| 
 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. 
  
 
  
 இத்தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமூகப் போராளியுமான ம.புஷ்பராயன் போட்டியிடுகிறார்.
  
அவருக்கு ஆதரவு திரட்டுமுகமாக, காயல்பட்டினத்தை உள்ளடக்கிய – திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குள், நாளை (மார்ச் 27) முழுக்க ஆம் ஆத்மி கட்சியின் தூத்துக்குடி தொகுதி தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் பர்னாந்து தலைமையில், பின்வருமாறு பரப்புரை நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது:- 
  
08.00 முதல் 10 மணி வரை - பெரியதாழை 
10.00 முதல் 12.00 மணி வரை - மணப்பாடு 
13.00 முதல் 15.00 மணி வரை - ஆலந்தலை 
15.00 முதல் 16.00 மணி வரை - அமலி நகர் 
17.00 முதல் 18.00 மணி வரை - ஜீவா நகர்
  
18.00 முதல் 19.00 மணி வரை - திருச்செந்தூர் 
19.00 முதல் 20.00 மணி வரை - காயல்பட்டினம் 
20.00 முதல் 21.00 மணி வரை - புன்னைக்காயல்
  
தகவல்:  
ஆம் ஆத்மி கட்சியின் சார்பில்...  
M.N.அஹ்மத் ஸாஹிப்
  
ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!  |