும்பட 
தயாரிப்பாளர்), ஷாபி முஹம்மது (உறுப்பினர் மற்றும் ஆலோசகர், ஜென்னதுல் பிர்தௌஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா) - ஆகியோர் 
சென்றுள்ளனர். 
  
இந்த குழுவினரின் அமெரிக்க நிகழ்ச்சிகள் - மார்ச் 17, திங்களன்று, அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில், அதிகாரப்பூர்வமாக துவங்கின. வாஷிங்டன் டி.சி. நகரில் இருந்து - குழுவினர், பால்டிமோர் நகருக்கு மார்ச் 20 அன்று சென்றனர். பால்டிமோர் நகரில் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, குழுவினர், மிசிகன் மாநிலத்தின் 
டெட்ராய்ட்  நகரினை மார்ச் 22 சனிக்கிழமையன்று மாலை சென்றடைந்தனர்.
  
டெட்ராய்ட் நகரில் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, குழுவினர், வாஷிங்டன் மாநிலத்தின் சியாட்டல்  நகரினை மார்ச் 26 புதன்கிழமையன்று  
மாலை சென்றடைந்தனர்.
  
சியாட்டல் நகரில் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, குழுவினர், அலபாமா மாநிலத்தின் தலைநகர் 
மோன்ட்கோமேரி நகரினை மார்ச் 30 ஞாயிறன்று சென்றடைந்தனர். 
  
மோன்ட்கோமேரி / செல்மா நகரங்களில் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஏப்ரல் 2 அன்று   
குழுவினர், அமெரிக்காவின் வர்த்தக தலைநகரான நியூயார்க் சென்றடைந்தனர். 
  
குழுவினருக்கு - நியூயார்க் நகரில் ஏப்ரல் 3, ஏப்ரல் 4 ஆகிய தேதிகளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  
ஏப்ரல் 3 புதனன்று குழுவினரின் முதல் நிகழ்ச்சி - Groundswell Community Mural 
Project என்ற அமைப்பின் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடந்தது. இந்த அமைப்பின் துவக்கத்திற்கு காரணகர்த்தாவும், செயல் 
இயக்குனருமான ஏமி சனந்மன் (Amy Sananman, Executive Director) - இந்த திட்டம் குறித்து குழுவினருக்கு விளக்கினார்.
  
 
  
  MURAL என்பது சுவரு, கூரை போன்ற இடங்களில் வரையப்படும் கலையை 
குறிப்பதாகும். இந்த கலை மூலம் - அமெரிக்காவின் பல நகரங்களில், பின் தங்கிய பகுதிகளில் - அந்த பகுதி இளைஞர்களின் துணைக்கொண்டும், 
அந்த பகுதி பிரச்சனைகளை கருத்தில் எடுத்துக்கொண்டும், MURAL படங்களை உருவாக்கி - சமூக மாற்றங்களை கொண்டு வர இந்த அமைப்பு - 
1996ம் ஆண்டு முதல் - முயற்சிக்கிறது.
  
இந்த அலுவலக சந்திப்பினை தொடர்ந்து, இந்த MURAL படங்கள் பதியப்பட்டுள்ள இடங்களையும் பார்வையிட குழுவினர் சென்றனர்.  
  
 
  
 
  
 
  
மதியம் 1 மணியுடன் இந்த நிகழ்ச்சி நிறைவுற்றது. 
  
  குழுவினரின் அடுத்த நிகழ்ச்சி - மாலை 3:30 மணிக்கு Nunsatara 
Foundation என்ற அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் Episcopal Diocese 
of New York என்ற அமைப்பின் Episcopal Muslim Relations Committee உறுப்பினர்கள் கலந்துக்கொண்டார்கள். Episcopal Diocese of 
New York அமைப்பு - நியூயார்க் நகரில் உள்ள - பல மொழிகள் பயன்படுத்தப்படும் சுமார் 200 கிருஸ்துவ தேவாலையங்களின் கூட்டமைப்பாகும். 
இந்த கூட்டமைப்பு - இந்த பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்கிறது.
  
 
  
 
  
 
  
குழுவினருடனான சந்திப்பில் இமாம் சம்சி அலி (Shamsi Ali, Nunsatara Foundation), ஸ்டீபன் ஹோல்டன் (Stephen Holton, Anglican 
Muslim Dialogue Committee) ஆகியோர் கலந்துக்கொண்டனர். இராக் நாட்டை சார்ந்த சஹர் அல் ஃபஹ்லாணி, புதிதாக இஸ்லாத்தை தழுவிய 
சிந்தியா, அப்துல்லாஹ் ஆகியோர் உடனிருந்தனர். 
  
 
  
Episcopal Muslim Relations Committee யின் செயல்பாடுகள் விரிவாக குழுவினரிடம் எடுத்துரைக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்னர் 
ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்க தாக்குதலில் சேதமடைந்த ஒரு பள்ளிவாசலை புதுப்பிக்க - பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் - இந்த அமைப்பு நிதி 
திரட்டி வழங்கியது. கடந்த ஆண்டு - அந்த பள்ளிவாசல் ஆப்கானிஸ்தான் நாட்டில் புதுப்பிக்கப்பட்டது. 
  
  நிகழ்ச்சி நிறைவுற்றவுடன் - இந்தோனேசியா நாட்டினை பூர்விகமாக 
கொண்ட இமாம் சம்சி அலி - தான் எழுதிய Sons of Abraham: A Candid Conversation about the Issues That Divide and Unite Jews and 
Muslims என்ற புத்தகம் ஒன்றினை காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருக்கு  பரிசாக வழங்கினார். 
  அந்த புத்தகத்தை அவரும், யூத மத குருவான 
ராபை மார்க் ச்நேயர் (Rabbi Marc Schneier) என்பவரும் இணைந்து எழுதியுள்ளார்கள். புத்தகத்திற்கான முன்னுரையை அமெரிக்காவின் முன்னாள் 
ஜனாதிபதி பில் கிளிண்டன் எழுதியுள்ளார்.
  
 
  
தகவல்: 
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம் 
https://www.facebook.com/aabidha.shaik
  
இத்தொடரின் முந்தைய செய்தியை காண இங்கு அழுத்தவும்
  |