Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:33:38 PM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13314
#KOTW13314
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மார்ச் 21, 2014
மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2903 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விபரம் வருமாறு:-

மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் - ஹிஜ்ரீ 1435ஆம் ஆண்டு வைபவங்களுக்கு புதிய நிர்வாகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 19, 20 நாட்களில் (புதன், வியாழன்), இரண்டு அமர்வுகளாக 20.30 மணிக்கு மஜ்லிஸ் ஹல்காவில், அதன் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் தலைமையில் நடைபெற்றது.

மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.செய்யித் ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ, ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.மஹ்மூத் ஹஸன் ஆகியோர் இரு நாட்களின் ஈரமர்வுகளையும் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தனர். கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை, எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் வாசித்தார்.

அதனைத் தொடர்ந்து, மஜ்லிஸ் அங்கத்தினரும், அபிமானிகளுமான
குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாமும், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் துணைத்தலைவருமான ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர்
எஸ்.எல்.அஹ்மத் ஆலிம்
எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல்
ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவர்களின் மஃபிரத் - பிழைபொறுப்பிற்காக துஆ இறைஞ்சப்பட்டது. மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆ இறைஞ்சினார்.

அதனைத் தொடர்ந்து, கடந்தாண்டின் வரவு - செலவு கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட, கூட்டம் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.

நடப்பு 87ஆம் ஆண்டு மஜ்லிஸ் வைபவ
துவக்க நாள் 01.05.2014 வியாழக்கிழமை என்றும்,
மே 30ஆம் நாளன்று வெள்ளிக்கிழமை - ஜும்ஆ நாளாக இருப்பதால், நிகழ்ச்சிகளை ஒரு நாள் நீட்டித்து, துஆ நாள் (நிறைவு நாள்) 31.05.2014 சனிக்கிழமை என்றும்,
நேர்ச்சை நாள் 01.06.2014 ஞாயிற்றுக்கிழமை என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மஜ்லிஸ் புதிய நிர்வாகிகள் பின்வருமாறு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-

தலைவர்:
நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம்

துணைத் தலைவர்:
டி.எம்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் பேஷ் இமாம்

மேலாளர்கள் (மேனேஜர்):
எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப்
ஹாஜி என்.எஸ்.நூஹ் ஹமீத் (கம்பல்பக்ஷ்)

இணைச் செயலாளர்கள்:
(1) ஹாஜி எஸ்.எம்.கபீர்
(2) ஹாஜி எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப்
(3) எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம்
(4) ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல்

துணைச் செயலாளர்:
ஹாஜி கே.எம்.சாமு ஷிஹாபுத்தீன்

வைபவ கமிட்டி தலைவர்கள்:
(1) ஹாஜி எஸ்.எம்.எஸ்.முஹம்மத் நூஹ்
(2) ஹாஜி எம்.ஐ.மூஸா நெய்னா
(3) எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன்

இவ்வாறாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஹாங்காங் கவ்லூன் பள்ளி இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ துஆவுக்குப் பின், ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.

இக்கூட்டத்தில், குருவித்துறைப் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த - மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தகவல்:
A.L.முஹம்மத் நிஜார்


மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் கடந்தாண்டிற்கான (ஹிஜ்ரீ 1434) [86ஆம் ஆண்டிற்கான] புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. புனித சபையின் சன்மார்க்க சேவைகள் சிறக்கட்டும் !
posted by Moulvi ,Hafil M.S.Kaja Mohideen Mahlari (Singapore) [21 March 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 33848

السلام عليكم ورحمة الله وبركاته

மாநபியின் மாமன்றம் புனித மஜ்ளிஷுள் புகாரிஸ் ஷரீப் சபையின் 87 – ம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் எனது இதயப் பூர்வமான நல்வாழ்த்துக்களையும், இனிய துஆவையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

இம்மஜ்லிஷின் நிகழ்சிகள் யாவும் துவக்கம் முதல் இறுதி வரை சீரும், சிறப்புமாக நடைபெற எல்லாம் வல்ல அல்லாஹ் பேரருள் புரிவானாக !

இந்த புனித சபையை நமது முன்னோர்கள் எத்தகைய தூய எண்ணத்தோடு துவக்கினார்களோ அத்தகைய பரிசுத்தமான “அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் “ கொள்கை ,கோட்பாடின் அமைப்பில் அணுவளவும் பிசகாமல், பிசுருகள், பிணக்குகள் ஏற்படாமல், இந்த மஜ்ளிசின் கண்ணியங்கள் கியாம பரிபந்தம் வரை தொய்வின்றி, தொடராக நடைபெற வல்ல ரஹ்மான் நல்லருள் புரிவானாக !

இம்மஜ்ளிசின் சன்மார்க்க தஃவா சேவைகள் செவ்வனே நடைபெறவும் , இதன் மூலம் எல்லா மக்களும் , ஈருலக சகல நன்மைகளையும் , அனைத்து சௌபாக்கியங்களையும் பெற்றேக வல்லவனாம் அல்லாஹ் தஆளா நம் அனவைருக்கும் கிருபை செய்வானாக !

எல்லாம் வல்ல அல்லாஹ் தனது நல்லருளாலும், பூமான் நபி அண்ணல் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்களின் பொருட்டினாலும், புனித இமாம் புகாரி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) மற்றும் நபிமார்கள், சுகதாக்கள் , சித்தீக்கீன்கள் , சாளிஹீன்கள் , சஹாபாக்கள் , இமாம்கள் , தாபியீன்கள் , வலிமார்கள் , நாதாக்கள், நல்லோர்கள் அனைவரின் பொருட்டினாலும் நம் அனைவரின் இம்மை, மறுமை சகல ஹலாலான நாட்டத் தேட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பானாக ! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன் !!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மார்க்க சேவையாற்றும் சபை ,,,
posted by NIZAR (KAYALPATNAM) [22 March 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33853

வங்க கடல் அலை ஓசை கேட்கும் அருகில் இருந்து மார்க்க சேவையாற்றி வருவது மஜ்லிசுல் புஹாரி ஷரீப் சபையாகும். குரானுக்கு அடுத்து வலிமைபெற்ற இந்த நபிமொழிகளை சொல்லென்னா தியாகங்கள் செய்து தொகுத்து தந்த புஹாரி இமாமின் புனித பெயர் தாங்கிய சபையாகும்.

இந்த சபையில் ஒவ்வொரு ஆண்டும் ரஜப் பிறை ஒன்றிலிருந்து மாதம் முழுவதும் அன்று ஓதப்பட்ட புஹாரி ஹதீதுகளுக்கு கண்ணியத்துக்குரிய ஆலிம்களால் விளக்கவுரை சொல்லபடுகிறது.

இறுதி நிகழ்ச்சியாக வல்லமைசால் இறைவனிடம் நெகிழ்ச்சி ததும்பிய கூட்டு இறை பிரார்த்தனை நடைபெறுகிறது. தனது 87 வது ஆண்டான இந்த வருடமும் அணைத்து நிகழ்சிகளும் சிறப்பாக நடைபெற இறையிடம் இறைஞ்சுவோம்.

புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் என் இதயமார்ந்த வாழ்த்துக்களை தெர்வித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by N.T.SULAIMAN (YANBU KSA) [22 March 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 33854

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெருங்கருனையாலும் கண்மணி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்களின் நல்லாசியாலும் நமது புனித மிக்க தாய் ஸபையாம் மஜ்லிஸுல் புகாரிஷ்ஷரீப் ஸபையின் 87 வது ஆண்டின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் திறமையான நிர்வாகம் செய்யக்கூடியவர்கள் அனைவர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...allaah arul pazhippaanaaga....
posted by Muhammad Nooh KA (Sharafiyyah.Jeddah.) [22 March 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33855

இறையருளால் எம் தாய் சபையாம் பூமான் நபியின் புனித மஜ்ளிசின் 87 ஆம் வருடத்துக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது அறிந்து மகிழ்ச்சி, அல்ஹம்துலில்லாஹ்.

பாரம்பரியமாக நம் சுன்னத் ஜமாஅத் அகீதாவால் முழுமையாக பேணி அதன்படி இவ்வருடமும் தொடர்ந்து நடந்தேர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH) [22 March 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33857

மாநபியின் மாமன்றம் மஜ்ளிசுள் புஹாரி ஷரீப் 87 ஆம் ஆண்டின் புதிய நிருவாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். சீருடன் அஹ்ளுசுன்னா வழியில் தொடர்ந்து தஅவா பணியாற்ற வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [22 March 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33861

நம் புனித சபையின் இவ்வருட நிர்வாகிகள் மற்றும் வைபவ கமிட்டி நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.

எல்லா வருடம் போல் நம்சபையின் வைபவங்கள் இவ்வருடமும் சிறப்பாக நடந்தேற வல்லோனை வேண்டுகிறேன் - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved