Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:00:01 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12954
#KOTW12954
Increase Font Size Decrease Font Size
புதன், பிப்ரவரி 5, 2014
17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்து இறுதிப்போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி வெற்றி வாய்ப்பை இழந்தது!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2454 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்ளுக்கான - தமிழ்நாடு மாநில அளவிலான சீனியர் பிரிவு கால்பந்து சுற்றுப்போட்டியில் காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்தது. விபரம் வருமாறு:-

17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் - தமிழ்நாடு மாநில அளவிலான சீனியர் பிரிவு கால்பந்து சுற்றுப்போட்டி மதுரையில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணியும் பங்கேற்று விளையாடி வருகிறது.

இம்மாதம் 28ஆம் தேதி காலையில் நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில், எல்.கே.பள்ளி அணி தஞ்சாவூர் டான் பாஸ்கோ மேனிலைப்பள்ளி அணியை எதிர்த்தாடியது. போட்டி சமனில் முடிவுற்றதையடுத்து, சமனுடைப்பு முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் எல்.கே.பள்ளி வென்று, காலிறுதிக்குள் நுழைந்தது.

கடந்த ஜனவரி 29ஆம் நாள் காலையில் நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் எல்.கே.பள்ளி அணியும், ஈரோடு ராஜேந்திரா மேனிலைப்பள்ளி அணியும் மோதின. இப்போட்டியும் சமனில் முடிவுற்றதையடுத்து, சமனுடைப்பில் 4-3 என்ற கோல் கணக்கில் எல்.கே.பள்ளி அணி வென்று, அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

அதே நாள் மாலையில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், எல்.கே.பள்ளி அணியும், காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா மேனிலைப்பள்ளி அணியும் மோதின. இதில், எல்.கே.பள்ளி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

ஜனவரி 30ஆம் நாள் காலையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இவ்வணி, கடலூர் நோபல் அகடமி பள்ளி அணியுடன் களம் கண்டது. இப்போட்டியில், ஈரணிகளும் சமநிலையில் ஆடிக்கொண்டிருக்க, ஆட்டம் நிறைவடைவதற்கு 4 நிமிடங்கள் இருந்த நிலையில், கடலூர் அணி வீரர் 1 கோல் அடித்ததையடுத்து அவ்வணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதன் மூலம், எல்.கேமேனிலைப்பள்ளி அணி இரண்டாமிடத்தைப் பெற்றது.

எல்.கே.மேனிலைப்பள்ளியின் சீனியர் அணி, கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில் வென்றதன் மூலம், மண்டல அளவில் விளையாட தகுதி பெற்றது.

அதனைத் தொடர்ந்து, அக்டோபர் மாதம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற மண்டல அளவிலான கால்பந்துப் போட்டியில் வென்றதன் மூலம், மாநில அளவிலான போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது.

மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இறுதிப்போட்டிக்குள் நுழைகிறது. 2012ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

2013ஆம் ஆண்டில் இறுதிப்போட்டியில் வென்று, அதன் தொடர்ச்சியாக டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியிலும் பங்கேற்று வந்தது.

நடப்பாண்டு இறுதிப்போட்டியில் இவ்வணி இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

இதன்மூலம், தமிழக வரலாற்றில் தொடர்ந்து 3 முறை இறுதிப்போட்டியில் பங்கேற்ற ஒரே அணி என்ற பெருமையை எல்.கே.மேனிலைப்பள்ளி அணி பெற்றுள்ளதாக, அப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [05 February 2014]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 33024

Don't worry my dears.

Count your failures to cascade your experiences.

Be ready and prepare for the upcoming things. The part of victory is not winning but taking part in it. You did the part of it already, be prepare to get the remaining.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...Congrats
posted by S.A.Shaik Mohamed (Dubai) [06 February 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33047

Congats for all the football players and coach of team.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved