Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:37:32 PM
செவ்வாய் | 15 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1902, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1015:2918:0819:18
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்16:21
மறைவு18:01மறைவு03:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:1905:44
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2218:4719:11
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12469
#KOTW12469
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 2, 2013
துவங்கியது மலேஷிய காயல் நல மன்றம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5778 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மலேஷிய நாட்டில் வசிக்கும் காயலர்களை ஒருங்கிணைத்து, மலேஷிய காயல் நல மன்றம் - KWAMALAY என்ற பெயரில் புதிதாக அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-

மலேஷிய காயல் நல மன்றம்:

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், மலேஷியா நாட்டில் வசிக்கும் காயலர்களை ஒருங்கிணைத்து, “மலேஷிய காயல் நல மன்றம் - KWAMALAY” என்ற பெயரில், மலேஷிய மண்ணில் புதியதோர் அமைப்பு இனிதே உதயமாகியுள்ளது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!

துவக்கக் கூட்டம்:

முன்னதாக, மலேஷியாவில் வசிக்கும் காயலர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, முறைப்படி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் அடிப்படையில், துவக்கக் கூட்டம் 30.11.2013 சனிக்கிழமையன்று, மலேஷிய தலைநகர் கோலாலம்பூரிலுள்ள ABC Hotel Conference Hallஇல் நடைபெற்றது.

வந்தோருக்கு வரவேற்பு:

இரவு 21.30 மணியளவில் காயலர்கள் நிகழ்விடம் வந்தவண்ணம் இருந்தனர். அவர்களை, கூட்ட ஒருங்கிணைப்பாளர்களான பாளையம் எச்.எம்.முஹம்மத் இஸ்மாஈல், குடாக் முஹம்மத் புகாரீ, ஹாஃபிழ் செய்யித் இப்றாஹீம் அல்புகாரீ ஆகியோர் வரவேற்றனர். துவக்கமாக, அனைவரது பெயர் மற்றும் விபரங்கள் பதிவு செய்யப்பட்டன.



கூட்ட நிகழ்வுகள்:

இரவு 22.00 மணிக்கு கூட்டம் துவங்கியது. வணிக நோகத்தில் - காயல்பட்டினத்திலிருந்து மலேஷிய நாட்டிற்கு வந்து செல்லும் - காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சேர்ந்த ஹாஜி ஏ.அஹ்மத் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.செய்யித் இப்றாஹீம் அல்புகாரீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்ததோடு, நிகழ்ச்சிகளையும் நெறிப்படுத்தினார். பின்னர், கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அனைவரும் தங்களை தன்னறிமுகம் செய்துகொண்டனர்.



அறிமுகவுரை:

கூட்ட ஒருங்கிணைப்பாளர் குடாக் எஸ்.எம்.எச்.முஹம்மத் புகாரீ, கூட்ட அறிமுகவுரையாற்றினார்.

“அருளன்பு பண்பில் அளவற்ற உந்தன் திருநாமம் போற்றி துவக்குகிறேன் யா அல்லாஹ்” என்று கூறி தனதுரையைத் துவக்கிய அவர், மலேஷிய நாட்டில் காயல் நல மன்றம் துவக்குவதற்கான அவசியம் மற்றும் நோக்கங்கள் குறித்து இரத்தினச் சுருக்கமாகப் பேசினார். அவரது உரைச் சுருக்கம்:-

நமதூர் மற்றும் ஊர் மக்கள் நலன், மலேஷியாவில் வசிக்கும் காயலர்கள் நலன் கருதியும்,

நமதூரின் ஏழை - எளிய மக்களுக்கு உதவுவதற்காகவும்,

நமதூர் மக்களின் வணிகம், தொழில்துறை, கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் மேம்படுத்த தன் முனைப்பும், பிற முனைப்புகளுக்கு ஒத்துழைப்பும் அளிப்பதற்காகவும் இவ்வமைப்பு அவசியமாகிறது.

நமதூர் மக்களுக்கு தகுந்த வேலைவாய்ப்புகளை இந்நாட்டில் பெற்றுத் தர இப்புதிய அமைப்பு முழு முயற்சிகளையும் மேற்கொள்ளும். இறையருளால் சிறப்புற இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்துலக காயல் நல மன்றங்களுடன் நல்லதொரு தொடர்பை வைத்துக்கொண்டு, அதன் மூலம் நகர்நலனுக்குத் தேவையான - நம்மாலியன்ற அனைத்து ஒத்துழைப்புகளையும் நல்கிட வேண்டும். அனைவரும் இணைந்து கைகோர்த்து, நகர்நலனுக்காக கடமையாற்றுவோம்.


இவ்வாறு அவர் பேசினார்.

சிறப்பு விருந்தினர்கள்:

மலேஷியாவில் காயல் நல மன்றம் துவக்கப்படவும், செயல்படவும் - காயலர்கள் மட்டுமின்றி, பிற ஊர்களைச் சேர்ந்த அன்பர்கள் பலரும் ஊக்கமும், பேராதரவும் நல்கி வருவதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறோம். அவர்களுள், இராமநாதபுரம் மாவட்டம் - பனைக்குளம் நகரைச் சேர்ந்த சகோதரர் ஹமீத் ராஜா, சகோதரர் முஹம்மத் அஸ்மி, இளையாங்குடியைச் சேர்ந்த சகோதரர் ஜுபைர் ஆகியோரும், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் சகோதரர் அப்துர்ரஹீம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். அவர்களுக்கும், கூட்டத் தலைவருக்கும் சால்வை அணிவித்து சங்கை செய்யப்பட்டது.



மார்க்க அறிவுரை:

தொடர்ந்து, கூட்ட ஒருங்கிணைப்பாளர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.செய்யித் இப்றாஹீம் அல்புகாரீ மார்க்க அறிவுரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம்:-

மனிதனை அல்லாஹ் "கலீபா"வாக இவ்வுலகத்தில் படைத்திருக்கிறான். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குரிய பொறுப்புகள் இவ்வுலகில் இருக்கிறது. தன் மீதும், தன் குடும்பத்தின் மீதும் ஒருவருக்கு எப்படி பொறுப்பு இருக்கிறதோ அதுபோல, தன் ஊர், தன் சமூகம் மீதும் அவனுக்கு பொறுப்பு இருக்கிறது.



ஒருவன் தனித்து இயங்குவதை விட ஒரு கூட்டமாக இயங்குவது மிகவும் சக்தி வாய்ந்தது. அனைவரும் ஓரணியில் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பது அல்குர்ஆனில் அல்லாஹ் இட்ட கட்டளை. அதனடிப்படையில், விருப்பு - வெறுப்புகளுக்கப்பாற்பட்டு செயலாற்றுவதன் மூலம், பல சவால்களை வெற்றிகரமாக நிறைவேற்றி சாதித்துக் காட்ட இயலும்.

“இறைவழியில் செலவு செய்வது மறுமை வாழ்விற்கான முதலீடு” என்பதை மனதிற்கொண்டு செயலாற்றி, இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்க்கைக்கான வெற்றியைத் தேடிப் பெற்றுக்கொள்ள நாம் அனைவரும் ஆர்வத்துடன் செயல்பட வேண்டும்.


இவ்வாறு அவர் பேசினார்.



உறுப்பினர் கருத்துப் பரிமாற்றம்:

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் மன்ற உறுப்பினர்களாகப் பதிவு செய்யப்பட்டனர். உரைகளைத் தொடர்ந்து, உறுப்பினர் கருத்துப் பரிமாற்றத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. மன்றத்திற்கு பொருத்தமான பெயரிடல், தற்காலிக செயற்குழுவைத் தேர்ந்தெடுத்தல், மாதச் சந்தா தொகையை நிர்ணயித்தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அதில் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

தீர்மானங்கள்:

கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-

தீர்மானம் 1 - அமைப்பின் பெயர்:

காயலர்களை ஒருங்கிணைத்து, புதிதாகத் துவக்கப்படும் இவ்வமைப்பிற்கு “மலேஷிய காயல் நல மன்றம் - MALAYSIAN KAYAL WELFARE ASSOCIATION (KWAMALAY)” என்று பெயர் சூட்ட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 2 - தற்காலிக செயற்குழு:

“மலேஷிய காயல் நல மன்றம்” அமைப்பிற்கு பின்வருமாறு தற்காலிக செயற்குழு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது:-

தலைவர்:

ஹாஜி ஏ.அஹ்மத்

செயலாளர்:

ஜனாப் குடாக் எஸ்.எம்.எச்.முஹம்மத் புகாரீ

பொருளாளர்:

மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.செய்யித் இப்றாஹீம் அல்புகாரீ

செயற்குழு உறுப்பினர்கள்:

1. ஜனாப் எஸ்.ஏ.ஸர்ஃபராஸ்
2. ஜனாப் குடாக் எஸ்.எம்.எச்.முஹம்மத் புகாரீ
3. ஜனாப் பாளையம் எச்.எம்.முஹம்மத் இஸ்மாஈல்
4. ஜனாப் எஸ்.ஏ.அப்துல் காதிர்
5. ஜனாப் முஹம்மத் ரஃபீக்

சிறப்பு ஆலோசனைக் குழுவினர்:

1. ஜனாப் ஆஸ்மி
2. ஜனாப் ஹமீத் ராஜா
3. ஜனாப் ஜுபைர்
4. ஜனாப் எஸ்.ஏ.ஸர்ஃபராஸ்
5, ஜனாப் அஸ்ஹாப்


இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

>> கூட்ட ஒருங்கிணைப்பாளர்களின் அன்பான அழைப்பையேற்று கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த காயலர்கள்

>> கூட்ட நிகழ்விடத்தை விட்டும் பல மணி நேரம் பயணம் மேற்கொள்ளும்படியான நீண்ட தொலைவிலிருப்பதால், கூட்டத்தில் பங்கேற்க இயலாமை - கடமையுணர்வுடன் தெரிவித்த காயலர்கள்

>> சிறப்பு விருந்தினர்களாக இக்கூட்டத்தில் கலந்து சிறப்பித்தோர் - குறிப்பாக, மறுநாள் அதிகாலையில் பயணம் செய்ய வேண்டியிருந்தும், அழைத்த மறுகணமே சிரமம் பாராமல் வந்து நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்த ஜனாப் ஸர்ஃபராஸ் (எல்.கே.எஸ்.)

>> புதிய மன்றம் சிறந்தோங்க தொலைபேசி வழியே வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்லுள்ளங்கள்

உள்ளிட்ட அனைவருக்கும் மன்றத்தின் சார்பில் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இறையச்சத்துடனும், உளத்தூய்மையுடனும் நகர்நலப் பணிகளாற்றிட இருகரம் ஏந்தி இறைவனிடத்தில் துஆ செய்த நிலையில் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

இரவுணவு விருந்துபசரிப்பு:

கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஹோட்டலில் பல்சுவை உணவுப் பதார்த்தங்களுடன் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.







மலேஷிய தொப்பி அன்பளிப்பு:

இக்கூட்டத்தில் கலந்துகொண்டோர், சிறப்பு விருந்தினர்கள், இரவுணவுக்கு அனுசரணையளித்த சகோதரர் ஆஸ்மி ஆகிய அனைவருக்கும், கூட்டம் துவங்குகையில் சகோதரர் பனைக்குளம் ஹமீத் ராஜா அவர்களால் மலேஷிய பாரம்பரிய தொப்பி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அந்நாட்டுப் பாரம்பரியத்தைப் பறைசாற்றுமுகமாக, கூட்டத்தின் துவக்கம் முதல் நிறைவு வரை அனைவரும் அத்தொப்பியுடனேயே கலந்துகொண்டனர்.







வருகை தந்த அனைத்து உறுப்பினர்களும், கூட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தவர்களாக, மகிழ்ச்சியுடன் வசிப்பிடம் திரும்பிச் சென்றனர்.


இவ்வாறு, மலேஷிய காயல் நல மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by s.e.m. abdul cader (bahrain) [02 December 2013]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 31779

MASHALLAH , BARAKALLAH FI, I PRAY ALMIGHTY ALLAH TO GIVE YOU ALL GOOD UNITY TO LEAD THIS WONDERFUL DEED AS WELL AS I PRAY FOR YOU ALL TO KEEP SOND HEALTH AND WEALTH. DEAR BROTHER HAFIZ SEYED EBRAHIM BUHARY - I AM VERY PROUD OF YOU. WASSALAM.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...வாழ்த்துக்கள்
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [03 December 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31780

புதியதாக பொது சேவையாற்ற உதயமாகியிருக்கும் மலேசிய KWA விற்கு வாழ்த்துக்கள்.

தங்கள் நோக்கம் வெற்றியடைந்து இம்மன்றம் வெற்றி நடை போட வல்லோனை வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வாழ்த்துக்கள்.
posted by KADER SHAMUNA - ZUBAIR (KL) [03 December 2013]
IP: 118.*.*.* Malaysia | Comment Reference Number: 31781

புதியதாக பொது சேவையாற்ற உதயமாகியிருக்கும் மலேசிய KWA விற்கு வாழ்த்துக்கள்.

வாழ்த்தும் அன்பு உள்ளங்கள் ..... மலேசியா வாழ் நண்பர்கள் முஹம்மது ஜுபைர் ... ஜாபர்.. காதர் சமுனா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. HEARTY WISHES TO OUR BROTHERS
posted by V.M.T.MOHAMED HASAN (HONG KONG) [03 December 2013]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 31783

ASSALAMU ALAIKUM BROTHERS.

INDEED ITS VERY HAPPY TO LEARN OUR KAYAL WELFARE ASSOCIATION FORMED IN MALAYSIA. MASHA ALLAH.

HEARTY WISHES AND GREETINGS TO THE NEW COMMITTEE AND MEMBERS AND HOPE IT WILL BENEFIT OUR COMMUNITY LIVING IN MALAYISA AND IN OUR HOME TOWN, INSHA ALLAH.

ALL THE BEST.

MAY ALMIGHTY ALLAH GUIDE ALL OF US IN HIS RIGHT PATH AND SHOWER HIS ENDLESS BLESSINGS TOWARDS US AMEEN.

FEE AMANILLAH.

YOUR BROTHER IN HONG KONG
VMT MOHAMED HASAN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [03 December 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 31784

அல்ஹம்து லில்லாஹ் .

எதற்காக இந்த அமைப்பு துவங்க பட்டத்தின் நோக்கங்கள் வெற்றியை பெற வல்ல இறைவனை வேண்டுகிறேன் இன்ஷா அல்லாஹ்.. புதியதாக பொது சேவையாற்ற உதயமாகியிருக்கும் மலேசிய KWA விற்கு வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன் ,
பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. வாழ்த்துக்கள்
posted by abdulhadhi (Jeddah) [03 December 2013]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31787

புதியதாக பொது சேவையாற்ற உதயமாகியிருக்கும் மலேசிய KWA விற்கு வாழ்த்துக்கள்.

அப்துல் ஹாதி ஜெட்டாஹ் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...வாழ்த்துக்கள் ..
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [03 December 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31788

மாஷா அல்லாஹு .... வாழ்த்துக்கள்

காயலர்களை ஒருங்கிணைத்து, புதிதாகத் துவக்கபட்டுள்ள “மலேஷிய காயல் நல மன்றம் - MALAYSIAN KAYAL WELFARE ASSOCIATION (KWAMALAY)” , வல்ல நாயன் அருளால் நனி சிறப்புடன் அதன் செயல்பாடுகளை நல்ல முறையில் செயல் படுத்த எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .

மற்றும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தற்காலிக செயற்குழு உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் எனது பாராட்டுகளும் , வாழ்த்துகளும் உரித்தாகுக .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...பிறந்த ஊருக்கு நன்மைகள் செய்து புகழ் சேருங்கள்.
posted by A.R.Refaye (Abudhabi) [03 December 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31789

மாஷா அல்லாஹ்!!! பலே பலே மலேசியாவில் காயல் மன்றம் மலர்ந்த காட்சி கண்டு மற்றட்ட மகிழ்ச்சி,உங்கள் உயர்ந்த திட்டங்களை சிறப்பாக வடிவமைத்து பிறந்த ஊருக்கு நன்மைகள் செய்து புகழ் சேருங்கள்.

துவக்க காரணமாய் இருந்த அணைத்து சகோதரர்களுக்கும் எமது அமீரக அபுதாபி மன்றத்தின் நிர்வாகி, தலைவர்,மற்றும் அணைத்து உறுபினர்கள் சார்பாக பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

A.R.Refaye-Abudhabi
மக்கள் தொடர்பாளர்
அபுதாபி காயல் நலமன்றம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. புதிதாக உதயம்....
posted by Mohamed Hassan (Jeddah) [03 December 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31790

அஸ்ஸலாமு அழைக்கும்,

Alhamduillah. எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் மலேசிய காயல் நல மன்றம் புதிதாக உதையமாகிவிட்டது.

மலேசியாவில் நமது ஊர் நண்பர்களை பார்த்ததில் மகிழ்சி.

ஆமா! மலேசிய தொப்பி எல்லாத்துக்கும் போட்டுருகிகலே யார் ஸ்பொன்செர் அத சொல்லவே இல்லையே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...malasiya
posted by hylee (kayalpatnam) [03 December 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 31792

வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [03 December 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 31793

அஸ்ஸலாமு அலைக்கும்

சிறப்புடன் புதியதாக உதயமாகி இருக்கும் நமது >> மலேசியா காயல் நற்பணி மன்றத்தை '' (KWAMALAY)” , வாழ்த்துகிறோம் ...

தங்கள் யாவர்களின் நல்ல எண்ணம் போல ....நம் ஊர் பொது மக்களின் நல்ல முன்னேற்றத்துக்கான ...தங்களின் நோக்கமும் சிறப்படைய ..வல்ல இறைவன் அருள்புரிவானாகவும் ஆமீன்....தாங்கள் யாவர்களும் ஆற்றிய உரையின் கருத்தும் அருமையானவையே ........

மலேசியா தொப்பி ....தங்கள் அனைவர்களுக்கும் முகத்தில் நல்ல அழகையும் ....தங்கள் மனதில் தூய்மையும் காட்டுகிறது ..அல்ஹம்துலில்லாஹ் ......

>>தொடரட்டும் நம் ஊருக்கான தங்களின் நற் சேவைகள் <<

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...NASRUM MINALLAAHI ....
posted by mackie noohuthambi (kayalpatnam) [03 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31796

NASRUM MINALLAAHI VA FATHUN QAREEB.

அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் மிக நெருக்கமாகட்டும்.

மலேசியா தொப்பி அன்பளிப்பாக வழங்கப்பட்டதை யாரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.அது ஒரு பாரம்பரிய சின்னம். மலேசியாவின் கலாசார பொக்கிஷம்.அந்த தொப்பியின் கலாசார பின்னணி இந்த தலைமுறைக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் 50-60 ஆண்டுகளுக்கு முன் அதன் மதிப்பு சொல்லில் அடங்காது.

நான் சிறுவனாக இருக்கும்போது அப்படி ஒரு தொப்பி அணிவதற்கு ஆசைப்பட்டு தவம் கிடக்க வேண்டும். அதை அணிந்து வருபவர்களின் கம்பீரமான நடை, ஆஜானுபாகுவான தோற்றம் நம்மை சிலிர்க்க வைக்கும். "சொல்லில் இனிமை, தொழிலில் நேர்மை,பொது வாழ்வில் தூய்மை" இவை அவர்களின் அங்க அசைவுகளில் தெரியும். அவர்கள் உடையிலும் இனிய மணம்.அல்ஹம்து லில்லாஹ்.

" A GOOD START IS HALF DONE" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். மலர்ந்துள்ள மலேசியா காயல் நல மன்றம் ஒரு புதிய சித்தாந்தத்துடன் பூத்துள்ளது." யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதற்கு ஒப்ப காயல்பட்டினத்தை பனைக்குளமும் இளையன்குடியும் இறுகத் தழுவிப் பிடித்துள்ளது.லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வந்திருக்கிறீர்கள். மக்கள் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள்.

நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற, இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற... நதியை போல, கடலை போல உங்கள் உள்ளங்கள் பரந்து விரிந்து இருக்கட்டும். வானைப் போல பிறருக்காக அழுது கொட்டட்டும்-- பண மழையாக, நல திட்டங்களாக அவை பரிணாம வளர்ச்சி பெறட்டும் என்று வாழ்த்துகிறேன், து ஆ செய்கிறேன். MARHABAN BIKUM, AHLAN VA SAHLAN.

MAAKKI NOOHU THAMBI 00919865263588


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Solukku.ME.Syed Md Sahib (QATAR) [03 December 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 31797

அஸ்ஸலாமுஅலைக்கும்.என் இனிய இதய பூர்வமான நல் வாழ்த்துகள். .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. புதிய மன்றம் சிறந்தோங்க வாழ்க !!!
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari (Singapore) [03 December 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 31798

அஸ்ஸலாமு அலைக்கும்.!!!

மலேசியா காயல் நல மன்றம் துவக்க நிகழ்ச்சி மிக்க மகிழ்ச்சி ! அல்ஹம்துலில்லாஹ் !!!

நம்மை போன்று நமது சகோதரர்களுக்கும் , சகோதரிகளுக்கும் நன்மை, உதவி, ஒத்தாசை என உதவி புரியும் உயரிய நன்னோக்கத்தில் செயல்படுத்து முகமாக உலக காயல் நல மன்றங்களின் பட்டியலில் இதுவும் ஒரு புதிய குழந்தையாக பிறந்திரிக்கிறது. இந்த ஆரம்ப ஒன்று கூடலில் அனைவரும் மலேசிய பாரம்பரிய தொப்பி அணிந்து இருப்பது மிகவும் சிறப்பானது.

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த சமுதாய பொதுப்பணி சேவைகள் யாவும் தூய எண்ணத்துடன் , நிரந்தரமாக , தொய்வின்றி செயல்பட நம் அனைவருக்கும் பேரருள் புரிவானாக !!! ஆமீன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. வாழ்த்துக்கள்
posted by Fazel Ismail (சிங்கப்பூர்) [04 December 2013]
IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 31799

அல்ஹம்துலில்லாஹ் ...

மலேஷியா காயல் நல மனறம் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்.

சகோதர வாஞ்சையுடன் பழகி வரும் பனைக்குளம் நகரைச் சேர்ந்த சகோதரர் ஹமீத் ராஜா, சகோதரர் முஹம்மத் அஸ்மி மற்றும் இளையாங்குடியைச் சேர்ந்த சகோதரர் ஜுபைர் ஆகியோருக்கு நன்றிகள் பல ...

மலேஷியாவில் வேலை பார்க்க மொழி மற்றும் படிப்பு அதிக பிரச்சனையாக இருக்காது என நம்புகிறேன்.

எனவே ஊரில் நலிவடைந்து சொற்ப சம்பளங்களில் கஷ்டப்படும், தேவையுடைய சகோதரர்களுக்கு மலேஷியாவில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும்படி அன்புடன் கேட்டு கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by M.S.SAYYID MOHAMMED (GUANGZHOU(CHINA)) [04 December 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 31800

மாஷா அல்லாஹ். புதிதாக மலர்ந்திருக்கும் மலேசியா காயல் நல மன்றத்திற்கு வாழ்த்துக்கள்.

நம்மூரின் நலனுக்காகவும், மலேசியாவில் நம்மூர் மக்களுக்கு தகுதியான வேலை வாய்ப்பு பெற்றுத் தரவும் குறிக்கோளாகக் கொண்டு இவ்வமைப்பு அமைய முனைந்தோர் அனைவரும் பாராட்டுக் குரியவர்கள். தர்மம் செய்வது நன்மையானதுதான். அத்துடன் தொழிலுக்கும் வேலை வாய்ப்பிற்கும் வழிகாட்டுவதுதான் சதக்கதுல் ஜாரியா.

துபாய், சிங்கப்பூர், அண்மையில் பெங்களூர் ஆகிய ஊர்களில் நம் காயல் நல மன்றங்களின் அங்கத்தினர்களின் ஒத்துழைப்பால் படித்த நம் இளைய தலைமுறையினர் நிறைய பேர் அந்தந்த ஊர்களில் வேலை வாய்ப்பினைப் பெற்று சிறப்பாக இருக்கிறார்கள்.

தொழிலிற்கும் வேலை வாய்ப்பிற்கும் நம் மார்க்கப் பின்பற்றுதலுக்கும் சாதகமான சூழலைக் கொண்ட மலேசியாவில் நம் ஊர் மக்கள் பல்கிப் பெருகி தொழிலில் சிறந்தோங்க மலேசியா காயல் மன்றம் ஒரு பாலமாக அமைந்திட துவா செய்கின்றேன்.

அல்லாஹுத் தாலா உங்கள் அனைவருக்கும் முழுமையான உடல் நலத்தையும் உங்கள் தொழில் மற்றும் வேலைகளில் மன நிறைவையும் பரக்கத்தையும் தர வேண்டி துவா செய்கின்றேன்.

வஸ்ஸலாம்.
M.S.செய்யது முஹம்மது
பாங்காக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. மலேஷிய மன்றம் மாஷா அல்லாஹ்.
posted by s.s.md meerasahib (TVM) [04 December 2013]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 31811

அஸ்ஸலாமு அலைக்கும். மலேஷிய காயல் நல மன்றம் துவக்கம் கண்டு ரெம்ப சந்தோசம். உங்களின் இந்த மன்றம் நீடூழி வாழ இறைவனிடம் பிரார்த்திப்பதுடன் எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.

"ஒற்றுமை என்பதை விட்டு விட்டேன் ஏனெனில்........ உங்களின் தொப்பியே...... அந்த ஒற்றுமையை பறைசாட்டுவதால்". வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved