Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:22:10 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13240
#KOTW13240
Increase Font Size Decrease Font Size
சனி, மார்ச் 15, 2014
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் அமெரிக்கா புறப்பட்டார்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3929 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் - இன்று (மார்ச் 15) நள்ளிரவு - அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்க அரசாங்க விருந்தினராக பயணம் மேற்கொள்ளும் நகர்மன்றத் தலைவர் - 3 வாரங்கள், அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள உள்ளார்.

INTERNATIONAL VISITOR LEADERSHIP PROGRAM என்ற திட்டத்தின் கீழ், DIVERSITY IN THE US FOR MINORITY YOUTH LEADERS என்ற தலைப்பிலான இந்த பயணத்தில் அவருடன், தமிழகத்தை சேர்ந்த மேலும் நான்கு சிறுபான்மை சமுதாய சமூக ஆர்வலர்கள் செல்கின்றனர்.

அவர்கள் - ஜென்னத்துல் குபுரா (Women's Integrated National Development - WIND அறக்கட்டளை), ஜைபுநிஷா (நிர்வாக அறங்காவலர் மற்றும் தலைவர், மனிதம் அறக்கட்டளை), ஆளூர் முஹம்மது ஷாநவாஸ் (இஸ்லாமியர் உரிமைகள் ஆர்வலர் / குறும்பட தயாரிப்பாளர்), ஷாபி முஹம்மது (உறுப்பினர் மற்றும் ஆலோசகர், ஜென்னதுல் பிர்தௌஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா) - ஆகியோர் ஆவர்.

சென்னை விமான நிலையத்தில் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் உட்பட பயணக்குழுவினர் ...



தற்போதைய தகவல்கள்படி - இக்குழுவினரின் பயண விபரம் வருமாறு:

(1) மார்ச் 15 முதல் மார்ச் 20 வரை - வாஷிங்டன் டி.சி.
(2) மார்ச் 20 முதல் மார்ச் 22 வரை - பால்டிமோர் மற்றும் அன்னபோலிஸ், மேரிலன்ட்
(3) மார்ச் 22 முதல் மார்ச் 26 வரை - டெட்ராய்ட், மிசிகன்
(4) மார்ச் 26 முதல் மார்ச் 30 வரை - சியாட்டல், வாஷிங்டன்
(5) மார்ச் 30 முதல் ஏப்ரல் 02 வரை - மோன்ட்கோமரி மற்றும் செல்மா, அலபாமா
(6) ஏப்ரல் 02 முதல் ஏப்ரல் 05 வரை - நியூயார்க், நியூயார்க்


முன்னதாக காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், அக்டோபர் 21, 2013 முதல் நவம்பர் 8, 2013 வரை, இப்பயணத்தை மேற்கொள்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த அக்டோபர் மாதம், அமெரிக்காவின் உள்நாட்டு பிரச்சனையால் 16 நாட்கள் அமெரிக்க அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் முடங்கியது காரணமாக - பயணத் தேதி ஒத்திவைக்கப்பட்டு, புதிய தேதிகள் அமெரிக்க அரசாங்கத்தால் சமீபத்தில் வழங்கப்பட்டது என தெரிகிறது.

சென்னை விமான நிலையத்தில் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரை வழியனுப்ப வந்திருந்த அவரின் கணவர் சேக் அப்துல் காதர் ...


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...வெற்றிப்பயணம்
posted by Abdul Cader S.H. (Jeddah) [15 March 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33707

தங்களின் பயணம் வெற்றிப்பயணமாக அமைந்து, நலமுடன் சென்று திரும்ப வல்லவனை வேண்டுகிறோம். ஆமீன்!!

வாழ்த்துக்களுடன்..
S.H & P.A.S.ஆஸிமா தம்பதியர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:... அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by S.H. SEYED IBRAHIM (RIYADH. K.S.A.) [15 March 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33712

" அஸ்ஸலாமு அலைக்கும்."

உங்களது பயணம் இறைவன் அருளால் சிறந்த + பாதுகாப்பான பயனமஹா அமைய வாழ்த்துக்கள்!!!!

கோடான கோடி வாழ்த்துக்களுடன்,

உம்மு ரஷீத இப்ராகிம் ஆலிம்மா,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...சாதனை பெண்
posted by Salai Sheikh Saleem (Dubai) [15 March 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33722

அமெரிக்காவின் அரசாங்க விருந்தாளியாக ஒரு காயலர் அதுவும் ஒரு பெண்மணி செல்லுகிறார் என்பதே நமதூரின் பெருமைக்கு மகுடம் வைத்தது போல். வாங்க வாழ்த்துவோம்.

ஆபிதா அவர்களே நீங்கள் ஒரு சாதனைப்பென்மணி. காயலர்கள் புகழை பார் போற்ற செய்யும் ஒரு கண்மணி

உங்களின் இந்த பயணம் இறையருளால் பாதுகாப்பாக போய் வரவும் உபயோகமானதாக அமையவும் வாழ்த்தி துஆ செய்கிறோம்.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by sheikhabdulqader (Riyadh KSA) [18 March 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 33807

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு இறையருள் நிறைக. அத்திபூத்தார்போல் நமதூர் வரலாற்றில் நினைவில் பதிந்த அழகுநிகழ்வு, மாஷாஅல்லாஹ்.

இன்ஷாஅல்லாஹ் அடுத்தடுத்து இதுபோன்ற பெருமையான பயனுள்ள பயணங்களை மேற்கொண்டு வெற்றிப்பாதையில் காயல்பட்டணமும் தமிழகமும் நம் இந்திய தேசமும் பெற்று ஓங்கிவளர வல்ல இறைவன் பேரருள்புரிவானக,

இந்தப்பயனத்தைமேற்கொண்டுள்ள நமதூர்தலைவியவர்களுக்கு மனமார்ந்தவாழ்த்தையும் துஆவையும் எத்திவைப்போம் ஆமீன்,

இந்த அறிய சந்தர்ப்பத்தைவழங்கிய தமிழகஅரசிற்கும் தமிழக முதல்வர் அவர்களுக்கும் நாம் என்றென்றும் நன்றியுள்ளவர்களாயிருப்போம்.

இந்தப்பயணத்தை எந்திச்சென்றுள்ள ஏந்திழையர் அனைவருக்கும் நல்லதோர் நன்மை அனுபவமாக அமைந்து செம்மையாக செயல்பட்டுவிளங்கும் தகுதிபெற்று நல்ல நிர்வாகம்தர மீண்டும் ஒருமுறை அனைவரையும் வாழத்திப்பிரார்த்திக்கிறோம் அப்படியே ஆகட்டும்

என்றும் அன்புடன்

குளம் ஷேக் அப்துல் காதிர்
நான் நானாகவே இருக்கிறேன் .
அமைதியுடன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved